வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா?

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...


லட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் லட்சுமி தேவியோ உறுதியற்றவர்; ஆம் தான் இருக்கும் வீட்டை விட வேறு ஒரு வீட்டில் அதிக பக்தியை கண்டால் அங்கே குடி புகுந்து விடுவார்.

அதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை ஈர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்கள் என சிலவற்றை பற்றி இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வீட்டில் வைத்தால் அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். லட்சுமி தேவியை ஈர்க்கின்ற பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் போதிய பொன்னும், பொருளும் பெருகும். சரி, அது என்ன அந்த 10 பொருட்கள் என பார்க்கலாமா?

தேங்காய்





 தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைப்படுகிறது. அப்படியானால் அதற்கு லட்சுமி தேவிக்கான பழம் என அர்த்தமாகும். தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.

பாதரச சிலை







லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.

சோழி







சோவிகள் என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகையாகும். லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள்


லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விடும்.

சங்கு


விசேஷ வகையான இந்த சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது.

லட்சுமி தேவியின் கால்தடங்கள்





லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.

தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலை



லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.


சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.

ஸ்ரீ யந்திரம்

இந்த யந்திராவில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என நம்பப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும். மேலும் இதனை நம் பூஜையறையில் வைத்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும்.

ஒற்றை கண் தேங்காய்

இவ்வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.

மராட்டிய /மகாராஷ்டிரா மாநிலங்களில் , மரியாதை செய்ய நினைப்பவர்களுக்கு
மட்டையுடன் கூடிய தேங்காயை தருவது , லக்ஷ்மி தேவி உங்கள் வீட்டில் என்றும் தங்குவாராக என்பதாக பொருள் . ஸ்ரீபல் (Shri fal ) , நம்மூரில் எலுமிச்சை பழத்திற்கு சமம் .