ஆறுபடையப்பா..!!!

ஆறுபடையப்பா..!!!

திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை
வீடுகள் ஆகும்.முருகனின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களிலும்
அடக்கிச் சொல்வர்.திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் ஆறுபடை வீடுகளின் சிறப்பை மிக விரிவாகக் கூறுகிறது.

ஆறுபடை வீடுகளை வழிபடுவதின் பலன்கள்:-

திருப்பரங்குன்றம் - செல்வம் பெருகும்.

திருச்செந்தூர் - வீரம் பெருகும்.

பழனி - புண்ணியம் பெருகும்.

சுவாமிமலை - கல்வி ஞானம் பெருகும்.

திருத்தணி - நினைத்தாலே சுப நிகழ்ச்சி நடைபெறும்.

சோலைமலை - பெறுதற்கரிய நன்மைகள் கிடைக்கும்.

===================================================

சரவணபவ என்றால் கிடைக்கும்ஆறு பலன்கள்

"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும்சிறப்பானதாகும். இதனை

மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை),

எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு

பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

முருகன் கோவில்களில் பெரும்பாலும் வேங்கைமரம் தலவிருட்சமாக இருக்கும்.

முருகன் வள்ளி திருமணத்தில் வேங்க மரம் முக்கிய இடம் பெறுகிறது.

இம்மரம் தனிச்சிறப்பு உடையது. தெய்வீக அருள்பெற்ற மரம்.

முருகனருள் பெற்ற மரமல்லவாப இம்மரத்துண்டுகளை நீரில் நனைய

வைத்து அந்நீரை வெயிலில் காயவைத்து வெற்றிக்கு இடும் பொட்டு (திலகம்)

செய்து வந்தார்கள் என்ற குறிப்பும் உண்டு. இது கெடுதல் விளைவிக்காது.

இந்த நீரை குடித்தால் வலிமையான நோயற்ற உடல்நலம் உருவாகும்.

இம்மரம் பாதுகாப்பு கவசம் போன்றது.

அறுபடை வீடுகளில் முருகனின் வடிவும், தன்மைகளும்........

திருப்பரங்குன்றம் -நல்துணை வடிவு -உல்லாசம்

திருச்செந்தூர் - ஒளிவடிவு -மறுபிறப்பின்மை

பழனி - பழம் (திருவடிவு) -யோகம்

சுவாமிமலை -சொல்வடிவு -இவ்வுலக சுகம்

திருத்தணி - கலசநீர் வடிவு -சல்லாபம்

பழமுதிர்ச்சோலை -மர வடிவு -விநோதம்