அருள்மிகு அய்யனார் திருக்கோயில்

அருள்மிகு அய்யனார் திருக்கோயில்

அருள்மிகு அய்யனார் திருக்கோயில்



மூலவர் : அய்யனார்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : பூரணா, புஷ்கலை
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : திருக்குளம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : பனங்குளம்
  மாவட்டம் : புதுக்கோட்டை
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  மகா சிவராத்திரி, பவுர்ணமி
 
தல சிறப்பு:
 
  மாசி மக நன்னாளில், சந்நிதியில் உள்ள இறைத் திருமேனியில் சூரியக் கதிர்கள் வந்து விழும். இக்கோயிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவின்போது, பல வண்ணக் காகிதங்களாலான சுமார் 40 அடி உயரமுள்ள மாலையை பக்தர்கள் இந்தக் குதிரை சிலைக்கு அணிவிக்கின்றனர். அன்று மட்டும் ஆயிரக்கணக்கான காகித மாலைகள் அணிவிக்கப்படுவது தனிச்சிறப்பானது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு அய்யனார் திருக்கோயில் பனங்குளம்,புதுக்கோட்டை.
 
 
பொது தகவல்:
 
  பாலமுருகன், வீரபத்திரம், சன்னாசி, நர்த்தன விநாயகர், கருப்பாயி அம்மன் ஆகியோருக்கும் தனிச்சன்னதிகள் அமைந்துள்ளன.
 

பிரார்த்தனை
 
  நினைத்ததெல்லாம் நிறைவேறவும்,  திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள அய்யனாரை வேண்டிக்கொள்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்:
 
  பிரார்த்தனை நிறைவேறியதும் முடி காணிக்கை செலுத்தி, அய்யனாருக்கு மாலை அணிவித்தும், கரும்பு தொட்டி செய்தும், தங்கள் பிரார்த்தனைக்கு ஏற்றார்போல் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
 
தலபெருமை:
 
  இங்கே உள்ள திருக்குளம் சிறப்பு வாய்ந்தது. மாசி மக நன்னாளில் இங்கு வந்து நீராடினால், ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! கோயில் நுழைவாயிலில் சுமார் 33 அடி உயரத்தில் அய்யனாரின் குதிரைச் சிலை அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்கள், வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் குறித்து அய்யனாரிடம் உத்தரவு கேட்டுப் பெற்ற பிறகே காரியத்தில் இறங்குகின்றனர். கோயிலில் உள்ள சப்தகன்னியர் மிகச் சக்தி வாய்ந்த தெய்வங்கள். மகா சிவராத்திரி நாளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, அய்யனாரைத் தரிசித்தால், பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும், எனவே அந்த நாளில் சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, வணங்கிச் செல்கின்றனர்.
 
 தல வரலாறு:
 
 
சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் நினைப்பில் இருந்தார் தேவி. சிவமில்லையேல் சக்தி இல்லை என்பதில் உறுதியாக இருந்தார் ஈசன். அத்துடன் நிற்காமல் தன் திருவிளையாட்டையும் தொடங்கினார். இதனால் உலக இயக்கமே ஸ்தம்பித்தது. அதைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் கலங்கிப் போனார்கள். அனைத்தையும் பார்த்துப் பதறிப்போன உமையவள். கோபத்தைத் தவிர்த்து, உலக இயக்கம் நடைபெற அருளுங்கள் என்றாள் யமுனையில் வலம்புரிச் சங்காக இருந்து தவம்  செய்வாயாக! என அருளினார் சிவனார். அதன்படி, யமுனை நதியில். மலருக்குள் வலம்புரிச் சங்காக இருந்து உமையாள் கடும் தவம் செய்தாள். அங்கே வந்த தட்சன் மலரை எடுக்க, மலரின் உள்ளிருந்து வந்த வலம்புரிச் சங்கு. பெண்ணாக உருவமெடுத்து நின்றது, அதையடுத்து. தட்சனின் மகளாக தாட்சாயினி எனும் திருநாமத்துடன் வளர்ந்த அந்தப் பெண்ணை சிவனார் ஆட்கொண்டு. திருமணம் செய்துகொண்டார்.

ஒரு காலத்தில், காரை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்ததாம். இந்தப் பகுதி. ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த சிறுவர்கள், ஒருமுறை விளையாட்டாகக் கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்லி ஓர் ஆட்டின் கழுத்தை வெட்டிவிட, தலை வேறு உடல் வேறாக விழுந்ததாம் ஆடு. இதை அறிந்த ஊர்மக்கள் ஓடி வந்து பார்க்க, மரத்தடியில் இருந்த கல் ஒன்றிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாம். பிறகு தலையும் உடலும் சேர, அந்த ஆடு உயிர் பெற்றது. ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள், அந்த்க கல்லையே அய்யனாராக வழிபடத் துவங்கினார்கள். காரை மரத்தடியில் இருந்து தோன்றி ஆட்டுக்கு உயிர் தந்ததால், காரையடி மீட்ட அய்யனார் என்று திருநாமம் சூட்டப்பட்டு, பிறகு காரையடி மீண்ட அய்யனார் என மருவியதாகச் சொல்கிறது தல புராணம்.


 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: மாசி மக நன்னாளில், சந்நிதியில் உள்ள இறைத் திருமேனியில் சூரியக் கதிர்கள் வந்து விழும்.