Showing posts with label ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள். Show all posts
Showing posts with label ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள். Show all posts

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதி
ல்லை;
நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்..
ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவ
ிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.
மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.
வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.
பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போத
ு இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.
மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான்.சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.