வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்

வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்




வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் . படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

விளக்கேற்றி

"ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"

என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :- 

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ

இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
________________

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.

இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.

காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். 

மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு வடக்கு முகம் நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில்

பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு .

 பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு .





பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.

பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு.

எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது.
நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை

வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?






தீபத்தில்  மகாலெஷ்மி வாசம் செய்கிறாள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம்_இருக்கா?

விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று ஒரு பழமொழி உள்ளது.

நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி  உள்ள தேவையற்ற கதிர்களை

நெகடிவ் எனர்ஜி ஈர்க்கும் சக்தி உண்டு.  அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

நம் சுற்றுப்புறம் தெளிவாகவும்  பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும்
#நல்லெண்ணெய்_விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும்
#நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. இருவரையும் ஒருசேர பார்க்க முடிவதில்லை. அந்த தாய்க்கு ஒருவர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:- மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்

எல்லாவற்றையும் விட தீபத்தில்  மகாலெஷ்மி வாசம் செய்கிறாள் !!.

வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்

வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்




வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை பற்றி சத்குரு அவர்கள் விரிவாக சொல்வதை தெரிந்து கொள்ளலாம்.

சத்குரு: வாஸ்து என்பது எளிமையான கட்டிடக்கலை வழிகாட்டி. நீங்கள் ஒரு வீடு கட்டினால், அது இந்த அளவுகளில், இத்தனை சதுர அடியில், இத்தனை ஜன்னல்களுடன் இருக்க வேண்டும் என்று கூறும் அடிப்படையான விதிமுறைகள் அடங்கியது.

கட்டிடக் கலைக்கும், கட்டிடங்களைக் கட்டுவதற்கு இருக்கும் அடிப்படை வழிகாட்டுதல்களைத்தான் நாம் வாஸ்து என்றுஅழைக்கிறோம். இந்த விதிமுறைகள் இடத்துக்கு இடம் மாறுபடும். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வாஸ்துக்கள் இருக்கின்றன.

மலைப் பகுதிகளில் ஒரு விதமான வாஸ்துவும்,
நிலப்பகுதிகளில் வேறுவிதமான வாஸ்துவும்,
கடற்கரையோரப் பகுதிகளில் மற்றொரு விதமான வாஸ்துவும் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வகையான கட்டிடக்கலை வழிகாட்டிகளை உருவாக்கினார்கள்

கடந்த சில ஆண்டுகளில் யாரோ சிலர் இதை ஒரு மிகப் பெரிய வியாபாரமாக்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இந்த வியாபாரம் அளவிட முடியாத அளவு பெரிதாகி விட்டது. இது உங்கள் ஆரோக்கியத்தை, வர்த்தகத்தை எல்லாம் சரி செய்கிறது. விட்டால் உங்களை நிலாவுக்குக் கூட அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார்கள். இதில் அத்தனை முட்டாள்தனமான செயல்கள் நடைபெறுகின்றன.

அடிப்படையில், பயம்தான் மக்களைப் பிடித்து ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீங்கள் பயத்தில் இருக்கும் போது, உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

என் வீட்டின் அளவும், வடிவமும் நான் யார் என்பதை முடிவு செய்யும் என்றால், அதை நினைத்து நான் வெட்கப்பட வேண்டும், இல்லையா? மனிதத் தன்மையின் தரத்தை உயிரற்ற பொருட்கள் நிர்ணயிக்க வேண்டுமா அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை மனிதத் தன்மை நிர்ணயிக்க வேண்டுமா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

மனிதத் தன்மைதான் அதை நிர்ணயிக்க வேண்டும், இல்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் வடிவத்துக்காகவும் அளவுக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட பண்புகளை கைவிட்டு விட்டால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது.

வெறும் கற்களும் கண்ணாடிகளும் எல்லாவற்றையும் சரிசெய்து விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். தங்கள் சக்தியையும் அறிவையும் இது போன்றவற்றில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்!

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை  தேடி வரும்!




கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது தெரியுமா?

அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவோம். இங்கு மற்றவர்களிடம் எந்த பொருட்களை வாங்கினால், வறுமை தேடி வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேனா

ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால், அந்த பொருள் மிகவும் மோசமான வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க வழிவகுக்கும்.

படுக்கை

வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களுடன் படுக்கும் படுக்கையை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையை வரவழைப்பதோடு, உறவை முறிவடைய செய்யும்.

கை கடிகாரம்

மற்றவர்களிடம் கை கடிகாரம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்கும். எனவே யாரிடமும் கைக்கடிகாரத்தை வாங்காதீர்கள்.

உடைகள்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது நல்ல ஐடியாவாக இருக்கலாம். ஆனால் அப்படி உடைகளை பகிர்ந்து கொண்டால், அது நிதி பிரச்சனைகளை உண்டாக்கும்.

கைக்குட்டை

கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால், அதனால் கிருமிகள் மட்டும் பரவுவதில்லை, மிகவும் மோசமான வறுமையும் தான் ஏற்படும்.

பணம்

மற்றவர்களிடம் கடனாக பணம் வாங்கினால், அதனால் அவர்களுடனான உறவு முறிவடைவது மட்டுமின்றி, பணம் வாங்கும் போது வாங்கியவரின் கையின் வழியே துரதிர்ஷ்டமும் தான் வரும். எனவே கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்ட நினைக்காதீர்கள்.

குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும்

குபேர பொம்மையை  வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும்




குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்..!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.