K.Karthik Raja's Devotional Collections contains Hindu Temple site religious services,poojas,custom poojas, custom guided trips, religious articles,books,god photos,vigraha, south indian , southindia, tamil nadu, pariharam, astrology, homam, pooja, dosha, hindu marriage, bedrothel, amman, shiva, vishnu, hindu marriage, kasi, haridhwar, thirunallar, kalahasthi, sundara gandam, sundara kandam,and the all slokas
Rare Pictures of Temple God
"Aadhi Kubeshwarar" "Kanchi Kamatchi" "Kumbakonam" "Kundrakudi" "Kuttralam" "Madurai Kalazhagar" "Seerkazhi Sattanathar" "Suriyanaar Koil" "Thillai Natarajar" "Thiru Kadaiyur" "Thirukuvalai Thiyagarajar" "Thirumanacheri kokilammbal" "Thirunelveli" "Thiruverkaadu temple" "Thiruverkaadu" "Uttra kosa mangai Maragatha Natarajar" "Vedaranyam"
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள் அருளிய இந்த சகலகலாவல்லிமாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

சகலகலாவல்லி மாலை
1.
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
2.
நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
4.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5.
பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
6.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
7.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!
8.
சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
9.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!
10.
மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

One to One Share Market Training - 9841986753
A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

For Appointment - Whatsapp - 9841986753

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன் - Nandi-shiva-worship-tips

சிவன் கோவிலில் நந்திதேவர் சிவனை நோக்கி இருப்பார். பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதற்கான காரணத்ததை அறிந்து கொள்ளலாம்.
நந்தி வழிபாடு
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம்.
வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா - Nail-cut-on-friday

வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள். இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.
வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா?
பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக் கிழமையை தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு மஹாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே தப்பு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.
இப்படி சொன்னவுடன் இதற்கு ஏதாவது சாஸ்திர சான்றுகள் இருக்கிறதா? என்று ஒரு ஆஸ்திக கோஷ்டி கேள்வி எழுப்பலாம் இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது. பிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்கப்பட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல. சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே.

விநாயகரும் ஜென்ம நட்சத்திர வழிபாடும் - Vinayagar Worship

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி

ஜாதகத்தில் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-
அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.
மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.
ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.
அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.
பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.

SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி

நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் - Sarpa Dosha Slokas
நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் - Sarpa Dosha Slokas
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். தினமும் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும். மேலும் நாகாத்தம்மனை நினைத்து,கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். தினமும் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும். மேலும் நாகாத்தம்மனை நினைத்து,கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!
மகாளய பட்ச தர்ப்பண பலன்
மகாளய பட்ச தர்ப்பண பலன்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிரதமை - செல்வம் பெருகும்
துவிதியை - வாரிசு வளர்ச்சி
திருதியை - திருப்திகரமான
இல்வாழ்க்கை
சதுர்த்தி - பகை விலகும்
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்
சப்தமி - மேல் உகத்தார் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை
அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிரதமை - செல்வம் பெருகும்
துவிதியை - வாரிசு வளர்ச்சி
திருதியை - திருப்திகரமான
இல்வாழ்க்கை
சதுர்த்தி - பகை விலகும்
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்
சப்தமி - மேல் உகத்தார் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை
அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.
ராமேஸ்வரம் கோவில் - முன்னோர் வழிபாட்டில் முன்னிலை - Rameshwaram Temple
ராமேஸ்வரம் கோவில் - முன்னோர் வழிபாட்டில் முன்னிலை - Rameshwaram Temple
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நம்முடைய முன்னோர்களை அவர்கள் இறந்த நாளில், நினைவு கூர்ந்து வழிபடுவது ‘பித்ரு வழிபாடு' ஆகும். இறந்துபோன மூதாதையர் தென் திசையில் உறைவதாக ஐதீகம். இதன் பொருட்டே பித்ருக்களை ‘தென்புலத்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மகாளய பட்சம், கிரகண காலங்கள், தமிழ் மாத பிறப்பு, அமாவாசை, பித்ருக்களின் திதி நாட்களில், முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, படையல் போட்டு வழிபடவேண்டும். அதிலும் மகாளய பட்சத்தில் தம் சந்ததியினரைத் தேடி பித்ருலோகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகம் வருவதாகவும், அப்போது சந்ததியினர் கொடுக்கும் படையலைப் பெற்று நேரில் ஆசி வழங்குவதாகவும் ஐதீகம். இதனால் தான் மகாளயபட்ச அமாவாசை சிறப்புக்குரியதாகிறது. எனவே மகாளய பட்ச நாட்களில் வீடுகளை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
‘மகாளயம்' என்றால் ‘பித்ருக்கள் வாழும் இடம்’ என்று பொருள். ‘பட்சம்' என்றால் ‘பதினைந்து நாட்கள்’ ஆகும். (சில வருடங்களில் பதினான்கு அல்லது பதினாறு நாட்களும் வரலாம். ‘மகாளய பட்சம்’ என்றால் பித்ருக்கள் பூலோகம் வந்து தங்கியிருக்கும் பதினைந்து நாட்கள் எனப்படும்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை மகாளயபட்சம் நீடிக்கும். அந்தப் பதினைந்து நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, காகத்திற்கு நண்பகலில் உணவு படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்திடல் வேண்டும். நிறைவுநாளான மகாளய அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து நண்பகலில் படையல் படைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, அன்று மாலையில் அருகிலுள்ள பழமையான சிவாலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பெரும்பாலும் பித்ரு தோஷத்தால் தான், சரியான காலத்தில் திருமணம் ஆகாமல் போவது, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாராத விபத்துகள், வியாபார நஷ்டங்கள், வம்ச விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. பித்ரு தர்ப்பணம் செய்வது அனைவரின் கடமை.
பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி, திருக்குற்றாலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், காவிரிப்பூம்பட்டினம், திருப்புவனம், திருவெண்காடு என பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் கூறினார். ஆஞ்சநேயர் காசியை நோக்கிப் பறந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆகிப்போனது.
குறிப்பிட்ட காலத்திற்குள் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமபிரான். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான சிவலிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார், ராமபிரான். இந்த லிங்கமே ராமேஸ்வரம் தலத்தில் ‘ராமலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், ‘விஸ்வ லிங்கம்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதி அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ இருக்கிறது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர் இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரைக் கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.
கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் ‘பாதாள பைரவர்’ என அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி, அமாவாசை, மகாளய பட்ச புண்ணிய நாட்களில் பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘ஸ்படிக லிங்க தரிசனம் கோடி பாப விமோசனம்’ என்பர். இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்தல பர்வதவர்த்தினி அம்மனை நவராத்திரி நாட்களில் வழிபடுவது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அம்பாள் பீடத்திற்கு கீழ் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது.
எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
காசி யாத்திரை செய்பவர்கள் முதலில் இத்தல வழிபாடு செய்து, காசியில் விஸ்வநாதரையும், காசி காலபைரவரையும் வழிபட வேண்டும். பின்னர் கங்கையில் தீர்த்தம் எடுத்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா அபிஷேகம் செய்து வழிபட்ட பிறகே, காசி யாத்திரை முழுமை பெறும்.
22 தீர்த்தங்கள்
ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. ஆலயம் எதிரில் உள்ள கடல் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி, பின்பு வரிசையாக ஆலயத்தின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். இப்படி செய்தால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்கள் அகலும் என்கிறார்கள்.
ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் வருமாறு: மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கோடி தீர்த்தம்.
ராமருக்கு ஏற்பட்ட மூன்று தோஷங்கள்
ராவணனிடம் குணம் தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால் தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.
ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால் தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.
ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ராமரை ‘சாயாஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டது.
சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.
மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது.

பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்
பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்
pitru-tharpanam
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி, அவர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்வார்கள் என்றும், அதுவே தோஷமாக மாறும் என்றும் சொல்லப் படுகிறது.
வீட்டில் பசியால் வாடும் தனது பெற்றோருக்கு உணவளிக்காமல், தெய்வத்திற்கு படையல் போட்டு நைவேத்தியம் செய்தாலும், ஆடை இன்றி தாய் தந்தையர் கஷ்டப்படும் போது, தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதாலும் பலன் கிடைக்காது. பித்ரு தோஷம் தான் வந்து சேரும்.
தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைப்பது நல்லது.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 நாட்கள். இவைகளில் மன்வாதி நாட்கள்-14, யுகாதி நாட்கள் - 4, மாதப்பிறப்பு நாட்கள் - 12, அமாவாசை - 12, மகாளய பட்சம் - 16, வ்யதீபாதம்- 12, வைத்ருதி - 12, அஷ்டகா -4, அன்வஷ்டகா - 4, பூர்வேத்யு- 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த 96 நாட்களை விட, சிரார்த்தம் செய்ய மிக மிக உத்தமமான நாள் தாய், தந்தையரின் திதி நாள் தான்.
துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக்கூடாது.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

மகாளய பட்ச வழிபாட்டு முறைகள் - மஹாளய பித்ருபக்ஷம் - மகாளய அமாவாசை
மகாளய பட்ச வழிபாட்டு முறைகள் - மஹாளய பித்ருபக்ஷம் - மகாளய அமாவாசை
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
கர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செல்வ வளம் பெற - மகாளய பட்ச வழிபாட்டு முறைகள்
புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது.
(மஹாளய பித்ருபக்ஷம்
மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.
மகாளய பட்ச அமாவாசை , அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள்.
நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது.
ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் .
நோயில் இருந்து விடுதலை:
பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.
பிதுர் தேவதைகள்:
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
🍃1. நம் பித்ருக்கள் (மண்),
🍃2. புரூரவர் (நீர்),
🍃3. விசுவதேவர் (நெருப்பு),
🍃4. அஸீருத்வர் (காற்று),
🍃5. ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று.
திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும்,
கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன.
ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.
இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம்.
வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்
முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!
புனித நீர் ஸ்தலங்கள்:
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர்,
சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
காருண்ய பித்ருக்கள்:
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும்,
மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி
மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.
இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.
சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்!
இந்த பொன்னான வாய்ப்பை நம் வாசகர்கள் பயன் படுத்திக் கொள்வது , கிரகங்களின் மூலம் ஏற்படும் அத்துணை இடர்களிலிருந்தும் - உங்களை பாதுகாத்தது உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நன்மை பயக்கும்..!

Subscribe to:
Posts (Atom)