எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதையும், என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

கால கடிகாரத்தில் (மரணம்), பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, அனைவரும் சரிசமமே.

மரணம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே.

அதனை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால் சரியான பக்கத்திற்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள்.

ஆம், மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ரகசியங்களை பற்றி நாங்கள் கூற போகிறோம். இதனை உயர்த்தி காட்டியது வேறு யாருமல்ல. மரணத்தின் கடவுளான எமதர்மராஜனே.

பழங்கால சமயத்திரு நூல்களின் படி, மரணம் மற்றும் ஆத்மா பற்றிய ரகசியங்களை நாச்சிகேட்டா என்ற குழந்தையும் எமதர்மராஜனும் கலந்துரையாடியுள்ளனர்.

நாச்கேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தைப் பற்றிய சில ரகசியங்களை பற்றி நாமும் தெரிந்து கொள்வோமா.

நாச்சிகேட்டாவின் மூன்று வரங்கள்

எமதர்மராஜனை சந்திக்க நாச்சிகேட்டா சென்ற போது, அவரிடம் மூன்று வரங்களை அவன் கேட்டான்.

அவன் கேட்ட முதல் வரம் – தன் தந்தையின் அன்பை பெறுவது, இரண்டாவது வரம் – அக்னி வித்யா பற்றி தெரிந்து கொள்வது, மூன்றாவது வரம் – மரணம் மற்றும் ஆத்மாக்யன் (ஆத்மாவின் அறிவு) பற்றி தெரிந்து கொள்வது.

அவனுடைய கடைசி வரத்தை நிறைவேற்ற எமதர்மராஜன் விரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தையோ பிடிவாதமாக இருந்தது. அதனால் மரணத்தை பற்றிய ரகசியங்களையும், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதையும் அவனிடம் தெரிவிக்க எமதர்மராஜன் சம்மதித்தார்.

எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

வெளிப்படுத்துதல்

சமயத் திருநூல்களின் படி, ஓம் (ஓங்கார்) என்பது பரமாத்மாவின் ஸ்வரூபம் என்பதை எமதர்மராஜன் வெளிப்படுத்தினார். மனிதனின் இதயத்தில் தான் பிரம்மா குடி கொண்டுள்ளார் என்பதையும் அவர் கூறினார்.

ஆத்மா

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை எமதர்மராஜன் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.emann எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!! emann

பிரம்ம ரூபம்

மரணத்திற்கு பிறகு, ஒரு மனிதன் ஜனன மரண சுழற்சியை முடிக்கிறான். அப்படியானால் பிரம்ம ரூபம் என அறியப்படும், ஜனன மரண சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான்.

கடவுளின் சக்தி

கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், நாத்திகவாதிகளும் மரணத்திற்கு பிறகு அமைதியை தேடி அலைவார்கள் எனவும் எமதர்மராஜன் கூறியுள்ளார். வெளிப்படையாக கூற வேண்டுமானால், அவர்களின் ஆன்மா அமைதியை தேடி அலையும். நாச்சிகேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தை பற்றிய சில ரகசியங்கள் தான் இவைகள்.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரகசியங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள  ரகசியங்கள் ! ! !



திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.



மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.



உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.

பரணி தீபம்!

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!

மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரகசியங்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தல வரலாறு:
கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.
இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
தலபெருமை:
காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.
பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
ஒற்றை மாமரம் :
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.
ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.
கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
திருவிழா:
பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
பொது தகவல்:
மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.
இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
பிரார்த்தனை
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !




ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

தல வரலாறு

திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் கோபுரம்

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.
தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

ஸ்ரீ காளத்தீசுவரர்

ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை அம்மன்

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்

சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

கோயில் அமைப்பு

திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் வளாகம்

கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

பாதாள விநாயகர்

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

தோஷங்கள் விலக பரிகார பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
பயண வசதி

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம். சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உங்க இடது கைய வெச்சு, உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க

உங்க இடது கைய வெச்சு, உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க…!

உங்கள் கைகள் ஒரு கண்ணாடி போல. உங்கள் கைகளை வைத்தே உங்களது குணாதிசயங்கள் மற்றும் உடல்நலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். மேலும், உங்கள் வாழ்கையில் உங்களுக்கு நேரிட்ட சம்பவங்கள் குறித்தும் கூட அறிந்துக் கொள்ள முடியும்.
இரு கைகளில் உங்களது இடது கை தனித்தன்மை வாய்ந்தது என கூறப்படுகிறது. உங்கள் எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டம் பற்றியும், உங்களை பற்றிய இரகசியங்களும் கூட உங்கள் இடது கை மூலம் அறிந்துக் கொள்ள முடியுமாம்….


கைரேகை

இடது கை மூலமாக ஒரு நபரை பற்றி ஆழமாக அறிந்துக் கொள்ள முடியுமாம். இடது கையை வைத்து ஒருவர் தனிப்பட்ட வாழ்விலும், ஆழமான எண்ணத்திலும் எப்படி பட்டவர், அவரது கனவுகள், ஆசைகள், பொது வாழ்விலும், நண்பர்கள் மத்தியிலும் அவர் எப்படி நடந்துக் கொள்வர் என்பது வரை அறிந்துக் கொள்ள முடியும்.


விரல்களின் நீளம்

பொதுவாக ஒருவரின் இடது மற்றும் வலது கைகளே வித்தியாசமாக தான் இருக்கும். விரல்களின் நீளம், திட்டாக அல்லது குறுகலாக இருக்கும். இவற்றை எல்லாம் வைத்து தான் ஒரு நபரின் குணாதிசயங்கள் குறித்து கூறப்படுகிறது.
ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட பெரிதாக இருப்பது

உங்கள் ஆள்காட்டி விரல், மோதிர விரலை விட நீளமாக இருந்தால், நீங்கள் பிறப்பிலேயே தலைமை பண்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பம், நண்பர் மத்தியில் நீங்கள் உறுதியான நபராக திகழ்வீர்கள்.


ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட பெரிதாக இருப்பது

தலைமை மட்டுமின்றி நேர்மையான நபராகவும் இருப்பீர்கள். உறவுகளும், நண்பர்களும் உங்களது கருத்தை முதன்மையாக ஏற்றுக் கொள்வார்கள். உங்களிடம் யோசனைகள் கேட்டு செயல்படுவார்கள். உங்கள் வாக்கு அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக அமையும்.


நடு விரல் வளைவுகள் இன்றி நேராக இருப்பது

உறவுகளையும், குடும்பத்தையும் நன்கு புரிந்துக் கொள்ளும் நபராக இருப்பீர்கள். யாராக இருப்பினும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பீர்கள்.


நடு விரல் வளைவுகள் இன்றி நேராக இருப்பது

உங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் உங்களை முழுமையாக போற்றுவார்கள், நம்புவார்கள், உறுதுணையாக இருப்பார்கள். உங்களது நேர்மை தான் உங்களது வெற்றியின் ரகசியம்.
மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட பெரியதாக இருப்பது

உங்களிடம் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். ஏதேனும் புதிய யோசனை வேண்டும் எனில், உங்கள் உறவினரும், நண்பர்களும் உங்களை தான் அணுகுவார்கள். ஒரே மாதிரியான செயல்களை செய்ய நீங்கள் வெறுப்புக் கொள்வீர்கள். எதுவாக இருந்தாலும் புதியதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

சிறுவிரல் மோதிர விரலை விட மெலிதாக இருப்பது
நீங்கள் தனித்தன்மை கொண்டிருப்பீர்கள், சில சமயங்களில் இவை உங்கள் குடும்பம் எடுக்கும் முடிவுக்கு எதிரானதாக கூட அமையும். மேலும், நீங்கள் சுதந்திரமாக செயலப்பட வேண்டும் என்று தான் விரும்புவீர்கள்.
சிறுவிரல் மோதிர விரலை விட மெலிதாக இருப்பது

இந்த பண்பு தான் உங்களை, சுற்றம் மற்றும் நட்பிற்கு மத்தியில் மிகவும் பிடித்த நபராக இருக்க காரணியாக இருக்கும்.
மேலும் சில தகவல்கள்…

உங்கள் இடது கை மிகவும் மிர்துவாக, மென்மையான இழைநயம் கொண்டிருந்தால் உங்கள் வாழ்வில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டிருக்கும். தனி நபராக நீங்கள் சிறந்த தகுதி கொண்டிருப்பீர்கள். கடுமையான சூழல்களை கடந்து வந்து தான் நீங்கள் செட்டில் ஆகமுடியும்.
மேலும் சில தகவல்கள்…

உங்கள் இடது கையில் நிறைய அழுத்தமான ரேகை கோடுகள் இருக்கிறது எனில், நீங்கள் பதட்டம் அடையும் நபராகவும், எதற்கும் வருந்தும் நபராகவும், எளிதாக கோபமடையும் நபராகவும் இருப்பீர்கள்.
மேலும் சில தகவல்கள்…

தனிப்பட்ட நபராக நீங்கள் திறமைசாலியாகவும், மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராகவும் இருப்பீர்கள். மேலும் இடது கை மென்மையாக கொண்டிருப்பவர்கள் உணர்ச்சிப்பூர்வமானநபராகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு

 காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு


கஞ்ச மலை
அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்
சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
பழமையானது.
சிறப்பு:
சித்தர் கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19km சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.
பொது தகவல்:
கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.
இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.
மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) மட்டுமே உள்ளது. அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது.
ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.
அடிவார கோவில்:
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் .
இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.
அடிவார கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,
காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப் போடுகிறார்கள் இதில்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.
எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது.
இது "அமாவாசை கோயில்” ஆகும்.
சித்தர்:
காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு.
திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர்.
இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது
இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"
என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தறவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.
இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும்.
இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.
இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.
ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அடிவாரக் கோயில்:
1.கணபதி, ஞானசற்குருபாலமுருகன் கோவில்
2.முனீஸ்வரர் ஆலயம்
3.சித்தேஸ்வரர் கோவில்
4.பத்து தீர்த்தங்கள் (பெரிய நந்தி கிணறு, ராகு கேது தீர்த்தம், காந்த தீர்த்தம் …)
5.காளி அம்மன் கோவில்
6.நவகிரகம் , நாகதேவதை கோவில், மடம்
மலைக்கோயில்:
7.சித்தி விநாயகர்
8.வேட்டைக்கார சாமி
9.அன்னதான குடில் (சிவ லிங்கம்)
10.காவல் ஆஞ்சநேயர்
11.பிள்ளையார் பாறை
12.காலங்கி பாதம்
13.நாகர் புற்று
14.மேல் சித்தர் கோவில் (18 சித்தர்கள்)
15.மேல்>கிழ்>பாலமலைசித்தர் நேர் கோட்டில்
16. கிணறு, இரட்டைலிங்கம் (சிவசக்தி)
17.ஐயப்பன் கோவில்
18.கன்னிமார் கோவில்
19.பெருமாள் கோவில்
20.புலித்தோல் பாறை
21.தியான மலை (சித்தர்கள் கூடும் பாறை)
22.ஆதி சிவன் பாறை (ஆத்மா லிங்கம்)
23.கரிய பெருமாள் கோவில்
24.77அடி ஆஞ்சநேயர்
25.நாகதேவி சிலை அரியானுர் வழி
26.சுயம்பு லிங்கம்
27.சுழுமுனை ஊத்து, சுழுமுனை குகை
28.அகஸ்தியர் குகை, காலங்கி குகை
29.மணல் ஊற்று / காளி கானல் / மூங்கில்வனம்
30.ரோம விருச்சம், சந்தன மரம்
31.மதிமயக்கி வனம்
32.சிற்றாறு, பொன்னி நதி

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?அறிவியல் பூர்வமான விளக்கம்.



கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

மகா கும்பாபிஷேகத்தன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள்

மகா கும்பாபிஷேகத்தன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் ..


இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்த வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.

இக்கலியுகத்தில் பிறவி எடுத்த நாம், பிறவிப்பயன் அடைய வேண்டும் என்று நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள் இவர்களைக்கொண்டு பூஜைகள், விரதங்கள், யாகங்கள், தான தர்மங்கள் ஆகியன செய்து மனிதன் தெய்வத்தன்மை அடைந்து வாழ்வாங்கு வாழ வழி வகுத்துள்ளார்கள்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஆலயம் கட்டுதல், ஆலயத் திருப்பணி செய்தல் என்பதாகும். இவை ஆபர்தம், அனாவர்தம், புனராவர்தனம், சுந்தரிதம் என நான்காக பிரிக்கப்படும்.

வேத, ஆகம, சிற்ப,சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு ஆலயம் கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வ உருவங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.
ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் மந்திர வடிவமாக இருந்து ஆன்மாக்களுடைய கர்மாக்களையும், மாயைகளையும் போக்கி அருள் பாலிக்கின்றனர்.

மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களில் சிறந்த மந்திரமாக கருதப்படும் காயத்ரீ மந்திரத்தின் சக்தி, ஒலிக்கப்படும் இடத்திலிருந்து ஆயிரம் மீட்டர் தொலைவு வரை வியாபித்திருக்குமாம். பெரிய மகான் ஆக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவர்.
கல்லினால் வடிவமைத்த தெய்வ திருவுருவங்களை தானியவாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு (48) நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.

கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்க்களுள் ஒன்று தான் கும்பாபிஷேகம். இதற்காக வேதத்தில் சிறந்தவர்களும், சிவா பூஜையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களும் தேவையான யாக குண்டங்களை அமைப்பார்கள்.

இனிய மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து அதில் தோன்றும் ஜோதியை கும்பத்தில் சேர்ப்பார்கள்.

தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட காச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.

சைவர்கள் மகா கும்பாபிஷேகம் என்றும் வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவர்.
ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ உருவங்களில் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிச்கேகதன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் இறைவன் திருவருள் நிரம்ப துணை செய்யும்.

பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், கோயிலுக்குள் நாம் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தி நம் உடலில் ஊடுருவிச்செல்வதை பலர் உணர்ந்திருக்கலாம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் உடலால், மனத்தால், பொருளால் உதவி செய்வது, கும்பாபிஷேகம் காண்பது, அதில் பங்கு கொள்வது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்பவர்கள், வாழ்நாளில் சகல விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பொருளாதார முன்னேற்றத்துடன், குடும்ப ஒற்றுமையுடன், மன மகிழ்ச்சியுடன், இறைவன் திருவருள் கூடி வர வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, அனைத்து ஆலய கும்பாபிஷேகத்திலும் முடிந்த வரை பங்கு பெறுவோம், பயன் பெறுவோம், நலன் பெறுவோம்.

குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?

குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?



”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு
தண்ணி பிடிச்சாலும் நிக்காது”
மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார்.
அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி, சாமீ ... ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், “குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

”குலதெய்வமா .... அப்படின்னா? - திருப்பிக்கேட்டார் அவர்.

சரிதான் .... உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி .... வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

”உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

”ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழிப் பாட்டனார் அவர்”

“அவர்கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு வா”

ஏன் சாமீ .... அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் என் பிரச்சனை
தீருமா?”

”அப்படித்தான் வெச்சுக்கோயேன்.....”

என்ன சாமீ ... நீங்க .... ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச்சொல்லவே இல்லையே!”

”அப்ப இந்த சாமில ஒண்ணக் கும்பிடச்சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சிட்டு வரச் சொல்றீங்களே!”

”காரணமாத்தான் சொல்றேன்.

ஓட்டைப்பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.

நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை.

வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான்.

எனக்குப் பாத்திரமேகூட தேவையில்லை.

ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை.

பாத்திரம் இருந்தால்த் தானே எதையும் அதுலே போட்டு வைக்க முடியும்?

அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப்போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா ... போகாதா?”

”அப்போ குலதெய்வம்தான் பாத்திரமா ... அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்துநாள் கழித்து, சாமீ! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் ‘பேச்சாயி’ங்கற ஒரு அம்மன். அதோடக் கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சிபோய் கிடந்தது. யாருமே போகாம விட்டதால, கோயில் புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய்ப் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடுகல் தான் ’பேச்சாயி!’ ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்” என்றார்.

சபாஷ் ... அந்தக்கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

”சாமீ! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே ... எதுவுமே சொல்லலியே?”

”அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன்.

நான் சொன்னதை மறந்துடாதே ... பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்தமுறை அவரிடம் ஓர் செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

“சாமீ ! இப்போ நான் நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்தில பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க ... இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று அவர் திரும்பவும் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். ...... அது  ..... ?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாக அனைவருமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

’’நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும்.

முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான்.

ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழிப் பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் “கோத்திரம்” என்னும் ஒரு ரிஷியின் வழி வழிப்பாதை.

பிற கோத்ரத்திலிருந்து பெண்கள் வந்து இந்த வழி வழிப்பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக்கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே  நக்ஷத்திரம் வேறாக,
உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும்
இருக்கும்.

அதுதான் இயற்கையும் கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி
இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில்
கைகூப்பி  நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.
காது குத்துவது போன்ற வழிவழிச் செயல் பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகில் ஆயிரம் கோயில்கள் இருக்கலாம். அந்தக்
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம். போகாமலும் இருக்கலாம்.
அதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனால் குலதெய்வக்கோயில்களுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை
அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு
செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம்.

இதன்படிப் பார்த்தால், குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது,
நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை
வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

---- பெரியவர் சொல்லச்சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம் !

”அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப்பின்னே இப்படியொரு
பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூடத் தெரியாமல்,
அதிகபக்ஷம் இருபாட்டன் பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமல்
அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப்  பொறுத்தவரையில் அந்த இறைசக்தி
குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது.
இப்படிச்சொல்வது கூட ஒரு தவறு.

வெளிப்பட வகை செய்யப்பட்டது!

அதுவும் யாரால்? நம் முன்னோர்களால் !
அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்......
நாம் யார்? அந்தத்தொடக்கத்தின் தொடர்ச்சி !
மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப்போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப்
புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம்அங்கேபோய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும்
அந்த இறைசக்தியைத் தொழும்போது, அவர்களும் பித்ருக்களாக
விண்ணில் இருந்து  பார்க்கிறார்கள்.

நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

- பெரியவர் விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப்போனது.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம்
ஒன்றும் அடங்கியுள்ளது.

சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது
பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல்
போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத
இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று அவர் வீராப்பாபேசி,
நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும்
நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை.

அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே,
இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு
ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி
அருள்தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த
ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர
மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு
ஆட்படாமல் போய்விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம்.

பெரும்பாலும் ஒருவழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள்
புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில்,
வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான்
இம்மட்டில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,
மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”.

ஒரு குலதெய்வத்தின் பின்னால். இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளன. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அது தான் நிகழ்ந்துள்ளது.

எனக்கும் இந்தக்குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்க குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. அந்தக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண் .... என் தாத்தன் முன்நின்று மூச்சுவிட்ட இடம் .... என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு ... அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி, அந்தப்பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன்?

செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன்?




செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள்.

அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கான அர்த்தம் இங்கே உள்ளது.

செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்?

செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

சிவராத்திரி நான்கு சாம பூஜைகள் !

சிவராத்திரி நான்கு சாம பூஜைகள் !



*முதல் சாமம்:*

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

*இரண்டாம் சாமம்:*
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

*மூன்றாம் சாமம்:*
இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

*நான்காம் சாமம்:*
இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தன்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள்

நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள்

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-



1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.
2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.
3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.
5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.
6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.
7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.
சிவலிங்க வழிபாடும், பலன்களும் 🌿🌹
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்
அன்ன லிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்
சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்🌿🌹
செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.
* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.
* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.
* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.
தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம்.
ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.
குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.
சிவபூஜைக்கான மாதங்களும்,
மலர்களும்🌿🌹🌿🌹
சித்திரை-பலாசம்,
வைகாசி-புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி-தும்பை,
கார்த்திகை-கத்திரி,
மார்கழி-பட்டி,
தை- தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி-மல்லிகை.
மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.🌿🌹🌿🌹
சித்திரை-மரிக்கொழுந்து.
வைகாசி-சந்தனம்,
ஆனி-முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி-நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம்,
கார்த்திகை-தீபவரிசை,
மார்கழி-நெய்,
தை-கருப்பஞ்சாறு,
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி-கெட்டித்தயிர்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?



மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.
அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும்.
அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம்.
அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை
(பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது.
அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது.
ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது.
நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது.
ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும்.
பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை…🌿🌹

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல் ஜாமத்தில்
(மாலை 6 முதல் 9 மணி வரை): 🌹 🌿
ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம்
அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும்.
தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில்
(இரவு 9 முதல் 12 மணி வரை): 🌹 🌿
பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம்.
இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை):🌿 🌹
தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும்.
மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): 🌹 🌿
கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.
அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும்.
இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள்…
கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.

வராஹி

வராஹி



இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

வராஹியின் வரலாறு மொத்தமாக சப்த கன்னிகள் வரலாறு என்று பார்த்தால் ,அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் தாம். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.

இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.

இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்.

கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்கிருதா .

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்}

ஆனால் பொதுவாக மஞ்சள் உடையும் , முக்கியமாக கலப்பையும் , உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்த்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள். நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.

ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி அம்மை} வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.

சரி இவ்வளவு நேரம் அம்பிகையின் வடிவம் தோற்றம் பற்றி எல்லாம் சொல்லியாயிற்று . நம் விஷயத்துக்கு வருவோம் .. வராஹி உணர்த்தும் தத்துவம் என்ன ?? எதற்கு வராஹி என்று பார்ப்போமா ?

வராஹியை பற்றிய செய்திகளில் ஒன்று முக்கியமானது . வராஹி வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்ல படுகிறாள். அதில் வராஹ அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்தி விடும் .



வராஹம் என்றால் என்ன ? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??

பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடையகுண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி.

*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

எப்படி ஒருவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தான் என்று சொன்னால் அவன் நன்றாக படித்தான் என்பது மறைபொருளாய் உள்ளதோ அது போல் குண்டலினி உயர்வால் நம்முடைய வாழ்வு தானாய் உயரும், ஆக வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். சரி உயருதல் சரி , எங்கிருந்து உயரும் ? எங்கே செல்லும் ? என்றால் எப்போதும் முடங்கி கிடக்கும் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்கினையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி . ஆக ஆக்ஞாசக்க்ரேஸ்வரீ என்னும் நாமம் அன்னைக்கு பொருத்தம் தானே ?

இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.

எழுந்த குண்டலினி மேல்வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..

அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,

ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.

சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடுஎதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது.

இதனால் தான் வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

இப்படி வராஹி வழிபாட்டின் பலன்தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள்.

வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.

அவளே பகிளாமுகி ,தூமாவதி என்று சொல்லுவார்கள் ..

ஆக வராஹி வழிபாட்டால்,வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராஹியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!

ஆனமீக தகவல்கள்

~~~~~~~~~~~~~~~~~~~
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!

1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.

4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

7. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

8. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

9. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

10. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ?

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ?
அப்போ இதயும் கவனியுங்க   ..!!


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

4. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

5. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்.

6. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

7. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

8. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

9. முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

10. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

11. பூஜைக்கு தங்கள் பிறந்த நட்சத்திரம், ஜென்மானுஜன்ம நட்சத்திரம், அல்லது அமாவாசை, பவுர்ணமி,   சித்திரை 1 போன்றவை உகந்தவை.

12. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் தீட்டு  வீட்டிற்கு செல்லாதீர்.

13. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

14. காலை அணிந்த உடையை மாலை நேர பூஜைக்கு  அணியாதீர்.

15. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

16.  பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. அங்கே அதிகம் பேரம் பேச வேண்டாம்.

17.  பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

18.  நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

19. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

20. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

21. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

22. நெய் அல்லது எண்ணையை மற்றவர்கள் விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

23.. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

24. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

25. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

26. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.

27. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

28. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

29. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

30. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

31. கஜ பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

32. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

33. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

34. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

35. சங்கல்பம் மிக முக்கியம்.

36. கோபுர தரிசனம் கோடி நன்மை.

37. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக அவரருகே சென்று மனதினுள் 'சிவயநம' என முடியும் அளவு கூறி வழிபடுவதே நன்று . அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் எப்போதும் இருப்பவராதலால் கையை தட்டவோ சொடுக்குப் போடவோ வேண்டாம்.

38. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

39. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

40. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

41.தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 35 வயதிற்குள் செய்து விடுங்கள்.

42. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

43. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே முறையான பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.

44. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.