நம் தோப்புக்கரணம் இப்போது எவ்வளவு பிரபலமாகியிருக்கிறது

நம் தோப்புக்கரணம் இப்போது எவ்வளவு பிரபலமாகியிருக்கிறது


ஆன்மவியலும் அறிவியலும்!!!


அமெரிக்காவின் லொசேஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர் வைத்தியர். Eric Robins . இவர் நடைமுறைக்குக் கொணர்ந்துள்ள ""Super Brain Yoga ", இப்போது மிகப் பிரபலம். மூளையின் நரம்புக் கலங்களை இது தூண்டி விடுகின்றது என்று கூறுவதுடன், தன்னிடம் வரும் நோயாளிகள், இதன் மூலம் பயனடைகின்றனர் என்றும் இவர் பெருமையோடு கூறுகிறார். அது சரி, Eric Robins இற்கும் நம் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? அவர் Super Brain Yoga என்ற பெயரில் கற்பிப்பது வேறொன்றும் இல்லை. நம் "தோப்புக்கரணத்தைத்" தான்!

அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான Dr. Eugenius Ang , இரு காதையும் இரு கைகளால் குறுக்காக, மாறி மாறிப் பிடித்தவாறு குந்தி எழும்போது மூளையில் நிகழும் மாற்றங்களை மூளை மின்னலை வரைவி (EEG)யில் அளந்து பார்த்து, அது மூளையை சுறுசுறுப்பாக்குவதாகக் கண்டறிந்துள்ளார். காதை விரலால் அழுத்திக் குந்தி எழும்போது, காதிலுள்ள அக்குபஞ்சர் புள்ளிகளும் உடற்கலங்களும் தூண்டப்பட்டு, உடற்றொழிற்பாட்டை சுறுசுறுப்பாக்குவதாக அவர் விவரிக்கிறார்.

பிரபல மருத்துவ நிபுணரான Master Koa Chok Sui, தன்னுடைய Super Brain Yoga என்ற நூலில், தோப்புக்கரணம் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார்.
(இங்கு சென்று பார்க்க: http://www.naturalnews.com/028207_brain_health_exercise.html
http://www.superbrainyoga.org/)

நாளாந்தம் மூன்று நிமிடம் தோப்புக்கரணம் இடும்போது, நம் மூளையானது விவரிக்கமுடியாத அற்புத சக்தியைப் பெறும் என்றும் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள், மந்த புத்தியுள்ள குழந்தைகள் இதன்மூலம் விரைவான பலனடைவதாகவும் அவர் கூறுகிறார். (நம் புராணங்கள் கயமுகாசுரன் முன்பு தேவர்கள் ஆயிரம் தோப்புக்கரணம் இட்டதாக சொல்கின்றன. ஆயிரம் தோப்புக்கரணம், 3 நிமிடத்திற்கு மேல் செல்லுமல்லவா?)

மதி இறுக்கம் (Autism), அறிவிழப்பம் (Alzheimer) முதலான புது வகை நோய்களுக்கு, மேலைத்தேய மருத்துவர்களின் இப்போதைய பரிந்துரையாக அமைந்துள்ளது "சுப்பர் நேச்சுரல் யோகா" என்ற பெயரில் நம் தோப்புக்கரணம் தான்! ( சுப்பர் நேச்சுரல் யோகாக்கு இப்போ பதிப்புரிமையும் வாங்கிவிட்டார்கள், இனி, அது மேலைநாட்டிலிருந்து அறிமுகமானதுதான்??)

நம் தோப்புக்கரணம் இப்போது எவ்வளவு பிரபலமாகியிருக்கிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், கொஞ்சம் கூகுள் தேடுபொறியில் தேடிப்பாருங்கள் smile emoticon
( காட்டுக்கு ஒரு யூடியூப் காணொளி http://www.youtube.com/watch?v=p876UDB8EN4)

50 ஆண்டுகளுக்கு முன்வரை நம் பள்ளிகளில் தண்டனை என்றால் தோப்புக்கரணம் போடுவதுதான்! ஏன், ஆலயங்களில் கூட இன்றுவரை பிள்ளையாருக்கு முன்னே தோப்புக்கரணம் போடாமல் நாம் வருவதில்லையே!

ஏன் சொல்கிறோம் என்றால், முன்னோர் கண்டறிந்தவை, நடைமுறையில் வைத்திருந்தவை எல்லாமே தப்பானவை, மூடநம்பிக்கையின் பாற்பட்டவை என்ற ஒரு முட்டாள்த்தனமான நம்பிக்கை நம்மவர் மத்தியில் உள்ளது. (அந்த நம்பிக்கையை வைத்திருப்பவர்கள் பெரும்பாலோர் இறைமறுப்பாளர்கள் என்பது தனிக்கதை.)

முன்னோர்கள், ஆன்மிகத்தையும், அறிவியலையும் வேறு வேறென்று நினைக்கவில்லை. மெய்ஞ்ஞானத்தின் ஒரு அங்கமே விஞ்ஞானம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால், இது இது அறிவியல், இன்ன இன்ன பலனைப் பெற்றுக்கொள்ளத் தான் இதை இதைச் செய்கிறோம் என்று நமக்குச் சொல்லாமற் சென்றதுதான்!

போகட்டும்! மேலைத்தேய மோகத்தில் மூழ்கியிருக்கும் இன்றைய தமிழ்க் குமுகமாகவது அறிந்து கொள்ளட்டும்! நம் முன்னோர் கைக்கொண்ட பல விடயங்கள் எத்தனை அறிவுக்கண்ணோட்டத்துடனானவை என்று!!! இப்போது அதைக் கண்டுபிடித்து சொல்லியுள்ளது வெள்ளைக்காரன் ஆயிற்றே!!