ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம்

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி

03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)

04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)

05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்

07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)

08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி

13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி

14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.

18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்

20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)

23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)

24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.

குளிகை என்பது நல்ல நேரமா?

குளிகை என்பது நல்ல நேரமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


(குளிகை பிறந்த கதை)

ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும்.

குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? -

அதற்கு ஒரு கதையும் உண்டு.

இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான்.

அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும்.

எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழும் என்பதை கணித்து சொல்லுங்கள். இது பேராசையல்ல குருவே, ஒரு தந்தையின் நியாயமான ஆசை“

“இராவணா… உன் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாள பிறக்க வேண்டும் என்று எண்ணும் போது, நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன். துயரத்தையும் தோல்விகளையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தாளும் வல்லமை கொண்டவன். பிறக்க போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல்களை கொண்டவனாக திகழவேண்டும் என்று நீ எதிர்பார்ப்பில் தவறோன்றும் இல்லை இராவணா.

நானும் நீ சொல்ல வந்ததை நீ சொல்லாமலே ஞானத்தால் அறிந்தேன். குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தை கணித்துக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனால்…“ என்று இழுத்தார் சுக்கிராச்சாரியார். “என்ன தயக்கம்.?

"ஆனால்…“ என்கிற வார்த்தையை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தயக்கமின்றி சொல்லுங்கள். என்ன பிரச்சனை?“ என்றான் இராவணன்.

"நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே இராசி கட்டத்தில் வந்தால் நல்லது. எப்படி பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு நேரம் அமையாமல் இருக்கிறது. நானும் கணித்து கணித்து பார்க்கிறேன், யோசித்தே என் தலைவெடித்துவிடும் போல் இருக்கிறது.

சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன? என்று கூட தோன்றுகிறது.“ புன்னகைத்தவாரே சொன்னார் சுக்கிராச்சாரியார்.

வேடிக்கையாக சொன்ன வார்த்தை வினையாகிப் போனது.

"நீங்கள் சொல்வதும் சரிதான். நவகிரகங்களையும் ஒன்றாக சிறையில் தள்ளினால்தான், நான் நினைத்தது நடக்கும்.

சரியான நேரத்தில் ஆலோசனை கூறிய தங்களுக்கு நன்றி. ஆனால் நவகிரகங்களில் நீங்களும் ஒருவராக இருப்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்“. என்றான் 

இராவணன்.

சுக்கிரன் என்று அழைக்கப்படும் சுக்கிராச்சாரியாரையும் சிறையில் தள்ளினான். நவகிரகங்களையும் ஒரே சிறையில்அடைத்தான் இராவணன். இந்த நிலைக்கு காரணமே சுக்கிராச்சாரியார்தான் என்பதால் சுக்கிரனை நவகிரகங்களும் திட்டி தீர்த்தன.

"சிவனையே பாதாள லோகத்தில் வாழ செய்தவன் நான். என்னை இராவணன் இந்த சிறையில் தள்ளிவிட்டான். எல்லாம் உங்களால்தான். உங்களை “அசுரகுரு“ என்று அழைப்பது சரியாகத்தான் இருக்கிறது.

திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே… தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் இராவணன். அவனிடம் போயா நம் பெருமைகளை சொல்வது? அறிவு களஞ்சியமய்யா நீ“ என்றார் சனிஸ்வரர்.

"நான் என்னவோ சொகுஸாக இருப்பதை போலவும், நீங்கள்தான் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசிக்கொண்டுயிருக்கிறீர்கள்.?

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் இராவணன் என்பதை சற்று மறந்து, அவனுக்கே ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன். என்றார் சுக்கிரன்.

மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல்தான் என்று வைத்தியர்கள் சொல்வதாக சிறைக்காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்.

“சுக்கிரசாரியாரே… உங்களுக்கு தெரியாதா? எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால் அதை “யுத்த கிரகம்“ என்பார்கள்.அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனையை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்… மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள்.

அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் இராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்.“ என்றார் சனிஸ்வரர்.


"அசுர தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?” என்றார் குரு பகவான்.


"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கினால், இராவணனின் வாரிசு பிழைக்கும்“ என்று கூறி கொண்டு தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார் சனிஸ்வர பகவான்.

அந்த குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார் சனிஸ்வரர்.

"ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்நது யத்த கிரகமாக இருந்தாலும், குளிகன் பிறந்ததால், இனி இந்த மணிநேரம் பிரச்சனையில்லை.

வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், இந்த குழந்தை பிறந்த இதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.இனி பயம் இல்லை மண்டோதரிக்கு.“ என்றார் சனிஸ்வரர்.

"நமக்கும்தான்“ என்றார் சுக்கிரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும்.

கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.

குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும்

கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.

கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.


     பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்  
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.

அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.

இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?

அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.

கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.

கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.

அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.