குரு - சுக்கிரனுக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம்?

குரு - சுக்கிரனுக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம்?

சூரியன், சந்திரன் மட்டுமல்லாது சுக்கிரனாலும் கண்கள் சம்பந்தமான நோய் உண்டாகும் என்ற கருத்தினை மருத்துவ ஜோதிடர்கள் அறுதியிட்டுச் சொல்கிறார்கள். பஞ்சாங்க கணக்குகளின்படி சுக்கிரன் நீசம் பெற்றிருக்கும் காலங்களில் பொதுமக்களிடையே ‘மெட்ராஸ் ஐ’ நோய் பரவுவதை இன்றைய நவீன கால மருத்துவ ஜோதிடர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இக்கருத்தினை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க தீவிரமான ஆராய்ச்சிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. நவகிரகங்களில் நல்லவர்கள் என்றழைக்கப்படும் குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள்.
இவ்விருவரும் தாமாக தனிப்பட்ட எந்த வியாதியையும் உருவாக்குவதில்லை, குறைபாட்டினைத் (Deficiency) தோற்றுவித்து பலவிதமான நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகிறார்கள் என்று பார்த்தோம். ஆனால், சர்க்கரை வியாதியைத் தருவது குருவும், சுக்கிரனும்தான் என்று கூறப்படுகிறதே அது எப்படி என்ற கேள்வி எழலாம். சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் (Glucose) அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கும். இந்தக் கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவில் உண்டாகும் குறைபாடே சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்ற குறைபாடுதான் பல நோய்கள் உடம்பில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்தச் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது, அப்படியென்றால் இவர்கள் எல்லோரின் ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் வலுவிழந்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. குருவும், சுக்கிரனும் சாதகமாக அமர்ந்திருந்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் 80 வயதிற்கு மேற்பட்டும் அன்றாடம் மருந்துகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருப்பர்.
குரு - சுக்கிரனின் வலு குன்றியிருந்தால் 50 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோயின் தாக்கத்தால் பெருத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதே இதற்கான பதில். குரு, சுக்கிரன் முதலான சுபகிரகங்களாலும் நோய்கள் உண்டாகும் எனும்போது தீயகிரகம் என்றதும் உடனடியாக நம் நினைவிற்கு வரக்கூடிய சனி என்னென்ன பாடுபடுத்துவார் என்ற பயம் கலந்த எண்ணம் நமக்குத் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. ஆனால், சனி பகவானே நீண்ட ஆயுளைத் தருபவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் அவர் ஆயுள்காரகன் என்றழைக்கப்படுகிறார். ஜாதகத்தில் சனியின் வலிமை இருக்கப் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாக இருப்பார்கள்.
கபாலத்தில் அழுத்தம், மூச்சுத்திணறல் , சப்பைக்கால், கை கால்களில் ஊனம் உண்டாகுதல், எலும்பு முறிவு மற்றும் வலிகள், முதுகெலும்பு வளைந்து கூன் உண்டாதல், கருவில் முறையின்மை, கருத்தரிப்பின்போது உண்டாகும் பிரச்னைகள், மூட்டு வீக்கம், வாயுப் பிடிப்பு, கரிய காமாலை, ஜலதோஷம், டைபாய்டு, காது மந்தம், மலச்சிக்கல், பல்நோய்கள், வாய் துர்நாற்றம், மலட்டுத் தன்மை, விஷத்தால் இதயம் பாதிக்கப்படுதல் போன்றவை சனியினால் உண்டாகும் நோய்கள் ஆகும்.
பொதுவாகச் சொல்வதென்றால் சனியினால் உண்டாகும் பாதிப்புகள் உடம்பின் வெளித் தோற்றத்திலேயே மாறுபாட்டினை ஏற்படுத்தும். நன்றாக இருந்த வெளிப்புறத் தோற்றத்தில் ஒருவித விகாரத்தன்மையை உண்டாக்கி நமது வெளிப்பார்வைக்கே இவர் சனியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வண்ணம் அமையும். குறிப்பாக உடலில் ஊனம் உள்ள மனிதர்களின் ஜாதகத்தில் சனியின் பாதிப்பு நிச்சயமாகக் காணப்படும். அதேபோல கறை படிந்த பற்கள், விகாரமான பல்வரிசை அமைப்பு, கடுமையான வாய் துர்நாற்றம் ஆகியவற்றிற்கும் சனியே காரணமாகிறார்.
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் எவ்வாறு அடுத்தவர்களை எளிதாகக் கவருகிறார்களோ, அதற்கு நேர்மாறாக தனிப்பட்ட முறையில் சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள் மற்றவர்களை விலகிச் செல்ல வைக்கும் உருவ அமைப்பினைப் பெற்றிருப்பார்கள். மேற்கண்ட ஜாதகத்தை உடைய நபரின் உடல் ஆரோக்யத்தை எண்ணிப் பார்க்க முடிகிறதா? மூலம், பைல்ஸ் தொந்தரவு என சதா அவதிப்படும் இந்த நபரின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனியின் இடத்தில் முக்கியமான கிரகங்கள் சென்று அமர்ந்துள்ளதைக் காணலாம்.
கப்பைக்கால்களுடன், முதுகு வளைந்த நிலையில் ஒரு இளைஞருக்குரிய எவ்வித லட்சணமும் இன்றி முதியவர் போல் தோற்றமளிக்கும் இவ்வகை மனிதர்களும் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சனியின் ஆதிக்கத்தினால் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் இவரைப் போன்ற மனிதர்களைக் கண்டு நாம் பரிதாபப்படும் அதேநேரத்தில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெறும் பாடி பில்டர்களுக்கும் சனியின் பலம் அவசியம் தேவை என்பதை அறியும்போது நமக்கு ஆச்சரியமே உண்டாகிறது. ஆம். செவ்வாய் சனியோடு இணைவு பெற்று வலிமையாக அமர்ந்திருந்தால் இது சாத்தியமே.