திருமணமாகாத பெண்கள் ஏன் சிவலிங்கத்தை வழிபடக் கூடாது?

திருமணமாகாத பெண்கள் ஏன் சிவலிங்கத்தை வழிபடக் கூடாது?

சிவலிங்கத்தை ஆண்கள் மட்டுமே பூஜிக்க வேண்டும் என்றும் பெண்கள் பூஜிக்க கூடாது என்றும் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவே கூடாது என்றும், அதனை பூஜிக்க கூடாது எனவும் கூறப்படுகிறது.
சிவலிங்கம் என்பது சிவன் தியானம் செய்யும் நிலை என்று கருதப்படுவதாலும், அந்த நிலையில், சிவன் தூய்மையான நிலையில் தியானத்தில் இருப்பதாலும், சிவலிங்கத்தை பெண்கள் அருகே சென்றோ அல்லது கைகளால் தொட்டோ பூஜிக்க கூடாது. சிவன் தியானத்தில் இருக்கும் போது மற்ற ஆண், பெண் கடவுள்கள் கூட அவரை தொந்தரவு செய்ய தயங்குவார்கள்.
மேலும், அவரது தியானம் கலையாமல் இருக்கவும் இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அதிகளவில் அக்கறையாக இந்திரர்கள் செயல்படுவார்கள். எனவே கடவுள்களே தியான நிலையில் உள்ள சிவலிங்கத்தை நெருங்கி பூஜிக்க அஞ்சுவதால் தான் குறிப்பாக பெண்கள் லிங்கத்தை பூஜிப்பதை அனுமதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.
திங்கள் கிழமை தான் சிவனின் தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் திருமணமாகாத பெண்கள், விரதம் இருந்து சிவனை போல நல்ல கணவனை பெற வேண்டுமென பூஜிக்கின்றனர்.
இந்த முறைகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரதேசத்திலும் இடத்திற்கு ஏற்ப சில மாறுதல்களுடன் இவை கடைப்பிடிக்கப்படுகின்றன. வீட்டிலேயே சிவலிங்கத்தை வழிபட்டாலும், ஆண்கள் தான் அபிஷேக ஆராதணைகளை செய்ய வேண்டும் என்றும், பெண்கள் ஆண்களுக்கு உதவியாக இருந்து தேவையானவற்றை செய்து தரவேண்டும் என பல காலமாக நம்பிக்கை உள்ளது.
ராமேஸ்வரத்தில் சீதா தனது கையால் செய்த சிவன் சிலையை ராமன் வழிபட்டதாக ஒரு கதை உள்ளது. ராமன் காசியில் இருந்து சிவன் சிலை எடுத்துவர ஹனுமனை அனுப்பியதாகவும், ஆனால் ஹனுமன் வர தாமதமான நிலையில், அங்குள்ள மண்ணை கொண்டே சீதா லிங்கத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு புராண காலத்தில் இருந்து சிவலிங்கத்தை பெண்கள் வழிபடக்கூடாது என்றும், ஆண்கள் மட்டுமே வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரவியுள்ளது. இது இன்றும் கூட இந்தியாவில் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.