Showing posts with label காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு. Show all posts
Showing posts with label காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு. Show all posts

காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு

காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு
murugan-worship


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                                 Click Here : Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

முருகனின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்களில் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பதாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முருகனின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்களில் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பதாகும். தனித்துவம் மிகுந்த காவடி பிரார்த்தனை வழிபாட்டில் நீண்ட பாரம்பரிய மரபைக் கொண்டதாகும். காவடி எடுத்துச் செல்லும்போது பாடப்படுவது சிந்துப் பாட்டாகும். 'சிந்து' என்பது பா இனங்களுள் ஒன்று. காவடி தூக்கிச் செல்லும் போது பாடப்படுவது 'காவடி சிந்து' என்னும் பெயர் பெற்றுள்ளது.

சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் காவடிச் சிந்து, இசைச் சுவையும், அலங்காரச் சுவையும் கொண்டது. கழுகுமலை முருகன் மீது பாடப்பட்ட இப் பாடல்களே காவடிச் சிந்து பாடல்களில் முதன்மையானதாகும் கழுகுமலை காவடிச் சிந்து ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் பாடப்பெற்ற பெருமையை உடையது.

காவடி எடுப்பது என்று முடிவு செய்து கொண்டவர்கள் கடின விரதங்களை மேற்கொள்வார்கள். விரதம் இருந்து ஆண்டவன் சந்நிதிக்கு போகும் நாள் வந்தவுடன் காவடி எடுப்போர் நாக்கிலும், உதட்டிலும் சிறிய வேல்களைக் குத்திக் கொள்வர். பின் காவடி எடுத்து, 'வேல் வேல்', 'முருகா...வெற்றி வேல் முருகா', 'அரோகரா', 'முருகா முருகா' என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டே கோயிலின் சந்நிதி நோக்கி ஆடியபடி செல்வர்.

முருகனுக்குப் பக்தர்கள் எடுக்கும் காவடிகள் 36 வகை என்று கூறப்படுகிறது. பால், பன்னீர், சர்க்கரை, பூ, சந்தனம், பழம், தீர்த்தம், அக்கினி, நெய், தைலம், விலங்கு, வேல், கற்பூரம், அன்னம், இளநீர், ஆணிச்செருப்பு, தேன், சொர்ணம், பாவை, பச்சிலை, பாண்டம், ஆயுதம், பஞ்சவாசம், மச்சம், சர்ப்பம், சேவல், சோதனை, முத்திரை எனப் பலவாறாக காவடிகள் உள்ளன.

இவற்றில் முத்திரைக் காவடிக்கு 'உபசாரக் காவடி' என்ற வேறு பெயரும் உண்டு. மச்சக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக்காவடி, மூன்றையும் சேர்த்து, 'சோதனைக்காவடி' என்றும் அழைப்பதுண்டு. மேற்சொன்ன முருகனுக்கு எடுக்கப்படும் 36 வகைக் காவடிகள்அல்லாது வேறு சில வகைக் காவடிகளும் உள்ளன. காவடி சுமப்போருக்கு கந்தன் அருள் கட்டாயம் உண்டு.

காய்ந்த ஆல விழுது போன்ற லேசான மரத்தில் தடியன்று தயாரித்து, அதன் இரு பக்கங்களிலும் பால் நிரப்பிய சிறிய செம்புகளை வைத்துக் கட்டுவர். பின் தடியின் மேல் அரைவட்டமாகப் பல குச்சிகளை வளைத்துக் கட்டித் துணிகளாலும், மயில் தோகைகளாலும் அலங்காரம் செய்வர். இதுவே காவடி அமைக்கும் முறையாகும். தனக்கு ஏற்பட்ட இன்ப, துன்பங்களைக் காவடியாகக் கட்டி ஆண்டவன் முன்பு வைத்து வழிபடுவதே காவடி வழிபாட்டின் தாத்பர்யமாக உள்ளது