உங்க கையில பணம் தங்கலையா?... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்..

உங்க கையில பணம் தங்கலையா?... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்...



உங்கள் கையில் பணம் தங்காது என்பதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகள் தென்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.

பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?


1. ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு  பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.

2.ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது.

3.அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

4.வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

5. ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்று பொருள்.

6.வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

7.ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம்.

குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள்

 குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு -  அதற்கு பரிகாரங்கள்



ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் என்ன நடக்கும்? அதற்கு ஏதேனும் பரிகாரங்கள் உள்ளதா? என்ற குழப்பம் நம்மில் பலரிடத்திலும் இருக்கும்.

ஆனால் உண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே ராசியில் இருக்கக் கூடாது என்றுதான் முன்னோர்கள் கூறுவார்கள்.


மேலும் ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேர் ஒரே ராசியாக அமையும் போது, அந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதன் மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஒரே ராசி இருப்பதால் என்ன மாதிரியான பிரச்னை உண்டாகும்?

ஒரு குடும்பத்தில் ஒரே ராசி உள்ள பலர் இருந்தால், ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் மோசமான சூழ்நிலையின் போது பாதிப்பு ஏற்படலாம்.

இதனால் அந்த குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவுகள், பிரிவு, பொருள் இழப்புகள், விபத்து போன்று அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அதற்கு பரிகாரம் தான் என்ன?

கடலோரம் உள்ள கோவில்கள் எனப்படும் சம்ஹார ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்று நம் முன்னோர்கள் பழைய நூலில் கணித்து வைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

மேலும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நவகிரங்களுக்கு எள் விளக்கிட்டு, 27 முறை சுற்றி வந்தால், கிரகங்களின் தாக்கம் குறையும்.

ஏழரைச் சனியும் அஷ்டம சனி நடக்கும் நேரத்தில் குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் பிரிந்து இருப்பது நல்லது. மேலும் வாகனம் ஓட்டும் போது, கவனமாக இருப்பதுடன், ஒரே வண்டியில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள்



கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும்.

இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும்.


அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?

மேஷம்

தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்

ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்

 தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.

கடகம்

 ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்மம்

 ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

கன்னி

 சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

தனுசு

 வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்

 சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்

வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

மீனம்

தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம். 

செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்

செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்



அள்ள அள்ள வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்


இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன.

1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை


சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்

பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.

5. பூஜை அறையில் புனித கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.

6. தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.

7. சரியான திக்கில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள்.

8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது

எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.

9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்

10. அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது.

வீட்டில் இந்த கடவுளின் படங்களை  வைக்கக்கூடாது.



நம் எல்லோர் வீட்டிலும் பூஜையறை இருக்கும். சிறிய வீடுகளில் கூட கடவுளின் படங்கள் வைத்து வழிபட சில இடங்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

அங்கு நமக்குப் பிடித்த தெய்வங்களின் படங்கள், சிலைகள் ஆகியவற்றை வைத்திருப்போம். ஆனால் நாம் வீட்டில் வைக்கும் படங்கள் நம் வீட்டுக்கு நேர்மறையான சக்திகளை மட்டுமல்லாமல் எதிர்மறை சக்திகளையும் கூட உண்டாக்கும்.

அதனால் சில கடவுளின் படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அப்போ எந்தெந்த கடவுளின் சிலைகளையும் படங்களையும் வைத்திருக்கலாம்?

ருத்ர வடிவிலான சிலைகள், படங்கள் வைக்கக்கூடாது. அது அச்ச உணர்வை அதிகரிப்பதோடு எதிர்மறை ஆற்றல்களும் வீட்டை சூழ்ந்திருக்கும்.

எதிரிகளை அழிப்பது போன்ற ஆக்ரோஷமான படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.

ராவணன், துர்க்கை போன்ற படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.

ஒரே மாதிரியான கடவுளின் படங்களை நிறைய வைக்கக் கூடாது. அதுபோல் இருந்தால் அவற்றை அருகருகிலோ அல்லது எதிரிலோ வைக்கக்கூடாது.

உடைந்த தெய்வ சிலைகள், கிழிந்த படங்களை வைத்திருக்கக்கூடாது. அது அபசகுணம் மட்டுமின்றி வீட்டுக்கு வருகிற செல்வத்துக்கும் தடையாக இருக்கும்.

வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள்

வாழை மரத்தின் ரகசிய  பரிகாரம் முறைகள்




1. தரித்திர பிணிகள் விலகஅமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.

2. திருமணம் தடை விலகதிருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.

3. சர்வ தரித்திரங்கள் விலகஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.

4. குழந்தை பாக்கியம் பெறகுழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

5. பித்ரு தோஷம் விலக100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.6. செல்லவம் மேலும் பெருகசம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.

7. அன்ன தரித்திரம் விலகஅட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.

8. வியாபார விருத்தி பெருகஇதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.

9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம்
சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குள விருத்தி அடையும்.

10. பிள்ளைவரம் பெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்

குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை

குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை !!!



நம்கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர். பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. பூஜை வழிபாடுகாலங்களில் சங்கு ஒலிக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகிறது.
காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு குபேரன் படத்தின் முன்பு நல்ல எண்ணெய்+நெய் சம விகிதத்தில் கலந்து சங்கு முத்திரையை செய்தபடி 16 நிமிடங்கள் குபேர மூலமந்திரத்தை ஊதிப் பழகுங்கள். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
அடுத்ததாக ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும். 3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, மணிபூரகச் சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.
சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.
சங்குமுத்திரை
செய்முறை: இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும் படி வைத்து வலது விரல்களால் (பெரு விரல் தவிர்த்து) அதை இறுக மூடிக் கொள்ளவும்.
வலது பெருவிரல், இடது கையின் பிற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சங்கு முத்திரை செய்யும் போது "ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி, தந்தோ சங்க: ப்ரசோதயாத்'' என்ற சங்கு காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்

குடித்தனம் போககூடாத மாதங்கள்

குடித்தனம் போககூடாத மாதங்கள்




ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற  ரணத்தைப் பார்க்கலாம்
இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.
இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
 பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.
 மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.
மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம்.

ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம்.




நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர்,

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.

உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.
இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் பண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.

கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.

ஆண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போகவான், பெண்கள் கூட்டம் தேடிவரும், பெண்கள் மூலம் உதவி உண்டு.

வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர்.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.

பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன்.

பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம் இல்லை

வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்

வீட்டில்  காட்சிப்  பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு அதுக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கடிகாரம் நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எந்த திசை சிறந்தது?

* கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. * வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். * கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
எந்த திசை சிறந்தது? * வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. * குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்

7 குதிரைகள் கொண்ட ஓவியம் பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

எந்த திசை சிறந்தது?

* குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. * அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. * இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.
மணி ப்ளாண்ட் இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது
ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.
எந்த திசை சிறந்தது? இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்