🌹உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்?🌹
💐யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?
💐இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.
💐சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?
💐இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.
💐உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்.
💐உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.
💐உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.
💐எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.
💐சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.
💐சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.
💐கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.
💐வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
💐இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.
💐அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.
💐பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.
💐உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
💐உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.
💐இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.
💐சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.
💐ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.
💐தியானம் செய். இயற்கையை நேசி.
வலிகள் மறையும்.
பாராட்டுக்காக
ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.
💐வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்🙏🏻