பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது

பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது





 பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

*1)உணவு(மண்):-*
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.
(ங):-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ச):-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

*2)குடி தண்ணீர்(நீர்):-*

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

*3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-*
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

*4)காற்று (வாயு):-*
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

*5) உழைப்பு (நெருப்பு):-*
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .

சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும்

சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும், அபசகுணத்தை தீர்த்து வைக்க உதவும் நெல் !!



சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது முடி உணர்த்தும் முன் சகுனம்! சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும்,

அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.

பணத்தட்டுப்பாடு நீங்க
அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு "ஓம் தன ப்ரதாயை நம" எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணப்பிரச்சனைகள் நீங்கும் தேவைப்படும் வரை செய்து வரலாம்.

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் !!!

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் !!!




ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

கண்ணாடி வைத்து பூஜை செய்தால் முன்னோர்கள் மகிழ்வார்கள்

முன்னோர்களின் படம் இல்லையா?

 கண்ணாடி வைத்து பூஜை செய்தால் முன்னோர்கள் மகிழ்வார்கள், கண்திருஷ்டியும் தீரும். !!!




சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது.

அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஆனால் தற்போது அந்த வழக்கம் சற்று மாறிவருகிறது..

கண்ணாடியை வைத்து வழிபட்டதன் காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள்.

இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம்.

அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனை

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய சகஸ்ர நாம அர்ச்சனையும் அதனால் கிடைக்கும் பலன்களும் !!!




1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்

2.ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

3.மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

4.கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

5.சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

6.கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

7.துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

8.விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.

9.தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

10மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

11.கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

12.மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

அமாவாசை வழிபாடு !!!

அமாவாசை வழிபாடு !!!



வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.

இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள்......
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

புண்ணிய நதியில் நீராடல்......
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

முன்னோரின் ஆசி.......!!!
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந் நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.

சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் அமாவாசை முக்கியமானது.

தர்ப்பணம் சில சந்தேகங்கள் - பதில்கள் !!!

தர்ப்பணம்   சில சந்தேகங்கள் - பதில்கள் !!!


1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?

 2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?

 3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?

 4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?

தர்ப்பணம்

ஒரு அன்பரின் கேள்விகள் இது .....
நம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது.

விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் ,
இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வைத்தால் எல்லா
குவளையிலும் சூரிய ஒளி தென்படும் , இது போல ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .
இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும், அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )

பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும் , அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும் , தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து
பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

தாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது ,
தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள்
சொல்கிறது .....

திதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....

திதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்..

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?



தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது
பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை
அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு
சமம்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம்,

எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது

அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது.

ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து

பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்

20 பிரதோஷ வழிபாடு

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்



1. தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் :பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா
தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

மாவிலை – வாஸ்து !!!

மாவிலை – வாஸ்து !!!



* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி
தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.

* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி
குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல்
கூடாது.

அங்கதுடிப்புகளும் பலன்களும்!!!

அங்கதுடிப்புகளும் பலன்களும்!!!



அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரும் தத்தம் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும்

நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும்

1.)உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும்,உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும்
,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு,
3)-தலை-பெருமை,புகழ்,செல்வம்
4)-நெற்றியின் இடதுபாகம்-நிறைந்தசெல்வ
5)-நெற்றியின் வலது பாகம்-நோய்நீங்கும்
(6)-வலது புருவம்-பெருமை
7)-இரண்டு புருவங்களும் பெருமை
(8)-கண்ணின் பின்பாகம்-பெரும்புகழ்,செல்வம்
(9)-இடது கண்ணின் இமை-செல்வம் சுகவாழ்க்கை
(10)-இடது கண்-மிகுந்த பெருஞ்செல்வம்..
{11}-கழுத்து-துன்பங்கள் அறவே நீங்கும்
(12)-பிடரியின் இடதுபுறம்-சிறப்பு
13)-இடது புயப்புறம்-நல்ல மனைவி
14)வலது புயப்புறம்-வழக்கில் வெற்றி
15)-வலது கண்டக்கை-உடைச் சிறப்பு
16)இடது கண்டக்கை-தோஷம் நீங்கும்,
17) வலது ழுழங்கை-தவப்பயன்
18)-இடது ழுழங்கை-தனச் சேர்க்கை-
19)-வலது முன்கை- பெருக்கமுள பேறு
20)-இடது உள்ளங்கை-இலாபம்(
21)-வலது கை பெருவிரல்-இலாபம்
22)-வலது கை ஆள்காட்டி விரல்-நன்மைசெல்வம்
23)-வலது கை நடுவிரல்-நல்ல காரியம்
24)-வலது கை மோதிரவிரல்-பெருமை
25)-வலது கை அடிபாகம்-சிறந்த காரியத்தால் செல்வம்
26)-இடது கை பெருவிரல்-நிறைவான வாழ்க்கை
(27)-இடது கை பெருவிரல்-இராஜநோக்கம்
(28)-இடது கை மோதிரவிரல்-நன்மை,தனம்
29)-இடது கை சிறுவிரல்-மரணமில்லை
30)-இடது முலை-சுக வாழ்க்கை
(31)-வலது கைப்பட்டை-புதிய ஆடை
(32)-மூக்கின் வலது பாகம்-நற்பாக்கியம்,செல்வம்
(33)-மூக்கின் இடது பாகம்-செல்வம்
,34)-மேல் உதடு-நல்ல செய்தி
35)-கீழ் உதடு-புதிய தின்பண்டம்
36)-இடது விலாவின் வலது பாகம்-பொருள் சேரும் பயணம்
36)-இடது விலாவின் இருபாகங்கள்_நோய்தீரும் இன்பம் உண்டு துன்பம் நீங்கும் வினை தீரும்
37)-இடை வேள்வி புரிதல் மிகப்பேறு,
38)-வலது விதை-யானை குதிரை ஏற்றம்
39)-இடது விதை-நோய்நீங்கும்
40)-இடது தொடை-நல்ல செய்தி
41)-இரு தொடைகள்-செம்பொன் உண்டாகும்
42)-இடது ழுழந்தாள்-உலகை ஆளுதல்
43)-வலது கணைக்கால்-செல்வம் உண்டாகும்
44)-இடது புறவடி-வழக்கில் வெற்றி
45)-இடது உள்ளங்கால்-தேசப் பயணம்
46)- இரண்டு உள்ளங்கால்கள்-பல்லக்கில் ஏறுதல்
47)-கால்விரல்கள் பத்து-நன்மைகள் திருமகள் சேர்க்கை சிறப்புமிக்க வாழ்க்கை
---------------{பயக்கும் தீமை துடிப்புகள்}--------------------
1)-உச்சந்தலையின் வலது பாகம்-அச்சம்
2)-தலையின் பின்பாகம்-பகை
3)-இடது புருவம்-பெரிய பொல்லாங்குப் பேச்சு
4)-வலது கண் இமை மேல் நோக்கி-வழக்கு வந்தே தீரும் 5)-வலதுகண் இமை நோக்கி-கவலை அழுகை
6)-இடது கண் இமை நோக்கி-துணைவனுக்குத் துன்பம்
(7)-வலது கண் ழுழுவதும்-வருத்தம் நோய்
8)-வலது புயப்புறம்-துன்பம் தரும் செய்தி
(9)-இடது புயம்-உறவினர் இறப்பு
10)-இடது முன்கை-பிறரால் துன்பம்
11)-வலது உள்ளங்கை-இழிவு வரும்
12)-வலது புறங்கை-வழக்கு உண்டாகும்
13)-இடது புறங்கை-துன்பம் வ்ரும்
14)-வலது கை சிறுவிரல்-உற்றார் இறப்பு
15)- இடது கை நடுவிரல்-வழக்கு உண்டாகும்
16)-இடது கை-கவலை,இருந்த பதவியை இழத்தல்
17)-நெஞ்சு-துன்பம் வரும்
18)-வலது முலை-இறப்பு
19)-தொப்புள்-மிகுந்த கவலை
20)-வயிறு-நாள் தோறும் நோய்
21)-வலதுபுற முதுகு-நோய் வந்து நீங்கும்
22)-இடது புறமுதுகு-குடியிருந்த மனையை இழத்தல் நெடுந்தொலைவு செல்லுதல்
23)-முதுகு ழுழுவதும்-வருத்தம் தணியாநோய் 24)-இரண்டு கைப்பட்டைகள்-குற்றமுடையது
25)-வலது விலா-வருத்தம் கவலை
26)-இடது விலா-வீட்டை இழத்தல்
27)-ஆண்குறி-தொலைவில் உள்ளவரால் கவலை
28)-இரண்டு விதைகள்-வழக்கு உண்டாகும்
29)-வலது தொடை-முறையற்ற வகையில் வழக்கு,வெற்றி
30)-வலது ழுழந்தாள்-கோபம்
31)-வலது கண்டைக்கால்-அடிமை
32)-இடது கண்டைக்கால்-பெருநோய்,கவலை
33)-இடது கணைக்கால்-இறப்புச் செய்தி
34)-இரண்டு கணைக்கால்கள்-நடுக்கம் ஓட்டம்
35)-வலது புறவடி-நோய்,
37)-வலது உள்ளங்கால்-நோய்

செல்வம் பெருக சில குறிப்புகள் !!!

செல்வம் பெருக சில குறிப்புகள் !!!





1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்

4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித

ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.

இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை

காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு

வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு

அதிகரிக்கும்.

9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது

குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்

பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்

கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்

.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,

பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்

வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.

16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக

பணம் வரும்.

17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்

அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.

18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்
விலகும்.

19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.

20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி

ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்

இல்லாதவர்

கூட லட்சாதிபதி ஆகலாம்.

21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.

22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்

லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி

நித்தமும் வாசம்செய்வாள்.

24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து
உண்டாகும்.

25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.

26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.

27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.

28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை

மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.

30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை
அணிவித்திடபணம் குவியும்.

31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.

32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.

34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம்
ஆகர்ஷணம் ஆகும்.

35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி
தெளித்திடசெல்வம் சேரும்.

36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம்
சேரும்.

38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.

39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட

லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க

ஐஸ்வர்யம் பெருகும்.

41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.

42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்

கிடைக்கும்.

43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.

44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில்
முன்னேற்றம்ஏற்படும்.

45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.

46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம்
ஏற்படும்.

47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.

48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண
லாபம்கிட்டும்.

50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி
வளம்பெருகும்.

51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து

மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து

மடங்குநம்மிடம் வந்து சேரும்.

54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை

தினமும்அணிந்து வர பணம் வரும்.

55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்

கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்

ஆகும்.

57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி

கடாடசம்நிரந்தரமாகும்.

58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்

நீங்கிதனலாபம் பெறலாம்.

59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.

60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து
வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.

62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து

வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட

ஐஸ்வர்யங்களும்வசமாகும்.

64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை

வழிபாட்டால்பணம் கிடைக்கும்.

65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.

66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.

67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.

68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு

33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.

70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்

செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.

73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.

74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.

76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி

இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.

77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.

79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.

80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.