ஸ்ரீ துர்க்கை சித்தர் குருவே சரணம் - Lyrics penned by K Karthik Raja
நன்றாக குரு வாழ்க குருவே துணை!
ஸ்ரீ துர்க்கை சித்தர் குருவே சரணம்! குருவே சரணம்!
வெற்று இலை என என்னை நினைத்தேன் குருவே!
வெற்றிலை கொடுத்து வெற்றியின் வழியை காட்டினாய் குருவே!
கற்சிலை என என்னை நினைத்தேன் குருவே!
கற்றதை கொண்டு அறிவை கற்பிக்க உரைத்தாய் குருவே!
பற்றுதலே இல்லை என நினைத்தேன் குருவே!
பற்றி அணைத்து அன்பின் அழகை அறிய வைத்தாய் குருவே!
என் செயல் நினைத்து வருந்தினேன் குருவே!
உன் செயல் அல்ல, இறைவன்தான் என உணர்த்தினாய் குருவே!
எதுவும் எனக்கில்லை என நினைத்தேன் குருவே!
இதுவும் உனக்கில்லை என வெளிச்சத்தை ஊட்டினாய் குருவே!
சற்று நிமிர்ந்து உன் கண்களை கண்டேன் குருவே!
பற்று பற்று இறைவனை பின்பற்று என அருளினாய் குருவே!
குருவே சரணம்! குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே துணை!
"நன்றாக குரு வாழ்க! குருவே துணை!"
"நன்றாக குரு வாழ்க! குருவே துணை!"
"நன்றாக குரு வாழ்க! குருவே துணை!"