Intraday Trading Training - Share Market Training Chennai

Intraday Trading Training - Share Market Training Chennai


Click Here  : Register for Intraday Trading Training

Intraday Trading Training - Share Market Training Chennai

What is an Intra day trading?

Intra-Day Traders. The name “intra-day trader” refers to a stock trader who opens and closes a position in a security in the same trading day. This can be buying and selling to capitalize on a potential rise in a security's value or shorting and covering the short to capitalize on a potential drop in value.

சிதம்பர தரிசனம்

சிதம்பர தரிசனம் !!!

இன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார் குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது.

ஐந்து வயது வரை வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை யருள வேண்டினார். அவர், குமரகுருபரரை ஸ்தல யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டார். காசிக் குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று வருந்திய குமரகுருபரரைச் சிலகாலம் சிதம்பரவாசமாவது செய்ய வேண்டும் என்று பணித்தார். குருவின் கட்டளைப் படியே குமரகுருபரர் சிதம்பரம் செல்கிறார்.

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். இது மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்த கோவையைப் போல நேரிசையாசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற செய்யுட்களால் இயற்றப்பட்டது.

இல்லறமும் துறவறமும்

தாம் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் இல்லறத்தின் பெருமையையும் மாண்பை யும் சிதம்பர மும்மணிக்கோவையில் விவரிக்கிறார்.

இல்லறத்தான் நல்ல நூல்களைக் கற்று, நற்குணம் நிறைந்த மனைவியோடு அன்போடு அரு ளும் சேர்ந்து இன்சொல் நிறைந்தவனாக விளங்க வேண்டும். வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும். அடி யார்களையும் பேண வேண்டும். ஐவகை வேள்விகளான பிரமம், தெய்வம், பூதம், பித்ருக்கள், மானிடம் என்னும் 5 வகையான வேள்விகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று என்ற முதுமொழிப் படி வாழ்ந்து பிறன் மனை நயவாமல் தன் மனைவியோடு இனிது வாழ்ந்து நன்மக்கட் பேறடைய வேண்டும்.

துறவறம் – கல்வி கேள்விகளின் மூலம் சிறந்த பேறறிவு பெற்று, அருளும், புலன்களின் வழியே செல் லாத மனவலிமையும், பேரொழுக்கமும், வாய்மை, தவம் தூய்மையும் உடையவனாகி ஓரறிவுடைய மரஞ்செடி கொடி களிடமும் அன்பும் உடையவனாக வேண்டும். கால்நடை யாகவே செல்ல வேண்டும். தோலாடை அணிய வேண்டும். துன்பம் கண்டு துவளாமல் காடும் மலையும் கடக்க வேண்டும். காற்றையும் நீரையும் உண்டு வாழ வேண்டும். பனிக்காலத்தில் நீரில் நின்றும் வெயில் காலத்தில் தீயில் நின்றும் தவம் செய்ய வேண்டும்.

இல்லறம் துறவறம் இரண்டி லுமே பல பிரச்சனைகளும் துயரங்களும் இருப்பதால் இந்த இரண்டு நிலைகளையும் கடைப்பிடிக்க மனவலிமையும் உடல் வலிமையும் இல்லாததால் மனங்கலங்கி வேறு ஏதாவது எளிய வழி இல்லையோ என்று அறிஞர்களைக் கேட்க அவர்கள் முக்தித் தலங்களான திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்கவே முக்தி என்று சொன்னார்கள். நல்ல புண்ணியம் இருந்தால் (ஊழ்) மட்டுமே திருவாரூரில் பிறக்க முடியும். காசிக்குச் செல்வதோ மிகவும் கடினம், காடுகளைக் கடக்க வேண்டும். வழியில் பசியாகிய தீ வாட்டும். மிகவும் குளிராக இருக்கும். பலவிதமான நோய்கள் ஏற்படலாம். போய்ச் சேர நீண்ட காலம் பிடிக்கும்.

காசியில் இறத்தல் நோக்கித் தேசம் விட்டு
அறம்தலைத் தந்த அரும்பொருள் தாங்கிப்
பிறன் பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
கழி பெருங்கானம் நீங்கி வழியிடைத்

தீப்பசிக்கிரங்கி நோய்ப்பிணிக்கு ஒதுங்கிப்
பல்பிணிக்கு உடைந்து செல்லுங் காலத்து
இடைச் சுரத்து இறவாது இன்னுயிர் தாங்கிக்
கிடைத்தனனாயின் அடுத்த நல்லொழுக்கமோடு

உடல் விடுகாறும் அத்தட நகர் வைகி
முடிவது கடைபோக முடிவதோ அரிதே, அதனால்
சிற்றுயிர்க்கிரங்கும் பெரும் பற்றப் புலியூர்
உற்ற நின் திருக்கூத்து ஒருக்கால் நோக்கிப்
பரகதி பெறுவான் திருமுன்பு எய்தப் பெற்றனன்
அளியேன்

என்று தான் சிதம்பர தரிசனம் செய்து முக்தி பெற வந்தாகச் சொல்கிறார் குமரகுருபரர்.

தில்லைத் தாமரை

நடராஜப் பெருமான் நடமிடும் பொன்னம்பலத்தைத் தரிசித்தவருக்கு அது தாமரை மலர் போல் தோன்றுகிறதாம்.ங்குள்ள மாடங்கள் இதழ்களாக வும், மன்றம் தாமரையின் உட்கொட்டையாகவும், விண் தோய் மாடங்களில் படியும் மேகங்கள் வண்டாகவும் காட்சி யளிக்கிறதாம். திருமகள் வீற்றிருக்கும் புண்டரீகத்தோடு நடராஜப் பெருமான் ஆடும் புண்டரீகத்தை ஒப்பிடுகிறார்.

மன்றம் பொகுட்டா, மதில் இதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பரால்—பொன்தங்கும்
நற் புண்டரீகமே ஒக்கும் நடராசன்
பொற் புண்டரீகபுரம்.

ஐவகைத் தொழில்

தூக்கிய திருவடி துணையென நம்பி வந்தவர், பெருமான் ஆக்கி, அழித்து உலகை நீக்கி, மறைத்து, அருளும் ஐந்தொழிலையும் நிகழ்த்துவதைக் காண் கிறார். உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் தானே சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது. இதையே பின்னல் வந்த ஒரு புலவர்

ஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளும்
ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே
தூக்கிய திருவடி துணையென நம்பினேன்
தூய நடராஜனே

என்று நெகிழ்ந்து பாடினார். குமரகுருபரர்,

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்
தானே வகுத்தது உன் தமருகக் கரமே

தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே
தோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே

ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே

இத்தொழில் ஐந்தும் நின் மெய்த்தொழில்..

என்று போற்றுகிறார். ஐயன் ஐந்தொழில் புரிகிறான் அம்மை என்ன செய்கிறாள்? சிறு குழந்தைகளுக்குச் சில மருந்துகளை நேரடியாகக் கொடுக்க முடியாது. அதற்காகத் தாய் அந்த மருந்தைத் தான் உட்கொண்டு தன் பாலின் மூலம் மருந்தின் பயனைக் குழந்தைக்குக் கொடுப்பாள். அதேபோல உலகமாதாவான சிவகாமி அம்மையும் நடரஜப் பெருமானின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரும் படி செய்கிறாளாம்.

குமரகுருபரரின் பெருமிதம்

பெரிய தவத்தையுடைய தொண் டர்கள் தளராமல் பலகாலம் கற்று, உணர்ந்து, தெளிந்து, செம்பொருள் இதுவென்று பலமுயற்சிகளும் செய்து வீடு பெற்றனர். நானோ அம்பலம் தரிசனம் மாத்திரம் செய்தே பிறவா நெறி பெற்றேன்!

பாம்பு ஆட்டுவிக்க ஆடும் பெருமான்

அம்பலத்தாடும் நடராஜப் பெருமா னையும் சிவகாமி அம்மையையும் தரிசித்த குமரகுருபரர், அங்கு ஒரு பாம்பு ஐயனை ஆட்டுவிப்பதைக் கண்டு அதிசயிக்கிறார். இது என்ன அதிசயம்! ஐந்து இந்திரியப் பாம்புகளையும் ஆட்டுவிக்க வல்ல சித்தராகிய தில்லைக் கூத்தன் இங்கே ஒரு பாம்பு ஆட்டுவிக்க அதற்காக ஆடுகிறாரே என்று வியக்கிறார்.

பதஞ்சலி என்ற முனிவர் பாம்பு வடிவத்திலே ஐயனின் ஆடலைக் கண்குளிரக கண்டு களிக் கிறார். நடராஜப் பெருமான் பதஞ்சலி முனிவருக்காகவே ஆடல் நிகழ்த்துகிறார் என்பது வரலாறு. இதையே

ஓட்டுவிக்கக் கூட்டினை விட்டோடும் பொறியரவு
(ஐந்)தாட்டுவிக்கும் சித்தர் நீராக்கால்—கூட்டமிட்டு
மன்றாடும் உம்மை ஒரு மாசுணம் நின்றாட்டுவிக்க
நின்றாடுகின்றதென் கொல் நீர்?

என்று வினவுகிறார். மன்றில் ஆடும் மாசுணம் என்பது பதஞ்சலி முனிவரை. ஒரு பாம்பு உம்மை ஆட்டுவிக்கிறதே என்று அதிசயிக்கிறார்.

இடம் போதுமோ?

ஆடல் வல்லானைப் பார்க்கப் பார்க்க புலவருக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டாகிறது.

ஐயனுடைய தோள்கள் மலைகளைப்போல இருக்கின்றன வாம். திருமேனியே ஆகாயம்! திருமுடியோ மூதண்டகூடம்! வில்லோ மேருமலை! இவ்வளவு பெரிய திருமேனியுடைய பெருமானுக்கு கையைக் காலை வீசி ஆட இந்த அம்பலம் போதுமா என்ற கவலை உண்டாகிறது.

வேதண்டமே புயங்கள் விண்ணே திருமேனி
மூதண்டகூடமே மோலியாம்—கோதண்டம்
ஒற்றை மாமேரு உமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றம்பலம்.

இப்படித் தன் கவலையைத் தெரிவிக்கிறார் குமரகுருபரர்.

பாம்பு, கங்கை, சந்திரன்

இடம் போதுமா என்ற கவலை இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்க்கும் புலவருக்கு, பெருமானின் மேனியிலிருக்கும் பாம்பு, கங்கை, சந்திரனைப் பார்த்த்தும் இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.

ஐயனின் சடைமுடியிலுள்ள பாம்பு மூச்சு விடுகிறது. அந்த மூச்சுக் காற்றால் கங்கை அலையெறிகிறதாம். ஆனால் பாம்பின் கண்ணிலிருந்து உண் டான தீயால் வற்றி விடுகிறதாம். ஐயன் நெற்றிக் கண்ணிலி ருந்து படர்ந்தெழுந்த தீக் கொழுந்தால் சந்திரனிடமுள்ள அமுதம் உருகி கங்கையில் வற்றிய நீரைச் சமன் செய்து விடுகிறதாம்!
இடது பாதம் தூக்கி ஆடுவது ஏன்?

அம்பலத்தான் ஆட்டத்தில் ஈடு பட்ட குமரகுருபரருக்கு ஒரு கேள்வி பிறக்கிறது. ஐயன் ஏன் இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்? பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா? தனது வலது பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா? அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ? இப்படி எண்ணிப் பார்க்கிறார்.

தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர் முடித்த
நக்கனார் தில்லை நடராசர்—ஒக்கற்
படப்பாயலான் காணப் பைந்தொடி தாள் என்றோ
இடப்பாதம் தூக்கி ஆடியவா இன்று?

என்று தன் கற்பனையை விவரிக்கிறர்.

திருவடிச் சிவப்பு

தூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது? ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ? இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பதஞ்சலியார், பதம்+சலியார் !

நடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே! இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?

ஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+ சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்று கிறது!

சென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்? என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி சாடப் பதஞ்சலியார் தாம்

என்று நயம் படப் பேசுகிறார் குமரகுருபர முனிவர்.

குமரகுருபரரின் விண்ணப்பம்

நட்டம் பயிலும் நாதனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் குமரகுருபரர். புலியூரில் ஆடும் ஐயனே! ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா? அன்று தொட்டு இன்று வரை ‘சுழலும் பிறப்புக்கு வருந்தவில்லை. பெருங்கடலையே நீந்திக் கடக் கும் வல்லமையுடைய ஒருவன் எப்படிச் சிறிய உப்பங் கழி யைக் கடக்க அஞ்ச மாட்டானோ அதுபோல இது வரை எண்ணிலடங்காத பிறப்புக்களை யெடுத்து உழன்ற நான் இனி வரும் பிறப்புக்களுக்கும் அஞ்ச மாட்டேன்.

ஆனால் இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் என்னைப் பற்றிப் பேசுவார்கள். உன் திரு நடனக் கோலத்தைத் தரிசித்த பின்னும் நான் பிறவியைப் பெற்றால் நான் அஞ்ச மாட்டேன். ஒருமுறை திரு நடனம் தரிசனம் செய்த மாத்திரத்தில் முக்தி கிட்டும் என்று வேதம் சொல் வது உண்மையல்லவா? ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே?” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே! எனக்காக இல்லாவிட்டாலும் தேவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவாவது எனக்கு அருள் செய்ய வேண்டும்.
கேட்ட வரம்

தில்லை வாணா! எனக்கொரு வரம் தரவேண்டும். பெருங்குளிரில் அழுக்கடைந்த கந்தைத் துணியைத் தவிர உடுக்க வேறொரு துணியில்லாமல் போனாலும், படுப்பதற்கு வாயிற்புறத் திண்ணையைத் தவிர

வேறு போக்கிடம் இல்லாவிட்டாலும், கடும் பசி வேளையில் வாய்விட்டு அழுதபோதும் உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ் கூடக் கொடுப்பவர் இல்லாவிட்டாலும் ஒழுக்கமும் கல்வி கேள்விகளில் சிறந்த அடியார் கூட்டத்தோடு சேரும் பேறு வேண்டும். என் உயிர் நீங்கும் அளவும் உதவி உன் பெரும் பதத்தை அருள வேண்டும். உன் திருப்பாதமே முக்தி யாதலால். அதையே வேண்டுகிறேன். ஒருவேளை நான் அறியாமையால் வேறு எதையாவது கேட்டாலும் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்கிறார்.

இந்திர பதவியும் வேண்டாம்

புலியூர்ப் பெருமானுக்கு ஆட்படுவதன்றி இந்திரபதவியும் வேண்டாமாம் இவருக்கு.

“இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறுனும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”

என்று பாடிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல இவரும் தீவிரமாகப் பேசுகிறார்.திருமால் பதவியும் இவருக்குத் துச்சமே!

புனையேம் தருவுதவு பொன்னரிமாலை
வனையேம் பசுந்துழாய் மாலை—பனிதோய்
முடிக்கமலம் சூடினேன் மொய்குழலோடு ஆடும்
அடிக்கமலம் சூடினோமால்.

முடியிலே கங்கையையும், இடப் பக்கத்திலே உமாதேவியாரையும் கொண்ட சிவபெருமானு டைய அடித்தாமரையைச் சூடியதால் இந்திரலோகத்துப் பொன்னரி மாலையையும் திருத்துழாயையும் சூடமாட்டேன் என்கிறார்.

வீடுபேறு நிச்சயம்

இறைவனின் திருவடிகளே வீடு பேறு. இறைவனின் அடித்தொண்டு செய்யாத எனக்கும் அவன் தாள் நீழலின் கீழ்ப் பொலியும் சீருண்டு. ஏன் தெரி யுமா? சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால்! அமுதத்தை யார் உண்டாலும் அவர்கள் இற வாமை நீங்கப் பெற்று தேவர்களாகி விடுவதைப் போல், தில்லைக் கூத்தனின் திருநடனத்தை யார் தரிசித்தாலும் அவர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம்.

நீருண்ட புண்டரீகத் துணைத்தாள்
நிழற்கீழ்ப் பொலியும்
சீருண்டு, அடித் தொண்டு செய்யா எனக்கும்
சிற்றம்பலத்து எம்
காருண்ட கண்டனைக் கண்டனனால்
அக்கடலமுதம்
ஆருண்டனர் மற்று அவர் எவரேனும்
அமரர்களே.

இவ்வளவு பெருமைகளைப் பெற்றிருப்பதால் தான்

“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்,
சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ”

என்று நந்தனார் தவித்தாரோ? இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய சிதம்பரத்தை நாமும் ஒருமுறையாவது தரிசிப்போமே.

திருச்சிற்றம்பலம்

சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன?

சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன?

இந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.

அர்த்தம் இந்த செய்கையானது ஒரு விழுந்த குச்சி எவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றதோ, அதே நிலையில் தான் இருக்கின்றேன்; எனக்கு உன்னைச் சரணடைவதைத் தவிர வேறு கதி இல்லை; நீயே எனக்குத் தஞ்சம் என இறைவனை நோக்கி இறைஞ்சுவதை குறிக்கின்றது. மேலும் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும் ஒரு சின்னமாக விளங்குகின்றது

அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம்:
சில வழிகளில், இது இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. நாம் நிற்கும் நிலையில் இருந்து தரையில் விழும் பொழுது நமக்கு காயம்பட்டுவிடுமோ என்று சிலர் அஞ்சக் கூடும். நாம் உட்கார்ந்த நிலையில் இருந்தாலும் நமக்கு காயம்படும் சாத்தியங்களும் உள்ளது. ஆனால், நாம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் பொழுது, நாம் கீழே விழுந்து விடும் அபாயம் இல்லை, எனவே இங்கு நமக்கு காயம்படும் சந்தர்ப்பம் துளியும் இல்லை.

அடக்கத்தைக் குறிக்கும் சாஷ்டாங்க நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும். மேழும் இதைப் பின்பற்றும் நபரிடம் அடக்கம் உருவாகத் தொடங்குகின்றது. பிறர் முன் நாம் அவர்களின் செய்கையின் காரணமாக் நாம் தலை வணங்கினால் அது நமக்கு அவமானம். அதுவே நாம் பிறரை விட உயர்ந்து இருந்தும், அடக்கமாக தலை தாழ்த்தி இருந்தால் அது நமக்கு மரியாதை மற்றும் வெகுமதியைப் பெற்றுத் தரும்.

நமஸ்காரம்
இந்த நமஸ்காரத்தை ஒரு சன்யாசி/வயதில் பெரியவர்கள/குருவிற்கு செய்யும் போது, அவர்கள் நம்முடைய நமஸ்காரத்தை எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எடுத்துக் செல்லும் ஒரு ஊடகமாக செயல்படுகின்றார்கள். இந்த நமஸ்காரத்தை மறுமுனையில் பெற்றுக் கொள்பவர்கள், எதிரே உள்ளவர் தன்னை வணங்காமல் இறைவனை நோக்கி வணங்குவதாக கருதிக் கொள்வார்கள். எனினும், அவர் அந்த நமஸ்காரத்தை இறைவனிடம் எடுத்துச் செல்கின்றார். மேழும் அவர் அந்த நபரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார்.

எனவே, சாஷ்டாங்க நமஸ்காரம் எவ்வாறு செய்யப்படுகிறது? சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு தரையில் பட வேண்டும். மேழும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியலாமா?
இந்து மத மரபுகளின் படி, பெண்கள் இந்த வகை நமஸ்காரம் புரியக்கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக்கூடாது.

ஏன் பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதி இல்லை? பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்ந்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு தன் மதிப்பிற்குரியவர்களின் கால்கள் தொட்டு வணங்குவது 'பஞ்சாங்க நமஸ்காரம்' என அழைக்கப்படுகின்றது. இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை. பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

அத்ரி மலை பயணம்

சித்தர் தரிசனம் / அத்ரி மலை பயணம்

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
சித்தர் தரிசனம் / அத்ரி மலை பயணம்
அகத்தியர் மகிரிஷியின் குருபூசை தினமான 13,05,2016 வெள்ளியன்று அத்ரி மலை அத்ரி அனுசூயா தேவி ஆலயம் / அகத்தியர் கோரக்கார் சித்தர்களின் தரிசனம் செய்ய திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஆலயம் சென்று அகத்தியர் குருபூசையில் கலந்து கொண்டேன். எனது பயணம் ஒரு நபர் பயணமாகவே அமைந்தது. வழித் துணைக்கும் நடத்திச் செல்ல நமக்கு துணையின்றி இறைவனின் துணையுடனே அத்ரிமகிரிஷியின் வழித்துணையால் காட்டு வழிபாதையில் பாதையே முன்பின் அறிந்திராத தருணத்தி்ல் பயங்கர காட்டு மிருகங்கள் நடமாடும் மலைப்பயணம் எனக்கு அமைந்தது, ஒரு தெய்வீகச் செயலாகவே கருதுகிறேன். அதிரும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக " நமச்சிவாய நம " என பஞ்சாயச்சர மந்திரத்தை கூறிக்கொண்ேட கோவிலை அடைந்தபின்தான் எனது பெருமூச்சு விட்டேன்.
கோவிலை அடைந்தபின் அங்குள்ள தெய்வீக அருள்காட்சியும், அகத்தியர் குருபூசைக்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த செந்தில் லட்சுமி வலைதள ஆன்மீக சித்தர்கள் வழிபாட்டுக் குழுவினரைச்சந்தித்த பின் எனக்கும் அந்த அகத்தியர் மகிரிஷியின் அருள்பெற வாய்ப்பு கிடைத்ததன் ஆனந்தம் கொண்ேடன். அத்ரி ஆலயம் பற்றி சில தகவல்கள்.
இவ் ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார். ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள்.
ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்ரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும்
சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி மகரிஷி.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவிலும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி
மஹரிஷிடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்திரலும், ஜோதிட சாஸ்திரத்தி<லும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.
இங்கு ஸ்ரீ அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.
மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு.
அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.
பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை
சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;
வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.
அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;
பாம்பாட்டிச் சித்தரின் சீடர் சிவப் பிரபாகர சித்தயோகியின் வழித் தோன்றல்களில் மிக முக்கியமானவர் பிரம்மஸ்ரீ சித்தராஜ சுவாமிகள். இவரும் இந்த அத்ரி தபோவனத்தில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்துள்ளார். இவர் காலத்தில் கூட கோயில் சரியாக கட்டப்படாம லேயே இருந்தது. புதர்களும் மரத்தில் இருந்து விழுந்த இலைகளும் குவியல் குவியலாக கிடக்கும். காட்டுக் கோழிகளெல்லாம் இலைச் சருகுக்குள் நுழைந்து காணாமல் போய்விடும். அதைப் பிடிக்க சருகுகளுக்குள் தேடினால் வேறொரு சருகுக் குவியல்களின் வழியாக வெளியேறிவிடும்.
அந்த அளவுக்கு இலைச் சருகுகள் அம்பாரமாகக் குவிந்திருக்கும். அத்ரி தபோ வனத்தில் தற்போது அத்ரி மகரிஷிக்கு பூஜை நடைபெறும் மரமே ஒரு குடைபோல் இருக்கிறது. இது வெயிலாலோ மழையாலோ தவத் திற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாதபடி பாதுகாப்பாக அமைகிறது. தற்போது இந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. தவசீலர் சித்தராஜ சுவாமிகள்தான் இந்த மலையைப் பற்றியும், அத்ரி மகரிஷியின் தபோவனத்தின் சிறப்பு களையும் மலையாளத் தில் நூலாக எழுதினார்.
அந்த நூலை தமிழில் ராமானுஜம் சுவாமிகள் எழுதியுள்ளார். இந்த நூல்தான் அத்ரி தபோவனத்தினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாகும். அதன் பிறகு இந்தக் கோயிலுக்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இவர்கள்தான் வள்ளி-தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தவர்கள். அதோடு, வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். காவடி, பால்குடம் எடுத்துச் செ ல்லுதல், அலகு குத்துதல் போன்ற நிகழ்வுகளை இங்கு உருவாக்கியவர்களே பாம்பாட்டிச் சித்தரின் சீடர்கள்தான்.
பாம்பாட்டிச் சித்த ருக்கு மருத மலை, துவாரகை, விருத்தா சலம் போன்ற மூன்று தலங்களில் ஜீவசமாதி இருப்பதாகக் கூறுகி றார்கள். அதே போல் சங்கரன் கோயிலுக்கு அருகே புளியங்குடி பாதையிலும் ஒரு ஜீவ சமாதி உண்டு. அதாவது, அத்ரி மலையில் பதினாறு வருடங்கள் தவமிருந்த பின்னர், சித்தியான இடமும் இந்த இடத்தில்தான் உள்ளது. சித்தர் ஒரே சமயத்தில் பல பகுதிகளில் தம் இருப்பைக் காட்ட வல்லவர்கள் என்ற அடிப்படையில் இப்படி ஜீவசமாதிகள் அமைந்திருக்கலாம் என்கிறார்கள்.
அத்ரியில் தவமிருந்த போதுதான் சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தினை கட்ட வேண்டும் என்று உத்தரவாகியுள்ளது. அதன்படியே அந்தப் பீடத்தினை பெரிதாக கட்டியுள்ளார்கள். இதில் கல்யாணிபுரம் மாரிவேல் என்னும் பெரியவர் தற்போது பாம்பாட்டிச் சித்தரின் வாரிசுகளோடு அத்ரி மலைக்கு வந்து செல்கிறார். கோயில் பிரபலம் ஆவதற்கு முன்னாலிருந்தே அவர்கள் இப்படி வருவது வழக்கம். மலையில் கிருத்திகை, அஷ்டமி காலங்களில் முருகனுக்கு பூஜை செய்வார்கள்.
அவர்கள் இரவு வரை தங்கியிருந்து பூஜை செய்வார்கள். பின்பு, இங்கிருந்து மலை மீது சற்று தூரமுள்ள கருப்பசாமி கோயிலுக்கும் சென்று பூஜை நடத்துவார்கள். இரவு வேளையில் பக்தர்கள் மூலிகை காபியை குடித்துக் கொண்டும், முருகப் பெருமானை தரிசித்தபடியும் நோய்கள் குணமாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் ஆகாதோர் சந்தன அபிஷேகம் செய்து, அந்தச் சந்தனத்தினை முருகப் பெருமானின் மார்பில் வைத்து விடிய விடிய பூஜித்து மறுநாள் காலையில் அதை பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.
விரைவிலேயே அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி விடும். இதுபோலவே குழந்தை வரம் வேண்டுவோரும் செய்வார்கள். சங்கரன் கோவில்-புளியங்குடி ரோட்டில் அமைந்துள்ள பாம்பாட்டிச் சித்தருடைய ஜீவசமாதியானது சில வருடங்களுக்கு முன்புதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அத்ரி மலையில் தவமிருந்த பாம்பாட்டிச் சித்தரின் சீடர்களே ஆவார்கள். சித்தர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போகர் விளக்குகிறார்.
பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பல விதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்து நின்றா
ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே
(போகர் ஜெனன சாரம் - 324)
இந்த அகண்ட பூமியில் அங்கும், இங்கும், மலைகளிலும், குகைகளிலும் நிறைந்து நிற்கின்றனர் சித்தர்கள். அவர்களுடைய சீடர்களும் நிரம்பியிருக்கின்றனர். சித்தருடைய மூலத்தைக் கண்டறிய இவ்வுலகத்திலே யாருக்கும் சக்தியில்லை. ‘என்னால் என் சக்திக்கு இயன்றவரை சிறிது சொன்னேன். தங்களை வெளிக் காட்டாமல் எல்லாச் சித்தர்களும் மறைந்தே வாழ்கின்றனர்’ என்று போகர் கூறுகிறார். அதனால்தான் அத்ரி தபோவனத்தில் பாம்பாட்டிச் சித்தர் உட்பட பல சீடர்கள் தவம் புரிந்துள்ளார்கள். இப்படி 50 வருடங்களுக்கு முன்புவரை நிகழ்ந்திருக்கிறது.
பாம்பாட்டிச் சித்தரின் வழி தோன்றலில் வந்த சீடரான சித்தராஜ சுவாமிகள் அத்ரி மலையில் தவமிருந்தபோது, உடன் கல்யாணிபுரம் மாரி வேல் இருந்திருக்கிறார். அதாவது, மாரிவேல், தனது பத்து வயதிலிருந்தே சித்தராஜ சுவாமிகளோடு இருந்திருக்கிறார். இதைப் பற்றி மாரிவேல் ஐயா கூறுகிறார்: ‘‘அப்போ சுவாமிகள் தபோவனத்துக்கு வந்து தவமிருக்கும்போது புலி, கரடி, கடுவாய், யானை கூட்டங்களும் மலையிலிருந்து இறங்கி தபோவனத்துல வந்து நிற்கும். இந்த கூட்டங்களோட கூட்டமா சித்தராஜ சுவாமிகள் இருப்பார். ராத்திரியில் தீ மூட்டி தங்குவோம்.
விஷப் பாம்புகள் அலையும். சிலசமயம் பாய்க்கு அடியில கூட கிடக்கும். ஆனா, எந்த தொந்தரவும் பண்ணாது. ஐயா அவங்க ரெண்டு மரங்களுக்கு நடுவுல கயிறு கட்டி தொட்டில்போல் செஞ்சு படுப்பாங்க. மத்தவங்களெல்லாம் அங்கங்க படுத்து உறங்குவாங்க. ஆனா, ராத்திரியில எழுந்து அவரைத் தேடினா இருக்க மாட்டாரு. எங்க போயிருப்பாருன்னு கண்டு பிடிக்கவே முடியாது. தபோவனத்துக்கு மேல இருக்கற கருப்பசாமி கோயிலுக்கும், காளி கோயிலுக்கும் பூஜை பண்ணிட்டு வருவாரு.
ஆனா, காலையில கயிறு ஊஞ்சலில் படுத்து கிடப்பாரு. ஆனையடி தம்பிரான் கோயில் சுவாமிகள், நிர்மானந்தா சுவாமிகளெல்லாம் கூட தபோவனத்துக்கு வருவாங்க. அப்படித்தான் திடீர்னு ஒருநாள் சங்கரன் கோவில்ல பாம்பாட்டிச் சித்தரோட ஜீவ சமாதியை சீரமைத்து வழிபாட்டு தலமாக அமைக்க உத்தரவு வந்ததா சொன்னாரு. அந்த பணியை செய்யப் போறேன்னாரு. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சியா இருந்தது. ஏன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கும் அத்ரிமலைக்குமான தொடர்பு அப்போ பலபேருக்கு தெரியாமயே இருந்தது’
சித்தர்கள் வழிபாட்டிற்கு ஓர் சிறந்த மலைதளம் சென்று அருள் பயன் உய்ய அன்புடன் வேண்டுகிறேன்

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்?

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும். நன்றி…!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

பரலோக பாக்கியம் வேண்டுமா?

பரலோக பாக்கியம் வேண்டுமா?

“ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய’ என்று சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம் எம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், எம பயம் இராது. பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில் சிவ வழிபாடு செய்பவர்

களுக்கு சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான்.

சிவனை வழிபடும் போது ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ் வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதில், நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.

எடுத்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு நாம் சொல்வதையெல்லாம் அன் புடன் கேட்டு அனுக்ரகம் செய்து மோட்சத்தையும் அளிக்கிறார்.

ஒரு வித்வான், “ஏ, பரமேஸ்வரா! முன் ஜென்மத்தில் நான் உன்னை நமஸ்காரம் செய்யவில்லை. இதை எப்படிச் சொல்ல முடிகிறது என்றால், முன் ஜென்மத்தில் உன்னை நமஸ்காரம் செய்திருந்தால் எனக்கு இந்தப் பிறவி கிடைத்திருக்காது! இந்த பிறவி கிடைத்திருப்பதால் முன் ஜென்மத்தில் உன்னை நான் நமஸ்காரம் செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

“அப்படி நமஸ்காரம் செய்யாத தற்கு என்னை மன்னித்துவிடு. ஆனால், இப்போது இந்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்கிறேன்; நான் மறுபடியும் அடுத்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்யப் போவதில்லை; அதற்காகவும் மன்னித்து விடு. ஏன் தெரியுமா? இந்த ஜென் மாவில் உன்னை நமஸ்காரம் செய்தவனுக்கு மறு ஜென்மா கிடையாதே! மறு ஜென்மாவே இல்லாதபோது நமஸ்காரம் எப்படி செய்ய முடியும்?

“அதனால், சென்ற ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், இந்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், அடுத்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், ஆக மூன்று நமஸ்காரம்! என்னை ரட்சிக்க வேண்டும்…’ என்று பிரார்த்தித்தாராம்.

இப்படி சுலபமாக முக்தி பெறு வதற்கான வழி சிவ நாம ஜெபம், சிவ வழிபாடு, நமஸ்காரம் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஆக, பரமேஸ்வரனை பிரார்த் தித்தால், வாழ்நாளில் சுகமும், பரலோக சுகமும் கிடைக்கிறது.

சிவாய நம தோத்திரங்களை துதிப்போம்
சிவன் அருள் பெறுவோம்

சில சிவ நாம தோத்திரங்கள்

அண்ணாமலைஎம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி !!

சங்கரனே நின்பாதம் போற்றி ! போற்றி !!

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி !!

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி !!

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி !!

பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே !

அல்லல் கெடுப்பன ஐந்தெழுத்துமே !

நற்றுனையாவது நமச்சிவாயவே !

ஓம் நமசிவாய நம
திருச்சிற்றம்பலம்

திருமறைகளில் காணும் ஆசை, குரோதம்

திருமறைகளில் காணும் ஆசை, குரோதம்

மனிதனிடமுள்ள மிகவும் வேண்டாத் தகா குணங்களில் மிகவும் முக்கியமானவை ஆசை, குரோதம் என்ற கோபம், பொய் ,மற்றும் காமம். இவற்றில் ஆசையும் கோபமும் பல இன்னல்களையும் உடல் ரீதியாக பல கேடுகளையும் விளைவிக்கின்றன என்பதை திருமுறைகளில் காணும் கருத்துக்கள் பல
" காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை" - பட்டினத்து அடிகள்
மனித மனத்தை அசுத்தப்படுத்தும் குப்பைகள் ஆசையும் கோபமும் என்கிறார் பட்டினத்தார் சுவாமிகள்.
" அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வச் செற்றக் குரோத நீக்கியுன்
திறத்தனாய் யொழிந்தேன் திருவாரூர் அம்மானே" - திருமுறை 4 பதிகம் 20
ஆசை, பகை, கோபம், ஆகியவற்றை நீக்கிச் சிவத்தொண்டன் ஆயினேன் என்கிறார் திருநாவுக்கரசர் சுவாமிகள்
"விடுமின் வெகுளி, வேட்கை நோய்" - திருமுறை 8 பாடல் 607 மாணிக்க வாசகர் சுவாமிகள்
கோபத்தையும் ஆசைையும் விட்டோழிக்க வேண்டும் என்கின்றன தமிழ் திருமுறைகள்
பொதுவாக நம்முடைய ஆசைகள் அல்லது எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது கோபப்படுகிறோம்,
கோபம்இயற்கையானது இல்லை. இதனால் தான் திருமூலர் தன் பாடலில்
"ஆசை யறுமின் ஆசையறுமின்" என்றருளியுள்ளார்,
" ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே," திருமூலர்
ஆசையின் உச்ச கட்டம் ஈசனிடம் நாம் கொள்ளும் ஆசைதான் இதனையும் வீஞ்சிய ஆசை இல்லை இதனையே
விட்டொழிய வேண்டுமென கூறுகிறார், ஆசை ஏற்பட ஏற்பட துன்பங்கள் தாம் வந்து சேரும், ஆசையை ஒழித்தால் இன்பம் மேல் ஓங்கும்,
ஆசை இருந்தால் துன்பமும் , ஆசை அழிந்தால் இன்பமும் ஏற்படும், எப்பொருளிடத்தும் ஆசையை விட்டொழிக்க வற்புறுத்தவே ஈசனோடு கொண்ட ஆசையாயினும் ஆசை வேண்டாம் என்கிறார், இதன் மூலம் ஆசையின் ஆனிவேர் தன்மையை உணர்த்துகிறார்,
ஏமாற்றத்தின் வெளிப்பாடு கோபம், கோபப்படுவதால் விரக்தியோ அல்லது ஏமாற்றத்தையோ போக்கிவிட முடியாது. கோபப்படுவதால் நாம் நினைத்தது நடந்து விடப் போவதில்லை. கோபம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடும். அமைதியை சிந்திக்க முடியாமல் போகிறது. நம்முடைய வேலை தடைப்பட்டு போக கோபமே காரணமாகிறது. கோபத்திற்கு ஆக்கும் சக்தி கிடையாது, கோபம் ஏற்படும் போது மனம் மூர்க்கத்தனம் அடைகிறது. இதனால் தம்மையும் மீறி சில கொடிய அளப்பறிய செயல்கள் கூட நடைபெற காரணமாகிறது. கோபப்படும் பொழுது உடலில் உஸ்ணம் அதிகமாக , விசம் உண்டாகி இரத்தத்தில் கலக்கிறது. உடல் பலவீனம் அடைகிறது. நோய்கள் உள்ளே புகுவதற்கு வழி வகுக்கப்படுகிறது.
கோபம் நீடித்து நிற்கக் கூடியது இல்லை. ஆனால் கோபத்தால் எற்பட்ட பாதிப்புக்கள் நிலைத்து நிற்கும்,
ஆறுவது - தணிவது சினம் என்கிறது தமிழ் வேதங்கள்
கோபத்திற்கு பிரிக்கும் சக்தி தான் உண்டு. ஒன்றுபடுத்தும் சக்தி கிடையாது. ஒருவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம், ஒருவன் திட்டினால் உடனே திருப்பித் திட்ட ஆரம்பிக்கிறோம், ஒருவன் தீமை செய்தால் திருப்பி அவனுக்கு தீமை செய்ய நினைக்கிறோம்,
இவையாவும் பழிவாங்கும் உணர்ச்சியே ஆகும். கோபத்தின் விளைவே பழிவாங்கும் உணர்ச்சியாகும். கோபப்படுகிறவன் தன்னையும் அழித்துக் கொண்டுத் தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்து விடுவான். ஆசையும் குரோதமுமே ரஜோகுணத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
ரஜோகுணம் அகங்கார முடையவன், நான் எனது, என்ற குணமுடையவன் நான்யார்? என்பது உனக்கு தெரியாதா? நான் நினைத்தால் உன்னை பயனில்லாதவனாக்கி விடுவேன் என்று கூறுவதும், வீடு, மனை, வாகனம் வசதிகளை பெருமைபட கூறுபவன் என்னால் தான் இது முடிந்தது , என்னால் தான் இது நடந்தது என்ற அகங்கார குணத்திற்கு அடிகோலாக அமைகிறது. எனவே ஆசையும் கோபமும் மனித , சைவ வாழ்விற்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்,
எனவே ஆசையும் குரோதமும் சைவ சமய கருத்துக்களுக்கு புறம்பானவை எனவே ஆசையை அறுத்தும், குரோதத்தை ஒழித்து சைவ நெறியுடன் வாழ முயலவேண்டும்
திருச்சிற்றம்பலம்

சிவ வழிபாடு

சிவ வழிபாடு !!!

நாம் திருக்கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன்பு இந்த நாமாவளியை கூறிய பிறகுதான் வழிபாடுகளை தொடர வேண்டும் மீண்டும் வழிபாடுகளை முடித்த பின்பும் நாமாவளியை சொல்லி முடிப்பது நமது மரபாகும்.

1.ஹர ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா ..!!!
2.தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..!!
3.ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி..!!
4.ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி.!!
5.அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி.!!
6.ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி...!!
7.பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி...!!
8.குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி...!!
9. அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி...!!
10.தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி ...!!!
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி ...!!!
11. அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி ...!!!!
12. மண்ணிய திருவருள் மலையே போற்றி ..!!
சென்னியில் வைத்த சேவக போற்றி ..!!
13.திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி...!!
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி...!!
14.காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..!!!

நாம் இந்த நாமாவளியை சொல்லி பரம்பொருளின் ( சிவபெருமானின்) பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்
திருச்சிற்றம்பலம் .

பிரச்னைகளுக்கும் நிவாரணி - ஓம் சிவசிவ ஓம்

பிரச்னைகளுக்கும் நிவாரணி - ஓம் சிவசிவ ஓம் !

ஓம் சிவசிவ ஒம்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய, சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்; குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது. அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”

இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும், எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.

இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை; ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது. அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும். பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும். ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும். உடனே விட்டுவிடக்கூடாது.

அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும். நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.

21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்; பவுர்ணமி, அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.

எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும். அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது. ஆனால், திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால், அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.

பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டு.தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும். கல்வி, வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.

பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி ,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, விரதமிருந்து (சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே, நமது ஊழ்வினை தீர்ந்துவிடும். நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்; மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.

சண்டேசுவர நாயனார்

சண்டேசுவர நாயனார்..!!!

சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவரை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.

சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சண்டிகேசுவரர் வலது கரத்தில் மழுவுடன் காணப்படுகிறார்.
நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி
ஏழாம் நூற்றாண்டில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.
விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.
விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய காலம் கிபி-400-1000 என்று கருதப்படுகிறது.
சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற ஊர் ஒன்று உளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையனயாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார்.
பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.
மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து "நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார்.
விசாரசருமர் சண்டீச பதவி பெற்ற இன்னும் ஒரு வரலாறு ;
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்றுரிமையாக்கி "சண்டீசன்" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் "சண்டேஸ்வர நாயனார்" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார்.
சண்டேஸ்வரர் சன்னதியில் கைதட்டுவது ஏன்?
சிவன் கோவில்களில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி சிவ சன்னதி மூலவரின் அபிசே நீர் விழும் கோமுகின் அருகில் இருக்கும், இங்கு சுற்றி வரும் சிவ பத்தர்கள், சண்டிகேஸ்வரின் சன்னதியின் முன் பலமாக கைதட்டி வணங்குவார்கள். இது தவறு, சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். அவரின் அமைதியை கெடுக்கக் கூடாது, அவர் ஈஸ்வர வரம் பெற்றவர், சிவ சன்னிதானத்தில் சிவ பக்தர்களின் வருகையை பதிவு செய்பவர் நமது கோரிக்ைகயை சிவனிடம் எடுத்துரைப்பவர் எனவே அவர் சன்னதி வந்தவுடன் மெதுவாக கைதட்டி வந்தேன், வந்தேன், சிவ தரிசனம் கண்டேன், கண்டேன் என்று கூறி நமது கோரி்க்கையை சிவனாரிடம் எடுத்துரைக்க வேண்டும், அவர் நம்பால் சிவனாரிடம் நம் வருகையையும் வேண்டுகோளையும் வைப்பார் என்பது ஐதீகம்.

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன்

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் -- தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

அவசியம் தொிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

அவசியம் தொிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது

*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.

*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி, மாடு ஆகியவை கட்டியிருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.

*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.

*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.

*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

(மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.)

கங்கைக் கரை ரகசியங்கள்

கங்கைக் கரை ரகசியங்கள்..!



''ஐந்து அதிசயங்கள்!''

பாரத தேசத்தில் இருந்த அரசர்கள்,  மக்கள் விரும்பும்படி காசியில் அப்படி என்ன இருக்கிறது..?

அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது.

அது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவை...

1)  பல்லி சப்தம் எழுப்பாது...

காசியில் பெரிய அளவில் பல்லிகள் உண்டு.

ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை.

நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள்.

காசியில் அதற்கு இடமில்லை.

2)  பிணம் நாற்றம் எடுக்காது...

பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா..?

பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது!

இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள்.

ஆனால், இங்கே...

பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது!

3)  கருடன் வட்டமிடாது....

காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும்,  உணவுகள் சிதறிக்கிடந்தாலும் இறைக்காக கருடன் (வெண்கழுத்து கழுகு)  வட்டமிடுவதில்லை.

கருடன் அங்கே பறந்து செல்லும்....

ஆனால், வட்டமிடாது!

காசியில் காக்கையும் கிடையாது!

4)  பூ மணக்காது....

இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும்.

என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது.

தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது.

முக்கியமாக மல்லி, முல்லை இவைகள் கிடைக்காது.

ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும்.

தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள்.

சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.

பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது.

அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது.

ஆனாலும் அவை வாசம் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது.

வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும்.

ஆனால் 'காசி பூக்கள்' மணப்பதில்லை!

5)  பால் வற்றாது.....

இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது.

பசுக்கள் கட்டப்படுவதில்லை.

பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள்.

பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை.

மனிதனை கண்டு மிரளுவதில்லை.

சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும்.

இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை!

பல வருடங்களாகவும்,  இன்றும்...

இயற்கையாகவே இந்த ஐந்து விஷயங்கள் நடக்கிறது!!

அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை

அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை !!!

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான்.


அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார்.

இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார்.

இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்

துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்

துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள் !!!

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர்.

எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.

இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.

உங்களுக்கு ஏழரை சனியா? அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க. சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.

சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

சனி மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்:
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

தொண்டு:
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது ஏன்?

வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது ஏன்?

ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில் வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார்.

அன்றைய தினம் ஓர் சிவராத்திரி. வில்வ மரத்தின் மீது இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த சிவபெருமான் மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்து கொண்டே இருந்தன.

இதைக்கண்ட பார்வதிதேவிக்கு குரங்கின் மீது கோபம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான், உமையே! குரங்கின் மீது கோபம் கொள்ளாதே! அது நம் இருவரையும் வில்வ இலைகளால் அர்ச்சிக்கிறது என்று கூறி, குரங்கிற்கு நல்லுணர்வு உண்டாகுமாறு அருளினார்.

உடனே மரத்தின் மீது இருந்த குரங்கு கீழே இறங்கி வந்தது. சிவனை வணங்கியது. அப்பனே! நான் பிழை செய்து விட்டேன்.

என்னை மன்னிப்பீராக! என்று வேஎண்டியது.

அதைக்கேட்ட சிவன், உன்னுடைய செயல் எமக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை வழிபாடாக ஏற்றுக்கொண்டோம். நீ எங்களை வில்வத்தால் பூஜை செய்த பலனாக, சோழ குலத்தில் தோன்றி உலகை ஒரு குடையின் கீழ் ஆளும் சிறப்பை பெற்று வாழ்வாயாக! என்று ஆசீர்வதித்தார்.

வரம் பெற்ற குரங்கு சிவனை வணங்கி, “அய்யனே! அடுத்த பிறப்பிலும் உமது திருவடிகளை மறவாது பூஜிக்க” அருள்புரிவதோடு, அடுத்த பிறவியிலும் குரங்கு முகமே இருப்பதுபோல் சிவபெருமானும் அந்த வரத்தை வழங்கினார்.

அந்த வரத்தின்படி, அந்த குரங்கானது கருவூரில் மாந்ததா என்ற சோழ மன்னனுக்கு மகனாக பிறந்தது. அந்த குழந்தை முசுந்தன் என்று பெயர் பெற்று வளர்ந்து நாட்டின் அரசன் ஆனான். சிவனை மறவாது கருவூர் பசுபதீஸ் வரப் பெருமாள் கோவிலில் திரிப்பணிகள் செய்தான். உலகின் உள்ள பல சிவ தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தான். பகுத்தறிவற்ற குரங்கு பறித்தெறிந்து வில்வம் தனது திருமேனியில் விழுந்ததாக, அந்த குரங்கிற்கு பெரும் சிறப்பு தந்த சிவபெருமானை அன்போடு, பக்தியோடு, வில்வ அர்ச்சனை செய்து பூஜித்தால் நாமும் அது போன்ற பலனை பெறலாம்.

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது.

சதுரகிரி மலை

சதுரகிரி மலை !!!

இறைவன் தரிசிப்பதற்கு எளியனாய் தெருமுனைக் கோவிலிலும் அருள்பாலிப்பதுண்டு. சிரமங்கள் பல கடந்துவந்து தரிசனம் செய்யும்படி உயர்ந்த மலைகளில் கோவில்கொண்டு அருள்வதுமுண்டு. அவ்வகையில், எங்கும் நிறைந்துள்ள ஈசன் லிங்க வடிவினனாய் பெருங்கருணை புரியுமிடம் சதுரகிரி.

சுயம்புவாய் வெளிப்பட்ட சுந்தரர்

முன்பொரு காலத்தில் நிகழ்ந்தது இந்த சம்பவம். ஆநிரை மேய்ப்பவர்கள் சதுரகிரி மலைக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவது வழக்கம். அங்கு செழுமையாக வளர்ந்திருக்கும் புற்களை வயிறார உண்ணும் பசுக்கள் படிப்படியாய் பால் கறக்கும். இவ்வாறு மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பிய காராம் பசுக்களில் ஒன்று சற்றும் பால் கறக்கவில்லை. இப்படியே சில தினங்கள் தொடர, பசுவின் சொந்தக்காரருக்கு சந்தேகம் வந்தது. மாடு மேய்ப்பவனை அழைத்து கடிந்துகொண்டார். மேய்ப்பனுக்கும் வருத்தம். தன் பக்கம் தவறில்லாதபோது பேச்சுக் கேட்கும்படியாயிற்றே என்ற கோபம். மறுநாள் காலை முதல் அந்தப் பசுவைக் கண்காணித்தபடியே இருந்தான். நண்பகல் வேளையில் மற்ற பசுக்களிடமிருந்து பிரிந்த அந்தக் காராம்பசு தனியே சென்றது. ஓரிடத்திலிருந்த கல்லின்மீது பாலைப் பொழியத் தொடங்கியது.

இதைக் கண்டு கோபம் கொண்ட பசு மேய்ப்பவன், ஓடிவந்து அதனை அடிக்க கம்பை ஓங்கினான். எதிர்பாராமல் மேய்ப்பவனைக் கண்ட பசு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. பசு விலகியதால் அவனது பிரம்பு, பால் பொழியப்பட்ட கல்லை நோக்கி வந்தது. திடீரென அந்தக் கல் ஒரு பக்கம் சாய்ந்து விலகியது. அப்போதுதான் மேய்ப்பவன் அது வெறும் கல்லல்ல என்பதையும்; சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் என்பதையும் அறிந்து திகைத்து நின்றான். சுந்தரமகாலிங்கர் தன்னை அடிக்கவந்த அந்த மேய்ப்பனுக்கு காட்சிதந்து மறைந்தார். இந்த சம்பவம் மூலம் அந்த மூர்த்தியின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. அன்று சாய்ந்த அதே கோலத்திலேயே இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் சதுரகிரி சுந்தரமகாலிங்கர்.

சதுரகிரியை சித்தர்கள் மலையென்றே கூறலாம். இங்குள்ள மூலிகைகளும், தீர்த்தங்களும் சித்தர்கள் பிரார்த்தனையின் பலனாக வந்தவை என்றொரு ஐதீகம் நிலவுகிறது.

ராம- இராவண யுத்தத்தின்போது, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணன் மூர்ச்சையுற்று சாய, அதைத் தெளிவிக்க அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வான்வழியே பறந்து வந்தான். சதுரகிரி பகுதியை அவன் கடக்கும்போது, இம்மலையிலிருந்த சித்தர்கள் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கு விழவேண்டும் என்று பிரார்த்தித்தனர். அவ்வாறே சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. அதன்காரணமாக இங்குள்ள மூலிகைகளும் தீர்த்தங்களும் கடும்நோயையும் தீர்க்கும் அற்புத சக்தி கொண்டு திகழ்வதாகக் கூறுகின்றனர்.

சதுரகிரியைச் சூழ்ந்து, அதன் துணை மலைகள் என்று சொல்லப்படும் பிரம்மகிரி, சித்தகிரி, ஏமகிரி, உதயகிரி, கயிலாயகிரி, சந்திரகிரி, விஷ்ணுகிரி, கும்பகிரி, மகேந்திரகிரி, சஞ்சீவிகிரி, இந்திரகிரி, சூரியகிரி, குபேரகிரி, சிவகிரி, சத்தகிரி பழனி, மேருகிரி ஆகிய பதினாறு மலைகள் உள்ளன. இவற்றுக்கு நடுவில் அமர்ந்து சுந்தரமகாலிங்கர் அருள் பாலிக்கிறார்.

சதுரகிரி மலைக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. முதல் பாதை உசிலம் பட்டி, பேரையூர், சாப்டூர் வழியாக வாழைத் தோப்பு வரை செல்கிறது. இங்கிருந்து மலைப் பாதையில் ஐந்து கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இரண்டாவது பாதை ஆண்டிப்பட்டி, தேனி, வருசநாடு, கருப்பசாமி கோவில் வழியாக சதுரகிரி மலையடிவாரத்தைச் சென்றடையும். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் நடந்துசென்று சுந்தரமகாலிங்கரை தரிசிக்கலாம்.

மூன்றாவது பாதை டி. கல்லுப்பட்டி, ராஜபாளையம், கிருஷ்ணன்கோவில் வழியாக தாணிப்பாறையை அடைந்து, அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் நடந்துசென்று மகாலிங்கர் சந்நிதியை அடையலாம்.

சுந்தர மகாலிங்கரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே பல்வேறு ஆலயங்களும், சித்தர் வனங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் தாணிப்பாறை விநாயகர் கோவில், சுந்தர மூர்த்தி சுவாமி கோவில், சந்தன மகாலிங்க சுவாமி கோவில், அகத்தியர் வனம்,

இடைக்காடர் வனம், பெரிய மகாலிங்க சுவாமி கோவில், பெரிய கணபதி சுவாமி கோவில், ஊஞ்சல் கருப்பன் சுவாமி கோவில், சப்த கன்னிமார் கோவில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவ்வாலயத்தை பரம்பரையாக பராமரித்து வருபவர்கள் பரதேசி என்னும் அடைமொழியைக் கொண்ட குடும்பத்தினர்.

இவர்கள் சித்தர்களுடனான அறிமுகம் மூலம், சித்த மருத்துவத்தைக் கற்று மலையடிவாரத்திலுள்ள மக்களின் பிணிகளைத் தீர்ப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தினரின் வன பராமரிப்பைப் பாராட்டும் விதமாகவும், அருள்மிகு சுந்தர மகாலிங்கரின் திருப்பணி, பாதுகாப்பு கைங்கர்யங்களுக்காகவும் செப்புப் பட்டா ஓலையாக 63 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இன்றும் அந்தக் குடும்பத்தினரின் சேவை தொடர்கிறது.

பக்தர்கள் கவனத்துக்கு

காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 2.00 மணிக்குள்ளாக மலையேறத் தொடங்குவது நல்லது. ஆரோக்கியமானவர்கள் மூன்று மணி நேரத்திலும், வயதானவர்கள் நான்கு மணி நேரத்திலும் ஆலயம் சென்றடையலாம். நடைபயணத்தின்போது தேவையான உணவை கையோடு எடுத்துச்செல்வது நல்லது. வழியில் ஆங்காங்கே புனித தீர்த்தங்கள் கிடைக்கும்.

சதுரகிரி மலைக்குள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் அங்கு வசிக்கும் உயிரினங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் ஊற்று, சுனை போன்றவற்றை பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொள்ள நேரிடலாம். ஒருவேளை அதுபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல நேரிட்டாலும், அவற்றையும் இதர காகிதப் பொருட்கள், அட்டைகள் போன்றவற்றையும் மலையடி வாரத்தில் கொண்டு வந்து குப்பைத் தொட்டி யில் போடவேண்டும்.

சதுரகிரி மலையிலுள்ள தீர்த்தங்கள் மற்றும் சுனை நீரை பக்தர்கள் மூலிகைத் தீர்த்தமாக வும், இறைவனது பிரசாதமாகவும் பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு, சிகைக்காய், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

அவசர அவசரமாக வந்து திரும்புவதைத் தவிர்த்து, அமைதியும் பக்தியும் நிறைந்த மனதுடன் செல்லவேண்டும். சுந்தர மகாலிங்கரை தரிசித்து, ஓர் இரவு மலைப்பகுதியிலுள்ள மடங்களில் தங்கி இறைவனை தியானித்துச் செல்ல வேண்டும். தன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் பக்தர்களின் பிறவித்தளைகளை அறுக்கவல்லவர் மகாலிங்கர் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்த மலையில் சித்தர்களும் ரிஷிகளும் சூட்சுமமாக உலவுகின்றனர். இங்கு நிறைய நாய்களுண்டு. அந்த நாய்களின் வடிவில்கூட அவர்கள் நமக்குத் துணையாக வருவார்கள். வழிதவறியவர்கள் பலர் நாய்களின் வழிகாட்ட லால் சரியான இடத்தையடைந்த சம்பவங்கள் பலவுள்ளன.

இங்கே அன்னதானக் குழுவினரால் பல இடங்களில் மூன்று வேளை அன்னதானம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

ஆடி அமாவாசைத் திருவிழா, புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை முளைப்பாரி, அம்பு எய்தல் திருவிழா, தை அமாவாசைத் திருவிழா, ஆவணி அமாவாசைத் திருவிழா, மார்கழி முதல் தின புஷ்ப அலங்கார விழா, மாசி மகாசிவராத்திரி விழா, சித்திரை அமாவாசை பதினெண் சித்தர்கள் அலங்கார பூஜை, மாத அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடை பெறும். கடந்த ஆடி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்குவந்து வழிபட்டனர்.

சித்தர்களின் ஆசிர்வாதத்தையும் சிவனின் அருளையும் வேண்டுவோர் வாழ்வில் ஒருமுறையாவது சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

சங்காபிஷேகம் செய்வது எப்படி ?

சங்காபிஷேகம் செய்வது எப்படி ?

சிவாலயங்களில் நடத்தப்படும் சங்காபி ஷேகத்தை உன்னிப்பாக கவனித்தால், அதற்கும் மனித இனத்துக்கும் உள்ள தொடர்பு

தெரியவரும்.

முதலில் 108 சங்குகளையும் 12 ராசி குண்டங்களாகப் பிரிப்பார்கள். 12 ராசி குண்டங்களிலும் தலா 9 சங்குகள் வீதம் 108 சங்குகளை

வைப்பார்கள்.

இதையடுத்து 8 திசைகளிலும் 8 சங்குகளை இடம் பெறச் செய்வார்கள். இந்த சங்குகளுக்கு மத்தியில் பிரதானமாக

வலம்புரி சங்கு ஒன்றையும், இடம்புரி சங்கு ஒன்றையும் வைப்பார்கள்.

அந்த வலம்புரி, இடம்புரி சங்குகளை இறைவன், இறைவியாக பாவித்து பிரதிஷ்டை செய்வார்கள். இவ்வாறு அமைக்கப்படும் 118

சங்குகளும் ‘எல்லாம் ஒருவனே’ என்ற தத்துவப்படி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்றி மலர், தர்ப்பை, மாவிலை வைத்து வேத மந்திரிகள் ஓதி பூஜிப்பார்கள். இந்த மந்திரங்களை தர்ப்பபை

ஈர்த்து சங்குகளில் உள்ள நீரை புனித நீராக மாற்றும். அந்த புனித நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது இறைவன் மனம்

குளிர்ந்து நாம் கேட்டதை எல்லாம் தருவார் என்பது நம்பிக்கை.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும்போது - விதிமுறைகள்

கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும்போது….! கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் !!!


*ஆண்டவனின் சன்னிதானத்தினுள் நுழையும் போது கோயிலின் வாசலிலேயே நம் காலணியுடன் ‘நான்’ என்னும் அகந்தையையும் கழற்றி விட வேண்டும். அமைதியுடன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பேசுவதை அதிலும் அபசகுனமாகப் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

*கோயிலினுள் நுழையும் போதுதான் தான தர்மங்களைச் செய்ய வேண்டும் – திரும்பி வரும் போது செய்யக் கூடாது .

* கோயிலை வலம் வரும் முன்பு நமஸ்காரம் செய்ய வேண்டும். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு கோயிலினுள் செல்லக்கூடாது. ஆண்களாக இருந்தால் தலைப்பாகையைத் தவிர்க்க வேண்டும்.

*நெற்றியில் பொட்டு ஏதும் இடாமல் செல்வதோ, வெறுங்கையுடன் செல்வதோ கூடாது.

*கோயிலில் தரப்படும் பிரசாதத்தை வலது கையினால் வாங்கி அப்படியே கைமாற்றாமல் வலது கையால் உண்ண வேண்டும்.

*சன்னதியில் நின்று ஒருபோதும் கண்ணீர் விடுவதோ அழுவதோ கூடாத ஒன்று. ஆண்டவன் முன்பு நின்று அழுதுதான் கேட்க வேண்டுமென்பது தவறான கருத்து.

*கர்ப்பகிரகத்தில் சுவாமி அலங்காரத்துக்காகத் திரை போட்டிருக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

*கோயில் உள்ளே அமர்ந்து தேவையில்லாமல் விவாதம் செய்வது, மார்பிலோ, தலையிலோ அடித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது.

*கோயிலினுள் பிற மனிதர்களை வணங்குவதும் – வாழ்த்துவதும் கூடாது. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும் கூடாது.

*மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தபடியே கோயிலை வலம் வர வேண்டும். வேறு சிந்தனைகள் கூடாது.

நியாயமான வேண்டுதல்களை ஆண்டவன் முன் வைக்க வேண்டும். நல்ல மனதுடன் ‘அவனை’ தியானம் செய்தால் நிச்சயம் அவன் தேடி வந்து நம்முள் குடிபுகுவான். நல்ல மனம்தானே நாளும் ‘அவன்’ தங்கியிருக்கும் கோயில்!