Showing posts with label பஞ்ச பத்ர பாத்திரம். Show all posts
Showing posts with label பஞ்ச பத்ர பாத்திரம். Show all posts

பஞ்ச பத்ர பாத்திரம்

பஞ்ச பத்ர பாத்திரம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்.....

1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.

துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள். இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், திருமாலுக்கு உகந்தது துளசி, அம்மனுக்கு வேப்பிலை, விநாயகருக்கு அருகம் புல்,
பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில் விளக்கம்

•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம் பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?

அர்க்கயம் - கைகளுக்கு,
பாத்யம் - பாதங்களுக்கு,
ஆசமனீயம் - இது ஆசமனம்,
ஸ்நானீயம் - திருமேனிக்கு,
 சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!

இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!

மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!

தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:

பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.

அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்