Showing posts with label அருள்மிகு காமாட்சி அம்மன் பெயர் விளக்கம். Show all posts
Showing posts with label அருள்மிகு காமாட்சி அம்மன் பெயர் விளக்கம். Show all posts

அருள்மிகு காமாட்சி அம்மன் பெயர் விளக்கம்

 அருள்மிகு காமாட்சி அம்மன் பெயர் விளக்கம் 

 அருள்மிகு காமாட்சி அம்மன் பெயர் விளக்கம் 


 ‘க’ என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும். அந்த ‘க’வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. ‘கா’ மேலும் படிக்க காமாட்சி என்றால் கருணை வடிவானவள். அன்பே வடிவானவள் என்று பொருள். தன்னை வணங்கும் அடியவர்களை தன் அன்பால் அரவணைப்பவள் காமாட்சி. 'காம' என்றால் 'ஆசை' (விருப்பம்), 'அட்சி' (ஆட்சி) என்றால் 'கண்' என்றும் 'ரட்சித்தல்' என்றும் 'ஆட்சி செய்தல்' என்றும் பொருள். குழந்தைகளாகிய நம்மீது அன்பைப் பொழியும் கண்களை உடைய தாய்தான் 'காமாட்சி' அருள்மிகு காமாட்சியின் கண்களுக்கு உள்ள விசேஷ சக்தி மிகவும் அலாதியானது. அளவிட முடியாதது. 'கா'வையும் 'மா'வையும் அட்சங்களாக (கண்களாக) கொண்டவள் எவளோ அவளே காமாட்சி எனப்படுகிறாள். 'க' என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும். அந்த 'க'வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. 'கா' அவ்வாறே, 'மா' என்பது லட்சுமியைக் குறிப்பதாகும். 'மா' தவன் என்றால் லட்சுமியின் பதி என்பதாகும். இதன்படி பார்த்தால் 'கா' வான சரஸ்வதியையும், 'மா' வான லட்சுமியையும் தன் இரு கண்களாகக் கொண்ட காமாட்சி காருண்யத்தையும், கல்வியையும், செல்வத்தையும் வாரி வாரி மாரியாய் வழங்குபவள்.