பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? இங்கு பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.




இதை சிலர் நம்பலாம், பலர் நம்பாமல் போகலாம். இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம், கேட்டு அறிந்திருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில் இதெல்லாம் நம்பும்படியாகவா? உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

ஆனால், இன்றளவும் ஜோதிடம் பார்த்து, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து அந்த நாளை துவங்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்..


#1 ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.

#2 பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.

#3 மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.

#4 ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருபபார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.

#5 மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.

#6 ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.

#7 ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.

#8 ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்பார்.

#9 செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவார்.

#10 அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

#11 நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்

#12 டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!



தினமும் ராகு காலத்தில் ராகு பகவானையும்,துர்க்கையையும் வழிபட்டு வாருங்கள்.

ராகு மந்திரம்

ஓம் ப்ராம்  ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராகுவே நமஹ

துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் 

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்


அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக

ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்

மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்

மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி

ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்

சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்

விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்

மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி

உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்

சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்

பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்




ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

இது பெண்களுக்கு மட்டும்

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

நவகிரகங்களின் பயோடேட்டா

நவகிரகங்களின் பயோடேட்டா





1.சூரியன்
                 
                  காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - அக்னி
    ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
    தலம் - சூரியனார் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை , எருக்கு
    வஸ்திரம் - சிவப்பு
    ரத்தினம் - மாணிக்கம்
    அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்
             
                பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.

    திக்கு -தென்கிழக்கு
    அதிதேவதை - ஜலம்
    ப்ரத்யதி தேவதை - கௌரி
    தலம் - திருப்பதி
    நிறம் - வெள்ளை
    வாகனம் - வெள்ளைக் குதிரை
    தானியம் - நெல்
    மலர் - வெள்ளை அரளி
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - முத்து
    அன்னம் - தயிர் சாதம்

3 .  அங்காரகன் (செவ்வாய்)

                    இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு -தெற்கு
    அதிதேவதை - நிலமகள்
    ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
    தலம் - வைத்தீசுவரன் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவளம்
    அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்

                   இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

    திக்கு - வட கிழக்கு
    அதிதேவதை - விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை - நாராயணன்
    தலம் - மதுரை
    நிறம் - வெளிர் பச்சை
    வாகனம் - குதிரை
    தானியம் - பச்சைப் பயறு
    மலர் - வெண்காந்தள்
    வஸ்திரம் - வெண்ணிற ஆடை
    ரத்தினம் - மரகதம்
    அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு

             இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    ப்ரத்யதி தேவதை - இந்திரன்
    தலம் - திருச்செந்தூர்
    நிறம் - மஞ்சள்
    வாகனம் - மீனம்
    தானியம் - கடலை
    வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    அன்னம் - கடலைப்  பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்

             இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - இந்திராணி
    ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
    தலம் - ஸ்ரீரங்கம்
    வாகனம் - முதலை
    தானியம் - மொச்சை
    மலர் - வெண் தாமரை
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - வைரம்
    அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

7.சனி

             இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - மேற்கு
    அதிதேவதை - யமன்
    ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
    தலம் - திருநள்ளாறு
    நிறம் - கருமை
    வாகனம் - காகம்
    தானியம் - எள்
    மலர் - கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - நீலம்
    அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

            இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

    திக்கு - தென் மேற்கு
    அதிதேவதை - பசு
    ப்ரத்யதி தேவதை - பாம்பு
    தலம் - காளத்தி
    நிறம் - கருமை
    வாகனம் - நீல சிம்மம்
    தானியம் - உளுந்து
    மலர் - மந்தாரை
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - கோமேதகம்
    அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது

          இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

    திக்கு - வட மேற்கு
    அதிதேவதை - சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை - பிரமன்
    தலம் - காளத்தி
    நிறம் - செம்மை
    வாகனம் - கழுகு
    தானியம் - கொள்ளு
    மலர் - செவ்வல்லி
    வஸ்திரம் - பல நிற ஆடை
    ரத்தினம் - வைடூரியம்
    அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

வாத நாசக முத்திரை !!!

வாத நாசக முத்திரை !!!




வாத நாடி  கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை,ரத்த ஓட்ட குறைவால்  உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றிர்க்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை.காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?

செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?



பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்.

சரியான திசை முக்கியம் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.

செல்வம் பெருக காரணங்கள் தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைக்கக் கூடாத திசை எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

குருவின் ஆதிக்கம் வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வடகிழக்கில் வைக்க வேண்டிய செடி துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


 செல்வம் பெருகும் மணி பிளான்ட் மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

அகல் விளக்கை ஏற்றினால்- என்னென்ன பயன்கள் கிடைக்கும்

அகல் விளக்கை ஏற்றினால்- என்னென்ன பயன்கள் கிடைக்கும்



அகல் விளக்கை இந்த திசையில் ஏற்றுவதால் கடன் சுமை மற்றும் கஷ்டங்கள் அதிகரிக்குமாம்! எந்தெந்த திசையில் அகல் விளக்கை ஏற்றினால், என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும். விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காண முடியும். ஆனால், அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மை மற்றும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து இங்கு காணலாம்..

கிழக்கு! அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பெயரும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு! மேற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால், உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விளகம்.

வடக்கு! வடக்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.

தெற்கு! தெற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் எதிர்பாராத தொல்லைகள், கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பஞ்சு திரி! பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்

தாமரை தண்டு திரி! தாமரை தண்டு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் முன் பிறவி பாவங்கள் அகலும், செல்வம் பெருகும்.

வாழை தண்டு திரி! வாழை தண்டி திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு பட்டை திரி வெள்ளெருக்கு பட்டை திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் செய்வினை விலகும், ஆயுள் அதிகரிக்கும்.

அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்

அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்




1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.
3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
4. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
5. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
6. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
7. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
8. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
9. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
10. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
11. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
12. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், "கனகதாரை'' நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
13. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
14. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
15. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
16. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
17. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
18. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
19.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
20. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள்.
கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
21. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
22. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர்.
23. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
24. அட்சய திருதியை நாளில் பிவசந்த் மாதவாய நம' என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.
25. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
27. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
28. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
29. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
30. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

வாசலில் எலுமிச்சை மிளகாய், கரி சேர்த்து கட்டு - அறிவியல்

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டு - அறிவியல்




இது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க!

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.
வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.
ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன?

அலக்ஷ்மி!
எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார்.

மூடநம்பிக்கை!
அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.

அறிவியல் என்ன கூறுகிறது?
எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

ஆரோக்கியம்!
இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

என்ன லாஜிக் இது?
சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.

வேறு கருவிகள்!
இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மருவியது!
ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை!