Showing posts with label சங்கு முத்திரை. Show all posts
Showing posts with label சங்கு முத்திரை. Show all posts

சங்கு முத்திரை

சங்கு முத்திரை
(தைராய்டு நோய் குணமடைகிறது).

இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்றவிரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

இந்த முத்திரை பயிற்சியால் நமது சுவாச மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. இந்த முத்திரை பயிற்சியின் போது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு "ஓம்" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தால் இந்த முத்திரையினால் ஏற்படும் நல்ல பலன் முழுவதும் நன்றாக கிடைக்கும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.

சங்கு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
தைராய்டு நோய் குணமடைகிறது.
திக்கிப் பேசுவது குணமடைகிறது.
குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.
இந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.
நல்ல பசி கொடுக்கிறது.
ஜீரண சக்தி அதிகமாகிறது.
உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.
காய்ச்சல் குணமடைகிறது.
அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது.
தசை வலுவடைகிறது.
தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.
மன அமைதி கிடைக்கிறது.
மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது.
தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும்.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது