வளம் தரும் வாஸ்து

வளம் தரும் வாஸ்து !!!


பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப் பார்க்கலாம்:
‪#‎அட்சதை‬
ஒரு சிறு மண் கலயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அகல் அளவினதாக இருக்கலாம். அதில் மஞ்சள் கலந்த சிறிதளவு அரிசியைப் (அட்சதை) போட்டு சமையலறையில் வலது பக்க ஓரமாக வையுங்கள். மறுநாள் சமையலின்போது இந்த அட்சதையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதால் நம் முன்னோர் மற்றும் தெய்வங்களின் ஆசியுடன் சமையலறை பிரச்னைகளை எளிதாகக் கையாளும் திறன் கைவரப் பெறும். பூச்சிகள் தொந்தரவும் குறையும். சமையல் பொருள்கள் குறைவின்றி கிடைக்கும்.
சேதாரமும் ஆகாது. அதே மண்கலயத்தை சுத்தம் செய்துவிட்டு மறுநாள், அதற்கடுத்த நாள் என்று தொடர்ந்து அதில் அட்சதையைப் போட்டு வரலாம். அதோடு வீட்டிற்கு யாராவது உறவினர், நண்பர் என்று வந்தால் எடுத்து வைத்திருக்கும் அட்சதையிலிருந்து சிறிதளவு அவர்களுக்குக் கொடுத்து, இந்த பென்சூயி உத்தியையும் சொல்லிக்கொடுத்தால் உறவும், நட்பும் பலப்படும்.
‘இன்றைக்கும் திருமலை தேவஸ்தானத்தில் மடப்பள்ளியில் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அங்கே தாயாரை ஆவாஹனம் செய்த அட்சதையை ஒரு மண் பாண்டத்தில் வைத்துத் தாயாருக்கு முதலில் படைக்கிறார்கள். அடுத்த நாள் மடப்பள்ளி நிவேதனப் பொருட்களைத் தயாரிக்குமுன் இந்த அட்சதையை மூலப் பொருட்களுடன் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்’ என்று கேள்விப்படுகிறோம்.
அதேபோல பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர் பார்வை படும்வகையாக சுமார் 3 அடி உயரமுள்ள மண் பானைகளில் சிவப்பு அன்னத்தை நிரப்பி மூலைகளில் வைக்கிறார்கள். பிறகு இந்த அன்னத்தை பிரசாதங்களுடன் கலந்து பக்தர்களுக்கு நிவேதனப் பொருளாக வழங்குகிறார்கள். தினமும் இப்படி பானைகளில் அன்னத்தை வைப்பது அங்கே வழக்கம்.
வாரணாசியில் அன்னபூரணி கோயிலில் சிவப்பு வண்ண அட்சதையை ஒரு மண் பாத்திரத்தில் இட்டு தேவியின் பார்வை படும்படி வைப்பார்கள். மறுநாள் இந்த அரிசியை மூலப் பொருட்களுடன் கலந்து லட்டு முதலான பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
‪#‎வீட்டு‬ மரங்களில் காசு
நம் வீட்டில் உள்ள மரம் அல்லது செடியில் 3 சிறிய காசுகளை சிவப்பு கலர் நாடாவில் கட்ட வேண்டும். இது நம் கண்களில் படும்வகையில் மாட்டி வைக்கப்பட வேண்டும்.இதனால் காசு, 3 என்ற எண்ணிக்கை, சிவப்பு கயிறு, மரம் ஆகிய அனைத்தும் சேர்ந்து நம் செல்வாக்கை உயர்த்தும். இதை திருஷ்டிக்கான பரிகாரமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
‪#‎கணினி‬ மேம்பாடு
எட்டு என்ற எண் பொருளாதார வெற்றியும், நிலைத்த செல்வம் ஆகியவற்றை குறிக்கிறது.எட்டு ‘‘ச்சீ” சக்தியுடைய வட்ட வடிவ காசுகளை கட்ட வேண்டும். இதை சிவப்பு நாடாவை கொண்டு கட்டி, கணினி உள்ள இடம், மேஜை அல்லது பணிபுரியும் இடங்களில் கண்ணுக்கு தெரியும் வகையில் இடம் பெற செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் ஆற்றும் பணி சிறப்பாகவும், நிலைத்த செல்வத்தை அளிக்க கூடியதாகவும் இருக்கும். கணினியை வெகு சிறப்பாகக் கையாண்டு ொருளாதார வெற்றிகளைக் குவிக்க முடியும். அடிக்கடி பழுதாகக்கூடிய கணினிகளை மேம்படுத்தவும், பழுதுகள் குறைவாக ஏற்படவும் இது பரிகாரமாக அமைகிறது.மேலும் பணிபுரிபவர்களின் ஒருங்கிணைப்பு, கடின உழைப்பிற்கான மனோபாவத்தை வளர்த்தல் மற்றும் நிறுவன மேம்பாட்டிற்கு இந்தப் பரிகாரம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
‪#‎தங்கப்‬ பதக்கம்
பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு மிக்க மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் அளித்து கௌரவிப்பதை கண்டிருக்கிறோம். விளையாட்டில் முதன்மை பெறுவோருக்கும், இதர சிறப்பு பணியாற்றல் கொண்டவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றன. இது அந்தந்த தகுதி உள்ளவர்களை மேலும் உற்சாகப்படுத்தி திறமையை வளர்க்கிறது.
ஆனால், இப்படி தங்கப் பதக்கம் எதையும் நாம் பெறவில்லை என்றாலும், நம் அலுவலக அறையில் பின்பக்க சுவரில் உயரத்தில் தங்கப் பதக்கம் போன்ற பரிசுப் பொருளை மாட்டி அலங்கரிக்கலாம்.இதனால் நாம் ஊக்கம் பெறுவதோடு, நம்முடன் பணிபுரியும் பணியாளர்களையும் ஊக்குவித்து துடிப்பு மிக்கவர்களாகவும் ஆக்கி நிறுவனத்தை மேலோங்க செய்ய முடியும்.
‪#‎வளரும்‬ செடி
தாவரம், வளர்ச்சியை குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. புதிய, ஆரோக்கியமான வாழ்க்கையையும் இது காட்டுகிறது.பணிபுரியும் இடம், காசாளர் இடம், வரவேற்பு அறை, முக்கியஸ்தர்கள் கூடும் அறை ஆகிய இடங்களில் வளரும் சிறு செடிகள், போன்சாய், மூங்கில் செடி போன்றவற்றை தொட்டிகளில் பராமரிக்கும்போது அவ்விடம் ‘ச்சீ’ சக்தியால் நிரம்பியிருக்கும்; நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
தங்கம், வெள்ளி அல்லது தாமிர நிறம் கொண்ட வட்டவடிவமான இலைகளை உடைய தாவரமாக இருப்பின் அது கூடுதல் சிறப்பாக அமையும். தற்போது ஹோட்டல்கள், விடுதிகள் போன்ற இடங்களில் மேஜை மீது தாவரத் தொட்டிகளைக் காணமுடிகிறது.
நம் கோயில்களில் புராதனமாக ‘‘ஸ்தல விருட்சம்” என்ற பெயரில் தாவரத்தை வளர்த்துப் பராமரித்து வருகின்றனர். இது கோயிலுக்கு வரும் பக்தர்களின் விருப்பங்களை ஈடேற்ற வல்லது; அவர்கள் மனதில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கவல்லது. துளசி செடி, வில்வம், வன்னி மரம், அரசமரம் போன்றவற்றை நாம் வலம் வருவதும் அந்த தாவரங்களில் ஆசியை நாம் பெறத்தான்.
‪#‎பண‬ விரயத்தை தடுக்க வழி
பணம், நம் கைக்கு வந்த வேகத்திலேயே விரயமாகி விடும் சூழ்நிலை பலருக்கு வருவதை கண்கூடாக காண்கின்றோம். பட்ஜெட் எப்படி போட்டாலும் துண்டு விழுகிறதே என ஆதங்கப்படுபவர்கள் எளிய வழி ஒன்றை கடைபிடிக்கலாம்.
செராமிக் (அ) சீன களிமண்ணால் செய்யப்பட்ட தொட்டியில் சிவப்பு வண்ண பூக்களை உடைய செடிகளை பராமரித்து வந்தால் பணம் நீராய் கரைவது குறைந்து சேமிக்கும் பக்குவம் கிடைக்கும். பணப்பிரச்னைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். மேலும் கண்ணாடி ஒன்றை வைத்து பூச்செடியை அதில் பிரதிபலிக்கச் செய்யும்போது போனசாக பணம் சேரும் வழியாக அது அமையும்.
இதோடு, தொட்டியில் 3 காசுகளை ஒட்டிவைத்தோமானால் மேலும் பல கூடுதல் பலன்களைப் பெற முடியும்.சமையலறையில் தொடர்ந்து வெளிச்சம்இருட்டு உள்ள இடம் தீய சக்திகளை வரவழைக்கும். அதே நேரத்தில் ஒளி மிகுந்த இடம் ‘‘ச்சீ” என்ற நல் சக்தியை வரவேற்கும். இப்படி தொடர்ந்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை சமையலறையில் நிறுவ வேண்டும்.அதாவது, சமையலறையில் பணியாற்றும் போது நல்ல வெளிச்சத்துடன் கூடிய விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
சமையலறை வேலை முடிந்து வெளியே வரும்போது, குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகளை எரிய விடலாம். இதனால் ‘‘ச்சீ” சக்தி எந்நேரமும் சமையலறையில் இருக்கும்; அதனால் நிறைவாக சக்தி கொண்டதாக சமையல் அறை மாறும். மேலும் பூச்சிகள் தொந்தரவும் குறையும்.
எனவே சமையலறையில் மட்டுமாவது இவ்விதம் விளக்குகளை பராமரிப்பது விருந்தோம்பலை வளர்ப்பதுடன், சக்தி நிறைந்த உணவை சமைக்கவும் அதனால் குடும்பத்தார் ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்புகள் உள்ளன.
மாணவர்கள் கவனத்திற்குமாணவர்கள் வடக்கு/கிழக்கு நோக்கி அமரும் வகையில், தெற்கு/மேற்கு சுவரை ஒட்டி மேஜையை அமைக்க வேண்டும்.வடக்கு/கிழக்கு சுவரில் (பார்க்கும் வகையில்) சிவப்பு நிற பூக்கள் கொண்ட படங்களை கொண்டு அலங்கரிக்கலாம்.
மேஜை, நாற்காலிக்கு கீழே சிவப்பு வண்ணத்துடன் கூடிய கலை வேலைப்பாடு மிகுந்த மேட் எனப்படும் தரை விரிப்பை உபயோகிக்கவும்.வலது பக்கத்தில் பேனாவை வைக்கவும். எந்நேரமும் இலை, பூக்கள் மிதக்கும் வெள்ளை நிற ஜாடியை வடகிழக்கு மூலையில் வைக்கவும்.இப்படி செய்வதால் முதன்மையான மதிப்பெண்கள் பெறுவதுடன், பாராட்டுகளும் தாமாகவே வந்து சேரும்.