என்ன தானம் செய்தால் என்ன பலன்..?

என்ன தானம் செய்தால் என்ன பலன்..?

உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

என்ன தானம் செய்தால் என்ன பலன்
ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஆடைகள் தானம் :

ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் தானம் :

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று
(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் தானம் :

பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.

தீப தானம் :

இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி தானம் :

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி-பருத்தி தானம் :

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்ப ருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.

ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை

ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை..!!!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.
ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை
ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.
திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
===============================================================
ஆடி மாதமும் பெண்களும் !
தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு.
ஆடி மாதமும் பெண்களும்
தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும்.
இந்த நாட்களில் பெண்கள் உரிய முறைப்படி பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால் அம்மனின் முழுமையான அருளைப் பெற முடியும். குடும்பத்துக்கு அச்சாணியாகத் திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும்.
இத்தகைய சிறப்புடைய ஆடி மாதம் நாளை (சனிக்கிழமை) பிறக்கிறது. நாளை முதல் ஊர் தோறும் “மாரியம்மா.... எங்கள் மாரியம்மா....” போன்ற பக்திப் பாடல்கள் எதிரொலிப்பதை கேட்க முடியும்.
ஆடி மாதத்தில் பெண்கள் என்னென்ன நாட்களில் வரும் விழாக்களில் பங்கெடுத்து கொண்டால் எத்தகைய நன்மைகளை பெற முடியும் என்பதை தெரிந்து வழிபாடு செய்வது வளர்ச்சியை தரும். படித்து அம்மனை வணங்கி ஆடி மாதத்தின் வழிபாட்டு பலன்களை பெற வாழ்த்துகிறோம்.

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் !!!

ஆலயங்களுக்கு சென்று வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 5-7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

7. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

8. போகும்போதோ வரும்போதோ குலதெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

9. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

10. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

11. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

12. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

13. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

14. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

15. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

16. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

17. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

18. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

19. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

ஆடி மாதம் விசேஷ தினங்கள் !!!

ஆடி மாதம் விசேஷ தினங்கள் !!!

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த விசேஷ தினங்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஆடி மாதம் விசேஷ தினங்கள் - 2016
ஆடி-1 (ஜூலை 16-ந்தேதி) - தட்ஷணாய புண்ணிய காலம்.
ஆடி-2 (ஜூலை 17ந்தேதி) - பவுர்ணமி விரதம்
ஆடி-3 (ஜூலை 18ந்தேதி)- திருவண்ணாமலை கிரிவலம்

ஆடி-4 (ஜூலை 19ந்தேதி) - சிரவண விரதம்
ஆடி-6 (ஜூலை 21ந்தேதி) - சங்கடஹர சதுர்த்தி
ஆடி-10 (ஜூலை 25ந்தேதி) - காளாஷ்டமி

ஆடி-12 (ஜூலை 27ந்தேதி) - ஆடிக் கிருத்திகை
ஆடி-13 (ஜூலை 28ந்தேதி) - சர்வ ஏகாதசி
ஆடி-15 (ஜூலை 30ந்தேதி) - பிரதோஷம்
ஆடி-16 (ஜூலை 31ந்தேதி) - போதாயண அமாவாசை

ஆடி-17 (ஆகஸ்டு 1-ந்தேதி) - ஆடி அமாவாசை
ஆடி-18 (ஆகஸ்டு 2ந்தேதி)- ஆடிப்பெருக்கு
ஆடி-20 (ஆகஸ்டு 4ந்தேதி) - ஆடிப்பூரம்

ஆடி-22 (ஆகஸ்டு 6ந்தேதி) - நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்.
ஆடி-23 (ஆகஸ்டு 7ந்தேதி) - சஷ்டி விரதம்
ஆடி-25 (ஆகஸ்டு 9ந்தேதி) - துர்காஷ்டமி

ஆடி-28 (ஆகஸ்டு 12ந்தேதி) - சர்வ ஏகாதசி
ஆடி-31 (ஆகஸ்டு 15ந்தேதி) - வரலட்சுமி விரதம், சிரவண விரதம்
ஆடி-32 (ஆகஸ்டு 16ந்தேதி) - ஆவணி அவிட்டம் ருக், யஜூர் உபகர்மா.

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம் !

கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்
திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும். மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்யவும்.

பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும்.

சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும்.

இத்தகையோர் வியாழக்கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் சொல்லி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும். 

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும்

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் !

உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .

பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் .

திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக "சிவாய நமஹ" என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் .

திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது.

திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் :

ஞாயிறுக்கிழமே - சிவபதம்
திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும்
செவ்வாய்கிழமை - கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில்
இருந்து விடுதலை கிட்டும்

புதன் - கலைகளில் தேர்ச்சி
வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்
வெள்ளிக்கிழமை - விஷ்ணுபதம் கிட்டும்
சனிக்கிழமை - நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் .

தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் .
மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்..!!!


கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக… இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் .....!!!

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஸ்ரீ சக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஸ்ரீ சக்கரம் என்றே தெரியும். UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்

கொடி மர தத்துவம்.!

கொடி மர தத்துவம்.!

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.
கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.
அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.
கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.
ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?
அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
எப்படி தெரியுமா?
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.
அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?


மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள். சாதாரண அரசர்களே தங்களைச் சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் போது, சர்வலோக நாயகியான மீனாட்சி, மூவுலகங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்ததில் வியப்பேதும் இல்லையே! அவள் என்ன சாதாரண ராஜாக்களைப் போல் நாடுபிடித்து, தான் சம்பாதிக்கவா போருக்கு சென்றாள்? உலக உயிர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம்
அவர்களின் ஆணவத்தை அடக்கி நெறிப்படுத்தவே திக்விஜயம் சென்றாள். இந்த உலகம் தன்னுடையது என்பது போல் ஆட்டம் போடும் ஆணவக்காரர்களின் கொட்டத்தையும் அடக்க சென்றாள்.

மீனாட்சியம்மை பிறந்தபோது அவளுக்கு மூன்று மார்புகள் இருந்தன. பெற்றவர்கள் வருத்தம் அடைந்தனர். இயல்புக்கு மாறாக பிறந்துள்ள இவளை யார் திருமணம் செய்வார்கள் என்று யோசித்தார்கள். ஆனால் அம்பிகையோ காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டாள். சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன்
நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.

உலகின் முதல் இன்ஜினியர்:

ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் அவை எப்படி அமைய வேண்டுமென இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாவதற்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் யார் தெரியுமா?

சொக்கநாதரே தான்! அவரே உலகின் முதல் இன்ஜினியர். குலசேகர பாண்டிய மன்னன், சொக்கநாதர் கோவிலைச் சுற்றி நகரம் அமைக்க எண்ணியபோது, எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. குழம்பிய மன்னன் தீர்வு வேண்டி சொக்கநாதரை வேண்டினான். அப்போது சித்தர் வடிவில் மன்னரிடம் வந்த சொக்கநாதர், கோவிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகர் அமைக்கும்படி கூறினார். இவ்வாறு மதுரை நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்று வரைபடம் போட்ட சொக்கநாதர் நம் வாழ்க்கைப் பாதைக்கும் வரைபடம் போட்டுத் தருவார் என்பதில் சந்தேகமில்லை.

கிளி ரகசியம்:

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு
கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது

சாப்பிடவும் சாஸ்திரம் இருக்குது!

சாப்பிடவும் சாஸ்திரம் இருக்குது!

சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தர்மசாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்ப்பது கூடாது.
* தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.
* கருக்கல் வேளையிலும் (மாலை 6.00-7.00 மணி) நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும். பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.
* இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

குபேரர் பற்றிய குறிப்பு!

குபேரர் பற்றிய குறிப்பு!



* சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம்.
* குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியைத் தாங்கியிருக்கிறார்.
* புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்றவற்றை குபேர ஹோமத்தின் போது இடுவர். புதனே கல்விக்குரிய கிரகம். குபேரரை வணங்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைக்கலாம். குபேரரின் அருளால் தொழிலில் லாபம், செல்வம் பெருகும்.

வில்வம், துளசி சிறப்பு

வில்வம், துளசி சிறப்பு...!

சிவபெருமானுக்கு வில்வ மாலையே மிகவும் உகந்தது. இதை அவர் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு.
மனிதன் நிமிர்ந்து நிற்கக்காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மைஉடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம்” என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள் (சூரியன் போன்ற பெரிய கிரகங்களின் சக்தி), 11 ருத்திரர்கள்(சிவாம்ச சக்தி), 8 வசுக்கள் (பீஷ்மருக்கு முன்னதாக பிறந்த கங்கா புத்திரர்கள்), 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக ஐதீகம். துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது.

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம் சொல்லுங்க!

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம் சொல்லுங்க!


தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த 'பலி மந்திரம்' சொல்வது சிறப்பு.

பெருமாள் பக்தர்கள்,
“பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!”
என்று சொல்லி சோறு இட வேண்டும்.
இதை சொல்ல முடியாதவர்கள் 'மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனர் முதலிய விஷ்ணு பக்தர்கள் இந்த விஷ்ணு பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்' என்று சொல்லி வழிபடலாம்.

சிவ பக்தர்கள்,
“பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா”
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 'பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி முனிவர் முதலிய சிவனடியார்கள் இங்கு வைத்திருக்கும் சிவ பிரசாதத்தை அன்புடன் ஏற்க வேண்டும்' என்பது இதன் பொருள்.

இரண்டையும் சேர்த்தும் சொல்லலாம்

விபூதி இடும் முறை!

விபூதி இடும் முறை!

சிவபெருமானுக்குரிய மங்கலச் சின்னங்களில் விபூதி பிரதான இடம் பெற்றுள்ளது. விபூதியை நெற்றியில் இடுவதற்கு சில முறைகள் உள்ளன. விபூதி இடும்போது, சிவ மந்திரங்களான 'நமசிவாய', 'சிவசிவ' என்றோ, 'சரவணபவ' என்றோ சொல்ல வேண்டும்.

வலக்கையின் பெருவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் இணைத்து விபூதியை எடுக்க வேண்டும். இதை ரிஷப முத்திரை என்பர். எடுத்த விபூதியை ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிர விரல்
மூன்றிலும் தோய்த்து மூன்று பட்டையாக இட வேண்டும். ஆட்காட்டி விரலால் மட்டும் விபூதி, குங்குமம் இடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்னும் சைவப் பெருந்தகை இந்த தகவலை சொல்லியுள்ளார்

சொர்க்கம் - நான்கு வகை இருக்கிறது

சொர்க்கம் - நான்கு வகை இருக்கிறது


சொர்க்கத்திலும் இத்தனையா?

சொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால், அங்கும் நான்கு வகை இருக்கிறது. சொர்க்கத்தின் வாசலில் நுழைவதை 'ஸாலோக்ய மோட்சம்' என்பர். பின்னர் தெய்வம் குடியிருக்கும் வீட்டுக்குள் சென்று தெய்வத்தின் அருகில் போய் நிற்பது 'ஸாமீப்ய மோட்சம். இதையடுத்து அத்தெய்வத்தை கண்கொட்டாமல் பார்த்து அப்படியே உருகி, அந்த உருவமாகவே மாறிவிடுவது 'ஸாரூப்ய மோட்சம்'. அந்த தெய்வத்துடன் ஒன்றி அதனுடன் கலந்து விடுவது 'ஸாயுஜ்ய மோட்சம்'. இவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமானால், இங்கே கொஞ்சமாவது புண்ணியம் செய்ய வேண்டும். நல்லதை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும்.

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

பெருமாள் கோவில் தரிசனத்தின் போது பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், சடாரி வழங்கப்படும். இதில் தீர்த்தம் உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரிய காரணத்தை 'த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்யதி' என்று 'ஸ்மிருதி வாக்யம்' விவரிக்கிறது.

'எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி தூய்மை பெற வேண்டும்' என்பது இதன் பொருள்.

வைதீக முறைப்படி வீட்டிலோ, கோவிலிலோ கலசம் (குடம்) வைத்து பூஜித்து வழங்கப்படும் தீர்த்தத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

சுவாமிகளை வணங்கும் திசை!

சுவாமிகளை வணங்கும் திசை!

பூஜையறையில் சுவாமி விக்ரஹம் அல்லது படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். சுவாமி கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது
சாஸ்திரம்.

பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. அதாவது பராசக்தி மற்றும் மகாலட்சுமி படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்தும் வழிபாடு செய்யலாம். அவ்வாறு அமரும் போது அம்மன் படங்களின் முன் நேருக்கு நேராகவும் அமரலாம்.

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம் ?

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம் ?

கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

விநாயகரை ஒரு முறையும். சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

மணியடிக்க ஒரு மந்திரம் !

மணியடிக்க ஒரு மந்திரம் !

கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம். அப்போது,

“ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்
குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”

என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும்.

பெருமாளுக்குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில்
நந்தியும் இடம் பெற்றிருக்கும். 

யார் இந்த வாஸ்து புருஷன்?

யார் இந்த வாஸ்து புருஷன்?

வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.
மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
=======
வாஸ்து நாளில் பரிகார யாகம் !!!
கோவில்களில் சுவாமிக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்களை நைவேத்யம் செய்வது வழக்கம்.
ஆனால் திருச்சி மார்க்கெட் பஸ்ஸ்டாப் அருகிலுள்ள பூமிநாதசுவாமி கோவிலில் சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்கின்றனர். இந்தக் கோவில் வாஸ்து தோஷ பரிகாரத்தலமாகத் திகழ்கிறது.
வாஸ்து நாளன்று இங்கு யாகபூஜை நடக்கும். அன்று காலையில் சிவன் சன்னிதி முன், ஆறு கலசங்களுடன் அக்னி குண்டம் வளர்க்கப்படும். யாகபூஜை முடிந்ததும் கலச தீர்த்தத்தை சுவாமிக்கு மகாபிஷேகம் செய்வர்

கோவில் மூலஸ்தானத்தில் ஆமை !

கோவில் மூலஸ்தானத்தில் ஆமை !

முதல் யுகமான கிருதயுகத்தில் வாழ்ந்த ஸ்வேத சக்கரவர்த்தி, மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் முன் தோன்றிய நாரதர், மகாவிஷ்ணுவை கூர்ம (ஆமை) அவதார மந்திரம் சொல்லி வழிபடும்படி கூறினார். மன்னனும் அப்படியே செய்ய, சுவாமி கூர்ம அவதார கோலத்தில் காட்சி தந்தார்.

மகிழ்ந்த மன்னன் தான் பார்த்த ஆமை வடிவத்தை சிலையாக்கி கோவில் எழுப்பினான்.

இந்தத்தலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கூர்மம் என்ற ஊரில் உள்ளது. மூலஸ்தானத்தில் பெருமாள் ஆமை வடிவில் காட்சி தருகிறார். இதற்கு மஞ்சள் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். ஆமையின் முன்புறம் நாமமும், பின்பகுதியில் சுதர்சன சக்கரமும் உள்ளது.

கோவில் அருகில் ஸ்வேத புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் வளரும் ஆமையை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.

மந்திர மயில்

ரகசியம்.... இது ரகசியம் !


ஓம் என்னும் மந்திரத்தின் வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த மயிலுக்கு 'மந்திர மயில்' என்று பெயர்.

மயில் மீது முருகனை தரிசிப்பதை 'குக ரகசியம்' என்றும் 'தகராலய ரகசியம்' என்றும் ஞானிகள் குறிப்பிடுவர். பாம்பன் சுவாமிகள், மயில் மேல் முருகன் எழுந்தருள வேண்டும் என்ற விதத்தில் பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த பாடல்களைப் பக்தியுடன் படிப்போருக்கு முருகனை தரிக்கும் பாக்கியம் உண்டாகும் என்று சுவாமிகளே குறிப்பும் எழுதியுள்ளார். 'ஸ்ரீமத் குமாரசுவாமியம்' என்னும் நூலில் 'பகை கடிதல்' என்னும் தலைப்பில் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

மரத்தை சுத்தினா மார்க் கிடைக்கும்!

மரத்தை சுத்தினா மார்க் கிடைக்கும்!

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடராக இருந்தார். தன் குருநாதர் நம்மாழ்வாரைப் பாடி பரம்பொருளை அடைந்தார்.

இவர் அயோத்தியில் இருந்தபோது, தெற்கு திசையில் ஒரு ஜோதி இருப்பதைக் கண்டார். அந்த ஒளியைப் பார்த்து தெற்கு நடந்து சென்றார். தாமிரபரணிக் கரையோரம் வரை அந்த ஒளி அவரை ஈர்த்து வந்தது.

அப்பகுதி அக்காலத்தில் "குருகூர்' எனப்பட்டது. தற்போது ஆழ்வார்திருநகரி எனப்படுகிறது. இவ்வூர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் உள்ளது. அங்கே ஒரு புளியமரப்பொந்தில் தவம் செய்து கொண்டிருந்தவரிடம் அந்த ஒளி கலந்துநின்றது. அவரே, ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார்.

"இவரது உடம்பில் எழுந்த பிரகாசமா அயோத்தி வரை தெரிந்தது!' என்று மதுரகவியாழ்வார் ஆச்சரியப்பட்டு நின்றார். கண்ணை மூடி அமர்ந்திருந்த அவரை எழுப்புவதற்காக கல்லை தூக்கி எறிந்தார். அவர் கண் திறந்து பார்த்தார். அவரே தன் குருநாதர் என்று முடிவுகட்டி சரணாகதி அடைந்தார். பதினோரு பாடல்களால் அவரைத் துதித்தார். பரம் பொருளைப் பாடாமல் பக்தரான நம்மாழ்வாரைப் பின்பற்றியே பரமபதம் அடைந்தார் மதுரகவியாழ்வார்.

இங்கு நம்மாழ்வாருக்கு கோயில் அமைந்துள்ளது. அவர் தவம் செய்த புளியமரமும் கூட புளியாழ்வார் என்றொரு ஆழ்வாராகி விட்டது. இம்மரத்தை சுற்றிவந்து வழிபட்டால் நல்ல மார்க் பெறமுடியும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் வழிபடுகிறார்கள்.

காசியை ஒளிப் பிழம்பு என்பார்கள்

காசி....!

காசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர்.

இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள்.

இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர்.

இதை எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து வந்த சிலரும், சில ருஷிய விஞ்ஞானிகளும் ‘கிர்லியன் ஃபோடோகிரஃபி’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக காசியைப் படம் பிடித்தார்கள்.

அந்தப் படங்களில், விண்வெளியில் இருந்து காசிக்கு பல அணுத்துகள்கள் வருவதாகத் தெரிகிறது. இதை வெளிச்சத்தின் தூறல்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இதுவே நம் அனுபவத்தில், நாம் உணர்ந்து அறிந்த உண்மை. காசி என்பது 168 மைல் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைத்தற்கே அரிய சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சக்திநிலை. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை.

சிவன் வடிவமைத்த காசியின் வடிவியல்
168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்கள்

காசி நகரின் வெளி வட்டம், ‘சௌராசிக்ரோஷி யாத்ரா’ 168 மைல் சுற்றளவு, 144 சக்திமையங்கள் இந்த வெளிவட்டத்துள் இன்னும் 4 சிறிய வட்டங்களாக, ‘பஞ்சக்ரோஷி யாத்ரா’ 55 மைல் சுற்றளவு, 108 சக்தி மையங்கள் ‘நகரப் பிரதிக்ஷனா’, 16 மைல் சுற்றளவு, 72 சக்தி மையங்கள் ‘அவிமுக்த’, நகரைச் சுற்றி 4 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் ‘அந்த்த க்ருஹ’ காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி 7 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் என ஐந்து வட்டங்களில் 468 சக்தி மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த ஒவ்வொரு வட்டத்திலும், வெவ்வேறு அளவிலான சக்தி தீவிரம் இருக்கும். உள்ளே செல்லச் செல்ல, சக்தியின் தீவிரம் அதிகரிக்கும். இது உடலின் பஞ்சகோஷ அமைப்பை குறிப்பதாகவும் இருக்கிறது.

காசி விஸ்வநாதர் கோவிலும் இதே அமைப்பில் ஆனால் சிறிய அளவில் அமைக்கப்பட்டது. அது மிக மிக நுணுக்கமாக, பலவற்றைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் இது தகர்க்கப்பட்டு, இன்று அவ்விடத்தில் மசூதி அமைந்து, இன்றைய கோவில் ஒரு ஓரமாக சின்ன இடத்தில் நிற்கிறது. நம் உடலில் மொத்தம் 72000 நாடிகள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். கோவிலும் சரி, நகரமும் சரி இதை ஒத்தே இருந்தன.

ஏன் 5: பஞ்சபூதங்கள் 5 என்பதாலும், சிவன் பூதேஷ்வரா என்பதாலும், இந்நகரை 5 இன் அடிப்படையில் அமைத்தார்கள்.

ஏன் 468: நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468 சக்தி ஸ்தலங்கள். பஞ்ச பூதங்களில் ஆகாஷைத் தவிர்த்ததற்குக் காரணம், நம் உடலின் அமைப்பில், நீர் 72%, நிலம் 12%, காற்று 6%, நெருப்பு (உடல் சூடு) 4%, ஆகாஷ 6%. இதில் மற்ற நான்கையும் நாம் சரியான வழியில் பார்த்துக் கொண்டால் போதும். ஆகாஷ பற்றி நாம் ஏதும் செய்வதிற்கில்லை.

ஏன் 108: நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் அமைக்கப்பட்டன.

இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.

இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் காசியை உருவாக்கினார்கள்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப் பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.

இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்!

ஏன் காசி: இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர். இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம்.

இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்!

இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது.

ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது.

யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார்.

துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே. ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.

இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள். காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது.

இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல. இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே!

சிவனின் ஏக்கம்: காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது?

இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது. சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம்.

ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே! அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு. இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது.

ஸ்ரீ வராஹி

ஸ்ரீ வராஹி !!!

அம்ருத மதன காலத்தில் அம்ருதம் திரண்டு வருவதற்கு முந்தி தேவாஸுரர்களை ஜ்வாலையால் பொசுக்கி விடுகிற மாதிரி காலகூடவிஷம் வந்தது. அம்ருதம் எடுத்து சாப்பிடுவதற்கு ஈச்வரனைக் கூப்பிடாத தேவர்கள் ப்ராணாபத்து வந்த போது அபயம் என்று ஓடினார்கள். அவனும் “இப்பத் தான் வழி தெரிஞ்சதோ?” என்று கேட்காமல் பரம காருண்யமாக அந்த கால கூடத்தை அப்படியே உருட்டி சாப்பிட்டு விட்டான்.
“தாலி பாக்யம், தாலி பாக்யம்” என்கிறோமே – பெரிய ஆக்ஸிடண்ட், வைத்யமே கிடையாது என்று இருக்கிற ஒரு மஹாரோகம் ஆகியவற்றிலும் ஒருத்தன் தப்பிப் பிழைத்தால், அது அவன் பெண்டாட்டியுடைய தாலிபாக்யத்தால் தான் என்கிறோமே – அப்படி அம்பாளுடைய தாலி பாக்யத்தால் தான் ஸ்வாமி மகாப்ரளயத்திலாகட்டும், கால கூட பானத்தின் போதாகட்டும் தப்பித்தது. அந்த தாலி பாக்யத்தைத் தான் அம்பாளுடைய “தாடங்க மஹிமா” என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார்.
வேதம் ச்ருதி என்றால், ரிஷிகள் பண்ணிய தர்ம சாஸ்த்ரங்களும், கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த கீதையும் ஸ்ம்ருதி என்பார்கள்.ஆசார்யாள் வாக்கையும் ஸ்ம்ருதியோடு சேர்க்கலாம். ஸ்வாமிக்கு ‘அம்பாள் மருந்து’ என்ற ச்ருதி வாக்கைத்தான் ஆசார்யாள் இங்கே ஸ்ம்ருதி வாக்காகக் கொடுத்திருக்கிறார். அப்படியே காப்பியடித்தால் அழகில்லை என்பதால், ஸ்வாமியின் உயிரை ரஷிப்பது அம்பாள் என்றே திருப்பிச் சொல்லாமல், (அவ்வாறு ரஷிப்பது) அவளுடைய ஸெளமாங்கல்யச் சின்னமான தாடங்கம் என்று நூதன நயம் சேர்த்து சொல்லியிருக்கிறார் ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார்.வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலி தான். இதிலென்ன புதிர் போடுகிறேனே என்றால் நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாசன் சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன். “தாலீ பலாச தாடங்காம்” (ச்யாமளா, நவரத்ன மாலிகை – ச்லோகம் 6) என்பது காளிதாசன் வாக்கு, தாலம், தாலீ என்றால் பனை. பலாசம் என்றால் புரசு என்ற ஒரு அர்த்தம். ‘பலாச’ ம்தான் திரிந்து ‘புரசு’ ஆயிற்று என்று தோன்றுகிறது. இன்னொரு அர்த்தம், எந்த இலைக்குமே ‘பலாசம்’ என்று பெயர். ‘தாலீ பலாசம்’ என்றால், பனையோலை என்று அர்த்தம். ஆதி காலத்தில் ஜனங்கள் படாடோபமில்லாமல் எளிமையாயிருந்தபோது ஸ்த்ரீகளுடைய பரம ஸெளமாங்கல்ய ஆபரணங்களான மங்கள ஸுத்ரப் பதக்கம், காதுத் தோடு இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால் மங்கள ஸுத்ரப் பதக்கமாயிருந்த ஓலை நறுக்குக்கே தாலி என்று பேர் வந்துவிட்டது. காதிலும் அந்த ஓலையைச் சுருட்டித்தான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன் அநேக குடியான ஸ்திரீகள் அப்படிப் போட்டுக்கொண்டு பிற்கால ஜம்ப வழக்கங்கள் வராத ஆதி நாளில் ப்ராஹ்மண ஸ்த்ரீகள் உள்பட காளிதாஸன் வாக்குப்படி ஸாஷாத் பராசக்தி உள்பட – எல்லோரும் ஓலைத் தோடுதான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால்தான் பிற்காலத்தில் ஏகச் செலவில் வைரத்தோடு போட்டுக் கொண்டபோதுகூட அதை ‘வைர ஓலை’ என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
‘கம்மல்’ என்றும் தோட்டைச் சொல்வது. ‘கமலம்’ ‘கமல்’ என்பதுதான் அப்படி ஆனது. நடுவே ஒரு கல், சுற்றிலும் ஆறு என்று, நடுவே கர்ணிகையும் சுற்றி இதழுமாக ஒரு தாமரை இருக்கின்றாற்போலத் தோடு கட்டியதால் ‘கமலம்’ என்று பேர் வைத்துக் ‘கம்மல்’ ஆயிற்று. அப்படிக் கட்டடப்படுகிற வைரக் கல்லுக்கும் அதனாலேயே ‘கமலம்’ என்ற பெயர் வந்தது. “நல்ல உடானி கமலம்” என்று உசந்த வைரத்தைச் சொல்வார்கள்…இத்தனை ஜம்பம், டம்பம், டாம்பீகம் வந்துவிட்ட இன்றைக்கும் அம்பாள் பூஜையில் அவள் போட்டுக்கொள்கிற பரம எளிமையான கருகுமணியும் பச்சோலையுமே ஸுமங்கலிகளுக்குக் கொடுக்கிறோம்.
‘தாலியில் தாலம் (பனை) என்று தெளிவாகவே தெரிகிற தென்றால், ‘ தாடகம் ‘ என்ற ச்ரோத்ராபரணமும் (காதணியும்) ‘தார’த்தின் அடியாகப்பிறந்ததுதான். ‘தாரம்’ என்பது ‘தாடம்’ என்றும் ஆகும், ‘அங்கம்’ என்றால் சின்னம். தாடத்தாலான மங்களச்சின்னம் ‘தாடங்கம்’, ‘தாட பத்ரம்’ என்று கூட அந்த ஆபரணத்தைச் சொல்வதுண்டு. ‘தாலீ பலாசம்’ என்ற பனையோலையே ‘தாட பத்ரம்’ என்பதும். ‘தாடகம்’ என்பதே அப்பறம் ‘தாடங்கம்’ என்று வந்திருக்கிறது. தோடு, அதற்கு வேறாகக் குண்டலம் (இந்த நாள் லோலாக்கு, ஜிமிக்கி) என்று இல்லாமல், தோடு குண்டலம் இரண்டும் சேர்த்துப் பண்ணிய நகை தாடங்கம் என்று தோன்றுகிறது.
தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். ஸுமங்கலித்வம் போனால் கழுத்தை விட்டுத் தாலி இறங்குவது போலவே காதை விட்டுத் தோடோ, தாடங்கமோ இறங்கிவிட வேண்டும். அதனால் ஒரு புருஷனின் நல்ல ஆயுர்பாவத்தை, பெரிய கண்டத்தில் கூட அவன் பிழைப்பதைத் ‘தாலி பாக்யம்’ என்று சொல்கிற மாதிரி ‘தாடங்க பாக்யம்’ என்றும் சொல்ல ந்யாயமுண்டு. அதைத்தான் ஆசார்யாள் ‘தாடங்க மஹிமை’ என்கிறார். “பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறதானென்றால் அது உன் தாடக் மஹிமைதானம்மா. “தவ ஜநநி தாடங்க மஹிமா” என்கிறார்.
ச்ரோத்ரத்திற்கு விசேஷம் ஜாஸ்தி. பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ரஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி எனறே பேர் பெற்றிருப்பது? உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈச்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக்கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே?
இதனாலெல்லாந்தானோ என்னவோ, அம்பாளுடைய தாடங்கத்தில் நம்முடைய ஆசார்யாளுக்கு ரொம்ப பக்தி, பற்றுதல். ‘ஸர்வ மங்களா’ எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. ஸுர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு காடகம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: ‘தாடங்க யுகளீ – பூத தபனோடுப மண்டலா’ என்று அதே ஸுர்ய நமக்குப் பால் கொடுக்கிற அம்மாவின் இரண்டு வக்ஷோருஹங்கள் என்று ஆச்சார்யாள் இந்த ஸெளந்தர்யலஹரியிலேயே சொல்லியருக்கிறார். (ச்லோகம் 34) ஆகையால் அந்தத் தாடங்கங்களும் ஒரு பக்கம் பரமேச்வர பத்னியின் ஸெளமாங்கல்யச் சின்னம், இன்னொரு பக்கம் குழந்தைகளான நமக்கெல்லாம் பாலூட்டுகிற மாத்ருவாத்ஸல்யத்தின் சின்னம் என்றும் ஆகிறது. ஆகையாலே தான் ஜம்புகேச்வரத்திலே அகிலாண்டேச்வரியின் சக்தி ஜனங்கள் தாங்க முடியாத அளவுக்கு ஆனபோது அவர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி அதில் அதிகப்படி சக்தியை ஆகர்ஷணம் பண்ணி அம்பாளை சமனப்படுத்த நினைத்தபோது அந்த ஸ்ரீ சக்ரத்தை தாடங்க ரூபத்தில் பண்ணி அவளுடைய ச்ரோத்திரத்திலேயே ப்ரதிஷ்டித்து விட்டார் ப்ருத்வி க்ஷேத்ரமும், ப்ருத்வியின் மத்ய ஸ்தானமுமான காஞ்சீபுரத்தில் அம்பாள் காமாக்ஷியின் சக்தி இதே மாதிரி அபரிமிதமாயிருந்தபோது அவளுக்கு எதிரே ப்ருத்வியிலேயே – பூமியிலேயே – ஸ்ரீ சக்ர – ஸதாபனம் பண்ணினார். அது அவருடைய ஜீவிதத்தின் கடைசியில். ஜம்புகேச்வரம் அப்பு க்ஷேத்ரம். அதற்காகக் காவேரியில் யந்த்ரம் ஸ்தாபிக்க முடியுமா? அப்பு மட்டுமில்லை: தேயு, வாயு, ஆகாசம் எதிலுந்தான் (யந்த்ரம் ஸ்தாபிக்க) முடியாது. ப்ருத்வியில் மட்டுமே முடியுமாதலால் அப்படிக் காஞ்சியில் பண்ணினார் ஜம்புகேச்வரத்தில் என்ன பண்ணினாரென்றால் காவேரிக்கும் மேலே ப்ரவாஹமாக அம்பாளுடைய மங்களமான சிவ சித்தம் பெருக வேண்டும், பால் கொடுக்கிற வாத்ஸல்ய சித்தமும் பெருகவேண்டும் என்று நினைத்து இரண்டுக்கும் பொதுச் சின்னமாக இருக்கிற தாடக்த்திலேயே ஸ்ரீசக்ரத்தை அடக்கி யந்த்ரத்திற்கு யந்த்ரம், ஆபரணத்திற்கு ஆபரணம் என்பதாக அதை அவளுக்குச் சார்த்திவிட்டார். எப்படி இந்த ஸெளந்தர்யலஹரி தந்த்ர சாஸ்த்ரமாயும் தத்வத்தைத் தெரிவித்துக்கொண்டு, காவ்ய ஸ்தோத்ரமாகவும் அழகைத் தெரிவிக்கிறதோ, அப்படியே அந்தத் தாடங்கங்களும் சாஸ்த்ர ரீதியில் ஜனங்களுக்கு ரக்ஷணை கொடுத்துக்கொண்டு, அதே ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – அழகுக்கு அழகு ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – ஆழகுக்கு அழகு செய்கிற – ஆபரணமாகுவும் இருக்கும்படியாகப் பணிணிவிட்டார்.ஸ்ரீ சக்ர, சிவசக்ர ரூபமான தாடங்கங்கள் என்று அவற்றைச் சொல்வது. ‘ஸ்ரீ சக்ரத்திலேயே ஒன்பது ஆவரண சக்ரங்கள் இருப்பதில் நாலு சிவ சக்ரங்கள்தான். ஐந்து அம்பாளுடையது. தம்முடைய ஸ்தோத்ரத்திலேயே முன் ச்லோகமொன்றில் (ச்லோக.11) “சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதி: பஞ்சபிரபி” என்று இதையும் சொல்லியிருக்கிறார். இங்கே ஸ்வாமியை ‘ஸ்ரீ கண்டன்’ என்றும் அம்பாளை ‘சிவயுவதி’ என்றும் சொல்லியிருப்பது ‘தாடங்கமஹிமா’ ச்லோகத்தோடு பொருத்தமாக அன்வயிக்கிறது. ‘ஸ்ரீ கண்டன்’ என்றால் நீலகண்டன்தான். விஷத்திற்கும் ‘ஸ்ரீ’ என்று பெயர் இருப்பதை வைத்துத்தான் ‘ஸ்ரீகண்டன்’ என்பது. தாடங்க மஹிமை ச்லோகத்தில் விஷம் சாப்பிட்டவன் அழிவில்லாமலிருக்கும் அதிசயத்தைத்தான் சொல்கிறார். ‘சிவயுவதி’ என்று அவளை அவனுடைய பத்னியென்று பேர் கொடுத்துச் சொல்லியிருப்பது அவளுடைய ஸெளமாங்கல்யத்தையும் உக்ரமில்லாத, ரௌத்ரமில்லாத சிவமான அநுக்ரஹ சித்தத்தை தெரிவிப்பதாகவும் இருக்கிறது.
இவளை ‘ருத்ரஸ்ய பேஷஜீ’ என்று வேதம் சொல்லிற்று. ஆசார்யாள் நாளில் இவளுடைய சத்தியே ஜனங்களுக்கு ரௌத்ரமாகத் தாங்க முடியாமல் ஆயிற்று. வாஸ்தவத்தில் அது ரௌத்ரமாகவில்லை. கலி கால ஜனங்களின் சக்தி குறைந்து போனதால் தான் அம்பாள் மூர்த்தத்தில் ஆதியில் பிரதிஷ்டையாயிருந்த நிறைவான ஜீவ கலா சத்தியை அவர்களால் தாங்க முடிய வில்லை. நமக்கு உடம்புக்கு வந்து பலஹீனமாகிறபோது புஷ்டியும் ஆரோக்யமும் தரும் நல்ல ஆஹார வஸ்துக்களே ஜெரிக்க முடியாமலாகிக் கஞ்சிதான் நல்லது என்று ஆகிறதல்லவா. அப்படி அம்பாளடைய அநுக்ரஹ சக்தியையே அப்போது ‘டைல்யூட்’ பண்ணினால் தான் தாங்கிக்கொள்ள லோகத்திற்குச் சத்தி இருந்தது. அப்போது தான் ஆசார்யாள் எக்ஸ்ட்ரா சக்தியை ஸ்ரீசக்ர தாடங்கங்களில் அடக்கி, அதையும் அவளுக்கே ஆபரணமாகப் போட்டார்.
ச்லோகத்தில் அவர் சொல்கிற விஷ பானக் கதையில் அவருக்கு மூலவரான ஈச்வரனுக்கு அவள் உக்ரமான விஷத்தைக் கண்ட பூஷணமாக்கினாளென்றால், அவரோ அம்பாளுடைய உக்ரத்தையே – அதாவது ஜனங்களின் அபல ஸ்திதியில் உக்ரமாகத் தோன்றிய ஜீவகலையையே – அவளுக்குக் கர்ண பூஷணமாக்கினார்.
ஒரு விஷயத்திற்குச் சின்னமாக ஏதோ ‘ஸிம்பல்’ என்று வைக்காமல், மனஸிலே ஆழமாகப்பட்டு – முக்யமாக மஹான்கள், ரிஷிகள் மனஸில் ஆழமாகப் பட்டு – அந்த ஸிம்பலை வைக்கும்போது அந்த மூலமான விஷயத்துக்கே சின்னம் புஷ்டி சேர்ப்பதாக ஆகிவிடுகிறது. இந்தச் சின்னத்துக்கு ஹானி ஏற்பட்டால், இது போய்விட்டால் அது மூலமான விஷயத்திற்கே ஹானி உண்டாக்குகிறது. சின்னத்திற்கே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடுவதால் இப்படி நடக்கிறது. ப்ரஹ்மண்யத்திற்குச் சின்னமான உபவீதம் (பூணூல்) போட்டுக் கொண்டால் ப்ரஹ்மண்யமே விருத்தியாகிறது. அது அறுந்து போனால், காணாமல் போனால் ஏதோ தீட்டு வந்துவிட்ட மாதிரி காயத்ரிகூட மங்கிப் போகிறது. மஹான்கள், ரிஷிகள் என்றில்லாமல் பஹுஜனங்கள் மனஸாழத்தில் மதிப்பாக வைக்கிற சின்னங்களைப் பார்த்தாலுங்கூட இப்படியே இருக்கிறது. தேசியக்கொடி என்பது ஒரு சின்னந்தான், அதற்கு அவமதிப்பு நடக்கிறது என்றால் தன்னால் மனஸ் பதறுகிறது. அது அறுந்து விழுந்தால் நிஜமாகவே தேசத்திற்கு ஆபத்து வருகிறது. இந்தப் பகுத்தறிவு யுகத்திலும் கொடி, கான்ஸ்டிட்யூஷன் புஸ்தகம் முதலியவற்றை அவமதித்தால் கடுமையாக சிக்ஷிக்க வேண்டுமென்று சட்டம் பண்ணியிருக்கிறார்கள். பைபிள் புஸ்தகம் ஒரு சின்னந்தான். ஆனாலும் நல்லவழியிலே போவதற்கான புஷ்டியைக் கொடுக்கும் ஜீவ சத்தி அதற்கே இருக்கிறது என்று அபிப்ராயத்தில்தான் அமெரிக்கா ப்ரெஸிடன்ட் கூட அதைக் கையில் வைத்துக் கொண்டு விச்வாஸ ப்ராமாணம் எடுத்துக் கொள்கிறான்.சின்னத்தால் அது ஸிம்பலைஸ் செய்யும் விஷயத்திற்கே ஹானி – விருத்திகள் ஏற்படுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன். தாடங்க விஷயம் அப்படித்தான். அதாவது பதிக்கு ஹானி என்றால் தாடங்கம் இறங்கவேண்டும் என்பது மட்டுமில்லை, அந்தத் தாடங்கம் இறங்காதிருந்தால் பதிக்கு ஹாணியே ஏற்படமுடியாது. அம்பாளுக்குக் கல்யாணத்தின் போது ஸுமங்கலி என்று சின்னம் பூட்டுகிறபோது தாடங்கம் போட்டிருப்பார்கள். ஸாஷாத் அம்பாளும் ஸ்வாமியுமே அதை அப்படி (ஸெளமாங்கல்ய சின்னமாக) நினைத்திருப்பார்கள். அப்போது அதற்கு வாஸ்தவமாகவே எப்படிப்பட்ட ‘வால்யூ’வும் ‘பவ’ரும் ஏற்பட்டிருக்கும்? ஈச்வரனுக்கு அம்பாள் ஜீவ ரஷை என்றால் அவளுக்கு அந்தத் தாடங்கம் ஸெளமாங்கல்யரக்ஷையாக ஆகியிருக்கும். அதற்கே ஒரு ஜீவ சக்தி உண்டாகி அப்படி ரக்ஷித்திருக்கும். அந்த ரஷை அவளைவிட்டு எங்கேயாவது சுழலுமா, இறங்குமா? இறங்கவே இறங்காது. ஸாக்ஷாத் அம்பாளுக்கு ரக்ஷையாக இருக்கும் ஸ்தானத்தை அது கொஞ்சங்கூட விட்டுக் கொடுக்காது தானே? அது அப்படிப் பிடிவாதமாக “இறங்க மாட்டேன்” என்று உட்கார்ந்திருக்கும்போது ஸ்வாமிக்கு விஷத்தாலோ, ப்ரளயத்தாலோ ஒரு ஹானியும் வரமுடியாது அது தான் ஆசார்யாள் சொல்லும் தாடங்க மஹிமா.ஆனால் ‘அல்டிமேட்’ டாக எல்லா மஹிமையும் ஸகல சக்தி மூலமான அவளைச் சேர்ந்தது தான். அவள் கொடுத்தே ஒவ்வொரு வஸ்து ஒவ்வொரு மஹிமையைப் பெறுகிறது. மஹிமை வாய்ந்த எது இருந்தாலும் அது “மம தேஜோம்ச ஸம்பவம்” (“என் சக்தியின் அம்சமாகத் தோன்றியதே”) என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஆசார்யாளும் “தவ ஜநநி தாடங்க மஹிமா”, “அம்மா, உன்னுடைய தாடங்க மஹிமை” என்று குறிப்பாலுணர்த்திச் சொல்லியிருக்கிறார்.
——ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகசேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வர:, பாந்தவா: சிவபக்தாஸ்ச, ஸ்வதேசோ புவனத்ரயம் ||***“தேவி வராஹி”
ஸ்ரீ வராஹி மூல மந்திரம்: “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹ:”
பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.
இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.
கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

நீறில்லா நெற்றி பாழ்.

நீறில்லா நெற்றி பாழ்..!!!

நம் முன்னோர்கள் உடல் மற்றும் மன நலனுக்காக அறிவியல் பூா்வமாக ஆராய்ந்து பல வழிபாட்டு முறைகளை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இறைவன் ஒருவனே நாம் வழிபடும் முறைகளில் தான் வேறுபடுகிறோம்.
தலை குளித்தவுடன் நெற்றி நிறையத் திருநீறு பூசினால் தலையில் இறங்கிய நீர் திருநீறால் உறிஞ்சப்பட்டு ஜலதோஸம், தலைவலி இவைகள் வராது. இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த உண்மை. இது மட்டுமல்ல திருநீற்றிற்கு வேறு பல மகிமைகளும் உண்டு

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்


இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம்
இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர்.

இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.

பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.

வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம்.

கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.

மேலும் இதை சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில்இட்டு செல்ல எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது.இந்த கருப்பு மஞ்சள்லில் அனைத்து யட்சிணிதேவதை , தேவதைகள் , தேவர்கள் ,ரிஷ்கள் சித்தர், ஆவவகணம் செய்வார்கள் இந்த கருப்பு