Showing posts with label தீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். Show all posts
Showing posts with label தீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். Show all posts

தீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்

தீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்.!!!

கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். மனதில் சாந்தியும், புத்தியில் தெளிவும் பிறக்கும். தீப மேற்றும்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.

“”அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்”

ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், “”நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு (கடவுளுக்கு) சமர்ப்பிக்கிறேன். கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும்” என்று சொல்லி வணங்க வேண்டும்.