ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்: தப்பித்தவறி கூட இப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!




 ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது,
மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3,நிலையில் அமரக்கூடாது
4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,
12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது
13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!

கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்

கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் !!!



கும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)
கும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.
உடலமைப்பு,
கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.
குண அமைப்பு,
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.
மண வாழ்க்கை
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.
பொருளாதார நிலை,
பண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.
புத்திர பாக்கியம்,
கும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.
தொழில்,
கும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.
உணவு வகைகள்,
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 5,6,8,14,15,17
கிழமை - வெள்ளி, சனி
திசை -மேற்கு
நிறம் - வெள்ளை, நீலம்
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்

தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்!!!





தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.
உடலமைப்பு,
தனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.
குண அமைப்பு,
தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.
மணவாழ்க்கை,
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.
பொருளாதார நிலை,
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.
புத்திர பாக்கியம்,
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.
தொழில்
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.
உணவுவகைகள்,
தனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 1,2,3,9,10,11,12
கிழமை - வியாழன், திங்கள்
திசை -வடகிழக்கு
நிறம் - மஞ்சள், பச்சை
கல் - புஷ்ப ராகம்
தெய்வம் - தட்சிணா மூர்த்தி

விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்

விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்



விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )
விருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.
உடலமைப்பு,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.
குண அமைப்பு,
விருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.
மணவாழ்க்கை,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.
பொருளாதார நிலை,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.
புத்திர பாக்கியம்,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.
தொழில்
சிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.
உணவு வகைகள்,
உணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 1,2,3,9,10,11
நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை - செவ்வாய், வியாழன்
திசை -தெற்கு
கல் - பவளம்
தெய்வம் - முருகன்

கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்

கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்




கன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.
உடல் அமைப்பு,
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,
குண அமைப்பு
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.
மணவாழ்க்கை
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.
பொருளாதார நிலை,
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
புத்திர பாக்கியம்,
பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.
தொழில்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.
உணவு வகைகள்,
கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும்

சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும்





சிம்ம (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்)
சிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.
உடலமைப்பு,
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.
குண அமைப்பு,
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது. வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.
மண வாழ்க்கை,
சிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
பொருளாதார நிலை,
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.
புத்திர பாக்கியம்,
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.
தொழில்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.
உணவு வகைகள்,
சிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்பு அதிகமாவதை குறைக்க முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் -வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம்
திசை - கிழக்கு
தெய்வம் - சிவன்

கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்

கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்




கடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.
உடலமைப்பு,
கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.
மண வாழ்க்கை,
இவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,
கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்கா செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,
கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.
தொழில்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.
உணவு வகைகள்,
கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி

மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்

மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்






மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)
மிதுனராசியின் அதிபதி வித்தை, கல்வி, கேள்வி, விவேகம், கலை, ஆகியவற்றிற்கெல்லாம் காரகம் வகிப்பவரும், ராஜோ குணம் கொண்டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங்க அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என்பதால் இது முதல் உபய ராசியாகும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.
உடலமைப்பு
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பமும் உண்டாகும். நீண்ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்க மாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளி போலவும் ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள். மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில் கூட தன்னுடைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
மணவாழ்க்கை,
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள். சிற்றின்பத்தில் சற்று ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் தேவையற்ற தொடர்புகளும் இருக்கும்.
பொருளாதார நிலை,
மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என்றே சொல்லலாம். வீடு, மனை, வசதியும், வண்டி, வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கடன் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வம்பு, பிரச்சினைகளை சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.
புத்திரபாக்கியம்,
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். புத்திர பாக்கியமும் சற்று தாமதித்தே அமையும். இவர்கள் தங்களது அவசர முடிவால் உற்றார், உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து விடக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
தொழிலமைப்பு,
மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பலருக்கு ஆலோசனைகள் வாங்கக்கூடிய திறமை இருக்கும். உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது உபதொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் வல்லவர்கள். விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும். முடிந்தவரை கடின உழைப்பின்றி நாசூக்கான வேலைகளையே தேர்ந்தெடுப்பார்கள். கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞான ஆராய்ச்சி, கதை வசனம் போன்றவற்றிலும் இவர்களின் திறமை பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும்.
உணவு வகைகள்,
மிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண்பதையும் உஷ்ண சம்மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும். பால், தயிர், நெய், வெண்ணெய், பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி, முட்டை, பழவகைகள், வாழைப் பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் -5,6,8,14,15,17
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் -மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் - விஷ்ணு

மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்

மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்




மேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்)
மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன.
உடலமைப்பு,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.
குண அமைப்பு,
மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.
தன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.
மணவாழ்க்கை,
மேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள்.
பொருளாதாரநிலை,
மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.
புத்திரபாக்கியம்,
இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.
தொழில்,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்.
உண்ண வேண்டிய உணவுவகைகள்,
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை :-
எண் - 1,2,3,9,10,11,12
நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல்- பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்

*ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயனம்* *தலங்களின் சிறப்பு*

*ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயனம்*  *தலங்களின் சிறப்பு*




ஸ்ரீரங்கம் - வீர சயனம்.

மகாபலிபுரம் - தல சயனம்.

திருமயம் - போக சயனம்.

திருக்கோஷ்டியூர் - பால சயனம்.

கும்பகோணம் - உத்தான சயனம்.

திருவனந்தபுரம் - அனந்த சயனம்.

திருமோகூர் - பிரார்த்தனா சயனம்.

திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்.

திருச்சித்திரக்கூடம் - போக சயனம்.

திருநீர்மலை - மாணிக்க சயனம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

அவைகள்
1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

1 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

2 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

3 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

4 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

5 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

6 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

7 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

8 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்

9 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

10 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தான சயனம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம்.

எழு வகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால்
தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார். மேலும் இனி பிறவி வேண்டாம் போதும்
என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே
சாத்தியம். மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு
தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம்
தரிசிக்கவேண்டும். அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை
முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.
வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து
பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக
இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.
*‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
*மேற்சென்று செய்யப் படும்’*
என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்.
‘நல்வினை’ என்று அவர் கூறியிருப்பதை கவனியுங்கள்.
வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது.
நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை
தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக்
கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது.
இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன்
என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26
கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான
வீராணம் ஏரி இருக்கிறது.
‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும்
பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.
காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப்
பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம்
ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப்
பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால்
சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து
வைப்பான்.

இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

 இங்கு இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.



ஜோதிடத்தின் படி, நம் வாழ்வில் நடக்கப் போகும் ஒவ்வொரு விஷயமும் காரணமின்றி மற்றும் எச்சரிக்கையின்றி நடக்காது. அது நல்ல காரியமாகட்டும் அல்லது கெட்ட காரியமாகட்டும், எந்த ஒரு விஷயம் நடக்கப் போவதாக இருந்தாலும், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். எப்படி பிறப்பி இறப்பின் அறிகுறியோ, மோசமான உடல்நிலை நோயின் அறிகுறியோ, அதேப் போல் ஒருவர் சந்திக்கப் போகும் நிதி பிரச்சனையும் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிக்காட்டும். இங்கு இனிமேல் உங்கள் கையில் பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.


அறிகுறி #1 எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ, உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம்.



அறிகுறி #2 தம்பதியருக்குள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சண்டைகள் வந்தவாறு இருந்தால், வீட்டில் செல்வ வளம் குறையப் போகிறது என்று அர்த்தம்.



அறிகுறி #3 உங்களைத் தேடி வந்துக் கொண்டிருந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கடைசி நேரத்தில் கை நழுவினால், நிதி பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.



அறிகுறி #4 ஜோதிடத்தின் படி, யார் ஒருவர் நிதி பிரச்சனையால் மோசமாக அவஸ்தைப்படப் போகிறாரோ, அவர்களது வாயில் இருந்து அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும் என சொல்கிறது.



அறிகுறி #5 வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த செல்லப் பிராணி திடீரென்று இறந்துவிட்டால், அந்த குடும்பம் பணப் பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறது என்று அர்த்தம்.



அறிகுறி #6 வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அதுவும் அந்த வீட்டில் உள்ள குடும்பம் கடுமையான பணப் பிரச்சனையால் கஷ்டப்படப் போகிறது என்று அர்த்தம்.



அறிகுறி #7 கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் வந்தால், அது உங்கள் சேமிப்பு முழுவதையும் காணாமல் செய்யப் போகிறது என்று அர்த்தம்.



அறிகுறி #8 வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் தெரியாமல் சிதறினால், அதுவும் அந்த குடும்பம் பணப் பிரச்சனையை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது.



அறிகுறி #9 தங்கத்தை இழந்தாலோ அல்லது வைத்த இடம் தெரியாமல் போனாலோ, அது உங்களுக்கு பெரும் பண இழப்பை ஏற்படுத்தப் போவதைக் குறிக்கிறது.

9. கேது !!!

9. கேது !!!




கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது. எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம்.
கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர். ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான். விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம். கேது தோஷமுள்ளவர்கள் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடலாம். செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டை மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். கேது பகவானுக்குரிய தோத்திரம் பாடி வழிபட்டு வர எல்லா நலன்களும் பெறலாம்.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
மூலவர்:நாகநாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்:சவுந்தர்யநாயகி
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:நாகதீர்த்தம்
ஆகமம்/பூஜை:காமிகம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் ஊர்:கீழப்பெரும்பள்ளம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம். நவக்கிரகங்களில் இத்தலம் கேதுவுக்கு உரியது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழ்ப்பெரும்பள்ளம் - 609 105. தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம். நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம். கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
தலபெருமை: எமகண்டகால வழிபாடு:இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். இதற்கு ரூ.75 கட்டணம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு ரூ.450, தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கின்றனர். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம். பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார்.
விசேஷ ஹோமம்: ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம்.
இரட்டை சூரியன்:கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.
தல வரலாறு:தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.
நிறம்-சிவப்பு மலர்-செவ்வல்லி
தானியம்-கொள்
திசை-வடமேற்கு
காரகம்-ஞானம்,மோட்சம்
உச்சம்-விருச்சகம்
நட்சத்திரங்கள்-அசுவனி,மகம்,முலம்
பால்-அலி
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
திசைகாலம்-7 ஆண்டுகள்
கோசரகாலம்-1 1/2 வருடம்
சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை,
பிரம்மன் பிரத்யதி தேவதை.
வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை.
வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம்.
கேது 1 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் பிரச்சினை உண்டாகும். தொழில் திறமை இருக்கும் உடம்பில் பிரச்சினை உருவாகும். சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் கேது தங்கியிருந்தால் இந்த நாட்டையை ஆளலாம். செவ்வாய் வீடான விருச்சகத்தில் தங்கி இருந்தாலும் அந்த யோகம் கிடைக்கும் பிற வீடுகளில் இருந்தால் அந்தளவுக்கு இருக்காது கஷ்டத்தில் தான் வாழ்க்கை வாழவேண்டிருக்கும். நான் பார்த்த வரையில் சனியின் வீடுகளில் அல்லது சனியுடன் கேது இருந்தால் அந்த ஜாதகன் பணக்காரகனாகத்தான் இருப்பார்.
கேது 2 ஆம் வீட்டில் இருந்தால் தன பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்காது. குடும்பத்தில் செய்வினை கோளாறுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் முடிந்தவுடன் குழந்தை பேறும் தடை ஏற்படும்.
கேது 3 ஆம் வீட்டில் இருந்தால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார் எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். பரிகாரம் ராமேஸ்வரம் தான்.
கேது 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கிடைக்கும். தாயாரின் வழியில் பிரச்சினை தான். தாயாரின் உடன் பிறந்தவர்களில் யாராவது ஒருவர் திருமண வாழ்வில் பிரச்சினையில் இருப்பார்கள். தீய எண்ணங்களில் மனது செல்லும். பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வானங்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். வீடு கோவிலுக்கு அருகில் இருக்கும் அதுவும் பிள்ளையார் கோவிலாக இருக்குகூடும்.
கேது 5 ஆம் வீட்டில் இருந்தால் கெட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மை இருக்காது. வயிற்று வலி ஏற்படும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் இவர்களுக்கு ஒன்றும் நன்மை நடைபெறாது. விநாயகரை வழிபாட்டு மூலம் இன்பம் காணலாம்.
கேது 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இளமை காலத்தில் பிரச்சினை இருக்கும். உறவினர் மூலம் நல்ல மரியாதை இருக்கும். நல்ல சுகபோகமான வாழ்க்கை வாழலாம் கடக ராசியாக இருந்தால் மதுபானம் மீது கடுமையான ஈடுபாடு இருக்கும். ஜலதோஷம் அடிக்கடி ஏற்படும். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை.
கேது 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் ஏற்படும். திருமணத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவி அல்லாத பெண்களுடன் தொடர்பு ஏற்படும். திருமண வாழ்க்கையை நினைத்து மனக்கவலை அடையும். உடம்பில் நோய் ஏற்படும்.
கேது 8 ஆம் வீட்டில் இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை. ஆயுள் பலம் குறையும். உடம்பில் நோய் தோன்றி புண் வரும். முறை தவறி நடக்ககூடும். தற்கொலை எண்ணம் தோன்றும். பொதுவாக கேது இந்த வீட்டில் இருந்தால் நோய்களை தருவார்.
கேது 9 ஆம் வீட்டில் இருந்தால் பித்ரு தோஷம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்படும். தந்தையுடன் எல்லா நேரங்களிலும் சண்டை தான் போடுவார். தெய்வ பக்தி இருக்காது. நண்பர்கள் உதவி செய்வார்கள். மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. பிற மதத்தவர் உதவி செய்வார்கள்.
கேது 10 ஆம் வீட்டில் இருந்தால் கலைகளில் ஈடுபாட்டுடன் இருந்து கலைஞராக இருப்பார். பிறர் மனதை நோகடிக்கமாட்டார். இரக்கமனம் இருக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன் தொழில் செய்து வெற்றிக்கொள்வார். மதங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார். தந்தை நலமுடன் இருக்கமுடியாது . தந்தை பணத்திற்க்காக கஷ்டபடுவார்.
கேது 11 ஆம் வீட்டில் இருந்தால் சொத்துக்கள் சேரும் செல்வநிலையில் நன்றாக வாழ்வார் நண்பர்களின் உதவி இருக்கும். சுகபோகங்களுக்கு குறை இருக்காது. நல்ல பணவரவு இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் இருப்பார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை இருக்கும்.
கேது 12 ஆம் வீட்டில் இருந்தால் இதுதான் ஜாதகரின் கடைசி பிறவியாக இருக்ககூடும். புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். பணசேமிப்பு இருக்காது அனைத்தும் புண்ணிய காரியங்களுக்கு செலவாகும். இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு வெற்றிக்கொள்வார்.
கேது (துஷ்ட சக்திகளை விரட்டிட)
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

8. ராகு !!!

8. ராகு !!!



இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.
இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார். இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார். பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம். இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்ட போது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி. தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடைதானம் செய்து உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகு பகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும்.
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்.நாகேஸ்வரர், நாகநாதர்
உற்சவர்
அம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:சூரியதீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநாகேச்சுரம்
ஊர்:திருநாகேஸ்வரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு
கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும்
வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.
இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.
பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.
ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.
தோஷ பரிகாரம்:இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.
ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.
சிறப்பம்சம்:கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
தல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.
நிறம்-கருப்பு
மலர்-மந்தாரை
வாகனம்-ஆடு
ஆட்சி-இல்லை
உச்சம்-விருச்சகம்
நீசம்-ரிஷபம்
நட்சத்திரங்கள்-திருவாதிரை,சுவாதி,சதயம்
பால்-பெண்
கோசார காலம்-1 1/2 வருடம்
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
உலோகம்-கருங்கல்
ராகு 1 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.
ராகு 2 ஆம் வீட்டில் இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.
ராகு 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.
ராகு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.
ராகு 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.
ராகு 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
ராகு 8 ஆம் வீட்டில் இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
ராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.
ராகு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
ராகு 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.
ராகு 12 ஆம் வீட்டில் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்