சாரங்கபாணி ஆலய மகிமை

சாரங்கபாணி ஆலய மகிமை
kumbakonam-sarangapani

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இந்த ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். பிருகு முனிவரின் மகளாக பிறந்த லட்சுமிதேவியை மணம் முடிக்க திருமால் சார்ங்கம் என்ற வில் ஏந்தி வந்ததால், இத்தல இறைவனுக்கு சாரங்கபாணி என்று பெயர் வந்தது. இத்தலத்தில் அருள் புரியும் தாயாரின் திருநாமம் கோமளவல்லி என்பதாகும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு, ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேட்டது ஆயிரம்.. கிடைத்தது நாலாயிரம்

பன்னிரு ஆழ்வார்களும், பெருமாளைப் பற்றி பாடி மங்களாசாசனம் செய்த பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ எனப் படுகிறது. இந்த பாடல்கள் அனைத்தும் கிடைப் பதற்கு காரணமாக இருந்தவர், இத்தல இறைவனே ஆவார்.

ஒரு முறை நாதமுனி என்பவர் சாரங்க பாணியை வழிபடுவதற்காக வந்தார். அப்போது சில பக்தர்கள் இறைவனின் பெருமையை ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினார்கள்.

இதைக் கேட்ட நாதமுனி, ‘இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?’ என்று வியந்து போய் கேட்டார். மீதி பாடல்களையும் பாடச் சொல்லி கேட்டபோது, அந்த பக்தர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும்’ என்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆனால் கிடைத்தது ஆயிரம் பாடல்கள் அல்ல.. நாலாயிரம் பாடல்கள். அதன்பிறகே அவை தொகுக்கப்பட்டது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஆராவமுதாழ்வார்’ என்ற பெயரும் உண்டு.

உத்தான சயனம்

திருமால் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தை ‘சயன கோலம்’ என்பார். இறைவனின் சயன கோலத்தில் பல வகை இருக்கின்றன. அதில் சாரங்கபாணி ஆலயத்தில் ‘உத்தான சயனம்’ என்ற கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். ஒரு முறை இத்தலம் வந்த திருமழிசையாழ்வார், இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், ‘நடந்து நடந்து கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?’ என்று இறைவனைப் பார்த்துப் பாடினார்.

உடனே இறைவன் சற்றே எழுந்தார். அவரின் அருளைக் கண்ட ஆழ்வார் மனம் மகிழ்ந்தார். ‘அப்படியே இரு’ என்று வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிருக்காமல், சற்றே எழுந்த கோலத்தில் இருப்பதையே ‘உத்தான சயனம்’ என்கிறார்கள்.

7 ஆழ்வார்களின் பாடல்

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே அதிகஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தல இறைவனை பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 7 பேர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசர்

தன்னுடைய திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு தாயாரின் முன்பு தோன்றிய பெருமாள், அவரை மணந்து கொண்டார். பெருமாள் ஒளிந்த இடம், இத்தலத்தில் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் உள்ளது. தாயாருடன் பெருமாள் தனிச்சன்னிதியில் இருக்கும் இடம் ‘மேட்டு சீனிவாசர் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது.

வீட்டோடு மாப்பிள்ளை

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், தாயாரைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். அதற்கேற்றாற்போல தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில்தான் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆலயம் திறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லி தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோ பூஜை தாயார் சன்னிதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னிதியில் நடக்கிறது.

சொர்க்கவாசல் இல்லைதிவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். அப்படி சொர்க்கவாசல் இல்லாத ஆலயம் சாரங்கபாணி திருக்கோவில் தான். இத்தல பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக இந்த திருத்தலத்திற்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே பரம பதம் (முக்தி) கிடைத்து விடும் என்ற காரணத்தால் தான், சொர்க்கவாசல் இல்லையாம். மேலும் இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே, பரம பதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு ஏதுவாக தை முதல் ஆனி வரை உத்ராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசலும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்
20-type-of-prathosam-viratham

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம்.

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் : பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா
தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்

பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
pillayarpatti-vinayagar

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல் அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும்.. இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அப்படிப்பட்ட விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.இந்த ஆலயத்தில் வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கின்றார். எனவே, தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகின்றார். ஒரு வரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஆனைமுகப்பெருமான் தான். அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சிதருவதால், அங்கு சென்று வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகின்றது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்

கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்
Karparatchambigai-slokas

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)

மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்

மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை  ஸ்ரீசெட்டி சித்தர்
siddhar-worship

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம்.

ஸ்ரீசெட்டி சித்தரின் ஜீவ சமாதி ஆலயம்
தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம். அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட நோயைப் பற்றியும், அந்த நோய் தீர பலரும் அவரை மருத்துவரிடம் அழைத்தும் வராது பற்றியும் பார்த்தோம். எதற்காக அவர் மருத்துவரிடம் செல்லவில்லை... அறிந்து கொள்வோம் வாருங்கள்...

மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தருக்கு ஏற்பட்ட நோய் தீர, அவரை சீடர்கள் பலரும் மருத்துவரிடம் செல்ல அழைத்தனர். அதற்கு சித்தர் சிரித்தபடியே, ‘பிறவி கடன் இது. நான் அனுபவித்தே தீரவேண்டும். அதுவும் இந்த ஜென்மத்திலேயே இந்த வலியை தாங்கியாக வேண்டும்' என நோயின் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார். இறுதியில் அவரது தவ வலிமையின் மூலமாகவே, அவரது கண்ட மாலை நோய் குணமானது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது முறப்பநாடு. இங்கு குமாரசுவாமி பிள்ளை என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஸ்ரீசெட்டி சித்தரின் பாட்டுத் திறனில் அலாதிப் பிரியம். சித்தரின் பாடும் திறன் பற்றி, ஒரு முறை முறப்பநாட்டில் உள்ள திருவாவடுதுறை கிளை மடத்து தம்பிரான் சுவாமியிடம் புலவர் கூறினார். தம்பிரானும் ஆவலுடன், ஸ்ரீசெட்டி சித்தரைச் சந்தித்து பேசினார்.

திருமுருககிருபானந்த வாரியார் திருநெல்வேலி வந்தால், ஸ்ரீசெட்டி சித்தரை சந்திக்காமல் செல்ல மாட்டார். மேலும் தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் சித்தரைப் பற்றி புகழ்ந்து கூறுவார். காலங்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் புகழ் உலகெங்கும் பரவியது. அதே நேரத்தில் பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சித்தர் தன்னுடைய உடலை விட்டு இறைவனடி சேர நாள் குறித்து வைத்திருந்தார்.

மாறந்தையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து வர, தன்னோடு இருந்த சீடர்களிடம் கூறினார். ஸ்ரீசெட்டி சித்தர் அழைத்ததால், மாறந்தையைச் சேர்ந்த பலரும் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வந்தனர். சித்தர் அவர்களை நோக்கி, ‘இன்றோடு என் சரீரம் முடியப் போகிறது. எனவே தான் உங்களை அழைத்தேன்' எனக் கூறி அனைவருக்கும் விபூதி வழங்கினார். அனைவரும் கதறி அழுதனர்.

‘பொழுது சாயும் வேளை வரை பொறுங்கள்' என கூறிய சித்தர், அப்படியே படுத்துவிட்டார்.

சித்தரின் தலைப்பாகம் மட்டும் சிறிது சாய்ந்த வண்ணம், சரீரம் பத்மாசனத்தில் இருந்த நிலையில் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து இருந்தது. அவரது ஜீவன் சிவனுடன் ஐக்கியமாகி விட்டது. வைத்தியர்கள் சித்தரின் கை நாடியை பிடித்துப் பார்த்தபோது எல்லாம் முடிந்து விட்டது. சித்தரின் திருமேனியை நாற்காலியில் வைத்து, சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே புதூர் மடத்தை விட்டு ஊர்வலமாக கிளம்பினர்.

மாறந்தை ஊரின் மேற்கோடியில் உள்ள காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் சித்தரை வைத்தனர். இரவோடு இரவாக சுவாமிகளின் திருமேனியைச் சமாதியில் எழுந்தருளச் செய்தனர். ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி, 1918-ம் வருடம் அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் நடந்தது. சித்தர் ஜீவ சமாதி அடைந்த பின்னர், மண்டல பூஜையும் நடத்தி சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். சமாதி இடத்தில் கற்கோவில் கட்டினர். நந்தவனத்தில் புதிய கிணறு வெட்டப்பட்டது.

ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட பல அற்புதங்களை நிகழ்த்தினார். அது தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் குழு ஒன்று, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் சமாதிக்கு வந்தது. அங்கு அவர்கள் தியானம் செய்து விட்டு அருகில் இருந்த பக்தர்களிடம் ‘ஸ்ரீசெட்டி சித்தர், இதுவரை உங்களுக்கு காட்சி அளித்திருக்க மாட்டார். இனி உங்களுக்கு சர்ப்பமாக காட்சியளிப்பார்' என்று கூறிச் சென்றனர். அதே போல் மூன்று நாள் மூலஸ்தானத்தில் சர்ப்பம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

ஸ்ரீசெட்டி சித்தர் சன்னிதி


தனக்கு குருபூஜை எப்படி நடக்க வேண்டும் என்பதை ஸ்ரீசெட்டி சித்தரே ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிப்பார். குரு பூஜைக்கு முன்பாக பக்தர்கள் கனவில் தோன்றி, திரைப்படம் போல தனது ஆலயத்தில் நடைபெற உள்ள பூஜையை காட்டியருள்வார். அதன்படியே கமிட்டியுடன் பக்தர்கள் கலந்து பேசி, குரு பூஜையை செய்து முடிப்பார்கள். சித்தர் சமாதியை வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் நீங்கும். பேய், காத்து கருப்பு போன்றவைகள் அகலும். கெட்ட கனவுகள் வருவது நின்று போகும்.

ஒரு முறை ஆலங்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மது போதையில் சித்தரின் ஜீவ சமாதி இடத்தில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மது அருந்தாதே. உனக்கு மதுவின் நினைப்பு வரும்போதெல்லாம், உன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிரு’ என்றார். சித்தர் சொன்னபடியே நடந்ததால், அந்த பக்தர் மது போதையில் இருந்து மீண்டார்.

கொல்லிமலை சித்தர் என்ற பெயரில் போலி சாமியார் ஒருவர் கோவிலுக்கு வந்தார். அனைவரும் அவர் தோற்றத்தைக் கண்டு கோவிலில் தங்க அனுமதித்தனர். ஆனால் பக்தர்கள் கனவில் சுவாமி தோன்றி, ‘அவன் போலி. அவனை தங்க வைக்காதீர்கள்' என கூறினார். மறுநாள் பக்தர்கள் அவரை கவனித்த போது அவரின் போலித்தனம் தெரிந்தது. அவர் மக்களை ஏமாற்றி பணம் பறித்தார். குடிப்பழக்கம் கொண்டவர் எனவும் தெரியவந்தது. மக்கள் அவரை திரும்பி அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ செட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்த இடமானது, புதன் கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், கல்வி கேள்விகளில் சிறப்புடன் விளங்குவர். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞான தேடல் உள்ளவர்களுக்கு ஞானத்தை அளிக்கும், ஞானதபோவனமாக விளங்குகிறது, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம். எவ்வித தோஷம், பிரச்சினைகள் இருந்தாலும் சித்தரின் சன்னிதியை அடைந்தால் நிச்சயம் சரியாகி விடும். பக்தர்களின் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தக்க இடத்திற்கு அனுப்பியோ சுவாமிகள் சரிசெய்கிறார். ஜாதி மத பேதம் பார்க்காதவர், எவ்வுயிருக்கும் தீங்கு செய்ய நினையாதவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் சித்தருக்கு மிகவும் பிடித்த அடியார்கள் ஆவர். அவர்களை சித்தர் ஒரு குழந்தையை போல பாதுகாக்கிறார்.

சுடர் விட்டு எரிந்த விளக்கு

ஸ்ரீசெட்டி சித்தர் காலமான பிறகு சுமார் 21 ஆண்டுகள், சரியான பராமரிப்பு இன்றி அவரது ஜீவ சமாதி புதர் மண்டிக் கிடந்தது. வருடந்தோறும் குருபூஜையை மட்டும் விடாமல் மக்கள் செய்து வந்தனர். அதன்பின் பல அற்புதங்கள் நிகழ்ந்த காரணத்தினால் கோவில் தினசரி பூஜைக்கு வந்தது.

ஆரம்ப கால கட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த இரு நண்பர்கள் கோவிலைத் திறந்து பூஜை செய்ய ஆர்வம் காட்டினர். அவர்கள் இலுப்பெண்ணையில் தீபம் ஏற்றுவார்கள். காலையில் ஏற்றினால் மாலையில் அணைந்து விடும். அதற்குள் எண்ணெய் ஊற்ற வேண்டும். எனவே தினமும் காலை மாலை பூஜை செய்து எண்ணெய் ஊற்றி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் சதுரகிரி மலைக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டனர். அங்கு அவர்கள் இருக்கும் போதெல்லாம் ஊர் நினைப்புதான். ‘எப்படி விளக்கு எரிகிறதோ, அணையாமல் எரிய வேண்டுமே’ என மனதுக்குள் வேண்டி நின்றனர். ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது, விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்டவர்கள், ஸ்ரீசெட்டி சுவாமியின் அருளை எண்ணி வியந்து நின்றனர். இதை கேள்விபட்ட பலரும் சித்தரை தரிசிக்க கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். 

அமிர்த நாழிகை - தன்வந்திரி பகவான் - நோய்களை பூரண குணமாக்கும்

 அமிர்த நாழிகை - தன்வந்திரி  பகவான் - நோய்களை பூரண குணமாக்கும்
dhanvantari-pariharam

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது தான் ‘விதியை வெல்ல முடியுமா?’. ‘முடியும்’ என்கிறார்கள் ஒரு சாரார். ‘முடியும் என்பதற்கு பின்னால் முயற்சியும் இருக்க வேண்டும்’ என்பது அவர்கள் கூற்று.

‘முடியாது’ என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள், ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக்கு அழைக்கிறார்கள். ‘பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று’ என்பது அவர்களின் வாதம்.

இவை ஒருபுறம் இருந்தாலும், கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நம்மை ஆளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம் தான் பரிகாரம்.

வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறை வழிபாட்டின் மூலமும், சில சமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அவர்கள் தான் நம் முன்னோர்கள்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.

அதனால்தான்...

‘கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும்..’ கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.

அப்படி அபிராமிபட்டர் ‘கழுபிணி இல்லாத உடல்’ என்ற ஒன்றை தர வல்லவர், தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள், இந்த தன்வந்திரி பகவான்.

அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலில் இருந்து தோன்றியவர், தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

அதுமட்டுமல்ல.. மருந்து உண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடை தான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.

அந்த பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலில் இருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்து தான், அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம். இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.

அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய ‘உத்திரகாலாமிர்தம்’ என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.

மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.

ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது. அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.

மருந்து உண்ணும் நேரம்

நோய்கள் குணமாக மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-

அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்

பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்

கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்

ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்

மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்

திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்

புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்

பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்

ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்

மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்

உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்

ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்

சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்

சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்

விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்

கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்

மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்

பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்

உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்

திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்

அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்

சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்

பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்

உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்

ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்

இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும். 

நோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்

நோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்
theerthamalai-theertham

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன.

நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

தீர்த்தமலையின் சிறப்புகளே, இங்குள்ள தீர்த்தங்கள் தான். இங்குள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தல தீர்த்தங்களாக ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை விளங்குகின்றன. அற்புத மூலிகைகளின் சத்து கலந்து ஓடி வரும் இந்த தீர்த்தங்களால்தான், இங்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்குவதாகவும், பக்தர்கள் புத்துணர்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.
தீர்த்தங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

* ராமபிரானின் பாணத்தால் தோன்றிய தீர்த்தம் ‘ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தத்தில் ‘ராம ஜெயம்’ என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம்.

* சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே ‘குமார தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

* இத்தல இறைவியான வடிவாம்பிகை, ஈசனை மணந்து கொள்ளும் பொருட்டு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். இதுவே ‘கவுரி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்த நீரைக்கொண்டு, இறைவனையும், இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும். திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்கள் விலகும். கணவன்-மனைவிக்கு இல்லறம் நல்லறமாக அமையும்.

* அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்ற தீர்த்தம் ‘அகத்திய தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்டது. இதனை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன் படுத்தி வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

* அக்னி தேவனின், பெண்ணாசை காரணமாக அவனுக்கு சாபம் உண்டானது. அதனைப் போக்கிக் கொள்வதற்காக இத்தலம் வந்த அக்னி பகவான் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே ‘அக்னி தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடலின் தட்பவெப்ப நிலை சீராகும். ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும் என் பது நம்பிக்கை.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை

நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை
varahi-malai.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும் பயனையும் அறிந்து கொள்ளலாம்.

வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும்.

பகைமுடித்தல்:-

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே...

பொருள்:-

வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தனை பகைத்து கொண்டால் இவள் பொருத்திருக்கமாட்டாள். ருத்திரனின் இயக்கம் இருக்கும் இந்த வாராகியாகப்பட்டவள், தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள் பொருத்திருக்கமாட்டாள் பக்தனை காப்பதில் அவ்வளவு  ஆவேசம்.

பயன்:-

வேண்டுமென்றே ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் அதை விலக்க இதை படிக்கலாம்.

வாக்கு வெற்றி:-

“பாப்பட்டசெந்தமிழ் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூசப்பட்டதும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்டது உன்செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யானர்தெரு எங்குமே

விளக்கம்:-

பொதுவாக நம் தாய் தந்தை என்று தான் நாம் விரும்பி வணங்கும் தெய்வத்தை அழைக்கின்றோம். இது நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் உள்ள

நெறுக்கத்தை காட்டுகின்றது. மேலும் செந்தமிழ் பாக்களால் உன்னை அர்ச்சித்ததெல்லாம் தீயில் எரிந்ததா புகழ்ந்து கூப்பிட்டது உன்  கமல செவிகளில்

விழவில்லையோ? வானமுகடு வரை நெருப்பால் இந்த உலகம் அழிந்ததா என மனம் உருகி வேண்டுகின்ற வடிவத்தை சொல்லுகின்றது.

பயன்பாடு:-

மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும்போது இப்பாடலை பாடி தற்காத்து கொள்ளலாம்.

தேவி வருகை:-

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட, எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மீன் கிழிந்திட ஆர்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிட சூலத்தை போகவிட்டு
சிங்கத்தின் மீது வருவாள் வாராகி சிவசக்தியே

விளக்கம்:-

வாராகியின் கோபம் எப்படிபட்டது தெரியுமா? அன்னை வருகிறாள், மிகபெரிய உக்ர ரூபிணியாய் சிம்ம வாகனத்தில் ஏறி நின்றே வருகின்றாள். அவள்

வருவதற்கு முன்பே அவள் சூலம் பாய்ந்து வருகின்றது. இந்த நிகழ்வு நடக்கின்றபோது, நெருப்பு பறக்கின்றதாம், மலைவெடித்து சிதறுகின்றதாம், பகைவர்கள்

உடல் பிளந்து விழுகின்றார்கள். விண்ணும் மண்ணும் பிளக்கின்றது, கடல் வற்றிபோகின்றது. அவள் சக்திக்கு இது ஒரு விளக்கம்.

பயன்:-

உடல்நிலை பெரிதும் பாதிக்கின்றபோது இப்பாடலை படித்து பயன்பெறலாம்.

ஆன்ம பூஜை:-

‘‘சக்தி கவுரி மகாமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடலைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

விளக்கம்:-

வாராகி தேவி சக்தி, கவுரி, மகாமாயி என்ற மூன்று தெய்வங்களின் வவானவள். அவள் தன் பக்தனுடைய சத்ருக்களை எப்படி சூரையாயிடுவாள் என

மேற்கண்ட பாடல் விளக்குகின்றது. வாராகி தன் பக்தனை சோதித்த எதிரியை தன் கூரிய நகங்களால் குத்தி அவள் வயிற்றை கிழித்து பிடுங்கி வீசுகின்றாள். எட்டு திசைகளிலும் மலைகள் வெடித்து சிதறுகின்றது. அப்போது நளின நடையோடு வந்து அவள் குருதி கொண்டு தன் பக்தன் நெற்றியில் வெற்றி திலகமிடுவாள்.

அமைதியை நோக்கி நாம் செயல்பட நினைத்தால் இப்பாடலை பிராயணம் செய்யலாம்.

தேவி தாபணம்:-

‘‘நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாராயணி தனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை  உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராகி குலதெய்வமே....

விளக்கம்:-

தேவி கொஞ்சி அடிமேல் அடி எடுத்து வைத்து நட்ந்து வருகிறாள். எதற்கு, தன்னை வேண்டி நின்ற பக்தரை வருத்துபவரை வதம் செய்ய, அதற்கு ஏன் கொஞ்சி

நடக்க வேண்டும், தன்னை வணங்கும் பக்தர்களை காக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவள் நஞ்சுடைய கண்டம் உடையவள் என்பது பொருள்.

பயன்:-

அன்பாக அன்னையை அழைக்கும் போது இதை பாடலாம்.

அடக்குதல்:-

‘‘மதுமாமிசம் தனைத் தின்பாள் இவாளன்று மாமறையோர்
அதுவே உதாசினம் செய்தி டுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடிதடித்து
விதிர்வானில் வெட்டி எறிவாள் வாராகி என் மெய்தெய்வமே..

விளக்கம்:-

வாராகி அன்னை ஆவேசமிக்க தெய்வம், அவளது தன்மை புரியாமல் அவளை அலட்சியம்  ஏளனம் செய்தாலோ அவர்கள் வாயடைத்து ஊமையாய் மாறுவர். மேலும் இரண்டு கூறுகளாக அவர்களை வெட்டி எரிந்து விடுவாள் என்பது பொருள்.

பயன்:-

எதிர்ப்புகளை எளிதில் வெல்லலாம்.

அம்பிகை காட்சி:-

‘‘ஐயும் கிலியும் என்று தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்கொடியே...’’

விளக்கம்:-

மனதை மகிழ்விக்கும் பச்சை நிறதிருமேனி, கருணை பெருகும் விழிகள், பிரம்பு, கபாலம், சூலம், ஏந்திய திருகரங்கள், இப்படி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஐம்

கலௌம் என்ற பீஜ மந்திரங்களாக மனம் மொன்றித் துதிக்கின்ற அன்பர் முன்காட்சி கொடுக்கின்றாள்.

பயன்:-

அம்பிகையை அழைக்க இப்பதிகத்தை பாடலாம்.

காக்கும் வடிவம்:-

தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
மாளும் படிக்க வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

விளக்கம்:-

வாராகியை மனமொன்றி துதிக்கும் பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு

வருகிறாள் வாராகி அவளைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை, ஏனெனில், வாராகியின் அருள்

பெருங்கவசமாய் காத்து நிற்கும்.

பயன்-:--

தன்னைதற்காத்து கொல்ல இந்த பதிகம் பாடலாம்.

அன்னையின் அருள்:-

வரும்துணை என்று வாராகி என்றன் அன்னையை  வாழ்த்தி நிதிம் பொருந்தும் தகைமையம் பூணாதவர்  புலால் உடலை பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ண பட்டுகிடப்பர் கண்டீர், உடற் வேறுபட்டே

விளக்கம்:-

உயிர்துணையாக விளங்கும் அருந் தில் நாயகி வாராகியை பாடிப்பரவுதலே பிறவிபயன். அதை செய்யாதவர்கள் அனைவரும் வெறும் தோல் போர்த்திய உடன் கூடுகள், அந்த  உடற்கூடுகள் பருந்து, கழுகு, பேய் மற்றும் பூதங்களின் விருந்தாகும்.

பயன்:-

இதை பாடினால் அன்னை அருள் எளிமையாக கிடைக்கும்.

கதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய

கதிரவன் விரத வழிபாடு - பிரகாசமான எதிர்காலம் அமைய
surya-dev-viratham

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன.

காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால் மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.

ஆவணி மாதம் என்றாலே விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் நமது சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளரின் கட்டுப்பாடுகளை சுமந்து வசிக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலிசெய்யச் சொல்லிவிடுவார்கள். நம்முடைய வீட்டை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது இது ஹால், இது சமையலறை, இது பூஜையறை என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்கிறோம் அல்லவா?

நவக்கிரகங்களில் ராஜ கிரகமாக விளங்கும் சூரியனுக்கு, சிம்மம் சொந்த வீடாகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை அடங்கிய ராசி தான் சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பைப் பெற்று, புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்ல இயலும். பூர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால் அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும்.

எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். கோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதிக பாவங்களைச் செய்ய மாட்டார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். உதவி செய்ய ஓடோடி வருபவர்களாகவும் இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் விளங்குவர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்சநேரத்தில் அடிபணிய வைத்துவிடுவர். கட்டிடத் தொழில் முதல் கமிஷன் தொழில் வரை எதைச் செய்தாலும் கணிசமான ஆதாயத்தைப் பெறுவர். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். சோர்வில்லாத வாழ்வு அமையும்.

‘காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்க
வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி! போற்றி!’

என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது. ‘காசினி’ என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன் தான். எனவே இருள்மயமான வாழ்வு அமைந்தவர் களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோவில் சென்றும் வழிபட்டு வரலாம்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல் லுவர். அதாவது கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.

ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாகும் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும். 

மாங்கனி விநாயகர் வழிபாடு

மாங்கனி விநாயகர் வழிபாடு
vinayagar-worship


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
  
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் காட்சி தரும் மாம்பழ விநாயகரை வழிபாட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.

ஞானப் பழத்தைக் கேட்டு, போட்டி நடைபெற்ற பொழுது ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள். அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார்.

அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து ‘அம்மையப்பன் தான் உலகம். எனவே இது உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.அங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கின்றது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.

ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும்

 ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம் - கடன் - கஷ்டங்கள் நீக்கும்
narasimha-slokas


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும்.

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
 ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
2. லஷ்மியாலிங்கித வாமாங்கம்
 பக்தானாம், வரதாயகம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
3. ஆந்த்ர மாலாதரம் சங்க,
 சக்ராப்ஜாயுததாரினம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
4. ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
 கத்ரூஜ விஷ நாசனம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
5. ஸிம்ஹ நாதேன மஹதா
 திக்தந்தி பய நாஸனம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
தைத்யேஸ்வர விதாரணம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
7. க்ரூரக்ரஹை பீடிதானாம்!
 பக்தானாமப்யப்ரதம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
8. வேத வேதாந்த யக்ஞேஸம்
 ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!
9. யஇதம் படதே நித்யம்
 ருணமோசன ஸம்சஞிதம்!
 அந்ருணீஜாயதே ஸத்ய :
 தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம்

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம்
meenachi-amman-temple-moola-thiruvizha


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான நேற்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை பின்வருமாறு:-

ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு. விழாவில் நேற்று இரவு சாமி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்

பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
piddukku-man-sumantha-leelai


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர்.

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஆண்டவனே “அடி” வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் ஆவணி மாதமாகும்.

சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருப்பவர்கள், இந்த தினத்தில் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நடத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. 

அனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும்

 அனுமன் விரத வழிபாடு - ஆனந்த வாழ்வு தரும்
hanuman-worship
           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வரவேண்டும். பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

தடைகள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் அகலும். அனுமனுக்கு வாலில் பலம். முருகனுக்கு வேலில் பலம். யோகபலம் பெற்ற நாளில் பொட்டு வைக்கத் தொடங்க வேண்டும். வாலில் பொட்டு வைத்தால், நம் வாழ்க்கைப் பிரச்சினை தீரும் என்பதை அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள். வாலின் சக்தியை இலங்கையில் காண்பித்தவர் அனுமன். அவரது வாலில் கீழிருந்து மேலாக பொட்டு வைத்தால் தான் வெற்றிகிட்டும்.

ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும். 

கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை
garuda-panchami-viratham


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை:-

முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை ஆனவள் தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

“தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்.... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், “ இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.

இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். கங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.

விரதமுறை

வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும்.

இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.