Showing posts with label செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி?. Show all posts
Showing posts with label செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி?. Show all posts

செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி?

செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி?

செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். 1, 2, 4, 7, 8 அல்லது 12-ஆம் கட்டத்தில் செவ்வாய் வந்தால், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அந்த நபருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும் என கருதப்படுகிறது. அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதற்கு காரணம், திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும் போது, இதை ஒரு முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணத்தை தீர்மானிக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா எனவும், பொருத்தம் உள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.

1. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

2. கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

3. செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

4. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

6. செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

7. இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.