முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்
murugan-worship

  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/
முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். முருகப்பெருமானின் 16 வகையான திருக்கோலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

கந்தசாமி: பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும்.

ஆறுமுக தேவசேனாபதி: சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக் கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சுப்பிரமணியர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடை கழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘சுப்பிரமணியர்’ ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர் களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர்.

கஜவாகனர்: திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக் கோபுரத்தில், யானை மீது இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை ‘கஜவாகனர்’ என் கிறார்கள். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

சரவணபவர்: சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத் தலங்களில் ‘சரவணபவர்’ திருவுருவை காணலாம். இந்த வடிவத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.

கார்த்திகேயர்: கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது. இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.

குமாரசாமி: கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலிலும் இந்த திருவுருவை தரிசிக்க முடியும்.

சண்முகர்: திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். இவரை வழிபட்டால் சிவன்- சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார்.

சேனானி: தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும்.

பிரம்மசாஸ்தா: காஞ்சீபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகை செயல்களிலும் தேர்ச்சி பெறலாம். கல்வியில் வெற்றி கிட்டும்.

வள்ளிகல்யாணசுந்தரர்: திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.

பாலசுவாமி: திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. இவர், அங்கக் குறைபாடுகளை அகற்றுபவராக இருக்கிறார். மேலும் நீண்டநாள் நோய் விலகும்.

சிரவுபஞ்சபேதனர்: திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.

சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர். 

சென்னையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் - வணங்குவதற்குரிய பாசுரங்கள்

சென்னையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் - வணங்குவதற்குரிய பாசுரங்கள்
Ashtalingam-slokas


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

திருவண்ணாமலை திருத்தலத்தில் அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும். அதேபோல் சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்து சென்னை மக்களுக்கும் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.

வேதங்கள் நான்கும் வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், ‘வேற்காடு’ என்று பெயர் பெற்ற திருவேற்காடு தலத்துக்கு, அகத்தியர் ஒரு முறை வருகை தந்தார். அப்போது, சிவபெருமானை அவர் பாடிப் பணிந்ததன் பேரில், அவருக்கு சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சியளித்தார். அகத்தியர் வேண்டிய உடன் காட்சி தந்த சிவபெருமானிடம், அன்னை உமாதேவி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

‘மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் கேட்ட உடன் உங்கள் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், உலக மக்களுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?’ என்றார்.

அதன் காரணமாகவே, அனைத்து மக்களும் வழிபட்டு எளிதில் ஈசனின் அருள்பெற திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் உமாதேவியுடன் இணைந்து அஷ்ட லிங்க மேனிகளை இறைவன் வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.

அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.

வழிபாட்டு முறை

பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு. அந்த லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

இந்திர லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். இது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இங்குள்ள இறைவன் ‘இந்திர சேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் கோவில் கொண்டுள்ளார். அங்கே நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

‘தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க’

அக்னி லிங்கம்

இரண்டாவதாக வழிபட வேண்டிய அக்னி லிங்கம், திருவேற்காட்டிற்கு தென்கிழக்கில் உள்ள வள்ளிக் கொல்லைமேட்டில் இருந்து சுமார் 3½ கி.மீ. தொலைவில் நூம்பல் என்ற இடத்தில் இருக்கிறது. ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால், இந்த தலத்துக்கு ‘நூம்பல்’ என்று பெயர். இங்குள்ள சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடினால் எதிரிகள் தொல்லை, வழக்குகள் மற்றும் வெப்பம் தொடர்பான பிணிகள் அகலும்.

‘பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே’

எம லிங்கம்

மூன்றாவதாக வணங்க வேண்டிய எம லிங்கம், நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ள செந்நீர்க்குப்பத்தில் இருக்கிறது. இத்தல இறைவன் மரகதாம்பிகை தேவி சமேத கயிலாசநாதர். இவருடைய சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வணங்கினால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்கு சம்பந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

‘மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க’

நிருதி லிங்கம்

நான்காவதாக வணங்க வேண்டியது நிருதி லிங்கம். செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே பாலீஸ்வரர் என்ற பெயருடன், பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற நாமத்துடன் இறைவன் அருள்கிறார். சுமார் 2,300 ஆண்டுகள் முற்பட்ட இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும்.

‘வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்’

வருண லிங்கம்

ஐந்தாவது வழிபட வேண்டிய இந்த லிங்கம், செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரராக இறைவன் அருள்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட பாசுரத்தை மனம் உருக பாடி வழிபாடு செய்தால், வீடு கட்டுவதில் உள்ள தடை தாமதங்கள் விலகும்.

‘திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க’

வாயு லிங்கம்

ஆறாவது லிங்கமான வாயு லிங்கம், திருவேற்காட்டீஸ்வரர் சன்னிதிக்கு வடமேற்கு திசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது. விருத்தாம்பிகை தேவி சமேத வாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

‘கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க’

குபேர லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் ஏழாவது குபேர லிங்கம். பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரங்களை பாடி வணங்கினால், பொன்னும், நவ மணிகளும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

‘கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிறமேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க’

ஈசான லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இது. வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.

‘அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தி
திங்களிற் றவன மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பெங்கும் காக்க’

கருடன் பறக்கும் போது வணங்கும் ஸ்லோகம்

கருடன் பறக்கும் போது வணங்கும் ஸ்லோகம்
garuda-slokas

  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.

கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும். கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

“குங்குமங்கித வர்ணாய
குந்தேற்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
பட்சிராஜாயதே நமஹ”

ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி

ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி
lakshmi-108-potri


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீலட்சுமி போற்றி சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் பெறலாம்.

எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

ஓம்  திருவே  போற்றி
ஓம்  திருவளர் தாயே போற்றி
ஓம்  திருமாலின் தேவி  போற்றி
ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
ஓம்  திருஞான வல்லி  போற்றி
ஓம்  திருவருட் செல்வி  போற்றி
ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
ஓம்  தீபசோதியே  போற்றி
ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
ஓம்  தூப ஜோதியே  போற்றி
ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
ஓம்  அன்னையே அருளே  போற்றி
ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
ஓம்  இச்சை கிரியை  போற்றி
ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
ஓம்  இகபர சுகமே  போற்றி
ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
ஓம்  எண்குண வல்லி  போற்றி
ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
ஓம்  கற்பக வல்லி  போற்றி
ஓம்  காமரு தேவி  போற்றி
ஓம்  கனக வல்லியே  போற்றி
ஓம்  கருணாம் பிகையே  போற்றி
ஓம்  குத்து விளக்கே  போற்றி
ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
ஓம்  மங்கல விளக்கே  போற்றி
ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
ஓம்  நவரத்தின மணியே  போற்றி
ஓம்  நவநிதி நீயே  போற்றி
ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
ஓம்  கஜலட்சுமியே  போற்றி
ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
ஓம்  தனலட்சுமியே  போற்றி
ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
ஓம் விஜயலட்சுமியே  போற்றி
ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
ஓம்  வரலட்சுமியே  போற்றி
ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
ஓம்  பூதேவி தாயே  போற்றி
ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
ஓம்  சீதேவி தாயே  போற்றி
ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
ஓம்  மதிவதன வல்லி  போற்றி
ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
ஓம்  கமலக்கன்னி  போற்றி
ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
ஓம்  வேத வல்லியே  போற்றி
ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
 பெரியர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
 கருள்வாய்  போற்றி
ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
 கருள்வாய்  போற்றி
ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே
போற்றி போற்றி போற்றி

நவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்

நவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்
navagraha-dosha-ashta-bhairava


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சேலம் வசிஷ்ட நதிக்கரை சிவாலயத்தில் உள்ள அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான். தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார்.

நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருங்கள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருங்கள்
shivaratri-viratham

           

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மகா சிவராத்திரி விரதத்தையும், மாதம் தோறும் வரும் சிவராத்திரி விரதத்தையும் அனுஷ்டிப்பது மிகவும் இருப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

“ஓம் நமசிவாய” என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்று கூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.

நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மனம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆடிக்கிருத்திகை, கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய அத்தி மரம்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய அத்தி மரம்
karthigai-star-worship


           

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணிபுரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர்பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

ராகு திசை 18 வருடங்கள் 4-வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிவரும்.

இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை

ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை
Gayatri-Mantra.


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.

ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும்.

வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து

விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன்

கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

சக்தி கரகம்(Sakthi-Karagam) என்றால் என்ன?

சக்தி கரகம்(Sakthi-Karagam) என்றால் என்ன?
sakthi-karagam.


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


ஸ்ரீ அங்காளபரமேஷஸ்வரி திருக்கோயிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. இப்பெயர் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ அங்காளபரமேஷஸ்வரி திருக்கோயிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது.

அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குலமீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து. மேல்மலையனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.

பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.

சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

மலையனூரிர் புற்று உருவான வரலாறு

மலையனூரிர் புற்று உருவான வரலாறு
melmalayanur-angalamman-history


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான ஸ்ரீ அங்காளம்மன் அந்த புற்றில் உறைந்து அமர்ந்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது. அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி “தாண்டவஈஸ்வரனாகவும்” தாண்டிய இடமான மேல்மலையனூரில் “தாண்டேஸ்வரராகவும்” அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

சிவபெருமானவிட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைத்துவிட்டார்.

சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டி லிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன. அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை. இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.

கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது. அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான ஸ்ரீ அங்காளம்மன் அந்த புற்றில் உறைந்து அமர்ந்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு

காவடி சுமந்தால் கந்தன் அருள் உண்டு
murugan-worship


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                                 Click Here : Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

முருகனின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்களில் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பதாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முருகனின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்களில் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பதாகும். தனித்துவம் மிகுந்த காவடி பிரார்த்தனை வழிபாட்டில் நீண்ட பாரம்பரிய மரபைக் கொண்டதாகும். காவடி எடுத்துச் செல்லும்போது பாடப்படுவது சிந்துப் பாட்டாகும். 'சிந்து' என்பது பா இனங்களுள் ஒன்று. காவடி தூக்கிச் செல்லும் போது பாடப்படுவது 'காவடி சிந்து' என்னும் பெயர் பெற்றுள்ளது.

சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் காவடிச் சிந்து, இசைச் சுவையும், அலங்காரச் சுவையும் கொண்டது. கழுகுமலை முருகன் மீது பாடப்பட்ட இப் பாடல்களே காவடிச் சிந்து பாடல்களில் முதன்மையானதாகும் கழுகுமலை காவடிச் சிந்து ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் பாடப்பெற்ற பெருமையை உடையது.

காவடி எடுப்பது என்று முடிவு செய்து கொண்டவர்கள் கடின விரதங்களை மேற்கொள்வார்கள். விரதம் இருந்து ஆண்டவன் சந்நிதிக்கு போகும் நாள் வந்தவுடன் காவடி எடுப்போர் நாக்கிலும், உதட்டிலும் சிறிய வேல்களைக் குத்திக் கொள்வர். பின் காவடி எடுத்து, 'வேல் வேல்', 'முருகா...வெற்றி வேல் முருகா', 'அரோகரா', 'முருகா முருகா' என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டே கோயிலின் சந்நிதி நோக்கி ஆடியபடி செல்வர்.

முருகனுக்குப் பக்தர்கள் எடுக்கும் காவடிகள் 36 வகை என்று கூறப்படுகிறது. பால், பன்னீர், சர்க்கரை, பூ, சந்தனம், பழம், தீர்த்தம், அக்கினி, நெய், தைலம், விலங்கு, வேல், கற்பூரம், அன்னம், இளநீர், ஆணிச்செருப்பு, தேன், சொர்ணம், பாவை, பச்சிலை, பாண்டம், ஆயுதம், பஞ்சவாசம், மச்சம், சர்ப்பம், சேவல், சோதனை, முத்திரை எனப் பலவாறாக காவடிகள் உள்ளன.

இவற்றில் முத்திரைக் காவடிக்கு 'உபசாரக் காவடி' என்ற வேறு பெயரும் உண்டு. மச்சக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக்காவடி, மூன்றையும் சேர்த்து, 'சோதனைக்காவடி' என்றும் அழைப்பதுண்டு. மேற்சொன்ன முருகனுக்கு எடுக்கப்படும் 36 வகைக் காவடிகள்அல்லாது வேறு சில வகைக் காவடிகளும் உள்ளன. காவடி சுமப்போருக்கு கந்தன் அருள் கட்டாயம் உண்டு.

காய்ந்த ஆல விழுது போன்ற லேசான மரத்தில் தடியன்று தயாரித்து, அதன் இரு பக்கங்களிலும் பால் நிரப்பிய சிறிய செம்புகளை வைத்துக் கட்டுவர். பின் தடியின் மேல் அரைவட்டமாகப் பல குச்சிகளை வளைத்துக் கட்டித் துணிகளாலும், மயில் தோகைகளாலும் அலங்காரம் செய்வர். இதுவே காவடி அமைக்கும் முறையாகும். தனக்கு ஏற்பட்ட இன்ப, துன்பங்களைக் காவடியாகக் கட்டி ஆண்டவன் முன்பு வைத்து வழிபடுவதே காவடி வழிபாட்டின் தாத்பர்யமாக உள்ளது