Showing posts with label ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில். Show all posts
Showing posts with label ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில். Show all posts

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில் !!!
ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது.

அழுக்குச்சித்தர் என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள் அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார். இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும் கோவில்கள் ஆகும்.