ஹோமம் – சில குறிப்புகள்

ஹோமம் – சில குறிப்புகள்

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


✳️ உடல் சுத்தியுடன் உள்ள அனைவரும் எளிய முறையில் இல்லத்திலேயே எளிய ஹோமத்தைச் செய்திடலாம்.

✳️மாதமொருமுறையேனும் அனைத்து இல்லங்களிலும் ஹோம வழிபாடு நடைபெற்றால் சமுதாயத்தில் தீவினை சக்திகள் அழிந்து நல்ஒழுக்ககமும் சாந்தமும் அமைதியும் நிலவும்.

✳️ இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவது மிகச் சிறந்த சமுதாய தர்மமாகும்.

1. ஹோம குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும், அல்லது இதற்குரிய நல் வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு
சுத்தப்படுத்தி கங்கை. காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து “ஸ்ரீ பூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி” - என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

2. ஹோம குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும்.
மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன்படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு ஹோம செங்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!

3. ஹோம வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோம கர்த்தா) அக்னி திக்கான தென் கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது. ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும், தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.

4. ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக் கிண்ணம், மரப் பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்கக் கிண்ணங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே!

5. ஹோமத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்ஸில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.

6. ஹோம மரக் கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.

7. ஹோமத்தில் இடப்படும் ஆஹுதிகள் அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக் க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத் தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும், பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைபிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!

8. ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித் திடலாம். ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின், தர்பையே இதனை நமக்குப் பெற்று தருகிறது.

9. ஆஹுதி அளிக்கப்படும் பொழுது “சுவாஹா” என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும்தான் “சுவாஹா” எனப்படும் தேவமூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.

10. ஹோமம் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்பு வதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர். பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதற்காகப் பயன் படுத்துதல் கூடாது.

12. ஹோமப்புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்றவரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு முறை உங்கள் இல்லத்தில் எழுப்பப் படுகின்ற ஹோமப் புகையினால் ஒரு மாதத்தில் உங்கள் வீட்டில் சேருகின்ற தீவினைச் சுழல் களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டாண்டு காலமாக மனதிலும் நெஞ்சிலும் உள்ள தீயவினைப்படிவுகளை ஹோமப் புகை ஒன்றுதான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.

13. ஒரு ஹோம வழிபாடானது பல்லாயிரக் கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது. வியாபார/ வருமான நோக்கு இல்லாமல் பொது மக்களின் நன்மைக்காக இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவதே தெய்வீகமானது!

14. தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக ஹோம வழிபாட்டை மேற்கொள்தலே உத்தமமானது.

15. ஹோமம் என்றால் அக்னி ரூபத்தில் தெய்வமூர்த்தியை வழிபடுதல் என்று பொருள் ஆகும். ஹோமத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை “சுவாஹா” தேவதை பெற்றுத் தந்து அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிக்கின்றன. ஸ்ரீ அக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீ சுவாஹா தேவி ஆவாள்.

16. ஹோம வழிபாட்டில் ஸ்ரீ அக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே ஹோம வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.

17. நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிப்பது அக்னியாகும். சமையல், நிலவொளி, வீட்டிற்கு அலுவலகத்திற்கு வெளிச்சம், தொழிற்சாலை போன்ற பல இடங்களிலும் அக்னி நமக்குப் பெருமளவில் உதவி செய் கின்றது. ஆனால் இதற்காக என்றைக்கேனும் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்துள்ளோமா ?

வீட்டில் தீபம் ஏற்றுவது கூட ஒரு வகை அக்னி வழிபாடே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவி வருகின்ற ஸ்ரீ அக்னி பகவானை வழிபடுவதற்காக நாம் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான எளிய ஹோமத்தையேனும் செய்து வருதல் வேண்டும்.

18. தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன. இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறை பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம் அல்லவா! இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஒளபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.

19. ஹோம வழிபாட்டை நாம் சரிவரக் கடைபிடிப்பது இல்லை. சோம்பேறித்தனம், பக்தியின்மை, நேரமின்மை என்ற சாக்கு காரணமாக ஹோம வழிபாட்டை அறவே ஒதுக்கிவிட்டோம். மேலும் ஹோமத்தை நடத்தித் தருகின்றவர்களும் - மிகவும் அதிகமான தொகையைக் கேட்பதால் பெரும்பலானோர் ஹோம வழிபாட்டையே மறந்து ஒதுக்கி விட்டார்கள்.

ஹோம வழிபாட்டிற்கு எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. ஹோமம் நடத்த கட்டணம் பெறுதல் என்றால் வேதத்தையே விற்பது போல் ஆகும். அக்னி தெய்வ மூர்த்தியை வழிபடுவதற்குப் பேரம் பேசலாமா?

ஆனால் ஹோம வழிபாட்டை இலவசமாக நடத்தித் தருகின்ற உத்தமர்களுக்குத் தாமே மனம் உவந்து சன்மானம் அளிப்பதில் தவறு கிடையாது. இந்தத் தொகையைத் தந்தால் தான் ஹோமத்தை நடத்தித் தர முடியும் என்று விதிப்பது அக்னியையே விலை பேசுவது போலாகி பெரும் சாபங்களைப் பெற்றுத் தரும்.

20. பிறருக்கு இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவது என்பது மிகப் பெரிய தர்மம் ஆகும். இத்தகைய பாக்கியத்தைப் பெற்றோர் ஒரு சிலரே. இவ்வாறு இதனை இலவசமாக நடத்தித் தருவோருக்கும் பலவிதமான அற்புதமான பலன்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் ஹோம வழிபாட்டை நன்கு அறிந்தவர்கள் இயன்ற வரையில் ஏழை எளியோருக்கும் இந்த ஹோம வழிபாட்டின் பலன்கள் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கென இலவசமாகவே ஹோமத்தை நடத்த வேண்டுகின்றோம். இலவசமாக ஹோம பூஜையை நடத்தித் தருவது கலியுகத்தின் மிகப் பெரிய தர்மமாக அமைந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

21. நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது. பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால் தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும். ஹோம குண்டத்தில் பலவிதமான மூலிகைபபொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப் படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப்புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.

சாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால்?

சாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால்?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாம் எந்த திசையில் அமர்ந்து உணவை உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நமது ஆரோக்கியம் இருக்கிறது என சாஸ்திரம் கூறுகிறது.

எந்தத் திசையில் அமர்ந்து உண்டாலாம்?

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும், ஆயுள் விருத்தியாகும். ( இந்திரனுக்கு உரியது)

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்.(செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்குரியது )

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படும் நிலை உண்டாகும். (சிவனுக்குரியது)

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அழியாப் புகழ் உண்டாகும்.(எமனுக்குரியது)

ஒருவர் தங்களது வீட்டை தவிர்த்து உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த உறவு பகையாகிவிடும் என்பது சாஸ்திரம் கூறுகிறது.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் ? வெற்றிலை ஒரு மூலிகை

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் ? வெற்றிலை ஒரு மூலிகை

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


வெற்றிலை இரண்டு வகைப்படும்.
1.மலை வெற்றிலை
2. நீர் வெற்றிலை

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.

வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும் சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது.

என்ன கொடுத்தாலும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை.

வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்துமதப் பண்டிகைகள் விசேஷம் விரதம் திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில்இ விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலைஇ பணம் வைத்து அழைப்பார்கள்.
வெற்றிலையில் பலவிதமான பூக்கள் உண்டு அவையாவன

காம்பூ ,நரம்பூ ,தலம்பூ ,மடிப்பூ,சுண்ணாம்பூ,சப்பூ,துப்பூ,சிவப்பூ

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் உணவருந்தியதும் பண்டைக் காலத்தில் வெற்றிலை பாக்குக் கொடுப்பது வழக்கம் அப்படிக் கொடுக்கும் போது  விருந்தாளி வெற்றிலை வட்டாவில் இருந்து முதலில் எதை எடுப்பாரோ அதிலிருந்து அவரின் குணநலன் எல்லாவற்றையுமே முன்னோர்கள் தெரிந்து கொள்வார்கள்
இப்பொழுதும் எமது நடை முறையில் வெற்றிலை பாக்கு வைத்துக் கேட்பது எனும் ஜோதிட நடைமுறை நீங்கள் ஜோதிடரிடம் கொண்டு செல்லும் வெற்றிலை.

ஒற்றை வளமுள்ளதா அல்லது இரட்டை வளமுள்ளதா எனப் பிரித்துப் பார்த்தால் .ஜோதிடர் புரிந்து கொள்வார் அதில் எத்தனை வெற்றிலை பழுதானவை என்பதில் இருந்து பிரித்துப் பார்த்து கிரகங்களைக் கணித்துக் கொள்வார்

மங்கள நிகழ்வுகள் அனைத்துக்குமே வெற்றிலை இதனால்த்தான் பயன்படுத்துவது .இன்றும் சிங்களவர்கள் சமூகத்தில் எந்த அளவு உயர்ந்தவராக இருந்தாலும் வெற்றிலை கொடுத்தே முதல் வரவேற்பளிப்பர்

இது மட்டும் அல்ல மேலும் வெற்றிலையின் முக்கியத்துவங்களும் மகிமைகளும்

வெற்றிலயானது ஒரு மூலிகையாக பயன்படுவது யாருக்குத்தெரியும் அது ஒரு கர்ப்ப மூலிகையாம்

நரை,திரை,மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு  நுனி  நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் 84.4மூ நீர்ச்சத்தும் 3.1மூ புரதச் சத்தும்0.8மூ கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம் கரோட்டின் தயமின் ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில்  வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்  என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண் வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து 5 வெற்றிலை எடுத்து காம்பு நுனி நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட

வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

விஷக்கடி குணமாக

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு இருமல் மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும்இ உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால் எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

பிற உபயோகங்கள்

· வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல் மூச்சுத் திணறல் கடினமான சுவாசம்இ குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

· வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

· தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும்  கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.

· இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

· புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

· வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

எமதர்மன் வரலாறு

எமதர்மராஜன்

எமதர்மன் வரலாறு

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி.

 ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம்  தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு.

 அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன்.

அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள்.

எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.

பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார்.

 இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு.  சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான்.
அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார்.
ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார்.
விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன்.

ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.

பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது.

 மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார்.

அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.

எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன்.

சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது.

 எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது.
அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம்.
அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு.

பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.

அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார்.  அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.

பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.

 பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர்.

 ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை.
எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள்.

 சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் என்பதற்கு எளிமையான விளக்கம்  !!!

நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;

நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;

மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;

கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;

இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.

இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.

எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,

நாம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் பிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;

நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.

தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம்

தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


தப்பு செய்தால்... அண்ணாமலையார் நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருவண்ணாமலை தலம் சிவபெருமானே விரும்பி வந்து அமர்ந்துள்ள தலமாகும். அங்குள்ள மலையை வெறும் கல்லும், மண்ணும், மரமுமாக பார்க்காதீர்கள். அந்த மலைதான் சிவபெருமான். இதை சிவபெருமானே பலருக்கு பல தடவை உணர்த்தி உள்ளார்.

உலகில் வேறு எந்த ஒரு மலைக்கும் இந்த சிறப்பு கிடையாது. ஈசன் உறைந்து இருப்பதாக கூறப்படும் இமயமலைக்கு கூட திருவண்ணாமலைக்கு நிகரான மகத்துவங்கள் இல்லை. எனவேதான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அருள் ஒளி வீசி பக்தர்களை அழைத்து அரவணைக்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலைக்கு செல்பவர்களில் பலர் நல்லது செய்கிறார்கள். சிவனடியார்களுக்கு தானம் செய்கிறார்கள். புண்ணியத்தை சேகரித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். சிவன் சொத்து குலம் நாசம் என்று சொல்வார்கள். என்றாலும் ஈசனுக்கு உரியதை தங்களுக்கு உரியதாக நினைத்து மனம் துணிந்து அதர்மமாக செயல்படுகிறார்கள்.

நீங்கள் திருவண்ணாமலையில் நல்லது செய்தால் அண்ணாமலையார் உங்களை அன்போடு அரும் மழையில் நனையச் செய்து, தமது காலடி நிழலில் ஓய்வு எடுக்கச் செய்யும் வகையில் ஆசி வழங்குவார். தப்பு செய்தாலோ... நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை.

காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தவன் பிரதத்த மன்னன். இவனது பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மன்னர்கள் அலறினார்கள். அந்த அளவுக்கு அவன் படைபலம் மிக்கவனாக இருந்தான். ஒரு தடவை அவன் தென்நாடு நோக்கி யாத்திரை வந்தான். நிறைய ஆலயங்களுக்கு சென்றுவிட்டு திருவண்ணா மலை தலத்துக்கு வந்தான். அண்ணாமலை யாரை பார்த்ததும் அவன் மனம் அமைதி அடைந்தது. திருவண்ணாமலையில் தங்கியிருந்து விதம் விதமாக மலர்களை சமர்ப்பித்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வழிபட்டு வந்தான்.

ஒருநாள் அவன் அண்ணாமலையாரை வழிபட சென்றபோது ஆலயத்தில் பாட்டுபாடி ஆடும் இளம் தாசிப்பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். இனிமையான குரலில் அண்ணாமலையாரை புகழ்ந்து அவள் பாடிய பாடல் அனைவரையும் சொக்க வைத்தது. பிரதத்த மன்னனும் சொக்கி போனான். அந்த தாசிப் பெண்ணின் அழகும், அறிவும் பிரதத்த மன்னனின் மனதை பாடாய் படுத்தியது. அவளை தனது அந்தபுரத்தில் ஒருத்தியாக வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டான். அந்த பெண்ணிடம் சென்று, “என்னோடு நீ காசிக்கு வந்துவிடு. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்” என்றான்.

அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் என்னை அழைப்பது நியாயமல்ல என்று அந்த பெண் மறுத்தாள். என்றாலும் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல மன்னன் முயற்சி செய்தான். அப்போது அண்ணாமலையார் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை மன்னனுக்கு அளித்தார். பிரதத்த மன்னனின் முகம் குரங்கு முகம்போல் மாறிப் போனது. ஆலயத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மன்னனை பார்த்து கேலி செய்தனர்.

செய்வதறியாது திகைத்து போன மன்னன் தனது தவறை உணர்ந்தான். அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் பெண்ணை கவர முயன்றதுதான் தன் முக மாற்றத்துக்கு காரணம் என்பது தெரிந்து துடித்தான். அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த பொருளையும் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்ல முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டான்.

தனது தவறுக்கு பிராயசித்தம் தேட முடிவு செய்தான். மகான்களிடம் சென்று நடந்ததை கூறி, என்ன செய்தால் ஈசன் என்னை மன்னிப்பார் என்று கேட்டான். அவனுக்கு வழிபாடு வழிவகைகளை மகான்கள் சொல்லி கொடுத்தனர். அதன்படி தனது யானை படை, குதிரை படை அத்தனையையும் அவன் அண்ணாமலையார் கோவிலுக்கு ஒப்படைத்தான்.

அவனது தேர் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த தேரையும் அண்ணாமலையாருக்கு கொடுத்தான். பிறகு அண்ணாமலையாரே கதி என்று கோவிலிலேயே கிடந்தான். இடைவிடாமல் அண்ணாமலையாரை வணங்கினான். தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு அண்ணாமலை யாருக்கு மலர்மாலைகள் சாத்தி வழிபட்டான். அவனது உண்மையான பக்தியையும், வழிபாடுகளையும் கண்டு சிவபெருமான் இரக்கம் கொண்டார். மன்னனுக்கு நேரில் காட்சி கொடுத்தார். அதோடு அவனது குரங்கு முகத்தை மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.

அண்ணாமலையாரின் இந்த திருவிளையாடலால் மனம் நெகிழ்ந்த பிரதத்த மன்னன் அனைத்து பொருட்களையும் திருவண்ணாமலை ஆலயத்துக்கு காணிக்கை ஆக்கிவிட்டு காசிக்கு புறப்பட்டு சென்றான். அன்று முதல் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த ஒரு பொருளை யார் களவாடினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோரது மனதிலும் நிலை கொண்டது. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எமலோகத்துக்கு போய் அக்கினி குழியில் விழுந்து அவஸ்தை படுவார்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி இருள் நிறைந்த 28 கோடி நரகங்களிலும் விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு மறுபிறவி கிடைக்கும்போது பூமியில் புழுவாய் பிறப்பார்கள். அவர்களது தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும் என்று சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

திருவண்ணா மலை ஆலயத்தில் திருட வேண்டும் என்று மனதால் நினைத்தாலே போதுமாம், அவர்களை மரணம் விடாது துரத்தும். நிழல் போல தொடரும். திருவண்ணா மலைக்கு வரும் சிவ பக்தர்களுடைய பொருட்களை திருடினால் அவர்களுக்கு அந்த கணத்திலேயே தண்டனை உண்டு என்றும் அருணாசல புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.

சில சமயம் அண்ணாமலையார் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் கூட தவறு செய்வதுண்டு. அவர்களுக்கும் தண்டனை கொடுக்க அண்ணாமலையார் தவறியதில்லை. அதற்கும் ஒரு கதை இருக்கிறது.

புளகாதிபன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு நினைத்த நேரத்தில் நினைத்தபடி உருவம் எடுக்கும் சக்தி இருந்தது. ஒருநாள் அவன் புனுகுப் பூனையாக வடிவம் எடுத்தான்.திருவண்ணாமலை மலை மீது பூனை வடிவில் அவன் உலவினான். அப்போது மலை முழுக்க அந்த பூனையில் இருந்து புனுகு சிதறியது.
புனுகின் வாசனையால் அண்ணாமலை முழுவதும் வாசனை யாக மாறியது.

இதன் காரணமாக அண்ணா மலையாரின் அருளை புளகாதிபன் அசுரன் பெற்றான். இதனால் அவனுக்கு கூடுதல் பலம் கிடைத்தது. அந்த பலம் அவனுக்குள் ஆணவத்தை யும், அகந்தையை யும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவன் திருவண்ணா மலையில் இருந்த முனிவர் களையும், மகான் களையும் மிகவும் கஷ்டப் படுத்தினான். அவனது தொல்லை தாங்காமல் சிவனடியார்கள் கதறினார்கள்.

ஒருநாள் அந்த சிவனடியார்கள் ஈசனிடம் புளகாதிபன் அசுரன் செய்யும் தொல்லைகளை சொல்லி அழுதனர். இதனால் அண்ணாமலையார் இந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தார்.

அருணாசல மலையில் புளகாதிபன் அசுரன் புனுகு பூனையாக அலைந்தபோது நிறைய புனுகை சிதற வைத்து வாசனை ஏற்படுத்தியதால் அவனை எளிதில் அழிக்க முடியாது. எனவே அவனுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறேன் என்று அண்ணாமலையார் தெரிவித்தார். புளகாதிபனை அழைத்த அண்ணாமலையார், “அசுரனே உனது பிறவி முடிந்தது. உனக்கு மோட்சம் அளிக்க உள்ளேன். எனவே உனது உயிரை விட்டுவிடு” என்றார். அதை கேட்ட அசுரன் ஒரே ஒரு வேண்டுகோளை அண்ணாமலையாரிடம் தெரிவித்தான். பூனைகளிடம் இருந்து கிடைக்கும் புனுகை அணிந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும். அதோடு உங்களுக்கு “புனுகணி ஈசன்” என்ற பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

அண்ணாமலையார் அவனது கோரிக்கையை ஏற்றார். இதையடுத்து அந்த அசுரன் தனது உயிரை விட்டு அண்ணா மலையாரின் திருவடிகளை சென்று அடைந்தான். இதன் மூலம் தனக்கு பணிவிடை செய்பவர்கள் அசுரனாக இருந்தாலும் அவர்களுக்கு ஈசன் மோட்சம் அளிப்பது தெரிய வருகிறது.
அதுமட்டுல்ல திருவண்ணாமலையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அண்ணாமலையாரின் அருள் ஆசி கிடைக்கும். ஒரு தடவை திருவண்ணாமலை ஆலய பலிபீடத்தில் இருந்த நைவேத்தியத்தை ஒரு காக்கை எடுத்து உண்டது. அப்போது அந்த காக்கை தனது சிறகுகளை மிக வேகமாக அடித்தது.

இதன் காரணமாக பலிபீடத்தில் இருந்த அழுக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதை பார்த்த அண்ணாமலையார் மகிழ்ச்சி அடைந்தார். பலிபீடத்தை சுத்தப்படுத்திய காக்கைக்கு இந்திர பதவி வழங்கி அருள் புரிந்தார்.

மற்றொரு தடவை ஒரு சிலந்தி வலை பின்னியது. அதை பார்த்த அண்ணாமலையார் நமக்கு அந்த சிலந்தி ஆடை தயாரிப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். உடனே அந்த சிலந்தியை அரசனாக பிறக்க செய்து ஆசி வழங்கினார். அதுபோல ஒரு தடவை பெருச்சாளிக்கு மோட்சம் அண்ணாமலையார் வழங்கி அருள் புரிந்தார்.

திருவண்ணாமலையை வலம் வந்தாலே நம்மை பிடித்த பாவங்கள், தோஷங்கள் உடனடியாக விலகி விடும். இது திருவண்ணாமலை தலத்தில் எப்போது சிவபெருமான் அடிமுடி காண முடியாத அளவுக்கு அருள்பாலித்து மலையாக அமர்ந்தாரோ அன்று முதல் நடந்து வருகிறது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், எண் வசுக்கள் உள்பட பலர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் பாவத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார்கள்.

அடியாரை அடியார் வணங்குவது ஏன் ?

அடியாரை அடியார் வணங்குவது ஏன் ?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


*"ஓம் நமச்சிவாய"*

அடியாரை அடியார் (ஒவ்வொருவரும்) வணங்கி கொள்வது ஏன் என்று புரியாமல் !! பல இடங்களில் கேலிகூத்து ஆகிவிடுகிறது !!

அதன் உண்மை உணர்ந்தால் சிவவழிபாடு எத்தகையதோர் சிறப்பு என்று புரியவரும் !!

அவரும் மனிதன் !! இவரும் மனிதன் !! ஏன் விழுந்து வணங்கவேண்டும் ?? என்று மேலோட்டமாக பார்கையில் தோன்றுவது இயல்பு !!

ஆனால் இங்கு வணங்குபவர்கள் உள்நோக்கமே !!

" உன்னுள் ஜீவனாகிய !! ஆத்மாவாகிய !! உயிராகிய !! சிவத்தை வணங்குகிறேன் !! "

எதிர்த்து வணங்குபவரும் !! அதே எண்ணத்தில் தான் வணகுகிறார்.

இங்கு என் உடல், என் பெயர், என் பதவி, என் பணம், என் இனம், என் ஜாதி, என் குலம், ... என்று அத்தனையும் அழிந்து ஜீவனாகிய சிவன் மட்டுமே முன்னிறுத்த படுகிறது !!

அத்தனையும் சிவமே !! அத்தனையும் சமமே !! என்று உணர்த்தபடுகிறது.

இனியாவது தாங்கள் யாரையும் வணங்கினாலும் !! வணங்கபெற்றாலும், அந்த வணங்குதல் சிவத்தையே !!
என்று உணருங்கள் !!

அனைத்தையும் சிவமாக உணர்ந்து வணங்கும்போது அன்பு மட்டுமே முன்னிற்கும் !!

கோவம் !! ஆணவம் !! போன்ற மாயைகள் மறைந்து போகும் !!

சிவம் மட்டுமே வெளிப்படும் !!

உட்ற்றவன் உணர்த்தியவண்ணம்

*"திருச்சிற்றம்பலம்."*

மந்திர ஜபம் செய்யும் முறை

மந்திர ஜபம் செய்யும் முறை 


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம்
செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.

4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.

5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.

வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.

6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படு ம்

11. மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர்.

12. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

13. கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.

14. மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.

15. மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும்.

16. மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.

17. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.

18. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

19. மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

20. முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.

21. மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில் சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.

அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்?

அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது.

'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்?

• அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

• அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்குச் சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.

• அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.


• ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

• புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

• தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

• பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

• தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

• மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

• தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்யலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

• வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

• தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கும்.

• தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்குக் குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

அக்ஷய_திரிதியை என்றால்_என்ன?

அக்ஷய_திரிதியை என்றால்_என்ன?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்றார் ..

அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார்

சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.

அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு  அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது.

அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.

உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.

தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார்.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார்.

"உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார்.

உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார்.

அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்....

எனவே அன்றைய தினம் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள் ..

ஆனால் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள் ....

மஹா விஷ்ணுவின் அருள் கிடைக்க பெருவீர்..

தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற:

தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற:


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நீர் வீழ்ச்சி,ஆறு அல்லது கடல்போன்ற ஓடும் நீர் நிலைகளில் இருந்து 5 சிறிய கற்களை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து பூ,சந்தனம்,குங்குமம் சாற்றி வழிபடவும்.

நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும்.

மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம்.

பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த மந்திர உச்சரிப்பும் கூடாது. அதே போன்று மேற்கண்ட நிவேதனத்தை பிரசாதமாக உண்ண கூடாது. அவை அனைத்தையும் நீருக்கே கொடுத்து விட வேண்டும்.

மேற்கண்ட பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் .

16 வகை லட்சுமிகள்  அருள் தரவேண்டும் .


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.