Showing posts with label தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை. Show all posts
Showing posts with label தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை. Show all posts

தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!

தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

மகா சிரசு முத்திரை

மோதிர விரல் உள்ளங்கை நடுவிலும், ஆட்காட்டி, நடு, கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.
பலன்கள்: காலை, மாலை என 10 நிமிடங்களுக்கு செய்ய, தலைவலி நீங்கும். இந்த முத்திரை செய்வதால், தலை மற்றும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். தலையில் நீர்கோத்து ஏற்படும் தலைவலி, சைனஸ் தலைவலிக்கு (Sinusitis) சிறந்த தீர்வாக அமையும்.