ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள்

நவரத்தினங்கள்

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.





1. சூரியன்—மாணிக்கம்.
2. சந்திரன்—-முத்து.
3. செவ்வாய்—-பவழம்.
3. புதன்—-மரகதம்.
4. குரு—-புஷ்பராகம்.
6. சுக்கிரன்—-வைரம்.
7. சனி—-நீலம்.
8. ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.

ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி எல்லோருமே ராசிக்கற்களை அணிந்துகொள்ளலாமா என்றால், கூடாது என்றுதான் கூறவேண்டும். அஷ்டமாதிபதியை ராசிநாதனாகக் கொண்டவர்கள், ராசிப்படி கல் அணியலாமா?
உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் மரகதத்தை மோதிரமாக் அணியலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவழத்தை அணியலாமா?  கூடாது.
கடக லக்னம், கடக ராசி உள்ள ஒருவருக்கு எட்டில் சனி. அவருக்கு சனி தசை ஆரம்பித்த நாலே வருடங்களில் தொழில் சரிவு ஏற்பட்டு குடும்பத்தினரும் பிரிந்து விட்டனர்.  கையில் நீலக் கல் மோதிரம் அணிந்திருந்த அவர் கூறியதென்னவென்றால்,  சனி தசை நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நீலக்கல் அணியும்படி ஒரு நகைக் கடைக்காரர் கூறியதாகக் கூறினார்.  கேட்டதும் அதிர்ச்சி அடையாமல் வேறென்ன செய்வது?
அஷ்டமாதிபதியின் கல்லை அணியக்கூடாது என்ற அடிப்படை விஷயம்கூட அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.  எனவே நவரத்தினங்களில் எதை அணியலாம்; எதை அணியக்கூடாது என்பது பற்றி  நமது மேலான ஜோதிட சாஸ்திரம் சொல்வதை நன்கு ஆராய்ந்து பார்த்து கீழ்க்கண்ட உண்மைகளை எடுத்து இயம்பியுள்ளோம்.
1. லக்னப்படியும் ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்த கிரகம் வலிமை குறைந்திருந்தால், அந்தக் கிரகத்துக்குரிய கல்லை அணியலாம்.
2.  6, 8 க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே. ( பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும் அணியக்கூடாது)
3. லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால், அவருடைய ராசிக்கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு , எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால், லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத் திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்கவேண்டும்.
4. 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும்போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
5. 2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால், அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
5. ராகு கேதுக்களின் தசை நடக்கும்போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி , லக்ன சுபராகி  அவர் வலிமை குறைந்திருந்தால்,  அந்த ராகு கேதுக்கள் இருக்கும் ராசிக்கு  அதிபதியின் கல்லை அணியலாம்.
6. ராகு கேதுக்கள் 3,11ல் இருந்தால், மட்டுமே அவர்றின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் இருந்தால், அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
7. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற ,  அதாவது கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற குருவும், புதனும், எந்த பாபர் பார்வையும் , சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும்  நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. {லக்னம் , கேந்திரத்துக்கும் திரிகோணத்துக்கும் பொதுவானது.  லக்கினத்தில் அவர்கள் இருந்தால் தோஷம் இல்லை} .
8. மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணியவேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
9. ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.
இப்படியான விதிமுறைகளை ஆராய்ந்த பின்னர், தேவைப்பட்டால், உங்கள் பிறந்த ஜாதகத்துடன்  குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால்,  தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.


யாசங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;
மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,
முத்து (pearl)


முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.

வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.

முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.

யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம்.
ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.
மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.


வைரம் (diamond)

உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
வைடூரியம் (cat's eye)

இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது  நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.

சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!

மாணிக்கம் (ruby)

இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .

பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.
மரகத பச்சை (emerald)

ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்
புஷ்பராகம் (topaz)

இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்

பவழம் (coral)

இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.

யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

நீலம் (sappihire)

ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்
கோமேதகம் (hessonits)

புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.
எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?
ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!

அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!

ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்
திங்கள் : முத்து, வைடூரியம்

செவ்வாய் : பவழம்

புதன் : மரகதம்

வியாழன் : புஷ்பராகம்

வெள்ளி : வைரம்

சனி : நீலம்

நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.
சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.

சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.

யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.

நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு கண்ணோட்டம்

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.
பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.

நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.
அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல்

முத்து : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளிஅணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல், மோதிர விரல்

புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் - தங்கம்அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல்

கோமேதகம் : இணைக்கும் உலோகம் - வெள்ளி அல்லது தங்கம்அணிய வேண்டிய விரல் - மோதிர விரல், நடு விரல்

மரகதம் : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளிஅணிய வேண்டிய விரல் - சுண்டு விரல், மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?
ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.

புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை

வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள் பயிரிடுவோர்

பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா?

பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா?



 எளிமையாக கடைபிடிக்க வேண்டிய சில ரகசியங்கள் !!

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்panam

பேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!

பேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் !!!



வளர்பிறை வியாழ கிழமையில் காய் காய்க்காத வில்வ மரத்தின் வடக்கே செல்லும் வேரை, மரத்தை வேண்டி, ஆயுதம் படாமல், மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் காட்டி ,நிவேதனம் கொடுத்து வீட்டிற்க்கு எடுத்து வந்து நீரால் அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்து கொண்டால் துஷ்ட ஆவிகள் பிடித்திருந்தால் விலகும், பேய்- பிசாசு அண்டாது, பண வரவு மிகும். வீட்டில் இந்த மரத்தை பய பக்தியுடன் வளர்த்து வர சகல ஐஷ்வர்யங்களும் கிட்டும்.

நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் !!!



நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.

பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம்

பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம்




உங்கள் வீட்டு பெண்ணை பெண்  பார்க்க வருபவர்களை  வர வைக்கும் நேரம் சுக்ர ஓரையாக
 இருக்குமாறு பார்த்து வரவழையுங்கள்.

பெண்ணை எல்லோருக்கும் பிடிக்கும்.

கிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

கிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!!





ஞாயிறு :
கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்குவது சிறந்தது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்குவது இன்னும் சிறப்பானது. இதனால் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும்.

திங்கள் :
திங்கட்கிழமைகளில் சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது. இதனால் நல்ல அந்தஸ்து உண்டாகும்.

செவ்வாய் :
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

புதன் :
பெருமாளை வணங்குவது நல்லது. இந்நாளில் துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாளாகும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும். மேலும், இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

வியாழன் :
வியாழக்கிழமை நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெருகும்.

வெள்ளி :
வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும். கோ பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மேலும் மஹாலட்சுமி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படித்தால் வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.

சனி :
சனிக்கிழமை ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். இதனால் உடலில் உள்ள நோய்கள் தீரும்.

விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.

கிரகண தோஷம் நீங்க..!
சூரியன், சந்திரனை வழிபட்டு, பெற்றோரை கடைசிகாலம் வரை நன்கு பணிவடை செய்து மனம் கோணாமல் பார்த்துக் கொண்டால் கிரகண தோஷம் நீங்கும்.

‪‎வாஸ்து‬ - வீட்டு மனை

‪‎வாஸ்து‬ - வீட்டு மனை




1, வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

2, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

3, மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும்.

4, ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

5, வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

6, வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.

7, மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

8, வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கினறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

9, வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில்
அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

10,வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில்
ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.

11, வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்
பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

12, தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

13, வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,

வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

14, பஞ்சபூதாஅற்றல் கிடைக்கு ஈசானிய மூலை காலியாக இருக்க
வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

15, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள்
அமையவேண்டும்.

16, வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

17, கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும்.

18, தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத்
தொட்டி அமைய வேண்டும்,

19, கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும்.

20, செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு
சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

21, அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

22, வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க
கூடாது.

23, மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய
வேண்டும்.

24, வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

25, வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

26, ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது
நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.

27, ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு
பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க கூடாது.

28, .பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின்
தென்கிழக்கில் அமைக்கலாம்.

29, ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

30, அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.

31, தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.

32, உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.

33, வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.

34, ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.

35, வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும்
மரங்கள் வள்ர்க்ககூடாது.

36, வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை
வெட்டக் கூடாது.

37, ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.

38, வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.

39, வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும்
செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.

40, வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க
கூடாது.

41, வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
கூடாது.

42, வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ
தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும்
சோதனைகளுமே வரும்.

43, வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

44, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
வாங்கலாம்.

45, வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.

46, ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.

47, ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு
அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு
அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.

48, ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை
விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை
விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.

49, ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து
அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும்
கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

50, தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.

51, மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது.

52, வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு
அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி
மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.

53, ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும்,

4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.

54, வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும்
முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின்
ஈசானியத்தில் வாஸ்து பூஜை [ பூமி பூஜை ]செய்தல் மிக நல்லது.

55, வீட்டை செப்பனிடம் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர
நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும்
கவனமாகவும் செய்து முடிக்க வேண்டும்.

56, வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும்
பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக் கூடாது.

57, முறையான கணக்குகளுடன் செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில்
உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்
சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை
வாழவும் வைக்கின்றது.

58, வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில்
செய்யப்படும் அக்னி ஹோத்திரம் சுற்றுப்புரச் சூழலை பாதுகாத்து
ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே
செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

59, வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்
தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6 வது பாகங்களில்
தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.

60 வீட்டின் தென் மேற்கு சேமிப்பு அறை , படுக்கை அறை, பீரோ, பெட்டி
வைக்கவும்,

61, வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.

62, வீட்டின் தென்கிழக்கில்தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும்
படியாக இருத்தல் வேண்டும்.

63, வீட்டின் கிழக்கில்தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.

64, வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும்போது கிழக்கு திசை
பார்த்து சாப்பிட வேண்டும்.

65, வீட்டின் வட மேற்கில்தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.

66, வீட்டின் வடக்கில்தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல்வேண்டும்.

67, வீட்டின் வடகிழக்கு திசையில்தான் இறைவழிபாடு/ தியானம் செய்தல்
உயர்வானது.

68, வீட்டின் ந்டுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.

69, வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிகமிக உயர்வானது.

70, எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.

71, தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும்
விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.

72, தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளி படிமிடமான
முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடல் நல்லது.

73, வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும்
இருப்பது மிக மிக நல்லது.

பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது

பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது





 பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

*1)உணவு(மண்):-*
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.
(ங):-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ச):-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

*2)குடி தண்ணீர்(நீர்):-*

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

*3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-*
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

*4)காற்று (வாயு):-*
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

*5) உழைப்பு (நெருப்பு):-*
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .

சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும்

சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும், அபசகுணத்தை தீர்த்து வைக்க உதவும் நெல் !!



சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது முடி உணர்த்தும் முன் சகுனம்! சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும்,

அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.

பணத்தட்டுப்பாடு நீங்க
அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு "ஓம் தன ப்ரதாயை நம" எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணப்பிரச்சனைகள் நீங்கும் தேவைப்படும் வரை செய்து வரலாம்.

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் !!!

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் !!!




ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

கண்ணாடி வைத்து பூஜை செய்தால் முன்னோர்கள் மகிழ்வார்கள்

முன்னோர்களின் படம் இல்லையா?

 கண்ணாடி வைத்து பூஜை செய்தால் முன்னோர்கள் மகிழ்வார்கள், கண்திருஷ்டியும் தீரும். !!!




சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது.

அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஆனால் தற்போது அந்த வழக்கம் சற்று மாறிவருகிறது..

கண்ணாடியை வைத்து வழிபட்டதன் காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள்.

இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம்.

அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனை

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும் !!!




1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்

2.ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

3.மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

6.கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

7.துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.

9.தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

11.கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம: