தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை.

தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த
உண்மை.

நமது உடலில் சுரக்கும் 20 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.வெற்றிலைப் பாக்குடன் கூடிய¬ தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த
உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

கனகதாரா ஸ்தோத்திரம் ...

கனகதாரா ஸ்தோத்திரம் ......

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷõம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள். இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது.

(இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது)

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா ........
.

நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை....

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.

இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.

செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.

பிரணவத்தின் வடிவமான\போலவே சின்னமும் புனிதமானது. இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.

ஜெர்மனியில் நாஸி இயக்கத்தினர் பயன்படுத்தியது இந்த ஸ்வஸ்திகா சின்னத்திற்கு நேர் எதிரான சின்னமாகும்.

இந்த சின்னத்தை திருஷ்டி பரிகாரமாக ஜெர்மானியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதும் ஒரு தகவல்.

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா. இது ஸூர்யனின் வடிவத்தைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.

ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமி கதை

ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமி கதை !

வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு
சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும்
கஷ்டங்களைக் கொடுத்தார்.

ஒரு நாள்... கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில்,
''உண்ணீ (சின்னக் கண்ணா)... தொந்தரவு செய்யாதே'' என்று கூறி அவனைப்
பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன்
தோன்றி, ''பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை.

உன்னிடம் அது இருக்கிறதா என்று சோதிக்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டேன். இனி, நீ என்னைக் காண
வேண்டுமானால், அனந்தன் காட்டுக்குத்தான் வர வேண்டும்'' என்று கூறி விட்டு
மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த சந்நி யாசி, அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல், கவலையுடன் புறப்பட்டார்.

பல நாட்கள் அலைந்து திரிந்தும் அவரால் அந்தக் காட்டைக் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஒரு நாள், வெயிலில் நடந்து வந்த தளர்ச்சியுடன் ஒரு மரத்தின்
நிழலில் அமர்ந்தார். அருகில் இருந்த குடிசை வீட்டில் தம்பதியிடையே ஏதோ
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

அதன் முடிவில் கணவன், ''நீ இப்படி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டால் உன்னை அனந்தன் காட்டில் விட்டு
விடுவேன்'' என்றான் மனைவியிடம். இதைக் கேட்ட சந்நியாசி ஆவலுடன் அந்த
வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், அனந்தன் காட்டைப் பற்றி
விசாரித்தார்.

அந்தக் கணவனும் காட்டைக் காட்டினான்.
கற்களும் முட்புதர்களும் அதிகம் இருந்தன. எனினும், பகவானைக் காணும் ஆவலில்
இடர்களைக் கடந்து முன்னேறினார் சந்நியாசி. கடைசியில் பகவானைக் கண்டார்.
தனக்கு ஏற்கெனவே காட்சி தந்த உண்ணிக் கண்ணனாக பகவான் இப்போது காட்சி
தரவில்லை!

ஓர் இலுப்ப மரத்தின் அடியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் பள்ளி கொண் டிருப்பதைக் கண்ட சந்நியாசி, மகிழ்வுடன் அவரை
வணங்கினார்.

தனக்குப் பசியெடுப்பதாகக் கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில்
சிறிது உப்பு சேர்த்து சமர்ப்பித்தார் சந்நியாசி. பிறகு, திருவிதாங்கூர்
மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள அந்தணர்
களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்குப் புறப்பட்டார்.

ஆனால், அங்கே ஸ்வாமி இல்லை.
எனினும், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு
செய்தார் திருவிதாங்கூர் மன்னர்.கோயிலுக்குள், அனந்தன் பாம்பு மீது
பள்ளிகொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'பத்மநாப ஸ்வாமி'
எனும் திருநாமம் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இலுப்ப மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் கி.பி. 1686-ல்
தீப்பிடித்தது. அதன் பின்னர், கடு சர்க்கரை யோகம் என்னும் கலவை யால்
பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை இணைத்து புதிய சிலை
உருவாக்கப்பட்டது.இது ஓர் அபூர்வ சிலையாகும்.

18 அடி நீளமுடையவராகக் காட்சி தரும் ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமியின் திருமேனி முழுவதும் தங்கத் தகடு
வேயப் பட்டிருக்கிறது. இந்தச் சிலையை திருவனந்த புரத்தில் இப்போதும் தரிசிக்கலாம்!

தமிழக கோயில்களின் பெரிய தெப்பகுளங்களும் அவற்றின் சிறப்பும்

தமிழக கோயில்களின் பெரிய தெப்பகுளங்களும் அவற்றின் சிறப்பும் !

தமிழகத்தில் தெப்பக்குளங்களுடன் கூடிய கோயில்களை தரிசிப்பது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தங்கத்தால் ஆன தாமரையே இருக்கிறது. இதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர வண்டியூர் மாரியம்மன் கோயில் முன்புள்ள தெப்பக்குளமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி. 1635ல் வெட்டப்பட்டதாகும். இது 1000 அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இதை ஒரு நதியாகக் கருதி, ஹரித்ரா நதி என்பர். கும்பகோணம் மகாமகக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணி சங்கமத்தையும் விட உயர்ந்தது. மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தெப்பக்குளம், சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளம் ஆகியவையும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பக்குளத்தை கமலாலயம் என்று அழைப்பர். இதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 30 ஏக்கர்.

நம்மை சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு தேவதை

நம்மை சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு தேவதை

வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும்.

நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்.

ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்

முளைப்பாரி இட்டு வழிபடுவது

முளைப்பாரி இட்டு வழிபடுவது


கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்த கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்த கிராம தேவதைகளின் வழிபாட்டால் தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு. கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் (கொடியேறும்) நாளன்று திருமணமான (குழந்தை பிறக்க தகுதி இருக்கும்) சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் (வீட்டிலுள்ள இருட்டு அறையில்) வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும் இந்த முளைப்பாரி வளரும்போது ஒவ்வொரு நாளும் அது வளரும் வீட்டின் முன்னால், பெண்கள் வட்டமாக நின்று பாட்டுப் பாடி கும்மியடிப்பார்கள். இதனால் பயிர்கள் நன்கு வளரும். இதற்குத்தான் முளைப்பாரி எனப் பெயர்.

இவ்வாறு கிராமதேவதையின் திருவிழா கொடியேற்றம் நடக்கும் முதல் நாள் முதல், கொடி இறக்கும் பத்தாம் நாள் திருவிழா முடியும்வரை வளர்த்துவிட்டு, திருவிழா முடியும் நாளன்றோ அல்லது அதற்கு முன் நாளன்றோ, செடிகள் நிறைந்துள்ள அந்தப் பானையை ஊர்வலமாக கிராம தேவதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, கிராம தேவதைக்கு முன்னர் ஊர் நலத்தையும் தங்கள் குடும்ப நலத்தையும் வேண்டிக்கொண்டு, அந்த முளைப்பாரியை நீர்நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிடுவார்கள். இதனால் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல், தகுந்த காலத்தில் மறை பெய்து விவசாயம் நன்கு பெருகி கிராமம் சுபிட்சமாக இருக்கும். இதைச் செய்யும் பெண்கள் குடும்பத்திலும் அம்மன் அருளால் தக்க காலத்தில் குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.

பொதுவாகவே, நாம் முக்கியமாக செய்யும் பல விதமான சடங்குகளிலும் பயிரிடுதல், செடி வளர்த்தல் மரம் வளர்த்தல் போன்றவை தவறாது இடம்பெறும். குறிப்பாக திருமணம், உபநயனம், ஆலய கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில், இந்த முளைப்பாரியைப் போன்றே, மண்ணாலான ஐந்து கிண்ணங்களில் (பாலிகைகளில்) மண்ணைப் பரப்பி, அந்த மண்ணில் விதைகளை விதைத்து, திருமணமான சுமங்கலிப் பெண்கள் மூலம் ஜலம் விட்டு வளர்க்கச் செய்து, அந்த மண் பாலிகைகளை, செடிகளை மங்கள நிகழ்ச்சிகள் முடியும் நாளன்று, நீர் நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிட வேண்டும். இதனால் நிகழ்ச்சி தடங்கலின்றி நிறைவேறுவதுடன், மங்களமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இதுவே முளைப்பாரி எனும் வேண்டுதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

முளைப்பாரி சடங்கில் பெண்கள்:

முளைப்பாரி சடங்கில் பூப்பெய்திய வயதிலிருந்து குழந்தை பேற்றை இழக்கும் வயதுக்கு முன் உள்ள பெண் வரை முளைப்பாரி போடத் தகுதியானவர்களாக விளங்குகிறார்கள். மேலும் மாதவிலக்கு சமயத்திலுள்ள பெண்கள், புதியதாக திருமணம் செய்த பெண்கள் இந்த முளைப்பாரி சடங்கில் பங்கு பெறுவதில்லை. பெண்கள் முளைப்பாரி போடுவதற்கான காரணம் இவர்கள்தான் வளமையின் குறியீடாகத் திகழ்கின்றனர். எனவே பெண்கள் இதனைச் செய்கின்றனர்.

முளைப்பாரி போடும் விதம்:

முளைப்பாரி போட கொண்டு வந்து கொடுத்துள்ள சில்வர் குத்துச் சட்டிகளில் கரம்பையை நொருக்கி சட்டியின் அரையளவு போட்டு அதன் மேல் ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் நொறுக்கி பரவலாக தூவுவார்கள். தூவிய பின் தட்டாம் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப் பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை ஊர் செழிப்பாக உள்ள காலத்தில் 21 வகையான விதைகளையும், செழிப்பு குறைந்த காலத்தில் 11 வகையான விதைகளையும் போடுகின்றனர். மேலும் சுரைவிதை, பூசணி விதை, புடலைவிதை, போன்ற விதைகளைப் போடுவதில்லை. படரும் விதைகளைப் போட்டால் மற்ற பயிர் வகைகளை வளரவிடாது படர்ந்துவிடும். எனவே, இந்த விதைகளைப் போடுவதில்லை. இது போன்ற விதைகளைத் தவிர்த்து மற்ற விதைகளை சாணங்களின் மேல் பரப்பி பின் அதன் மேல் நெருங்கிய சாணத்தை பரவலாகப் போடுவார்கள். இவ்வாறு செய்தவற்றை முளைப்பாரி என்கின்றனர். கோவில் தோன்றிய காலம் முதல் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை ஓலைக் கொட்டான்களில் முளைப்பாரி போட்டு வந்தனர். நாகரீக மாற்றத்தின் காரணமாக 5 ஆண்டாக சில்வர் சட்டியில் முளைப்பாரி போட்டு வருகின்றனர்.

முளைப்பாரி போட்ட மறுநாளிலிருந்து முளைப்பாரி போட்ட வீட்டின் முன்பு வட்டமாக நின்று கும்மியடிக்கிறார்கள். இந்த கும்மி ஓசை எழும்புவது போல் முளைப்பாரியும் வெளிவரும் என்று கூறுகின்றனர். ஆகவேதான் பாடும்போது கும்மியடித்துக் கொண்டு பாடுகின்றனர். இப்பாடல்களில் மழை வளத்தையும், குழந்தை மற்றும் வளமான வாழ்க்கையும் தங்களுக்கு தர வேண்டும் என்பதாக கீழ்க்கண்டவாறு பாடுகின்றனர்.

”பூக்காத மரம் பூக்காதோ – நல்ல

பூவுல வண்டு விழாதோ

பூக்க வைக்கும் காளியம்மனுக்கு

பூவால சப்பரம் சோடனையாம்

காய்க்காத மரம் காய்க்காதோ

காயில வண்டு விழாதோ

காய் காய்க்க வைக்கும் காளியம்மனுக்கு

காயால சப்பரம் சோடனையாம்”

என்றவாறு பூக்காத மரம் பூக்க வேண்டும், காய்க்கத மரம் காய்க்க வேண்டும் என்று பாடுவது தாவரச் செழிப்பை வேண்டி பாடுவதாகவும், முளைப்பாரி நன்கு வளர்வது போன்று அந்த ஆண்டு வேளாண்மைப் பயிர்களும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

முளைப்பாரியின் முடிவு:

கோவில் நிறைவு நிகழ்ச்சியாக முளைப்பாரியினை அவ்வூர் பொதுக் கிணற்றில் ,குளத்தில் ,நீர் நிலைகளில் முளைப்பாரி போட்ட பெண்கள் போடுகின்றனர். அப்போது பெண்கள்

”வாயக் கட்டி வயித்தக்கட்டி

வளர்த்தேன்ம்மா முளைய – இப்ப

வைகாசி தண்ணியில

போரேயம்மா முளைய”

என்று பாடிக் கொண்டு முளைப்பாரியை போடுகின்றனர்.

முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுவதற்கான காரணம் பயிர் வகைகள் ஒரு பருவத்தில் அழிந்து மறுபருவத்தில் துளிர் விடுவதின் குறியீடாக முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுகின்றனர் என்பதனை அறிய முடிகிறது.

இம்மை வாழ்வில் தீமை வராமல் மென்மேலும் செழுமை ஓங்குவதற்காக செய்யப்படுவதே முளைப்பாரியாகும். மேலும் முளைப்பாரி சடங்கு செய்வதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இறுக்கம் குறைந்து குடும்பம் மகிழ்ச்சியில் செழித்து ஓங்க வழிவகுப்பதின் அடித்தளமே இந்த முளைப்பாரி

கருடாழ்வார்

கருடாழ்வார் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் ..

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

துளசியின் சிறப்பும் பெருமையும் !

துளசியின் சிறப்பும் பெருமையும் !

எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.

* துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.

* துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.

* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.

* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.

* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.

* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.

* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.

துளசியின் வேறு பெயர்கள்

துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா.

துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.

துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.

துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.

சங்காபிஷேகத்தில் துளசி

சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.

துளசியின் கதை

கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

உண்மையான பக்தி

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

கோவில்களில் பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்

கோவில்களில் பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்

ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி பிரசாதங்களை வழங்கும் பொழுது, அதை வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பொதுவாக சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் அதை கையால் வாங்குவார்கள்.
ஒரு சிலர் பிறர் வாங்கியதை தன் கையில் வடித்து விடச் சொல்வர். முறைப்படி எப்படி வாங்க வேண்டுமென்று பலருக்கும் தெரிவதில்லை. அதேபோல, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை வாங்கும் போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர்.
அது மிகுந்த பாவமாகும். விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. ஏனென்றால், அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது. ஆனால், நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான்.
அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
அங்ஙனம், செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன. அதுமட்டுமல்லாமல், தீர்த்தம் வழங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.
உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால்தான் எழுந்தவுடன் நாம் உள்ளங்கையைப் பார்க்க வேண்டுமென்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் ..

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.

20 வீட்டு பூஜை குறிப்புகள்

வீட்டு பூஜை குறிப்புகள் - 20

1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
14. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
15. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
16. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
17. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
18. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
19. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
20. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்

கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!!!
கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.
பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம். அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான். நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான். அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர். அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட்டான்.
இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர். இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது. அவர், “நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன். எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்” என்றார். இதனால், காவிரிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. தனக்கும் அதே கவுரவம் வேண்டும் என்று எண்ணினாள் காவிரி. பெருமாளின் பாதம் தொட்டு வருவதால்தானே கங்கைக்குப் புண்ணியம். அதுபோல் தான் பெற விரும்பினாள் காவிரி. பெருமாளை நோக்கித் தவம் புரிய எண்ணினாள்.
இந்த மனக்கவலையுடன் பெருமாளிடம் வந்தாள் காவிரி அன்னை. திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார். ஆனால், காவிரியோ தனக்கு இதைக் காட்டிலும் பெருமை வேண்டும் என்றாள். எனவே காவிரியின் வேண்டுகோளை ஏற்று சங்கு சக்ரதாரியாக, கருட வாகனத்தில் ஏறி, தேவியர் ஐவருடன் காட்சி தந்தார் பெருமாள்.
மேலும், காவிரியிடம் வேண்டும் வரம் கேட்டுப் பெறக் கூறினார். ஐந்து லட்சுமியருடன் அழகு தரிசனம் பெற்ற காவிரித் தாயோ, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கே தரிசனம் தர வேண்டும். மேலும், கங்கையிலும் புனிதமான மேன்மையை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது. மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார். கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்ட புகழ்பெற்ற வைணவத் திருப்பதிகள் 108ல் இந்தத் தலமும் ஒன்று. சார என்ற சொல்லுக்கு, ஆன்மா, சாரம் என்று பொருள். பெருமாளுக்கு பக்தர்கள் தங்கள் ஆன்மாவை அர்ப்பணிப்பதால் பெருமாளுக்கு ஆன்மாக்களின் நாதனாக, சாரநாதனாகப் பெயர் ஏற்பட்டது. இதுவும் சார க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது. சாரநாதன் என்ற திருப்பெயருடன் திகழும் பெருமாள், சாரநாயகி என்ற திருப்பெயருடன் திகழும் தாயார், சார விமானம் என்ற பெயருடன் விமானம், சார புஷ்கரிணி என்ற பெயருடன் தீர்த்தம்.. எல்லாம் சாரம்தான். முற்காலத்தில் இந்தத் தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. அதுமட்டுமா… இங்குள்ள சிவபெருமானையும் சார பரமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் அழைக்கின்றனர். இவரது கோயிலை உடையார் கோவில் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் ஞானவல்லி என்பது.
சாரநாதப் பெருமாள் ஆலயத்தின் சிறப்பம்சம், இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி என லட்சுமியின் அம்சமாய் ஐந்து தேவியருடன் அருள் வழங்குகிறார் என்பது.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சாரநாதப் பெருமாள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். சுமார் 90 அடி உயரத்தில் திகழ்கிறது. கோயிலுக்கு எதிரே உள்ள சாரபுஷ்கரிணி மேற்குக் கரையில், அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வான், அனுமத் சமேத ஸ்ரீராமர், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மிணி, நரசிம்மர், பாலசாரநாதர் என சந்நிதிகள் உள்ளன. கருவறையில் காவிரி மட்டுமல்லாது, மார்க்கண்டே மகரிஷியும் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர் இந்தத் தலத்தில் முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.
இந்தப் பெருமாள் வரலாற்று காலத்திலும் முக்கியத்துவம் பெற்றவர். நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வைணவத் தலங்கள் பலவற்றையும் புனரமைத்து வழிபட்டு வந்தனர். மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் ஆணைப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்காக இந்த ஊரின் வழியே கற்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மன்னனின் அமைச்சருக்கு இந்தப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி.
சாரநாதப் பெருமாளின் திருப்பணிக்கு தேவைப்படும் என்று வண்டிக்கு ஒரு கல் வீதம் அமைச்சர் நரசபூபாலன் இங்கே இறக்கிவைத்தான். ஆனால் இந்தச் செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவனுக்குக் கோபம் தலைக்கேற, இங்கே வந்தான். இதனால் மிகவும் பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோவிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான் என்பர். இந்தப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். “தண்சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
திருவிழா: இந்தத் தலத்தில் சிறப்புத் திருவிழா தைப்பூச விழாதான். இது, பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்த் திருவிழா. இங்கே காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்தது, ஓர் தை மாத, பூச நட்சத்திரத்தில்தானாம். இது, வியாழன் சஞ்சரித்த காலம் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாத பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இங்குள்ள சார புஷ்கரணியில் நீராடினால், மகாமாகத்தில் நீராடியதற்கு ஒப்பாகும் என்பர். எனவே, இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
திருமணத் தலம்: இங்கே பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்ஸவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாத்துகின்றனர்.
பாபம் போக்கும் பெருமாள்: இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முங்கி எழுந்த புண்ணியம் கைகூடுகிறது. கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை.
சந்நிதி திறக்கும் நேரம்: காலை 6-11 மாலை 5-8 வரை.
தொடர்புக்கு: 0435-2468001

நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்

நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன் !!!

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தபோது அவரிடம் பாஞ்சாலி “தர்ம நியாயத்துக்கு கட்டுப்படும் தாங்கள், நான் துகிலுரியப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு பீஷ்மர், துரியோதனனின் உணவை உண்டதால் உண்டான ரத்தம்தான் அதற்கு காரணம்” என்றார்.

“அப்படியானால் இப்போது மட்டும் ஏன் மாறினீர்கள்?” என்று கேட்க, “அந்த ரத்தத்தை எல்லாம் அர்ஜுனனின் அம்பு வெளியேற்றி விட்டது. அதனால் நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்” என்றார் பீஷ்மர். ஆகையால் நல்லவர் இல்லத்திலும் நல்ல மனதுடன் உணவு படைப்பவர் கையிலும்தான் உணவு உண்ண வேண்டும்.

சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!

சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். மூலவருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
இந்த ஆலயத்தினுள் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இரண்டாவது ராஜகோபுரத்திற்கு வெளியே, அனுக்ஞை விநாயகர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது “ஞானவாவி தீர்த்தம்”. “வாவி’ என்ற சொல்லுக்கு குளம் என்று பொருள்.
ஒருமுறை திருஞானசம்பந்தர் வெம்மையால் வாடி, மிகவும் களைப்பாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். தன் களைப்பினை போக்கிக்கொள்ள வேண்டி தேனுபுரீஸ்வரரை வழிபட ஆலயத்திற்குள் நுழைந்தார். திருஞான சம்பந்தருக்கு இந்த ஞானவாவியின் தீர்த்தத்தினை இறைவனே முகந்து வழங்கினார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் குளத்தில் இருந்து எடுத்துக்கொடுத்த தீர்த்தம் பாலாக மாறியது. அந்த ஞானப்பாலை திருஞானசம்பந்தர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றார்.
திருஞான சம்பந்தருக்கு முதலில் சீர்காழியில் வானமார்க்கமாக வந்த தேவியால் ஞானப்பால் வழங்கப்பட்டது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இரண்டாவது முறையாக ஞானவாவி தீர்த்தத்திலிருந்து ஞானப்பால் வழங்கப்பட்டது. இந்த ஞானவாவி தீர்த்தத்தில் நீராடுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த ஞானம் கிடைக்கப் பெறுகிறார்கள். சரியாக படிப்பு வரவில்லை என்று கவலைப்படும் மாணவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி பலன் அடைகிறார்கள்.
இக்கோயிலின் இன்னொரு புனித தீர்த்தம் “கோடி தீர்த்தம்’. நவகிரக சந்நிதியின் மேற்கு திசையில் இருக்கிறது தெய்வத்தன்மை வாய்ந்த கிணறு. இதுதான் “கோடி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான் ஒருமுறை இக்கோயிலின் தேனுபுரீஸ்வரரை வழிபட வந்தபோது பேராற்றல் மிகுந்த வில்லின் ஒரு முனையில் இக்கிணறைத் தோற்றுவித்தார் என்கிறது தலபுராணம். தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இந்த கோடி தீர்த்தத்தில் நீராடினால் தீவினைகள் நீங்கி நலம் பெறலாம்.
ஆந்திரப் பிரதேச மலையில் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் தென்கரையில் உள்ளது ஸ்ரீசைலம் சிவஸ்தலம். நந்திகொட்கூர் பகுதியில் உள்ள ஒரு மலையின் மீது சுமார் பதினைந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில். நம் பாவங்களை எல்லாம் போக்கும், கங்கையின் பாவத்தையே போக்கிய பாதாள கங்கை தீர்த்தம் இக்கோயிலில்தான் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் மலையின் வட கிழக்கு திசையில் 1500 அடி இறக்கத்தில் ஆரம்பமாகிற கிருஷ்ணா நதியைத்தான் இங்கே பாதாள கங்கை தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.
அனந்தபுரத்தில் கல்யாணவதி என்கிற இளம்பெண் தினமும் கங்கை நதிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது வழியில் ஒரு அழகான வாலிபனைக் கண்டு மயங்கியவள் தவறு செய்தாள். அதற்குப் பிறகு அவள் கங்கை நதியில் குளிக்க முயன்றபோது கங்கா மாதா அவளைத் தடுத்தாள். “கணவனுக்கு துரோகம் செய்த உன்னுடைய ஸ்பரிசத்தால் என்னுடைய பரிசுத்தத்தை பாழாக்கி விடாதே. மீறினால் சபித்துவிடுவேன்” என்று கோபத்துடன் கூறினாள்.
கங்கையின் கோபம் கண்டு கதறி அழுதாள் கல்யாணவதி. “தாயே என் பாவத்தை நீக்க வேண்டிய நீயே என்னைத் துரத்தினால் நான் எங்கு செல்வேன். என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சினாள். மனம் இரங்கி அவள் குளிப்பதற்கு அனுமதியளித்தாள் கங்கை.
கல்யாணவதி கங்கையில் குளித்து புனிதமானாள். ஆனால் கல்யாணவதியால் தான் மாசடைந்துவிட்டதாக கருதினாள் கங்காதேவி. தனக்கு ஏற்பட்ட மாசினைப் போக்க, ஸ்ரீசைலத்தில் உள்ள பாதாள கங்கையில் நீராடி புனிதம் அடைந்தாள். இந்த நதியில் உள்ள கற்கள் லிங்க ரூபத்தில் இருப்பது சிறப்பு. பாதாள கங்கை தீர்த்தத்தில் மூழ்கிக் குளிப்பவர்கள் பாப விமோசனமும், முக்தியும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்து துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றது. இராகுக்கு அதிதேவதை ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி ஆவாள். இவ்வம்பிகைத் திருக்கரங்களில் சங்கோடு சக்கரம் தரித்து இருப்பதால் துர்க்கா லட்சுமி என்றும் விஷ்னுதுர்க்கை என்றும் போற்றப்படுகிறாள். கேட்டவருக்கு கேட்டவரம் நல்கும் இவ்வன்னை பூவுலகின் கற்பக விருட்சம். வெற்றித் திருமகுடம். இராகுவினால் ஏற்படும் கெடுபலன்களிலிருந்து விடுபட ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு 9 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும். கல்வியில் தேர்ச்சி பெறுவர். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும் நினைத்த காரியம் கைகூடும்

நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர்

ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை “கைலாய விமானம்’ என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
சௌந்திர நாயகர், சுந்தர நாதர், பஞ்ச வர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என்று பல பெயர்களிலும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார்.
இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது. இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
பகலில் ஆறு நாழிகைகளுக்கு ஒரு முறை நிறம் மாறும் இந்த சுயம்புலிங்கம், காலை 6 முதல் 8.25 வரை தாமிர நிறத்திலும், காலை 8.26 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும், மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என அறிய முடியாத வண்ணத்திலும் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.
இந்த மூல லிங்க அமைப்பில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக உள்ள சிறிய பாணத்தை பிரதிஷ்டை செய்தவர் அகத்திய ரிஷி என்பார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர், கிரி சுந்தரி. மிகப் பெரிய வடிவில், பேரழகுடன், சுவாமிக்கு வடகிழக்கில் தனிக் கோயிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பாள்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடி மரத்துப் பிள்ளையார், கொடிமரம், பலிபீடம், ரிஷப தேவரின் சந்நிதி ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் இடது புறம் அமர் நீதியார் தராசு மண்டபமும், வலதுபுறம் உற்சவ மண்டபமும் உள்ளன. அடுத்து மூன்று நிலை உட்கோபுரம். உள்ளே காசி பிள்ளையாரை கடந்து சென்றால், அழகிய மண்டபம். அதன் வலது புறத்தில்தான் அருள்மிகு கிரி சுந்தரி அம்பிகையின் சந்நிதி உள்ளது. எதிரே மூலவர் கல்யாண சுந்தரர், கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்கையும் காட்சியளிக்கின்றனர். இரண்டு திருச்சுற்றுகளை உடைய இத்திருக்கோயில் 316அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.
இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் பல. சப்த சாகரம், அக்கினி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம்ம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவையே அவை. இங்கு தல விருட்சம், வில்வ மரமாகும். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இவ்விறைவனை வழிபட, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் தென் பிரகாரத்தில், எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ மகா காளிகாம்பாள். சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆலயம் திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மதியம் 1 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
அமைவிடம்:
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம். இதன் கிழக்கில் உள்ள வாழைப்பழக்கடை என்ற இடத்திலிருந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லூர் என்ற இந்தத் தலம். சுந்தரப் பெருமாள் கோயில் என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கில் இரண்டரை கிலோமீட்டர் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு இத்தலத்தில்தான் பரமேஸ்வரன், “திருவடி தீட்சை’ அளித்தார். அதை நினைவூட்டும் வகையில் இங்கு வைணவக் கோயில்கள் போல் “சடாரி’ சாதிக்கும் மரபு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம், அப்பராகிய நாவுக்கரசருக்கு திருவடி தீட்சை தந்த தலம் ஆகிய பெரும் பெருமைகளைக் கொண்ட திருத்தலம் இது.

காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் உள்ள சிற்றூர் கேரளபுரம். இங்குள்ள ஆலயம் “வீரகேரளபுரத்து மகாதேவர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சிறப்பூட்டுவதும், மக்களை வியப்படையச் செய்வதும் இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர். இப்பிள்ளையார் ஆறு மாதங்கள் வரை கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வரை வெளுப்பாகவும் காட்சி தருகிறார்.

அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கறுப்பாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை வெளுப்பாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த அதிசய விநாயகர் ஒரு கால் ஒடிந்து காணப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இக்கோயிலின் குருக்கள் தவறு செய்வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு முதியவர் தாழிட்ட கதவை பலமாகத் தட்டியுள்ளார். கோபத்துடன் கதவைத் திறந்த கோயில் குருக்கள் முதியவர் என்றும் பாராமல் ஆத்திரத்தோடு அவரை வேகமாகத் தள்ளிவிட்டார். தடுமாறிக் கீழே விழுந்த முதியவரின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அதைக் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

மறுநாள் குருக்கள், கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது, விநாயகப் பெருமானின் ஒரு கால் ஒடிந்திருப்பதைக் கண்டு வியப்பும், அச்சமும் அடைந்தார். தனக்கு அறிவுரை கூற வந்த முதியவர் விநாயகரே என்பதை அறிந்து வருந்தினார். தன் செயலுக்காக பிள்ளையாரிடம் மன்னிப்புக் கேட்டவர் மனம் திருந்தினார். இதுவே காலொடிந்த பிள்ளையாரின் கதை.

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!
மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா…? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் தான்!
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்தலம், மண் அரக்கனால் வழிபடப்பட்டது என்பதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. அதன் காரணமாகவே மண் அரக்கநல்லூர் என்பது பின்நாளில் மருவி, மண்ணச்ச நல்லூர் ஆனது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி. உளிபடாத, சற்றுச் சாய்ந்த லிங்கத் திருமேனியை உடையவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிக்கீற்றுகளைக் கொண்டு இறைவனின் திருமேனியில் படரவிட்டு வழிபடுவது தனிச்சிறப்பான ஒன்றாகும். இவ்வாலயத்தில் வன்னி மற்றும் வில்வ மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.
கட்டடத்தொழில், ரியல்எஸ்டேட், விவசாயம் செழிக்க, போர்வெல் அமைக்க என்று பூமி சம்பந்தமான அனைத்து தொழில் செய்பவர்கள், தங்களுக்கென்று நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் என அனைவருமே இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த வழிபாடு வித்தியாசமானது; எங்கும் கேட்டறியாதது என்றே சொல்ல வேண்டும். அதாவது, நாம் வாங்கிய அல்லது விற்க நினைக்கும் நிலத்தின் மண்ணை சுப தினத்தில், புதன் ஹோரையில், வடகிழக்கு மூலையில் எடுக்க வேண்டும். கொஞ்சமாக மண்ணை எடுத்து, மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும்.
முதலில், கொடி மரத்து விநாயகருக்கு ஒரு விளக்கேற்றி வழிபட்ட பின்னர், அம்பாள் தர்மசம்வர்த்தினிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்ததாக, மூலவர் அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோயிலை இரண்டாவது முறை வலம் வரும்போது, வன்னி மரத்தடியில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், வன்னி மரம் நீரோட்டமுள்ள ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது என்பதுடன், இங்கு வருடந்தோறும் மார்கழி மாதம், ஞாயிற்றுக் கிழமைகளில் ருத்ர அபிஷேகம், ருத்ர ஹோமம் செய்யப்பட்ட மணல் வன்னி மரத்தின் அடியில் போடப்பட்டு வருகிறது. அந்த மண்ணை பரிகார மண்ணாக பக்தர்கள் எடுத்துச் செல்வதால், அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. மூன்றாவது முறை கோயிலையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
அடுத்தநாள் காலையில், புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் நாம் எற்கெனவே மண் எடுத்த ஈசான்யத்தில் கோயிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். மண் எடுத்து வந்த மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை முடிந்து, வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறியதும், அருள்மிகு பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். நாம் எற்கெனவே முடிந்து வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தை பூமிநாத சுவாமிக்கு சமர்பிக்க வேண்டும்.
வீடு வாங்குதல், வாஸ்து தோஷம், சொத்து பாகப் பிரச்னைகள், தென்-வட மூலை உயரம், ஜென்ம சாபம், பாப தோஷம், பூமி குற்றம், பில்லி சூன்யம், ஏவல், எந்திரம், மந்திர தோஷங்கள் உட்பட 16 வகையான பூமி பிரச்னைகளுக்கு, இத்தலத்து இறைவனை வழிபடுவதால் நற்பயன் விளைகிறது. அருள்மிகு பூமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து வணங்கினாலே அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் என்று அகத்தியர் நாடியில் கூறப்பட்டுள்ளது.

ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு 12ம் இடம். அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச்சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச்சனி என்பார்கள். அந்தக் காலக்கட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.

ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப் படைக்கும் சனி பகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழிவகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊரு விட்டு ஊரு போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்ப்போம்.

சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி புனுகு பூசி, கறிவேப்பயிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமீட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

ராசி 12ல் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சை பழத்தின் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும், ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும், தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதைப் போக்க, திங்கட் கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகுப்பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் விலகும்.

நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!

நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும், நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக “சூரிய தேவன்” இடப்புறம் உஷா தேவியுடனும், வலப்புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத் தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு.
பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன். சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.
சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத்தலத்தில் உட் பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். மற்ற ஆலயங்களை போலல்லாது இத்திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில் எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் “ஆதித்ய ஹிருதயத்தை ” மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகும்.
இந்த ஆலயத்தின் வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள “திருமங்கலக்குடி” சென்று “பிராணவரதரையும்”, அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும். பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.
அதன் பிறகு, வெளிப்பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும்.
கடைசியாக சுக்கிர பகவானையும், ராகுவையும் வழிபட வேண்டும். மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக (மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல) வலம் வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.
தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் இரவு 8 வரை திறந்திருக்கும்.

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.
திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும்.

தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.

இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.

திருமணம் செய்ய என்ன வேணும்? அதில் என்ன சந்தேகம். ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும். குட். ஒரு திருமணம் நடக்க, ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. மறுக்கவில்லை. இந்த இருவர் மட்டும் இருந்து விட்டால் கல்யாண கதவு திறந்து விடுமா?
முடியாது ராஜா முடியாது. அதற்கு மகத்தான கிரக பலம் வேண்டும். கிரக பலம் என்பது கால நேரம். அந்தக் கால நேரம் ஒத்துழைத்தால் மாலை சூடலாம், மணமேடை ஏறலாம்.

என்ன ஒய்… உம்ம பாஷையில் கால நேரம் என்பது திருமண திசையாக்கும். எஸ்… அதே…அதே..
ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.
சரிங்க… திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா?
அதெப்படி… …. குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டாமா?

அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். .
சாரி. நாம் அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். இப்போ சனி பகவானின் ஓரப் பார்வையாவது உங்கள் மீது விழுகிறதா என்று பார்ப்போம்.

சனி பார்வையா… ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.
டோன்ட் ஒர்ரி. சூரிய புத்திரன், கர்ம வினை கிரகம், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர் என்று சொல்லப்பட்டாலும், அவர் தர்மத்தின் தவ புதல்வன். தர்ம தேவனின் மறுவடிவம். அவர் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்தால் காலம் உங்கள் காலடியில் இருக்கும்.

சாதகமான இடம் என்றால் மூன்று, ஆறு, பதினொன்றா?
கரெகட்.

ஆனாலும் ஏழரை சனி நடக்கும் போதும் மாலையும் கழுத்துமா மணமேடை ஏறலாம் தெரியுமோ.
சரி.. விளக்கமா சொல்லுங்க ஜோசியரே.

பொதுவா…. சாமானிய மக்கள் என்றில்லை. ஜோதிடத்தில் கரை கண்ட பெரியவா கூட, ஏழரை சனி என்றால் எட்டிக்காயை கடித்த மாதிரி தான் ஃபீல் பண்ணுவா.

உக்கார்ற இடத்திலே முள்ளு வச்ச மாதிரி உறுத்துகிற நேரத்திலே… நல்லது நடக்குமா? சனி அதற்கு வழி விடுவாரா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரும். அது அனுபவம் தந்த பாடம். ஆனாலும் சுருக்கமா சொல்லப் போனா, சுயம்வரம் செய்ய எந்தத் தடையும் தர மாட்டார். சிலர் சொல்லலாம்.. வேணாம் தம்பி இந்த விஷப் பரிட்சைன்னு… கொஞ்சம் .பொறுங்கோ.
சரி …. ஏழரை சனின்னா என்ன? பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. சேர்த்து வச்சதை செலவு செஞ்சு வீடு கட்டு. அப்படி செய்துட்டா…. சனி பகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.

சரிங்க….. இந்த வாதம் சரியா?
சரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. எப்படி?
ஏழரை சனி, வாழும் காலத்தில் மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம சாபிடுற சாப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள். முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரண சனி.
இருக்கட்டும்…. ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா? எப்போதுமே….. அல்லல் படுத்தி ஆனந்தப் படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தைப் பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி, மாப்பிள்ளையாக மணப்பந்தலில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளைத் தோழனாக நிற்க வைக்கும் சனி, கல்யாண யோகத்தைத் தருவாரா?

தருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.
ஏழரை சனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனாலும் பொறுத்தால் நல்லது. இன்னும் கொஞ்சம் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்.
ஏழரை சனி என்பது ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி ராசிக்கு வந்தால் ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு போனால் குடும்ப சனி என்பார்கள் சரியா?
இப்போ 12இல் இருந்தால் ஓகே.

ஏழரை சனிதானே. செலவு செய்யும் நேரம் தானே.. என்று ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை. அது எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் மட்டும் செய்யக்கூடாது.

செய்தால்?
திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்துக் கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோசம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும். அதனால்… கட்டத்தை பாருங்க. கால நேரத்தை கணிங்க. அப்பறம் திருமணத்தை பற்றி யோசிக்கலாம். சரியா.

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர் !!!

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர் !!!

1.மூலவர் : சனீஸ்வரன்
2.சிறப்பு : சுயம்பு
3.தல மரம் : விடத்தை
4.தலபுஷ்பம் : கருங்குவளை
5.தலஇலை : வன்னி இலை
6.வாகனம் : காகம்
7.தானியம் : எள்
8.ஊர் : குச்சனூர்
9.புராணப்பெயர் : செண்பகநல்லூர்
10.மாவட்டம் : தேனி
பிரார்த்தனை
சனி தோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்தி கடன்
பகவானுக்கு எள்விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோயிலின் சிறப்பம்சம்
*கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனுõரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் தான்
தல பெருமைகள் :
* சனிபகவானுக்கு பிரம்மகதி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம்.
* சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.
* அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகி றது.இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.
* சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.
*தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயி லுக்கு வந்து செல்கின்றனர்.
தல வரலாறு :
தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான்.அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது.அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரோடு வளர்ந்தான்.அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான்.புத்திசாலியான வளரப்பு மகன் சந்திரவதனுக்ககே முடி சூட்டப்பட்டது.இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது.இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான்.
வளரப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான்.சனீஸ்வர பகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார்.பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை காரணம் என்று கூறி மறைந்தார்.பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறுகிறது.இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.
முக்கிய திருவிழாக்கள்
*5 வார ஆடிப் பெருந்திருவிழா.
*2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர்
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம்:
தேனி 30 கி.மீ.
மதுரை 100 கி.மீ.
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேனி நகரில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
கட்டணம்: ரூ.200 லிருந்து ரூ.500 வரை.
போக்குவரத்து வசதி:
* தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.
* அருகில் உள்ள ரயில் நிலையம்: தேனி,திண்டுக்கல்,மதுரை
* அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை ஏர்ப்போர்ட்.

சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!

சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.
இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். இந்த விநாயகரின் முதுகில் "நாளை வா' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு "முதுகைப் பார்' என்கிறார். அவர் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.
இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.
இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.
"பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்' எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.
இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.
இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித் தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.
மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார்.
இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிரா மத்திற்குச் செல்ல வேண்டும்.
சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப் பது சிறப்பாகும்.
சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு மிகவும் புகழ்பெற்றது. சனி பகவான் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வார் என்று சொன்னாலும், நள மகராஜா விஷயத்தில் சுயநலத்தைக் காட்டிவிட் டார் என்று புராணம் கூறும். அந்த தோஷம் நீங்க, திருநள்ளாறு திருத்தலத்தில் அருள்புரியும் தர்ப்பராண்யேஸ்வரரை வழிபட்டு தன் தவறுக்கான பரிகாரம் கேட்டார் சனி பகவான். தன் தவறை உணர்ந்ததால் சனி பகவானை தியானத்தில் நின்று அருளும்படி கூறினார் சிவபெருமான். அதனால் திருநள்ளாற்றில் சனி பகவான் கண்கள் மூடிய நிலையில் மௌனமாகக் காட்சி தருகிறார். இவரை சாஸ்திர சம்பிரதாயப் படி வழிபட சனியின் தாக்கம் நீங்கும். இவருக்கு அர்ச்சனை செய்தால் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருக்கொள்ளிக்காடு தலம் திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ளது. இங்கு இறைவன் அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இறைவி: மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கியதாகப் புராண வரலாறு கூறும். இங்கு சனி பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் அருள்புரியும் இறைவன் வான்மீகநாதர். இறைவி- கமலாம்பிகை. இத்தலத் தில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர். இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்செந்தூர் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டாலும்; திருச்சி உறையூரில் கூரை இல்லாத சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோவிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டா லும் சனியின் தோஷங் கள் நீங்கும்.
குடந்தை நாகேஸ் வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள் புரிகிறார். இத்தலத்தில் உள்ள சனி பகவான், "ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்' என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக்கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிச் சந்நிதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினி களுடன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை சனிக்கிழமை களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே சமயத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் வழிபடுவ தால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேயரும், சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஆஞ்சனேயரும் மிகவும் உயரமானவர்கள். சக்திவாய்ந்த இவர்களை வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஸ்ரீஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஸ்ரீஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும். திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீநரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான ஸ்ரீபாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப் பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் "புக்கா பொடி' என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண் டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஸ்ரீஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி.
இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.
புகழ்பெற்ற வைணவத் தலங் களில் தசாவதாரச் சந்நிதி இருக்கும். அங்கு எழுந்தருளியுள்ள கூர்ம
அவதாரத்திற்கு அர்ச்சனை செய்து கற்கண்டு சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தொந்தரவு இருக்காது. சனி பகவானை வழிபடும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:
"விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.'
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.