5. குரு !!!

5. குரு !!!



குரு இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்த சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். நவக்கிரகங்களின் குருவாக விளங்குபவர் வியாழபகவான். குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம். 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மௌன வலம் வரவேண்டும். குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும். குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது.
சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம். குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்ழூ ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும். குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான். பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வூரின் அமைவிடம் 10.37° N 78.98° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆலங்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) சிக்கப்பட்டி,மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கொத்தமங்கலம் மாங்காடு வடகாடு ஆகும்.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்,
உற்சவர்:தெட்சிணாமூர்த்தி
அம்மன்/தாயார்: ஏலவார்குழலிதல
விருட்சம்: பூளை என்னும் செடி
தீர்த்தம்:பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:இரும்பூளை, திருவிரும்பூளை
உலோகம்-பொன்
தானியம்-கொண்டை கடலை
பால்-ஆண்
திசை காலம்-16 வருடங்கள்
கோசார காலம்- 1 வருடம்
நட்பு-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
பகை-புதன்,சுக்கிரன்
சமம்- சனி,ராகு,கேது
உபகிரகம்-எமகண்டன்
நட்சத்திரம்-புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
ஊர்:ஆலங்குடி
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
திருஞானசம்பந்தர் தேவாரபதிகம்
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடி யுடன்கூடி
இச்சித் திரும்பூளை யிடங் கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலி கொண்டு உழலூணே. -திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம்.
தல சிறப்பு: இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். (இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தெட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி அஞ்சல் - 612801.
கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.
ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. விசேட மூர்த்தி அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லஷ்மி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர். ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர் சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தக்ஷிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர். சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவகர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். "ஞான கூபம்' என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன. இத்தலத்தின் கிழக்கே "பூளைவள ஆறு' பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
பிரார்த்தனை: நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள். விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக்காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு :-
""ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண் மீதினில்''.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர். திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவாரத் தலங்களில் இத்தலம் தட்சிணாமூர்த்தித் தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். தட்சிணாமூர்த்தி இத்தலத்தின் சிறப்புக் கடவுளாக விளங்குகிறார். வியாழக்கிழமையில் இம்மூர்த்தியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர். நாகதோஷ முடையவர்கள் இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றன. தெட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
தட்சன், சுந்தரர்:இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில் பார்வதியின் தந்தையான தட்சன் சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இது மிகவும் சிறிய சிலை. தற்போது சற்று சேதமடைந்தது போல் தெளிவற்ற உருவத்துடன் உள்ளது. ஆனால், திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் இந்த சிலையும் இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் அம்மைத் தழும்புகள் சிலையில் இருப்பதைக் காணலாம்.
சுக்ரவார அம்பிகை: "சுக்ரவாரம்' என்றால் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம் என்பது அறிந்த உண்மை தான். அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவளது பெயரும் "சுக்ரவார அம்பிகை' என்பது குறிப்பிட்டத்தக்கது.
மாதா, பிதா, குரு:இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
தல வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்
குருவை பற்றி பார்க்கலாம் நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான்.
இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும். குரு எப்பொழுதும் சொந்த மதத்தை குறிப்பவர். அவர் அவர்களின் மதங்களை பின்பற்றினாலே குரு நல்லது செய்கிறது. ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும்.
குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.
குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.
குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.
குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.
குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.
குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.
குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.
குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வாதை இல்லாமல் உடனே போகும்.
குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.
குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.
குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.
குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.
குரு (நல்ல மனைவி அமைய)
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

4. புதன் !!!

4. புதன் !!!




புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது சூரியனுக்கு சுமார் 1,60,00,000 KM அப்பால் இருந்து சுற்றி வருகிறது. இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது. 88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர்.
புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.
கல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே. புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம். நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம்.
புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் திருவெண்காடு சென்று புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இங்கே இவருக்கும் பதினெழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புத பகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்யவேண்டும்.
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:சுவேதாரண்ய சுவாமி
உற்சவர்:
பிரமவித்யாநாயகி அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்:திருவெண்காடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் வாரப்பதிகம்
கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும்
உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும்
கொடியானே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.
திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன.
பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.
இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.
இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.
இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.
பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.
சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
நடராஜர் : இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
அகோர மூர்த்தி :ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.
பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.
காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.
துர்க்கை தேவி :துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.
புதன் பகவான் :வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.
பிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.
தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நிறம் - பச்சை
வாகனம்- குதிரை
தானியம்-பச்சைப் பயறு
ஆட்சி- மிதுனம்.கன்னி
உச்சம்-கன்னி
நீசம்-மீனம்
திசைகாலம்- 17 ஆண்டுகள்
பகை-சந்திரன்
புதனை பற்றிய பாடம் இவர் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது. அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம் பல்பு வாங்கவேண்டியது தான். புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும். நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். புதன் கெட்டால் என்ன நடக்கும். புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது. புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும்
புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும்
புதன் 1 ஆம் வீட்டில் இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.
புதன் 2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.
புதன் 3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.
புதன் 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
புதன் 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.
புதன் 6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.
புதன் 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும்.
புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.

3. செவ்வாய் !!!

3. செவ்வாய் !!!




செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை,அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும். அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இவருக்கு சிறப்பு நாட்கள்தாம். நமதுமனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். செவ்வாயின் அருள் வேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
வைத்தீஸ்வரன் கோவில்
"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால்
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும் என்பர்."
தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.
பெயர்க் காரணம்:புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.
கோயில் அமைப்பு:நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.
தீர்த்தம்:கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.
மூர்த்திகள்:சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.
தலப்பெருமை:முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சடாயு குண்டம்:சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.
திருச்சாந்துருண்டை:இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
தல விருட்சம்:கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.
திருவிழாக்கள் : நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பயணம் கீரணிப்பட்டி முத்து மாரியம்மன் திருவிழா முடிந்து தொடர்ந்து வரும் புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேல் அதாவது வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம்.
“காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”
பொங்கம் = பொலிவு அல்லது மகிழ்ச்சி.
வண்டிப் பயணமாகத் துவங்கி நடைப்பயணத்தையும் இன்று ஈர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் சிறப்புறு பயணமாகியுள்ளது. இது கீழச்சீவல்பட்டி, அழகாபுரி நகரத்தார்களோடு பள்ளத்தூர், குருவிக்கொண்டான்பட்டி, ஆத்தங்குடி, கோட்டையூர், சிறுகூடற்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த வண்டிப் பயணத்தில் கலந்து கொள்கின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள். “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.
நிறம்- சிகப்பு
அணிகலன்-பவளம்
வாகனம்-அன்னம்
தானியம் -துவரை
காரகம்- பூமி,சகோதரன்,வீடு
கடவுள் - முருகன்
சுவை-துவர்ப்பு
உச்சம- மகரம்
நீசம் - கடகம்
திசைகாலம்- 7 ஆண்டுகள்
நட்பு- சூரியன்
பகை-புதன்,ராகு,கேது
சமம்-சுக்கிரன்,சனி
உபகிரகம்-துமன்
கோவில்-வைத்தீ்ஸ்வரன் கோவில்
ஒவ்வொரு வீட்டிலும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்
செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.
செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.
செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.
செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.
செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.
செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.
செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.
செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.
செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.
செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.
செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.
தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன். நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது. நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும். நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள். உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.
அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

2. சந்திரன்.

2. சந்திரன்.



சந்திரன் இது பூமியில் இருந்து 2738800 KM துரத்தில் சுற்றி வருகிறது . இது பூமிக்கு உபகிரகம். இது தன்னைத் தானே சுற்ற 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகிறது. இது பூமியை 29 நாட்கள் 12 மணி 44 விநாடிகளில் சுற்றி வருகிறது. சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார். தாயாருக்கும் காரகம் ஆகிறார்.சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்டது.
வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றதுப்போல் தான் பலன்கள் தரும். சந்திரனை கொண்டு ராசி கணக்கிடப்படுகிறது. சந்திரனுடன் கெட்ட கிரகங்கள் இணைவது நல்லது கிடையாது. முக அழகு, பெண் வழியில் லாபம், நீர் சம்பந்தமான பொருட்கள். சந்திரன் பார்வை 7ம் பார்வை மட்டும் உண்டு. அதைப்போல் சந்திரன் எட்டில் அமரும் போது வாழ்க்கை சோதனை ஆகிவிடும். ஏழில் தனித்து அமரும் போது காதல் மணம் தருகிறார். உயிர்களை இன்பத்தில் லயிக்கச் செய்து சுகம் காண வைப்பது சந்திரனின் இயல்பு. சந்திரனின் அதிகாரத் தலம் திங்களூர்.
வெண்மை வாய்ந்த அலரி மற்றும் அல்லி மலர்களால் இவரை அர்ச்சித்து பச்சரிசி நிவேதித்து நலம் பெறலாம். திங்களூரில் சந்திரனை வழிபடுவதால் நலம் பெறலாம். மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.
சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது. சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது. 'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை.
சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர்.
விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்!
திங்களூர் !!!
நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காக தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தை திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தை துணியைல் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தை கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடகள் பத்தும் "திருப்பதிகம்" என்றழைக்கப் படுகின்றன.புரட்டாசி மற்றூம் பஙுகுனி மாதங்களில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
மூலவர்:கைலாசநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்:சந்திரபுஷ்கரிணி
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திங்களூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை
தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் - 613 204 தஞ்சாவூர் மாவட்டம்.
இறைவன்: கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
சந்திரனின் நிறம் : வெண்மை
வச்திரம்: வெள்ளைத்துணி
தான்யம்; நெல்
உணவு: தயிர் சாதம்
மலர்: வெள்ளை அரளி
நிறம் - வெண்மை
இரத்தினம்- முத்து
உலோகம்-ஈயம்
ஆட்சி- கடகம்
உச்சம்-ரிஷபம்
நீசம்-விருச்சகம்
இனம்-பெண்
நட்பு-சூரியன்
பகை-இராகு
சமம்-செவ்வாய்,வியாழன்.சனி.சுக்கிரன்
தானியம்-பச்சரிசி
திசைகாலம்- 10 ஆண்டுகள்
சந்திரன் அறிவியல் தகவல்: சந்திரன் பூமியிலிருந்து 4லட்சத்து 6ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ளது. இது பூமியை விட 81 மடங்கு எடை குறைவானது. ஒருநாள் தோன்றிய நேரத்தில் இருந்து 52 நிமிடங்கள் கழித்து மறுநாள் உதயமாகும். தன்னைத்தானே சுற்றவும், பூமியை ஒருமுறை சுற்றவும் 29 1/2 நாட்கள் ஆகும்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை "அன்னப்பிரசானம்' என்பர். கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தழிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு அம்புலியை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான்.
திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் "முருகன், கந்தன், கார்த்திகேயன்' என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு "மூத்த திருநாவுக்கரசு', இளையவனுக்கு "இளைய திருநாவுக்கரசு' என்று. தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
சங்கடம் தீர்ப்பான் சந்திர பகவான்!சந்திரன், சாதாரண கண்களுக்கும் புலப்படும் கிரகம். பகலில், சூரிய கிரணத்தில் மறைந்திருப்பதால், பார்க்க இயலாது; இரவில் நன்றாகப் பார்க்கலாம். தேய்ந்தும் வளர்ந்துமாக மாறுபவன், சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம் (சந்திரமா மனஸோஜாத:). பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது. உடல் எடுத்த உலகின் மனமான சந்திரன், பருவங்களை உருவாக்கி, உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான் என்கிறது வேதம் (சந்திரமா: ஷட்ஹோதா. ஸரிதூன்கல்பயாதி) ஏதும் அறியாத குழந்தையும் சந்திரனைப் பார்த்து மகிழும்; தொண்டு கிழமும் மகிழும். இளைஞர்களின் மனத்தை, விரும்பியவளுடன் சேர்த்து மகிழ வைப்பவன் சந்திரன். அதுமட்டுமின்றி, உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்ப வனும் இவனே! மனித மனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம் (மனஸ்துஹினகு…). தேய்ந்தும் வளர்ந்தும் மாறி மாறித் தென்படும் இயல்பு, மனித மனத்திலும் வெளிப்படும். செடி- கொடிகளின் மருத்துவ குணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன (ஸோமோவா ஓஷதீனாம் ராஜா…) பௌர்ணமியில், கடல் அலையை அதிகம் எழச் செய்பவன். இரவில் மலரும் பூக்கள், சந்திரனைக் கண்டதும் குதூலத்துடன் காட்சி தரும். அதுபோல், பிரபஞ்சப் பொருட்களில், சந்திரனின் தாக்கம் தென்பட்டு மாறுபாட்டைச் சந்திக்கும். வெகு தொலைவில், விண்வெளியில் வலம் வந்தாலும், சந்திரனது தாக்கம் பிரபஞ்சத்தை மட்டுமின்றி, மனிதர்களையும் பாதிக்கும். ஆகாயம் என்ற பூதம் ஒன்றுதான்; அது உலக அளவுக்குப் பரவியிருக்கிறது. ஆகாயம் என்றால் இடைவெளி என்று அர்த்தம். இடைவெளியில் வாழ்கிற நமக்கு, இடைவெளியின் தாக்கம் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உலகின் ஒரு கோடியில் நிகழும் சம்பவத்தை, மறு கோடியில் இருந்தபடி சின்னத்திரை வழியே பார்க்கிறோம். அதற்கு ஆகாசத்தின் பங்கு தவிர்க்க முடியாதது.
சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான் சந்திரன் (ஸலிலமயே சசினி…). தண்ணீருடன் தென்படுவதால், கடக ராசியான ஜல ராசி அவன் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். கடகம் என்றால் நண்டு. அது, ஈரப்பதமான இடத்தில் வாழும். ஆகவே, ஈரமான மனம், கருணையுள்ளம் கொண்டவன் என்பதற்குப் பொருத்தமானவன், சந்திரன்! அமாவாசையில், சூரியனில் மறைந்த சந்திரன், ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக கிரணத்தைப் பெற்று வளர்ந்து, 15-ஆம் நாளில் முழு நிலவெனக் காட்சி தருவான். அதனை பௌர்ணமி என்கிறது வேதம் (பஞ்சதச்யாமா பூர்யதெ…). பிரதமையில் இருந்து சூரியன், தனது கிரணத்தைத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பகுதியாகத் தேய்ந்து தேய்ந்து, சூரியனில் ஒன்றிவிடுவதை அமாவாசை என்பார்கள் (பஞ்சதய்யாமபுஷீயதை). ஒவ்வொரு பிறையாக வளர்வதால், வளர்பிறை; ஒவ்வொரு பிறையாகத் தேய்வதால் தேய்பிறை என்றாகிவிட்டது. ஒவ்வொரு பிறையிலும் தடங்கலின்றி வளர்வதால், செயல்களும் வளர்ந்தோங்க வேண்டும் என்று, வளர்பிறையை ஏற்றனர். தேய்பிறையை தென்புலத்தார் பணிவிடைக்கு ஒதுக்கினர். சந்திர கிரகணத்தில் பிடிக்கும் வேளை வளர்பிறையானதால், தான- தருமங்களைச் செய்யச் சொன்னார்கள். விடும் வேளையில் பிரதமை என்பதால், தேய்பிறையைக் கொண்டு தர்ப்பணம் செய்யப் பரிந்துரைத்தனர். ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் ஸ்ரீவிநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறான் என்கிறது புராணம்.
ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர். சந்திரனுடன் கூடிய சூரியனில், அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி, வேள்வி செய்ய வேண்டிய வேளை என்கிறது வேதம்! முழு நிலவில் இணைந்த நட்சத்திரங்களை, அதன் பெயரைக் கொண்டே மாதங்களின் பெயர்களாக ஏற்றனர். பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரம் இணைந்து வர… சித்திரை என அந்த மாதத்துக்குப் பெயர் வந்தது. மற்ற மாதங்களுக்கு, பௌர்ணமியைக் கொண்டே பெயர் வரும். அதாவது, காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவன் சந்திரன்! அதனைச் சாந்திர மானம் என்பார் கள். விரதங்களையும் பூஜைகளையும் சாந்திர மானத்தைக் கொண்டே கணக்கிடுவார்கள். அமாவாசையில் சூரியனில் ஒடுங்கிவிடுவதால், பலமிழந்து விடுவான் சந்திரன். ஆகவே அந்த வேளையில், மனநோய்கள் வலுப்பெறும் என்கிறது ஜோதிடம். மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை, நோயின் ஏற்றத்தாழ்வு சுட்டிக்காட்டும். சாதாரண நோய்கள்கூட, அமாவாசை நெருங்கும் நாட்களில் வலுப்பெறும். உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பும் அதன் தொடர்ச்சியுமே வாழ்க்கை என்கிறது ஆயுர்வேதம். இதில் முக்கியமானது மனம்! ஆகவே, வாழ்வில் சந்திரனுக்கு நிரந்தரப் பங்கு இருக்கிறது. நல்ல காரியங்களைச் செயலாற்ற, சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (சந்திர பலம் ததேவ). சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும்! ஆயிரம் பிறை கண்டவனை, சதாபிஷேகம் செய்வித்து மகிழ்விப்பவன், சந்திரன்.
மாசி பௌர்ணமியின் இரவில் சந்திர பூஜை நிகழும். அப்போது, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கும் அனைவருக்கும் அளிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் உண்டு! தென்புலத்தார், தேவர்கள், ரிஷிகள் ஆகியோரது பணிவிடைகளில் சந்திரனின் பங்கு இருப்பதால், வாழ்வு சிறக்க அவனருள் வேண்டும். விண்வெளியில் முதல் ஓடுபாதை, சந்திரனுடையது. ஆகவே, பூமிக்கு அருகில் இருப்பவன் அவன்! அவனுக்கு மேல், நான்காவது ஓடுபாதையில் இருக்கும் சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்றுச் செயல்படுவான் சந்திரன். ராசிச் சக்கரத்தில், சந்திரனுக்கு அடுத்த ராசியில், அதாவது சிம்மத்தில் சூரிய னுக்கு இடமளித்திருக்கிறது ஜோதிடம். ஆன்மாவுடன் இணைந்து மனம் செயல்படுவது போல், சூரிய கிரணத் துடன் இணைந்து செயல்படுவான், சந்திரன்! ஆகவே, அடுத்தடுத்த வீடு பொருத்தமாக அமைந்துள்ளது. ஆன்மா ஒன்று; அதேபோல் மனமும் ஒன்று! ஆதலால், 12 வீடுகள் இருந்தும், இரண்டுபேருக்கும் ஒவ்வொரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகத்தை அதாவது மகிழ்ச்சியை மனம் அறியும். ஆகையால், ராசி புருஷனில் 4-ஆம் வீட்டில் சந்திர னுக்கு இடமளித்தனர்.
வளர்பிறையில் சந்திரன் நல்லவன்; சுப பலனையே அளிப்பான்.
தேய்பிறையில் பலம் குன்றியவன்; அசுபன் – விருப்பமில்லாத பலனையே திணிப்பான்!
குருவுடன் இணைந்து பொரு ளாதாரத்தைச் செழிப்பாக்குபவன் சந்திரன்.
தன்னுடைய கேந்திரங்களில் குரு இருந்தாலும் அதாவது 4, 7, 10-ல் இருந்தாலும் பணத் தட்டுப்பாடின்றி காரியத்தை நிறைவேற்றி வைப்பான் சந்திரன். 5, 9-ல் குரு இருந்தால், ஆன்மிக வாழ்வில் ஆர்வத்தைத் தூண்டுவான்! பூமியும் விண்வெளியும் சேர்ந்தே இருந்தது. பிறகு, அது அகண்ட இடைவெளியுடன் தனித்தனியே காட்சி அளித்தது. பூமியின் மண், சந்திரனில் ஒட்டியுள்ளது. அதில் தென்படும் கறுப்புப் புள்ளி, மண் எனத் தெரிவிக்கிறது வேதம் (யதத: சந்திரமஸி கிருஷ்ணம் ஊஷான்னிவபன்…). இப்படியான விலகல், நமக்கு வாழ இடத்தை அளித்தது. முக அழகை, சந்திரனுடன் ஒப்பிடுவார்கள் புலவர் பெருமக்கள். பகலில், வெப்பத்தில் சூடேறிய நதிகள், தடாகங்கள் ஆகியவற்றின் நீரைக் குளிரச் செய்து, வெதுவெதுப்பாக மாற்றி, அதில் நீராடுவதற்கு நமக்கு உதவுபவன், சந்திரன். சந்திர கிரணத்தின் சேர்க்கையால், குளிர்ந்த காற்று கிடைக்கிறது. அதேபோல், சந்திரன் இணைந்தால்தான், வேள்வியானது நிறைவுபெறும் (ஸோமாயஸ்வாஹா…). அதேபோல், நாம் அணியும் ஆடையில், அவனுடைய சாந்நித்தியம் உண்டு. ஸோமஸ் என்றால் சந்திரன்; ஸோமஸ் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு (ஸோமஸ்யதனூரஸி…). சதுர்த்தியில் சந்திரனைப் பார்க்க நேர்ந்தால், வீண் பழியேதும் வராமல் தடுக்க, ஆடையில் இருந்து ஒரு நூலை எடுத்து, சந்திரனுக்கு அளிக்கும் சம்பிரதாயம் கிராமங்களில் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும்தான் பருவ மாற்றத்தின் மூலப் பொருள். அதில் குளிர்ச்சியான பங்கு, சந்திரனுடையது. சந்திரகாந்தக் கல், சந்திர கிரணம் பட்டு, உருகி ஓடும்; குளிர்ச்சியான சூழலை உருவாக்கும்.
ராவணன், குளியல் அறையில் சந்திரகாந்தக் கல் உமிழும் நீரில் நீராடுவான் என்கிறது சம்பூர்ண ராமாயணம் (ஏஷமிருங்கோபி…). கல்லைக் கரைக்கும் சந்திரன், கல் மனத்தையும் கரைப்பான். கோழிக்குக் கிடைத்த வைரக்கல், குரங்குக்கு கிடைத்த பூமாலை வீணாகிவிடுகிறது. அதுபோல், ஒப்பில்லாப் பொருள் (ஜோதிடம்) குப்பையில் சேருவது வேதனை அளிக்கிறது. அனுபவத்தில் உணரும் அறிவை, அடை யாளம் காணாமல் இருப்பது நமது துரதிர்ஷ்டம். சசிமங்கள யோகத்தில், சந்திரனுக்குப் பெரும்பங்கு உண்டு. சனியோடு இணைந்தால் ஒருவனுக்குச் சிந்தனை வளம் குன்றிவிடும். மானம், வெட்கம், சூடு, சொரணை ஆகிய அனைத்தும் அவனை விட்டு விலகிவிடும். விரும்பியதை அடைவதற்காக, தரம் தாழ்ந்த வழியைக் கூடப் பின்பற்றச் செய்வான் சந்திரன். சனியின் தாமஸ குண சேர்க்கையில்சோம்பல், அறியாமை, மோகம் ஆகியன மேலோங்கி, மனித இயல்பே அகன்றுவிடும். ‘எனக்குக் கிடைக்காதது எவருக்குமே கிடைக்கக்கூடாது’ எனும் எண்ணத்தில், பொருளையே அழிக்கும் குணத்தைத் தருவான், சந்திரன். அதேநேரம், புதனுடன் இணைந்தால், சங்கடத்தில் சிக்கியபோதும் அறநெறியில் செயல்பட வைப்பான், சந்திரன். எந்தச் சூழலிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்கும் குணத்தைத் தருவான்! சூரியனுடன் சந்திரன் இணைந் தால், சிந்தனை வளம் பெருகும். சூரியன்- ஆன்மா; சந்திரன்- மனம். ஆன்மாவின் இணைப்பில் உலக சுகத்தை மறந்து, தனிமையில் மகிழ்ச்சியை உணரச் செய்வான் சந்திரன். ஏனெனில், சூரியன் எனும் ஆன்மாவில் இருந்து, உருப்பெற்றவன் அவன். ஆனால், ஆன்மாவுடன் இணைந்த மனமானது, அதனை மறந்து, புலன் வழியே அலைந்து, சலிப்புற்று, செய்வதறியாது தவிக்கிறது. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது… வாலைக் குழைத் துக் கொண்டு, வெளியே சென்றுவிடும் என்பார்களே… அப்படித்தான் இருக்கிறது நம்முடைய மனம்! சந்திர வம்சத்தில் இருந்து வந்தவர்கள் மகாபாரத நாயகர்கள். மனதின் மாறுபட்ட சிந்தனைகளை அவர்களிடம் காணலாம். சூதும் வாதும், அறமும் ஆற்றலும், நெறியும் ஒழுக்கமும், பொறுமையும் போற்று தலும், உலகவியலும் ஆன்மிகமும் என சகலமும் அவர்களிடம் உண்டு! மனம் என்பது அணு அளவுதான்; ஆனால், அதன் கொள்ளளவு கடல் போல் விரிந்திருக்கும். தேய்ந்தும் வளர்ந்தும் நிலையின்றிச் செயல்படும் சந்திரனின் மறுபக்கம், ஒருவனைச் சீரழியச் செய்கிறது.
ஸ்ரீராமன் என்று சொல்வதைவிட, ஸ்ரீராமச்சந்திரன் எனும்போது, நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அவனுடன் இணையச் செய்யும். சூரிய வம்சத்தில் உதித்தவன் ஸ்ரீராமச் சந்திரன். ஆன்மாவுடன் அதாவது சூரியனுடன் சந்திரனாகிய மனமும் இணைந்திருக்க… சந்திரனுடைய மறு பக்கத்தின் இயல்பான ஆன்ம சுகத்தை ஈட்டித் தருகிறது. ஈடு இணையற்ற ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதில், சந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு! ராகுவுடன் இணையும்போது, மனதுள் அசுர குணம் தலைதூக்கும். ராகு- அசுரன். அவனுடைய இயல்பு, மனதுள் ஆட்கொள்ளும். மிருகத்தனமே முன்னிற்கும். அப்போது, பாபமும் தெரியாது; புண்ணியமும் தெரியாது. ஆறாம் அறிவே முடங்கிவிடும்; மனிதத் தன்மை அகன்று, வாக்குச் சுத்தம் போயே போய்விடும். கேதுவுடன் இணைந்தால், சிந்தனை வளம் குன்றும்; மனம் போன போக்கில் செயல்படச் செய்வான் சந்திரன்! பணம் இருந்தும், உரிய தருணம் கிடைத்தும் பயன்படுத்தாதவர்கள் உண்டு. திறமை இருந்தும் வெளிக்காட்டாதவர்கள் இருக்கின்றனர். செயல் பாட்டில் விபரீதம் நிகழ்ந்ததும், பணமும் திறமையும் வெளியே வரும். புத்தகத்து அறிவும் பிறரிடம் உள்ள பணமும் சந்தர்ப்பத்துக்கு உதவாது. உச்சம், ஸ்வஷேத்ரம், வளர்பிறை, சுபயோகம், சுபதிருஷ்டி போன்ற அந்தஸ்தில் சந்திரன் வலுப்பெற்றிருந்தால், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியோரின் தாக்கம் இருப் பினும், கடும் புயலிலும் அசையாத மரம் போல் சிறப்புறத் திகழக் காரணமாவான், சந்திரன். நீசம், தேய்பிறை, அசுப சேர்க்கை, அதன் யோகம் ஆகியவற்றைப் பெற்றிருந்தால், சிந்தனை தடுமாறும்; சங்கடங்களையே சந்திக்க நேரிடும். மனம் மகிழ்ச்சியை உணரும். ஆகவே அனைத்துக்கும் ஆதாரம், மனம்! உண்மையில், உடலில் மனம் என்கிற ஒன்றே இல்லை.

உறங்கிக் கிடக்கிற எண்ணக் குவியலையே மனம் என்கிறோம்

சூரியன்

சூரியன்


வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1 . சூரியன் :ஒரு நெருப்பு கோளம் ஆகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். ஆனால் ஜோதிடத்தில் நாம் கிரகம் என்றே அழைக்க வேண்டும். இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி சந்திரன்வருகிறது.

இது நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி வர ஒரு மாதம் காலம் ஆகிறது. 12 ராசியையும் சுற்றி வர 365 நாள் 15 நாழிகை 32 விநாடிகள் ஆகிறது. இது தான் நாம் ஒரு வருடம் என்கிறோம். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும். சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும்.

சூரியனை வைத்து தகப்பனார், உடல்பலம், ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்க வேண்டும்.இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார். உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும். ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது. ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும்.உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார்.

அக்னி இவருக்கு அதி தேவதை.
ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை.
மாணிக்கம் உகந்த ரத்தினம்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!  

சூரியன் ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.

சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன்.
கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு.
தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன்.
உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன்.
சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம்.
உச்ச வீடு மேஷம்,
நீச்ச வீடு சுக்கிரன்.  

சூரியனார் கோவில்!!!
அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்
நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று. சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.

இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி

இறைவி : சாயாதேவி,உஷாதேவி
தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி

ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு

நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும்.

இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும்
ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.    

வரலாறு:இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.  

கட்டிடக்கலை:இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது. இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன.
   
சிற்பக்கலை:கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.  

வழிபடும் முறை: கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு.
ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று.

தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவு நடந்து கோவிலை அடையலாம். நவநாயகர்களில் சூரியன் சுபக்கிரகம் ஆவார். இவரை வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும். சனிக்கிரகத்தால் பாதிப்படைந்தவர்கள் சூரியனார் கோவில் சென்று வழிபடுதல் வேண்டும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொள்வது நலம். சூரியனார் கோவில் ஸ்தலத்தில் சூரிய பகவான் ஆலயம் மேற்கு நோக்கிஅமைந்திருக்கிறது.இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது.சிவசூரியநாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களே தங்களது சாபம் நீங்க விநாயகர் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு அருள் பெற்ற தலம் சூரியனார்கோவில். தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோயில் இதுதான். இங்கு, உஷாதேவி- சாயாதேவியுடன் அருளும் சூரியனாரைத் தரிசிக்கும் அதே நேரம், குருபகவானின் அருட்பார்வையும் ஒருசேர பெறலாம். சூரிய பகவானைச் சுற்றி நவக்கிரக நாயகர்களும் தனிச் சந்நிதிகளில் அருள்வது விசேஷம். கும்பகோணத்திலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம் '

சூரியன் தை மாதம் மகர ராசியில் சஞ்சரிப்பதையே மகர சங்கராந்தியாகக் கொண்டாடுகிறோம் அன்று சூரியன், தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயனத்துக்கு சஞ்சரிக்கும் காலத்தில்... சூரிய பகவானுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை, தேங்காய் கொண்டு நைவேத்தியம் செய்து சிவப்பு வஸ்திரம், செந்தாமரைப் பூக்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு. இதனால் சத்ரு நாசம்... சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகளும் நீங்கி அருள்பெற்றுச் செல்வது இந்தத் தலத்தின் சிறப்பு'' மேலும், இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது நம்பிக்கை.  

இறைவன் :சூரியன்
தல விருட்சம்;எருக்கு
நிறம் : சிவப்பு
வச்திரம்: சிவப்புத் துணி
மலர்: தாமரை மற்றும் எருக்கு
இரத்தினம்: ரூபி
தானியம் - கோதுமை
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை
தேசம் - கலிங்கம்
நட்பு கிரகம் - சந்திரன்.வியாழன்.செவ்வாய்
பகை கிரகம் - சுக்கிரன்.சனி.ராகு.கேது
நட்சத்திரம் - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்
இனம் - ஆண்
நீசம் - துலாம்
உச்சம் - மேஷம்          

                                      ஒவ்வொரு வீட்டிலும் சூரியன் இருந்தால் என்ன பலன் ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீடு அந்த கிரகத்திற்க்கு அது உகந்த வீடா அல்லது அந்த வீடு பகை வீடா என்று பார்க்க வேண்டும். அந்த வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலன்கள் சரியாக இருக்கும்.  

சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.

இரண்டாம் வீட்டில் இருக்கும்சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும். சூரியன் முதல் வீட்டில் இருந்தால் கண்ணில் நோய் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரன் வீடான கடகம் லக்கனம் ஆக இருப்பவர்கள் கண்ணில் ஒரு கோடு இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வீட்டில் சூரியன் இருக்கும் போது அந்த நபர் மிக சிறந்த திறமையாளராகவும் இருப்பார். அந்த லக்கனம் மேஷமாகவும் அல்லது சிம்மமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நபருக்கு பணம் நன்றாக வரும். நல்ல படிப்பையும் கொடுப்பார்.ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும் தலையில் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்கள். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கோபமும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். முதல் வீடு லக்கனம் லக்கனத்தில் சூரியன் இருந்தால் தலை வழுக்கை தலையாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது ஏறு நேற்றியாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு முதல் வீட்டில் சூரியன் இருக்கிறது ஆனால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லை என்று கேட்க வேண்டாம். எல்லாம் பொது பலன்கள் மட்டும்தான்.  

மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.  

நான்காம் வீட்டு சூரியன் நல்ல பலத்தோடு இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தாயார் நல்ல நலத்துடன் வாழ்வார்கள்.நான்காம் வீட்டு சூரியன் கெட்டு இருந்தால் தாயார் நலம் பாதிக்கப்படும். மகிழ்ச்சி உண்டாகாது. அரசாங்கத்தில் பணியாற்றி மிகவும் குறைவாக சம்பாதித்து தந்தையின் சொத்துகளை அழிப்பார். இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

சூரியன் 5 ஆம் வீட்டில் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல அறிவாற்றலை தருவார் . மலை பிரதேசங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும்.சூரியன் கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். இந்த இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் குறைந்து இருக்கும்.  

சூரியன் 6 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தால் பகைவர்கள் இருப்பார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை தருவார். நல்ல பணிகளை செய்ய வைப்பர் .செல்வம் குவியவைப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கவைப்பார். நல்ல ஜரணசக்தி கிடைக்கும்.6- ஆம் இடத்து சூரியனால் சிற்றின்ப வேட்கையை அதிகமான தருவார். அரசாங்கத்தின் மூலம் பொருள் செலவு ஏற்படும். மனைவியின் உடல் நிலை சரியாக இருக்காது.  

சூரியன் 7 ல் இருந்தால் ஆண் ஜாதகராக இருந்தால் பெண்களால் மனசிக்கலை தருவார். உடம்பில் அடிபடும். உடம்பு சுகம் இருக்காது கவலைகள் வரும் 7 ஆம் இடத்து சூரியனால் அரசாங்கத்திற்க்கு எதிராக ஈடுபடவைக்கும். திருமணவாழ்வில் தடை உண்டாகும். தொழிலில் வருமானத்தை உண்டுபண்ணமாட்டார். வாழ்க்கை துணையின் நலத்தை கெடுப்பார்.

சூரியன் 8 ல் உள்ள சூரியனால் கண் பார்வையை மங்கசெய்வார். அதிக காலம் வாழ்வது கடினம் ஆயுளை குறைக்க செய்வார். செல்வத்தை இழக்க செய்வார். நண்பர்கள் மூலமும் பெண்கள் மூலமும் தீமைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை விட்டு பிரிவார்கள். உடலில் மர்மபாகங்களில் உபத்திரம் உண்டாகும். மனதில் எப்பொழுதும் கவலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

சூரியன் 9 ல் உள்ள சூரியனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தந்தையிடம் நன்றாக நடந்துகொள்வார் தந்தையாரின் பாசம் இவருக்கு கிடைக்கும்.பகைவீட்டில் இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு கெடுக்கும். அடிக்கடி பயணம் செய்ய வைக்கும் நல்ல அறிவு வெற்றி வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பெறவைக்கும்.  

சூரியன் 10 ல் உள்ள சூரியனால் நல்ல கல்வி கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய நேரிடும் வாகன வசதி கிடைக்கும். பெரிய தொழில்களை நிர்வகிக்க முடியும்.  

சூரியன் 11 ல் உள்ள சூரியனால் செல்வம் குவிய செய்வார். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வர் நல்ல உடம்பு பலம் உண்டாகும். பல்வேறு துறைகளில் வருவாய் வர செய்வார். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அரசாங்க வேலை கிடைக்கும்.  

சூரியன் 12 ல் உள்ள சூரியனால் தொழில்களில் வீழ்ச்சியை உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை உண்டாக்குவார் செல்வ வளம் இருக்காது. புனித காரியங்களுக்காக செலவு செய்திடவைப்பார். புனித யாத்திரை செய்திடவைப்பார்.                

ஆதித்யன் (சூரியன்)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?




மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.

1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?
குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,
பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;
பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;
மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.
சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?
முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம்.
இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.
சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.
மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.
மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.
இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.
நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?



1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.

2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.

8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.

11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்

12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.

14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.