மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்



மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.

ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.

நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.

 வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள்ளன.

• ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.

• ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.

• ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது.

சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!

சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!


வாஸ்து என்பதற்கு வசிப்பிடம் என்பது பெயர். வாஸ்தி என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே வாஸ்து என்னும் பெயர்.  வளமான மங்களகரமான இடத்துக்குப் பெயர்தான் வாஸ்து. இந்த வாஸ்து ஒரு வீட்டில் நிலைகொள்ள, அவரது வரலாற்றை அறிந்து, படித்து, முறைப்படி வழிபட்டபின் புது வீடு கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக  இருக்க முடியும்.

ஒருமுறை, அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய  வியர்வையில் இருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி  அந்தகனை விழுங்கி விட்டது.

பிறகு சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய  சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கி விட கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார்.

குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து விடாமல் இருக்க, தேவர்களை அவன் மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான  பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம் பட்டதால், அசுரன் புனிதத் தன்மை அடைந்தான். மேலும்  மனிதர்களால் பூஜை செய்யப்படும் தகுதியைப் பெற்றான். அது மட்டுமின்றி பூமி தொடர்பான எந்த நிகழ்ச்சி ஆனாலும் வாஸ்து  புருஷனாகிய உன்னை பூஜை செய்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவார்கள் என்று இவருக்கு ஈசனால் வரம்  கொடுக்கப்பட்டு விட்டது.

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!



தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.

வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.

வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு  பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.

தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.

எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.

வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி  குறைபாடு ஏற்படலாம்.

சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது  பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்.

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்



மஹாஅவதார் பாபாஜி பிறந்த நட்சத்திரம் ரோஹிணி. இந்த நட்சத்திரத்தில் மட்டுமே சந்திரன் உச்சமடைகிறார். ரோஹிணிக்கு அடுத்து இருக்கும் நட்சத்திர மண்டலம் மிருகசீரிடம். இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மான் தலை போல தெரியும். மிருகசீரிடம் நட்சத்திரம் ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணத்திற்கு வளம் / சம்பத்து தரும் நட்சத்திரம் என்பதை அறிக.

நாம் அனைவரும் பாபாஜியின் கையில் இருக்கும் முத்ராவை பற்றி ரஜினிகாந்த் நடித்த பாபாஜி படம் மூலம் அறியலாம். இந்த முத்திரை அபான முத்ரா என அழைக்கப்படுகிறது. உடலில் இருக்கு மந்தவாயு பிரச்சினைகளை சரிசெய்யும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரையானது மிருகசீரிட நட்சத்திர வடிவான மான் தலை வடிவம் கொண்டது. இந்த முத்ராவை பாபாஜி அடிக்கடி பயன்படுத்தி தமது ஆன்மீக வளத்தை பெருக்கி கொண்டார் என்பதை அறியலாம்.

எனவே இந்த முத்திரையை கீழ்க்கண்ட  நட்சத்திரக்காரர்கள் உபயோகத்து பயன்பெறுங்கள்.

ரோஹிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சதயம், சுவாதி, சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம்.

இந்த முத்ரா வடிவம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு நோய் போக்கும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரை கொண்ட மஹாஅவதார் பாபாஜியை நமக்கு அறிமுகம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் திருவோண நட்சத்திரம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள்

உங்க வீட்டுல இந்த ஃபோட்டோ இருந்தா உடனே தூக்கி போடுங்க... இங்கு வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.




 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1 நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல

2 கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள்.

3 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.

4.உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும்.

5. உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். உக்கிரமான விலங்குகள் உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும். தாஜ்மஹால் தாஜ்மஹால் தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்

6 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். உக்கிரமான விலங்குகள் உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும். தாஜ்மஹால் தாஜ்மஹால் தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மகாபாரதம் மகாபாரதம் மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.

7.குழந்தை அழுவது போன்ற ஓவியம் குழந்தைகள் அழுவது போன்ற ஓவியங்கள் பார்ப்பதற்கு மார்டன் ஆர்ட் போன்று காணப்படலாம். ஆனால் இந்த ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.

8.போர் அல்லது மாயாஜாலம் வாஸ்து சாஸ்திரத்தின் படி, போர், பில்லி சூனியம் அல்லது பேய் போன்ற ஓவியங்கள், வீட்டில் உள்ளோரின் மனதை பாதிப்பதோடு, வீட்டில் வாக்குவாதத்தை அதிகரிக்கும.



ஹோமங்கள் - பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

ஹோமங்கள் -  பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.


அர்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்க்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உறிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.

அக்னிக்கு அர்பணிக்கும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உறிய முறையில் காலத்தே நம்மை வந்து அடையும்.

மகா கணபதி ஹோமம் ……………….தடையின்றி செயல்கள் நடைபெவும், லெட்சுமிகடாச்சம் பெறவும்.

சந்தான கணபதி ஹோமம் …………………நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம் …………………..கல்விக்காக

மோகன கணபதி ஹோமம் …………….. திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம் ………….வியாபார லாபத்திற்காக

நவகிரக ஹோமம் …….நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம். ………. ஏழையும் செல்வந்தனாவான்

துர்க்கா ஹோமம் ………….எதிரிகளின் தொல்லை அகல,

சுதர்சன ஹோமம் …………………….கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவந்கள் அகல

ஆயுஷ் ஹோமம் ………ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

மிருத்துந்தய ஹோமம்-ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

தன்வந்திரி ஹோமம்—–நோய் நிவாரணம்

ஸ்வயம்வரா ஹோமம்-திருமணதடை அகல,விரைவில் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம்..-குழைந்தை பேறு கிடைக்க

மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்—மேற்கல்வி.தெளிந்த சிந்தனை,

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!


பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

ஓம் என்றால் என்ன?

ஓம் என்றால் என்ன?



    ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது.இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

    மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம் வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன.அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன.ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு.உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான்.  அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள்.சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள்.  ஆனால் இறைவனின் ஓம் என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

    மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான்.பிறந்த சில நாட்கள் கழித்து அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான்.பின்பு அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன் அழைக்கப்படுகிறான்.எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின்/மகளின்குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன.இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி.  அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி, ஆப: என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.  மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல.  மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே  வெளி வந்தன.  ஓம் இறைவனின் மிக முக்கியமான,தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

   ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது.வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.வால்மீகி மூல  இராமாயணத்தில் இராமன்பிரான்காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க நாமோ வெறும் இராம நாமம் சொல்வது இராமபிரான்செய்ததற்கு எதிராக செய்வதாகும்.

   முன்பு எல்லா ரிஷி,முனிகளும் ஓம், அத என்று சொல்லிதான் நூல்களை ஆரம்பித்தனர். பௌராணிகர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான் ஆரம்பிக்கின்றனர். மேலும் தந்த்ர நூல்களும் "ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்" என்றே தொடங்குகின்றன.மேலும் பௌராணிகர்கள் ஓங்கார யந்திரம் கூட செய்கிறார்கள். ஆனால் நாமோ இன்று “ஹரி ஓம்” என்றுசொல்லிஇறைவனின் முக்கிய முதல் நாமத்தை பின்னுக்குத் தள்ளி ‘ஹரி’ என்று முதலில் சொல்கிறோம்.  இனிமேலாவது நாம் “ஓம் ஹரி”அல்லது “ஓம்” என்று உச்சரிக்கத் தொடங்குவோமாக.  இனி ஓங்காரத்தைப் பற்றி மற்ற நூல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

    அதர்வம் 14-3-6: ''ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும், இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது." பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

    கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது - "ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும் "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது கோபதம்.  அதாவது ஓம் அது அம்ருதம் - அமுதமாகும் என்று.

    சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்:- ஓங்கா£ரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

     யோக தர்சனத்தில் "தஸ்ய வாசக ப்ரணவ:" என்று கூறப்பட்டுள்ளது.  அதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

  முண்டகோபனிஷத் கூறுகிறது:- ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

    கடோபனிஷத்:- எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ,அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

    தைத்திரிய உபநிஷத்:-"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்றஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.

    அக்னி புராணம்:- ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.

சுபாவமான ஒலி (தன் இயல்பான ஒலி):-

    பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான்.அந்த குழந்தை எழுப்பும் ஓசையை சற்று உற்று கவனித்தால் விளங்கும்.
 வயதான பல்லிழந்தவர் கூட "ஓமை" நன்றாக சொல்ல முடியும்.  பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது.ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும்.அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும்.இராம் என்று சொல்ல சொன்னால் லாம் என்று வார்த்தை குழறி வரும்.காரணம் ஓம் ஓர் இயல்பான இயற்கையான ஒலி.

ஒரு விவாதம்:-

    ஒரு சமயம் ஓர் ஆர்யசமாஜ பண்டிதருக்கும் ஓரு மௌல்விக்கும் விவாதம் நடந்தது.அதாவது இறைவனின் முக்கிய நாமம் எது என்பதில்.பண்டிதர் சொன்னார், ஓம் என்பதே இறைவனின் முக்கிய நாமம் என்று.  ஆனால் மௌல்வியோ அல்லாஹ் தான் இறைவனின் முக்கிய நாமம் என்று வாதாடினார்.(இங்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், ஈஸ்வரன் பெயர் அல்லாஹ் அல்ல, ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்று கூறுவது பிழையானது).  மேலும் அதை நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார்.பண்டிதர் அவர்கள் உடனே இரண்டு காட்டமான சோடாவை வாங்கி வரச் செய்து, முதல் சோடாவை மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  மௌல்வி குடித்து முடித்ததும் “ஓவ்” என்று ஏப்பம் விட்டார்.ஏன் “ஓவ்” என்று ஏப்பம் விட்டீர்கள்?அல்லாஹ் என்று உச்சரிக்க வேண்டியது தானே என்று பண்டிதர் வினவினார்.உடனே மௌல்வி அல்லாஹ் என்று கூட சொல்வேனே என்று பதிலுரைத்தார்.  பண்டிதர் மீண்டும் இரண்டாவது பாட்டில் சோடாவை உடைத்து மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  குடித்ததும் மௌல்விக்கு மிக வேகமாக ஏப்பம் வந்தது.அவரால் அல்லாஹ் என்று சொல்ல முடியவில்லை. மேலும் பண்டிதர், அல்லாஹ் என்று உம்மால் சொல்ல இயலவில்லை, ஓங்காரத்தின் மாற்றமான ஒலியே தங்களுக்கு ஏப்பமாக வெளிப்பட்டது என்று விளக்க மௌல்வி ஒத்துக் கொண்டார்.ஆமாம் பண்டிதரே, அல்லாஹ் என்று சொல்ல வரவில்லை என்று.அப்பொழுது பண்டிதர் சொன்னார் - அல்லாஹ் இயல்பான ஒலி அல்ல.ஓம் மட்டுமே இயல்பான ஒலி, எளிமையான இனிமையான ஒலி, நாம் அறிந்தும் நம்மை அறியாமலும் வரக்கூடிய ஒலி.

சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது:-

    இறைவன் நுண்மையினும் நுண்மையானவன்.சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன்.அவனின் நாமமான ஓம்என்றஒலி அளவில் மூன்றுமாத்திரை தான்.மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது.  ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது.அந்த மூன்றுமாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.பின்வருவன மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று மாத்திரைகளின் தத்துவங்களாக விளக்கப்படுகின்றன.

1. ஈஸ்வரன், ஜீவன், இயற்கை
2. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன்
3. பூ:,புவ:, ஸ்வ:
4. சத்வம், ரஜம், தமம்
5. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்
6. மாதா, பிதா, குழந்தை
7. எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான்
8. நிமித்த காரணம், உபாதான காரணம், சாதாரண காரணம்
9. ஆண், பெண், அலி
10. சூரிய கலை, சந்திர கலை,சுழுமுனை
11. சூரியன், சந்திரன், நக்ஷத்திரம்என இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஓம் விளக்கம்:-

    அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது.இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும்.இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது.அதனால் நாம் நிலைப் பெற்றோம்.

இலக்கண விளக்கம்:-

    ஓம் என்ற சொல் ஆண் பாலும் அல்ல, பெண் பாலும் அல்ல, அலியும் அல்ல. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது.வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ளஉருபுகளும் இதற்கு கிடையாது.இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.    மேலும் ஓம் 'அவ்' என்ற தாதுவில் - வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது.  'அவ்' என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் - பாதுகாவலன் என்று பொருள். மேலும் இது "அவ்யயம்" ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல்.(வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன).எனவே இறைவன் ஒருவனே என்பது இதன் மூலம் சித்தமாகிறது.


மற்ற மதங்களில் ஓம்:-

    கிறிஸ்துவ மதத்தில் ஓம் என்ற சொல் ஆமென் என்ற ஒலியின் மூலம் உச்சரிக்கப்படுகிறது,  இஸ்லாம் மதத்தில் ஓம் என்ற சொல் ஆமீன் என்ற சொல்லால் உச்சரிக்கப்படுகிறது. புத்த மதத்தில் ஓம் மணி பத்மோஹம் என்று உச்சரிக்கப்படுகிறது.ஜைன மதத்தில் ஓம் நமோ அரிஹந்தாணம் என்று உச்சரிக்கப்படுகிறது.கிரேக்க மொழியில் முதல் எழுத்து ‘அ’என்பதை ஓமேன் என்று உச்சரிக்கப்படுகிறது.  பார்ஸி மத நூலான ஜென்தாவஸ்தாவில் ஓங்காரத்தின் பொருள் ஈஸ்வரன் ஆகும். ஆங்கிலத்தில் ஓம் என்பதை OMNI PRESENT, OMNI POTENT, OMNISCIENTஎன்று சொல்கிறார்கள்.ஓம் என்ற ஓசையோ அதன் பொருளோ இல்லாமல் எந்த மதமும் எந்த மொழியும் இல்லை.

யார் நாமத்தை ஜெபிக்க வேண்டும்?

    ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கப்படுகிறது:- மனிதன் மரணிக்கும் தருவாயில் யாரை ஜெபம் செய்ய வேண்டும்? என்று.  ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார்:- ஓங்காரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்று. அவர் தன்னுடைய நாமத்தை ஜெபிக்கும்படி கூறவில்லை.  மேலும் ஹரி ஓம், ராம், ராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீகிருஷ்ண, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, இராதேசியாம்,சீதாராம், விட்டல விட்டல, கோவிந்தா, கோவிந்தா, சிவா, சிவா, முருகா, முருகா, நாராயணா, நாராயணா, அரோகரா, அரோகரா,என்று நாம ஜெபம் சொல்லுமாறு வேதத்தில் எங்கும் உபதேசிக்கப்படவில்லை. சிலர் “ஓம்” என்று முதலில் சொல்லாமல் மற்ற நாமங்களை முதலில் உச்சரித்து விட்டு பிறகு “ஓம்” என்று சொல்கிறார்கள்.  உதாரணமாக “ஹரி ஓம்” என்பது.  இது சரியல்ல.ஏனெனில் வேதங்களில் முதலில் “ஓம்” என்றே உச்சரிக்கப்படுகிறது.பிறகே இறைவனின் குணங்களை குறிக்கும் மற்ற நாமங்கள் வருகின்றன.

    சீக்கிய மதநூலான குரு கிரந்தஸாஹிப்பில் இறைவனின் 37 நாமங்கள் 15025 முறை வருகின்றன.அவற்றில் 230 முறை ஓம் என்ற பிரணவ மந்திரம் வருகிறது.குரு நானக்கர் சொல்கிறார் - ஓங்காரத்தின் சப்தத்தை ஜெபம் செய்யுங்கள், ஓங்காரம் உன்னுடைய குருமுகமாகும்,ஓங்காரத்தில் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று.

பெண்கள் ஓம் உச்சரிக்கலாமா?

     சிலர் இப்பொழுது ஓம் மந்திரத்தை பெண்கள் சொல்லலாமா என்று கேட்கின்றனர்.கடவுளின் நாமம் ஓம்.  ஓம் வேதத்தில் உள்ளது.  வேத மந்திரங்களை கண்டுணர்ந்து உலகுக்கு உபதேசித்த ரிஷி பெண்மணிகள் பலர் உள்ளனர்.  அவர்களின் சில பெயர்கள் வருமாறு:- ரோமஷா, லோபாமுத்ரா, விஷ்வவாரா, அபாலா, கோஷா, அதிதி, இந்த்ராணி, கோதா, சிரத்தா, யமி, சசி முதலானோர்.

காயத்ரீ மந்திரம் பெண்கள் சொல்லலாமா?

  பெண்கள் காயத்ரீ மந்திரமும் சொல்லலாம்.பயம் கொள்ளத் தேவையில்லை.இதனால் ஒரு பாபமும் இல்லை.புண்ணியமே கிடைக்கும்.கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கௌஸல்யா மாதா அக்னிஹோத்ரம் செய்தார்.  வேத மந்திரம், காயத்ரீ முதலானவை ஓம் என்று உச்சரித்தே செய்தார்.  சீதா பிராட்டியாரும் சந்த்யா வந்தனம் செய்தார்.இது திரேதா யுகத்தின் விஷயம்.அப்பொழுது பௌராணிகரின் சந்த்யா வந்தனம் இல்லை.ஒரே வைதிக சந்த்யா வந்தனம் மட்டுமே இருந்தது.  ஆனால் இன்றோ சில சுயநலம் மற்றும் கபட நெஞ்சமுடைய பண்டிதர்கள் - வித்வான்கள், தங்களுடைய அறியாமையினால் இந்த விதமான பயங்களை உற்பத்தி செய்து விட்டனர்.அதாவது பெண்கள் வேத மந்திரம், காயத்ரீ, ஓம் போன்றவற்றை சொன்னால் அவர்களுக்கு எல்லாவிதமான கெடுதல் உண்டாகும் என்று.எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது.கடவுள் ஆண்களுக்கு மட்டும் உரியவரா என்ன?  பெண்களுக்கு கிடையாதா?இறைவனோ எல்லோருக்கும் உரியவன்.இறைவனின் ஞானமும் எல்லோருக்கும் உரியது.  வேத சம்பந்தமான அனைத்து கர்மகாண்ட சடங்குகளை பெண்கள் தாராளமாகச் செய்யலாம்.  ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் இறைவன் வாய் முதலிய பஞ்ச ஞானேந்திரியங்களை அளித்துள்ளான் எனில் கடவுளின் முழுமுதல் நாமமான ஓங்காரத்தை உச்சரிப்பதில் ஏன் அவர்களுக்கு நாம் (பௌராணிகர்கள்) வஞ்சனை செய்ய வேண்டும்?பௌராணிகர்கள் தடைச்சுவர் போன்று குறுக்கே நின்று தடைகளை விதித்து பெண் குலத்திடம் ஏன் அற்பமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்?தூய்மையயை காரணம் காட்டி இறைவன் நாமம் சொல்வதை தடை செய்ய வேண்டாமே!  குளிக்காமல் ஓம் சொன்னால் மிகப் பெரிய பாபமா வந்து சேரும்?  வெறும் உடலை நீரால் குளித்து சுத்தம் செய்துவிட்டால் மாத்திரம் போதுமா?மனத்தூய்மை வேண்டாமா?

    வேதத்தில் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன.உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும், தூங்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. இவை எல்லா மந்திரங்களும் ஓம் சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன், அவன் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எப்பொழுதும் உள்ளவன் ஆனதால் அவனை தியானிப்பதிலும், அவன் நாமத்தை பொருளுடன் அறிந்து உச்சரிப்பதிலும், அவனை எப்பொழுதும் நினைப்பதிலும் என்றும் நன்மையே உண்டாகும்.

ஓம் கொடி பற்றிய சிறு விளக்கம்:-


   ஓம் கொடி வேத காலங்களில் ரிஷி முனிகள், பரமாத்மாவின் இப்பிரம்மாண்ட உலகத்தை கோள வடிவமாகவும் வரைந்து அதன் மத்தியில் கடவுளின் உண்மையான பெயரான ஓம் என்பதை எழுதினர்.அந்த கோள வடிவத்தை சுற்றிலும் பிரகாசம் தருகின்ற சூரிய கதிர்களை வரைந்தனர்.
   மேலும் இந்த கொடியை செந்நிறமான துணியில் வரைந்தனர்.இந்த காவி நிறம் அதிகாலையில் சூரிய உதயத்தின் நிறமாகவும் அக்னியின் ஒரு நிறமாகவும் உள்ளது.ஏனெனில் பரமாத்மாவுக்கு அக்னி என்ற ஒரு பெயரும் உள்ளது.  சூரியனும் ஒரு அக்னி கோளமே.  மேலும் இந்த காவி நிறம் தவத்தின் தியாகத்தின் சின்னமாகும்.  வைதிகப் பண்பாட்டின் ஆதாரம் போகத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.  யோகத்தை அடிப்படையாகக் கொண்டது.  இது கடவுளின் யோகம், தவம், தியாகம் போன்ற குணங்களின் ஆதாரமாக உள்ளது.மனிதன் வாழ்க்கையின் முதல் பகுதியான 25 வயது வரை பிரம்மசரிய ஆஸ்ரமத்தின் (மறை மாணவ பருவம்) மூலம் தவமும், தியாகமும் கடைப்பிடிக்கிறான்.  அடுத்த கட்டமான 25 முதல் 50 வயது வரை இல்லற வாழ்க்கையில், கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மேலும் இருவரும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் தவமும் தியாகமும் செய்கின்றனர்.அடுத்ததாக வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாசிரமம் (துறவறம்) பற்றி சொல்ல வேண்டியதில்லை.இல்லறத்தில் 25 ஆண்டுகள் லௌகிக சுகம் அனுபவிக்கிறார்கள் என்றாலும் மனிதனின் குறைந்த பட்சமான 100 ஆண்டு ஆயுளில் 75 ஆண்டு வரை தவத்திற்கும் தியாகத்திற்குமாகவே வைதிகப் பண்பாடு அவர்களை ஒழுங்குபடுத்தியுள்ளது.இல்லறத்தார் தனக்குரியவற்றை அனுபவிப்பதும் அளவோடுதான்.இவைகளின் குறியீடாகவே ஓம் கொடி உள்ளது.ஒரு பத்திரிக்கையில் வந்த விஷயம் யாதெனில் ஆப்பிரிக்காவில் ஹஜ் யாத்திரை செல்வோர் தன்னுடன் ஓம் கொடியை எடுத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

    கொடியின் அளவு:-  3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகவும், நடுவில் கதிர்களுடன் கூடிய வட்டமும், அதன் நடுவில் ஓம் என்ற எழுத்தும் எழுதப்பட வேண்டும்.  இவ்விதமாக ஓம் கொடி தயாரிக்க வேண்டும்.இந்த ஓம் கொடி ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது.மனித நேயத்தின் பெருமையை - தியாகத்தை உணர்த்துகிறது.  எப்படி இறைவனின் நிஜ பெயரான ஓம் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ அதுபோல் தான் இந்த ஓம் என்ற கொடியும்.

 ஓம் கொடியின் மீது வழக்கு:-

     இந்த கொடியானது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கு உரியது என்று தௌலதா என்பவர் ஒரு வழக்கை பஞ்சாப் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதியானவர் இந்த ஓம் கொடி ஒரு குறிப்பிட்ட  சம்பிரதாயத்திற்கு உரியதன்று என்று தீர்ப்பு கூறினார்.  எனவே திரு தௌலதா என்பவர் சுப்ரீம் கோர்ட் சென்றார்.  அங்கும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த ஓம் கொடியானது சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டது என்று தீர்ப்பு வழங்கினர்.

ஓம் சில துளிகள்:-

1. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நாக்கில் தேனால் “ஓம்”என்று ஜாதகர்ம சடங்கில் செய்வதுண்டு.
2. கோபத பிராஹ்மணம்:-"ஆப்ல்ரு வ்யாபௌ", "அவ ரக்ஷணே" என்ற வேர்ச்சொற்களிலிருந்து ஓம் என்ற பொருள் சித்தமாகிறது..ஓங்காரம் எங்கும் நிறைந்த
அனைத்தையும் காக்கும் பரம்பொருள்.
3. மனுஸ்ம்ருதி:- அகாரமும் உகாரமும் மகாரமும் சேர்ந்ததே கணபதியாகிய ஓங்காரம்என அழைக்கிறது.  அதாவது ஓம்சொல்வதாலேயேகடவுளின்தியானம்நடைபெறுகிறது.
4.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானேமருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான மருத்துவத் ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன் சொல்கிறார்:-
     "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகைபோன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது"என்று.
 5. சதபதம் பிராஹ்மணம்:-
  கேள்வி: விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் உள்ளவைகள் எங்கிருந்து வந்தன?எல்லாஉயிர்களும் எதனிலிருந்துபரிணமிக்கின்றன-உருவாகின்றன? எதிலிருந்து வாழ்வைப் பெறுகின்றன?
பதில்: அது ஓம்.
    The manifestating word of God is AUM.
6. யஹுதிகளின் அதாவது யூதர்களின் கடவுளின் பெயர் ஜிஹோவா.  அவர் தம்முடைய தூதரான மூஸாவிடம் சொன்னார்:- தன்னுடைய நிஜ பெயர் - "That I am" (ஓம்) என்று.

வேதமோ, “ஓம் க்ரதோ ஸ்மர”, “ஓம் ப்ரதிஷ்ட”, “ஓம் கம் பிரம்ம”- அதாவது “ஓங்காரத்தை நினை; ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து; அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்” என்று ஓங்காரத்தைப் போற்றிப் புகழ்கிறது.

ஓம் சாந்தி:!ஓம் சாந்தி:!!ஓம் சாந்தி:!!!

தானங்களால் ஏற்படும் பலன்கள் !!!

தானங்களால் ஏற்படும் பலன்கள் !!!



மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப்பூரணமாகப்பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் – வள்ளலார்

1. மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் – இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
7. நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் – சௌபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் – புகழ்
16. அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?

ஓம் நமோ நாராயணாய
நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?



தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள்..ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். உங்கள் இலக்கு எது என தீர்மானித்து,அதைநோக்கிசெல்லதைரியம்,தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்
அதன் பின் உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள்..பிரபஞ்ச சக்தி உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி தரும்..இது பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்..கேட்டது கிடைக்கும்!!!

"ஸ்ரீமன் நாராயணா உன் திருவடிகளே சரணம் "

12 இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

12 இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :



👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆  மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋  ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇  விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :

1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏  கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

"பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்

"பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்


1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்
16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்