Showing posts with label வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள். Show all posts
Showing posts with label வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள். Show all posts

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்!!!


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.

நட்சத்திரவடிவம்:-

அஸ்வினி – குதிரைத்தலை
பரணி – யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை – கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி – தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் – மான்தலை,தேங்கைக்கண்
திருவாதிரை – மனிததலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் – வில்
பூசம் – புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் – சர்ப்பம்,அம்மி
மகம் – வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் – கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் – கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் – கை
சித்திரை – முத்து,புலிக்கண்
ஸ்வாதி – பவளம்,தீபம்
விசாகம் – முறம்,தோரணம்,குயவன்சக்கரம்
அனுசம் – குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை – குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் – அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை
பூராடம் – கட்டில்கால்
உத்திராடம் – கட்டில்கால்
திருவோணம் – முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு
அவிட்டம் – மிருதங்கம்,உடுக்கை
சதயம் – பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி – கட்டில்கால்
உத்திரட்டாதி – கட்டில்கால்
ரேவதி – மீன்,படகு.

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்:-

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படியென்றால்,

நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.

பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.

பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.

மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.
கிரக தசாக்காலங்களில் நற்பலன் தரும் குறியீடுகள்

ஒருவருக்கு எந்த கிரகத்தின் தசா நடப்பில் உள்ளதோ அந்த கிரக வாகனத்தின் படத்தை தினமும் பார்த்து வந்தால், அந்த கிரகத்தின் தசாக்காலத்தில் கெடு பலன்கள் குறையும்,நற்பலன்கள் அதிகரிக்கும்.

கிரக வாகனங்கள்
சூரியன்- மயில்,தேர்
சந்திரன் – முத்து விமானம்
செவ்வாய்- அன்னம்
புதன்- குதிரை
குரு- யானை
சுக்கிரன்- கருடன்
சனி-காகம்
ராகு- ஆடு
கேது- சிங்கம்

ஒருவருக்கு சூரிய தசா நடக்கும் காலத்தில்,அவர் தன் வீட்டில் மயில் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு சந்திர தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் அன்னப்பறவையின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு புத தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் குதிரையின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு குரு தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் யானையின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு சுக்கிர தசா நடக்கும்காலத்தில் து, அவர் தன் வீட்டில் கருடன் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு சனி தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் காகத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு ராகு தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் ஆட்டின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

ஒருவருக்கு கேது தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் சிங்கத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.